ஒரு மலம் நிரம்பிய பெட்டி என் வாழ்க்கையை மாற்றியது பத்து வருடம் முன்பு, நான் முதுகலை மாணவி மரபணு பொறியியல் போட்டி ஒன்றை இளங்கலை மாணவர்களுக்காக மதிப்பீடு செய்ய சென்றேன் பிரிட்டிஷ் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அலெக்ஸாண்ட்ரா டெய்சி ஜின்ஸ்பெர்க்கை நான் அங்கு சந்திதேன். கேம்பிரிட்ஜ் பல்கலைகழக குழு வெள்ளை சட்டை அணிந்திருந்தார் ஒரு பெட்டியும் வைத்திருந்தார் கையோடு இணைக்கப்பட்டது போல தோன்றும் மதிப்புள்ள ஒரு பெட்டி அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எனக்கு எதையோ காண்பிக்க அழைத்தார் குறும்பு பார்வையுடன் அவர் தனது பெட்டியை திறந்து காண்பித்தார் அதனுள் பல வண்ணங்களிலான மகிமையான மலக் கட்டிகள் இருந்தன கேம்பிரிட்ஜ் அணி, அவர்களின் கோடைகாலத்தை பாக்டீரியா ஈ.கோலையை நெறிப்படுத்துவதில் கழித்ததாக விளக்கினார் அவை சுற்றுசூழலை உணர்ந்து அதை உணர்த்த வானவில் போன்று வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என்று விளக்கினார் உங்கள் குடிநீரில் ஆர்சனிக்கா? இந்த கறை பச்சை நிறமாக மாறும். அவருன் அவரின் குழுவின் வடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிங், சக மாணவர்களுடன் பணிபுரிந்து இப்பாக்டீரியாக்களை பயன்படுத்த பல சாத்தியகூறுகளை ஆராய்ந்துள்ளனர் அவர்கள் என்னிடத்தில கேட்டது ப்ரோபயாடிக் பானமாக ஆரோக்கிய அளவியாக இதை பயன்படுத்தினால் என்ன? என்பதே இந்த பாக்டீரியாவை குடித்ததும் அது உங்கள் குடலில் வாழும் பின்பு நடப்பதை உணர்ந்து அதற்கு பதிலாக ஏதாவது ஒரு நிறத்தை வெளிப்படுத்த இயலும் நம்பமுடியாதது! iGEM என சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச மரபணு பொறியியல் இயந்திர போட்டியில் கேம்பிரிட்ஜ் அணி வென்றது எனக்கு அந்த மலம் ஒரு பெரிய திருப்புமுனை நான் ஒரு செயற்கை உயிரியலாளர், பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை அறிந்திருக்க கூட மாட்டார்கள் நிச்சயம், ஒரு ஆக்ஸிமோரன் போன்றது உயிரியல், இயற்கையானது அதெப்படி செயற்கையாகும் செயற்கையானது எப்படி உயிராக முடியும்? இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின் இடையில் உள்ள மெல்லிய எல்லை கோட்டில் துளைகள் போல தான் நாங்கள் வருகிறோம் ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலுமிருந்து iGEM மாணவர்கள் அவர்களின் கோடைகாலத்தை உயிரியலை தொழில்நுட்பமாக மாற்றும் முயற்சியில் செலவிடுகின்றனர் பாக்டீரியாவுக்கு சுடோகு விளையாட்டு பயிற்சி பல வண்ண சிலந்தி பட்டு செய்தல் சுய குணமாகும் கான்கிரீட் செய்தல் திசு அச்சுப்பொறிகள், நெகிழி உண் பாக்டீரியாவும் செய்கின்றனர் அந்த தருணம் வரை, வேறு வகையான சொற்முரண்பாடோடு நான் அதிக அக்கறை கொண்டிருந்தேன் பழைய மரபணு பொறியியல் உடன் நகைச்சுவையாளர் சைமன் முன்னேரி கூறியது மரபணு பொறியியல் உண்மையில் பொறியியலை அவமதிக்கிறது ஒரு ஆற்றில் கான்கிரீட் மற்றும் எஃகுவை வீசி விட்டு அதை பாலம் என்கிறது இன்றைய மரபணு பொறியியல் இது செயற்கை உயிரியலாளர்ளுக்கு பெரும் கவலையை தந்தது மரபணு பொறியியல் விஞ்ஞானம் தாண்டிய கலை என வருந்தினர் மரபணு பொறியியலை உண்மையான பொறியியலாக மாற்ற விரும்பினர் பொறியாளர்கள் கணினிகளுக்கு மென்பொருள் எழுதுவது போல செல்களை நிரல் செய்து டி.என்.ஏ எழுத முயன்றனர் 10 வருட முந்தைய அந்நாள் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது இன்று நான், ஜின்கோ பயோவொர்க்ஸ் செயற்கை உயிரியல் நிறுவனத்தின் படைப்பு இயக்குனர் கணினி நிரல் போல் மக்கள் வாழ்வை திட்டமிடும் நிறுவனம் அதன் "படைப்பு இயக்குனர்" அறிது தான் ஆனால் நான் டெய்சியை சந்தித்த அந்த நாள் நான் பொறியியல் பற்றி கற்றுக் கொண்டேன் பொறியியல் உண்மையில் சமன்பாடுகள் பற்றியது அல்ல எஃகு, சுற்றுகள் பற்றியது அல்ல இது உண்மையில் மக்களைப் பற்றியது. அவர்கள் செயலால் உருவாகும் பாதிப்பு பற்றியது என் வேலையில் பல்வகை பொறியியலில் புது பாதைகளுக்கு திறக்க முயல்கிறேன் எப்படி சிறந்த கேள்விகளை கேட்கலாம் எப்படி சிறந்த உரையாடல்களைப் பெறலாம் எதிர்கால தொழில்நுட்பத்திடம் நாம் என்ன விரும்புகிறோம் GMOகள் கூர்ந்து கவனிக்கும் சமூகத்தில் தொழில்நுட்பம், மட்டுமல்லாது சமூகம், அரசியல், பொருளாதார அடிப்படையில் எவ்வாறு ஆராயலாம்? மக்கள் விரும்பும் GMO களை உருவாக்க முடியுமா? தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு மீளுரு உயிரியல் பயன்படுத்தலாமா? இந்த எண்ணம் மற்ற மெல்லிய விஷயங்களை விடவும் "உண்மை பொறியியலை" மதிக்கும் கலாச்சாரத்தால் வடிவமைக்கப்படுபவர் செயற்கை உயிரியலாளர் இதை அங்கீகரிப்பதன் மூலம் தொடங்குகிறது நாம் கணினிகளுக்குள் இருக்கும் சுற்றுகளில் சிக்கிக் கொள்வதால் நம் வலிமையை பார்க்கும் பார்வையை இழக்கிறோம் ஏராளமான தொழில்நுட்பம் வெளி உலகில் உள்ளது ஆனால் மலத்தில் தொழில்நுட்பத்தை கற்பனை செய்வது முதன் முறை. நான் செயற்கை உயிரியலின் அருமையை உணர்ந்தென் செல்களை கணினிகளாக மாற்ற முடியும் என்பதால் அல்ல தொழில்நுட்பத்திற்கு வாழ்க்கை தர முடியும் என்பதