உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது என்னவாகும்?
-
0:01 - 0:04ஒரு மலம் நிரம்பிய பெட்டி
என் வாழ்க்கையை மாற்றியது -
0:05 - 0:07பத்து வருடம் முன்பு,
நான் முதுகலை மாணவி -
0:07 - 0:09மரபணு பொறியியல் போட்டி ஒன்றை
இளங்கலை மாணவர்களுக்காக -
0:09 - 0:11மதிப்பீடு செய்ய சென்றேன்
-
0:11 - 0:15பிரிட்டிஷ் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர்
அலெக்ஸாண்ட்ரா டெய்சி ஜின்ஸ்பெர்க்கை -
0:15 - 0:17நான் அங்கு சந்திதேன்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழக குழு -
0:17 - 0:19வெள்ளை சட்டை அணிந்திருந்தார்
-
0:19 - 0:20ஒரு பெட்டியும் வைத்திருந்தார்
-
0:20 - 0:24கையோடு இணைக்கப்பட்டது போல தோன்றும்
மதிப்புள்ள ஒரு பெட்டி -
0:24 - 0:25அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து
-
0:26 - 0:28எனக்கு எதையோ காண்பிக்க அழைத்தார்
-
0:28 - 0:30குறும்பு பார்வையுடன் அவர் தனது
பெட்டியை திறந்து காண்பித்தார் -
0:30 - 0:35அதனுள் பல வண்ணங்களிலான
மகிமையான மலக் கட்டிகள் இருந்தன -
0:36 - 0:37கேம்பிரிட்ஜ் அணி, அவர்களின் கோடைகாலத்தை
-
0:37 - 0:40பாக்டீரியா ஈ.கோலையை நெறிப்படுத்துவதில்
கழித்ததாக விளக்கினார் -
0:40 - 0:43அவை சுற்றுசூழலை உணர்ந்து
அதை உணர்த்த வானவில் போன்று -
0:43 - 0:46வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்த
முடியும் என்று விளக்கினார் -
0:46 - 0:48உங்கள் குடிநீரில் ஆர்சனிக்கா?
-
0:48 - 0:49இந்த கறை பச்சை நிறமாக மாறும்.
-
0:49 - 0:52அவருன் அவரின் குழுவின்
வடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிங், -
0:52 - 0:55சக மாணவர்களுடன் பணிபுரிந்து
இப்பாக்டீரியாக்களை பயன்படுத்த -
0:55 - 0:57பல சாத்தியகூறுகளை ஆராய்ந்துள்ளனர்
-
0:57 - 0:59அவர்கள் என்னிடத்தில கேட்டது
-
0:59 - 1:03ப்ரோபயாடிக் பானமாக ஆரோக்கிய அளவியாக
இதை பயன்படுத்தினால் என்ன? என்பதே -
1:04 - 1:07இந்த பாக்டீரியாவை குடித்ததும்
அது உங்கள் குடலில் வாழும் -
1:07 - 1:08பின்பு நடப்பதை உணர்ந்து
-
1:08 - 1:10அதற்கு பதிலாக
-
1:10 - 1:12ஏதாவது ஒரு நிறத்தை வெளிப்படுத்த இயலும்
-
1:12 - 1:13நம்பமுடியாதது!
-
1:13 - 1:15iGEM என சுருக்கமாக அழைக்கப்படும்
-
1:15 - 1:18சர்வதேச மரபணு பொறியியல்
இயந்திர போட்டியில் -
1:18 - 1:19கேம்பிரிட்ஜ் அணி வென்றது
-
1:19 - 1:22எனக்கு அந்த மலம்
ஒரு பெரிய திருப்புமுனை -
1:23 - 1:24நான் ஒரு செயற்கை உயிரியலாளர்,
-
1:24 - 1:28பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை
அறிந்திருக்க கூட மாட்டார்கள் -
1:28 - 1:30நிச்சயம், ஒரு ஆக்ஸிமோரன் போன்றது
-
1:30 - 1:32உயிரியல், இயற்கையானது
-
1:32 - 1:33அதெப்படி செயற்கையாகும்
-
1:33 - 1:36செயற்கையானது எப்படி உயிராக முடியும்?
-
1:37 - 1:39இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின்
-
1:39 - 1:43இடையில் உள்ள மெல்லிய எல்லை கோட்டில்
துளைகள் போல தான் நாங்கள் வருகிறோம் -
1:43 - 1:46ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலுமிருந்து
iGEM மாணவர்கள் -
1:46 - 1:47அவர்களின் கோடைகாலத்தை
-
1:47 - 1:50உயிரியலை தொழில்நுட்பமாக மாற்றும்
முயற்சியில் செலவிடுகின்றனர் -
1:50 - 1:53பாக்டீரியாவுக்கு
சுடோகு விளையாட்டு பயிற்சி -
1:53 - 1:56பல வண்ண சிலந்தி பட்டு செய்தல்
-
1:56 - 1:58சுய குணமாகும் கான்கிரீட் செய்தல்
-
1:58 - 2:01திசு அச்சுப்பொறிகள்,
நெகிழி உண் பாக்டீரியாவும் செய்கின்றனர் -
2:01 - 2:03அந்த தருணம் வரை,
-
2:03 - 2:06வேறு வகையான சொற்முரண்பாடோடு
நான் அதிக அக்கறை கொண்டிருந்தேன் -
2:06 - 2:08பழைய மரபணு பொறியியல் உடன்
-
2:08 - 2:10நகைச்சுவையாளர் சைமன் முன்னேரி கூறியது
-
2:10 - 2:15மரபணு பொறியியல் உண்மையில்
பொறியியலை அவமதிக்கிறது -
2:15 - 2:19ஒரு ஆற்றில் கான்கிரீட் மற்றும்
எஃகுவை வீசி விட்டு -
2:19 - 2:22அதை பாலம் என்கிறது இன்றைய
மரபணு பொறியியல் -
2:22 - 2:25இது செயற்கை உயிரியலாளர்ளுக்கு
பெரும் கவலையை தந்தது -
2:25 - 2:29மரபணு பொறியியல் விஞ்ஞானம் தாண்டிய
கலை என வருந்தினர் -
2:29 - 2:33மரபணு பொறியியலை உண்மையான
பொறியியலாக மாற்ற விரும்பினர் -
2:33 - 2:37பொறியாளர்கள் கணினிகளுக்கு
மென்பொருள் எழுதுவது போல -
2:37 - 2:41செல்களை நிரல் செய்து
டி.என்.ஏ எழுத முயன்றனர் -
2:41 - 2:4610 வருட முந்தைய அந்நாள்
என்னை இங்கு கொண்டு வந்துள்ளது -
2:46 - 2:47இன்று நான், ஜின்கோ பயோவொர்க்ஸ்
-
2:47 - 2:50செயற்கை உயிரியல் நிறுவனத்தின்
படைப்பு இயக்குனர் -
2:50 - 2:52கணினி நிரல் போல்
-
2:52 - 2:54மக்கள் வாழ்வை
திட்டமிடும் நிறுவனம் -
2:55 - 2:57அதன் "படைப்பு இயக்குனர்" அறிது தான்
-
2:57 - 2:59ஆனால் நான் டெய்சியை சந்தித்த
அந்த நாள் -
2:59 - 3:01நான் பொறியியல் பற்றி கற்றுக் கொண்டேன்
-
3:01 - 3:04பொறியியல் உண்மையில்
சமன்பாடுகள் பற்றியது அல்ல -
3:04 - 3:06எஃகு, சுற்றுகள் பற்றியது அல்ல
-
3:06 - 3:08இது உண்மையில் மக்களைப் பற்றியது.
-
3:08 - 3:10அவர்கள் செயலால் உருவாகும்
பாதிப்பு பற்றியது -
3:10 - 3:12என் வேலையில்
-
3:12 - 3:15பல்வகை பொறியியலில்
புது பாதைகளுக்கு திறக்க முயல்கிறேன் -
3:16 - 3:18எப்படி சிறந்த கேள்விகளை கேட்கலாம்
-
3:18 - 3:20எப்படி சிறந்த உரையாடல்களைப் பெறலாம்
-
3:20 - 3:22எதிர்கால தொழில்நுட்பத்திடம் நாம்
என்ன விரும்புகிறோம் -
3:22 - 3:25GMOகள் கூர்ந்து கவனிக்கும் சமூகத்தில்
-
3:25 - 3:28தொழில்நுட்பம், மட்டுமல்லாது
சமூகம், அரசியல், பொருளாதார -
3:28 - 3:30அடிப்படையில் எவ்வாறு ஆராயலாம்?
-
3:30 - 3:32மக்கள் விரும்பும் GMO களை
உருவாக்க முடியுமா? -
3:33 - 3:39தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு
மீளுரு உயிரியல் பயன்படுத்தலாமா? -
3:39 - 3:43இந்த எண்ணம்
மற்ற மெல்லிய விஷயங்களை விடவும் -
3:43 - 3:47"உண்மை பொறியியலை" மதிக்கும் கலாச்சாரத்தால்
வடிவமைக்கப்படுபவர் செயற்கை உயிரியலாளர் -
3:47 - 3:49இதை அங்கீகரிப்பதன்
மூலம் தொடங்குகிறது -
3:50 - 3:54நாம் கணினிகளுக்குள் இருக்கும்
சுற்றுகளில் சிக்கிக் கொள்வதால் -
3:54 - 3:57நம் வலிமையை பார்க்கும்
பார்வையை இழக்கிறோம் -
3:57 - 4:00ஏராளமான தொழில்நுட்பம்
வெளி உலகில் உள்ளது -
4:00 - 4:04ஆனால் மலத்தில் தொழில்நுட்பத்தை
கற்பனை செய்வது முதன் முறை. -
4:04 - 4:08நான் செயற்கை உயிரியலின்
அருமையை உணர்ந்தென் -
4:08 - 4:11செல்களை கணினிகளாக
மாற்ற முடியும் என்பதால் அல்ல -
4:11 - 4:14தொழில்நுட்பத்திற்கு வாழ்க்கை
தர முடியும் என்பதால் -
4:14 - 4:15இது ஒரு ஆழ்ந்த தொழில்நுட்பம்
-
4:16 - 4:19எதிர்காலம் பற்றிய
ஒரு மறக்க முடியாத பார்வை -
4:19 - 4:21அதை விடவும் முக்கியமான
ஒரு கேள்வியாக வடிவமைக்கப்பட்டுள்ளது -
4:21 - 4:24"இது தான் நாம் உண்மையில்
விரும்பும் எதிர்காலமா? " -
4:24 - 4:26நம் எதிர்காலம் குரோம் என
கூறப்பட்டுள்ளது -
4:26 - 4:29அவை வெறும் சதைப்பற்றுள்ளதாக
இருந்தால் என்ன செய்வது? -
4:29 - 4:31அறிவியலும் மற்றும் அறிவியல்
புனைகதைகளும் -
4:31 - 4:34நாம் நட்சத்திரங்களால் ஆனவர் என்று
நினைவுறுத்துகிறது -
4:34 - 4:36அதே சமயம், நாம் சதையால்
உருவானவர்கள் என்றும் நினைவூட்டி -
4:36 - 4:38அதிசயிக்க வைக்கிறது
-
4:38 - 4:39உயிரியல் என்பது
-
4:39 - 4:42நம் உடல்களும், நாம் சாப்பிடுவதுமே.
-
4:42 - 4:45உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது
என்ன நடக்கும்? -
4:46 - 4:48இந்த படங்கள் தான் கேள்விகள்
-
4:48 - 4:51சாதாரண மற்றும் விரும்பக் கூடிய
என்ணங்களை அவை சவால் செய்கின்றன -
4:52 - 4:55எதிர்காலம் தேர்வுகள் நிறைந்தது என்றும்
-
4:55 - 4:57வித்தியாசமாக தேர்ந்தெடுக்கலாம்
என்கிறது -
4:57 - 5:01அழகை பற்றிய உடலின் எதிர்காலம் என்ன?
-
5:01 - 5:04நம் உடலை மாற்றினால், நமக்கு புது வகையான
விழிப்புணர்வு கிடைக்குமா? -
5:05 - 5:07அல்லது நுண்ணுயிர் உலகின்
புதிய விழிப்புணர்வு -
5:07 - 5:09உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
5:09 - 5:13எனது ஆய்வுக் கட்டுரையின்
கடைசி அத்தியாயம் -
5:13 - 5:16என் விரலிடுக்கு பாக்டீரியாவால்
தயாரித்த சீஸ் பற்றியது -
5:16 - 5:18ஒரு மலம் என் வாழ்க்கையை மாற்றியது என்றேன்
-
5:18 - 5:21வாசனை கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்
சிசெல் டோலாஸ் -
5:21 - 5:26நம் உடலும் சீஸும், வாசனை மற்றும்
நுண்ணுயிரிகள் வாயிலாக -
5:26 - 5:29இணைக்கப்பட்டுள்ளன
எல்லா வழிகளையும் ஆராய உதவினார் -
5:29 - 5:31அதோடு நாங்கள் இந்த சீஸை
-
5:31 - 5:33வாழ்வின் பகுதியான மற்றும்
ஆராய்ச்சிக்கான பாக்டீரியா -
5:33 - 5:35இடையே உள்ள
மாறுபட்ட எண்ணங்களை -
5:35 - 5:37சவால் விடும் விதமாக
உருவாக்கினோம் -
5:37 - 5:40நாம் உண்ணுவது தான்
உண்மையில் நாம் -
5:40 - 5:42உயிரியல் மற்றும் தொழில்நுட்பம்
சந்திக்கும் இடம் -
5:42 - 5:46பொதுவாக உண்மை மீறும் கதையாக
அடிக்கடி கூறப்படுகிறது -
5:46 - 5:48உங்கள் மூளையை கணினிக்கு
பதிவேற்ற முடிந்தால் -
5:48 - 5:50நீங்கள் இனி மலம் கழிக்க தேவையில்லை.
-
5:50 - 5:53என்பது தானே பொதுவாக சரியான
கதையாக சொல்லப்படுகிறது, ? -
5:53 - 5:59கணினிகள் சுத்தம் என்றும்
உயிரியல் குழம்பியது என்பதுமாக உள்ளது. -
5:59 - 6:01கணினி பகுத்தறிவானவை எனவும்
-
6:01 - 6:04உயிரியல் கணிக்க முடியாதவை
-
6:05 - 6:07என தொடங்கி
-
6:07 - 6:10அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பகுத்தறிவுடன் இருக்க வேண்டும், -
6:10 - 6:11புறநிலையானதாகவும்
-
6:11 - 6:13தூய்மையானதாகவும் அறியப்படுகிறது
-
6:13 - 6:16ஆனால் மனிதர்கள் குழப்பமானவர்கள்
-
6:16 - 6:19செயற்கை உயிரியலாளர்கள் போல
-
6:19 - 6:22இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும்
இடையில் செயலாற்றுகின்றனர் -
6:22 - 6:24கலைஞர்கள், வடிவமைப்பாளர் மற்றும்
சமூக விஞ்ஞானிகள் -
6:24 - 6:28இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமுகத்தின்
இடையில் செயலாற்றுவது -
6:29 - 6:31அதனினும் மென்மையானது
என நினைக்கின்றனர் -
6:31 - 6:34எதிர்கால சிந்தனைகளையும்
இயற்கையை கட்டுப்படுத்துவது பற்றிய -
6:34 - 6:37நமது கற்பனைகளையும் மறுபரிசீலனை செய்ய
சவால் விடுகின்றனர் -
6:37 - 6:41நம் எண்ணம், நம்பிக்கை மற்றும் மதிப்பு
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் -
6:41 - 6:43நம் கேள்விகள் மற்றும் தேர்வுகளின்
-
6:43 - 6:46எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது
என காட்டுகின்றனர் -
6:46 - 6:51அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
மனிதர்கள் இடையில் உள்ளதால் -
6:51 - 6:52அரசியல் சார்ந்தது என்கின்றனர்
-
6:52 - 6:55நம் சொந்த நோக்கத்திற்காக
வாழ்வை கட்டுப்படுத்தினால் -
6:55 - 6:56நமக்கு என்ன அர்த்தம் கிடைக்கும்?
-
6:56 - 6:58கலைஞர்கள்
ஓரோன் கேட்ஸ், அயோனாட் ஜூர் -
6:58 - 7:00"பாதிக்கப்படாத தோல்" திட்டம்
உருவாக்கினர் -
7:00 - 7:03எலியின் செல்களை வைத்து
ஒரு சிறிய தோல் ஜாக்கெட் -
7:03 - 7:05ஒன்றை வடிவமைத்தனர்
-
7:05 - 7:07இந்த ஜாக்கெட் உயிரினையா?
-
7:07 - 7:10இதை இப்படியே வைத்து வளர்த்தால்
என்ன ஆகும்? -
7:10 - 7:12இது உண்மையில் பாதிக்கப்பட்டதா?
-
7:12 - 7:15பாதிக்கப்படாததன் அர்த்தம் தான் என்ன?
-
7:15 - 7:16நம் முன்னேற்ற பாதையில்
-
7:16 - 7:18நாம் காண்பிக்க மறைக்க
-
7:18 - 7:20செய்யும் தேர்வுகள் அரசியல் சார்ந்ததால்
-
7:20 - 7:23உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும்
-
7:24 - 7:28மரபணு தொழில்நுட்பங்கள் எவ்வாறு
நம்மை புரிந்துகொள்ளும் ஏதுவான -
7:28 - 7:29உடல்களை வரையறுக்க வைக்கும்?
-
7:29 - 7:32கலைஞர் ஹீதர் டீவி-ஹாக்போர்க்
குப்பைகளிலிருந்த டி.என்.ஏ களை எடுத்து -
7:32 - 7:35அதன் அடிப்படையில்
இந்த முகங்களை உருவாக்கியது -
7:35 - 7:38நம் மரபணு தனியுரிமையை
கேள்விகுறியாக்குகிறது -
7:38 - 7:42அதோடு ஒரு டி.என்.ஏ
எப்படி நம்மை வரையறுக்க முடியும். -
7:42 - 7:45காலநிலை மாற்றத்தை நாம்
எவ்வாறு சமாளித்து போரிடுவது? -
7:45 - 7:48நம்முடன் சேர்ந்து வளர்ந்து அழியக்கூடிய
-
7:48 - 7:52உயிரியல் பொருட்கள் பயன்படுத்தி செய்யும்
வழியை மாற்றுவோமா? -
7:52 - 7:54நம்முடைய உடல்களை
-
7:54 - 7:56அல்லது இயற்கையையே மாற்றுவோமா?
-
7:56 - 8:00அறிவியல், சமூகம், இயற்கை
மற்றும் தொழில்நுட்பத்தின் இடையில் -
8:00 - 8:03எல்லைகளை வலுப்படுத்தும்
அமைப்பை மாற்ற முடியுமா? -
8:03 - 8:08உறவுகள் நிலையல்லாத வடிவில்
நம்மை பூட்டி வைத்துள்ளது -
8:08 - 8:10இயற்கை, தொழில்நுட்பம்
மற்றும் சமூகம் சார்ந்த -
8:10 - 8:13கொரோனா வைரஸ் முதல்
காலநிலை மாற்றம் போன்ற -
8:13 - 8:15பதிலளிப்பது
-
8:15 - 8:17ஆழமான அரசியல் சார்ந்ததே
-
8:17 - 8:20அறிவியல் வெற்றிடத்தில் நடவாது
-
8:20 - 8:21ஐரோப்பிய குடியேறிகள்
-
8:21 - 8:24ஹவாய் வந்த காலத்திற்கு
திரும்பிச் செல்வோம் -
8:24 - 8:28அவர்கள் தங்களுடன் கால்நடைகளையும்
விஞ்ஞானிகளையும் கொண்டு வந்தார்கள் -
8:28 - 8:30கால்நடைகள் மலைப்பகுதிகளில்
-
8:30 - 8:33சுற்றுச்சூழல் அமைப்புகளை
மாற்றிய வண்ணம் சுற்றின -
8:33 - 8:37விஞ்ஞானிகள் அவ்வினங்களை
பதிவிட்டு -
8:37 - 8:40அவை அழியும் முன்
அதன் கடைசி மாதிரியை எடுத்தனர் -
8:40 - 8:42இது மஉய் ஹா குவாஹிவி,
-
8:42 - 8:45அல்லது ஹைபிஸ்காடெல்பஸ் வைல்டேரியனஸ்,
-
8:45 - 8:471910 இல் கெரிட் வைல்டர்
இவ்வாறு பெயரிட்டார். -
8:47 - 8:501912 வாக்கில் அது அழிந்து போனது.
-
8:50 - 8:53ஹார்வர்ட் பல்கலைக்கழக ஹெர்பேரியத்தில்,
-
8:53 - 8:57உலகை சார்ந்த ஐந்து மில்லியன் மாதிரிகளுள்
இதையும் கண்டேன் -
8:57 - 9:00அறிவியலின் கடந்த கால துண்டை எடுத்து
-
9:00 - 9:02காலனித்துவத்துடன் பிணைத்து
-
9:02 - 9:04இயற்கை, அறிவியல், சமூகம்
-
9:04 - 9:08ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய
யோசனைகளை உட்பொதித்து -
9:08 - 9:11அறிவியலின் எதிர்காலத்திற்கு
கேள்வி எழுப்ப விரும்பினேன். -
9:11 - 9:13அற்புதமான ஜின்கோ குழு மற்றும்
-
9:13 - 9:15யு.சி. சாண்டா குரூஸ் சார்ந்தவர்களுடன்
-
9:15 - 9:18இந்த செடியின்
ஒரு சிறு துகள் மாதிரியிலிருந்து -
9:18 - 9:20அதன் டி.என்.ஏ வை பிரித்தெடுத்து
-
9:20 - 9:22பின்னர் அந்த டி.என்.ஏவை
வரிசைப்படுத்தினோம் -
9:22 - 9:25பின்பு தாவர வாசனை உருவாக்கிய
மரபணுக்களின் சாத்திய பதிப்புகளை -
9:25 - 9:29மீண்டும் ஒருங்கிணைத்தோம்
-
9:29 - 9:31அந்த மரபணுக்களை
ஈஸ்டில் செலுத்துவதன் மூலம், -
9:31 - 9:34அந்த வாசனையை சிறிதளவு
நாம் உருவாக்க முடியும் -
9:34 - 9:35அதே போல தொலைந்த வாசனை
சில வற்றையும் -
9:35 - 9:38நம்மால் நுகர முயற்சிக்க முடியும்
-
9:38 - 9:40சீஸ் திட்டத்தில் என்னுடன்
பணியாற்றிய -
9:40 - 9:42உடனிருந்த டெய்சி,
சிசெல் டோலாஸுடன் -
9:42 - 9:46ஒரு பூவின் வாசனையை
புனரமைத்து இயற்றினோம் -
9:46 - 9:49இயற்கை வரலாறு, மற்றும்
செயற்கை எதிர்காலம் -
9:49 - 9:53இணைந்த நிறுவலில்
மக்களால் பங்கெடுக்க முடிகிறது -
9:54 - 9:5710 வருடங்களுக்கு முன், செயற்கை
உயிரியலாளராக -
9:57 - 10:00மரபணு பொறியியல்
அறிவியல் தாண்டிய கலை என்றிருந்தேன் -
10:00 - 10:01மக்கள் குளறுபடியாவர்கள் எனவும்
-
10:01 - 10:03உயிரியல் சிக்கலானது என்றிருந்தேன்
-
10:04 - 10:07இப்போது மரபணு பொறியியலை
கலையாக பயன்படுத்தி -
10:07 - 10:10நாம் இணைந்துள்ள வழிகளையும் ஆராய்ந்து
-
10:10 - 10:12மாறுபட்ட எதிர்காலங்களை
கற்பனை செய்கிறேன் -
10:12 - 10:14தொழில்நுட்ப
மனித யதார்த்தங்களையும் -
10:14 - 10:17இந்த இணைப்புகளையும்
அங்கீகரிக்கும் -
10:17 - 10:20ஒரு நிலையான எதிர்காலத்தை
உருவாக்குவோம் -
10:20 - 10:23அது உயிரியலின் சக்தி,
பின்னடைவு மற்றும் நிலைத்தன்மை, -
10:23 - 10:25குணமடைய, வளர மற்றும் மாற்றியமைக்கும்
-
10:25 - 10:28திறனையும் அங்கீகரிக்கிறது
-
10:28 - 10:30எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு
-
10:30 - 10:33இன்று தேவையான மிகவும் அவசியமான
மதிப்புகள் தருகிறது -
10:33 - 10:35எதிர்காலத்தை வடிவமைக்கும்
தொழில்நுட்பத்தை -
10:35 - 10:37மனிதர்கள் உருவாக்குகிறார்கள
-
10:38 - 10:40நமது எதிர்காலத்தை
தீர்மானிக்கும் முடிவு -
10:40 - 10:42நம் கையில் தான் உள்ளது
-
10:43 - 10:44நன்றி
- Title:
- உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது என்னவாகும்?
- Speaker:
- கிறிஸ்டினா அகபாகிஸ்
- Description:
-
"நமது எதிர்காலம் குரோமாக இருக்கும் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது - ஆனால் எதிர்காலம் வெறும் சதையாக இருந்தால் என்ன செய்வது?" என்று உயிரியல் வடிவமைப்பாளர் கிறிஸ்டினா அகபாகிஸ் கேட்கிறார். இந்த பிரமிக்க வைக்கும் பேச்சில், அகபாகிஸ் தனது செயற்கை உயிரியலில் இவரது பணி - இயற்கை மற்றும் செயற்கையானவற்றுக்கு இடையேயான வரிசையை சவால் விடும் இவரது பலதரப்பட்ட ஆராய்ச்சி பகுதி - மற்றும் அறிவியல், சமூகம், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகளை எவ்வாறு உடைத்தால் அது எவ்வாறு வெவ்வேறான எதிர்காலங்களை கற்பனை செய்ய உதவும் என விவரிக்கிறார்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 10:58
TED Translators admin approved Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Shouko Krishima accepted Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Shouko Krishima edited Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for What happens when biology becomes technology? | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for What happens when biology becomes technology? |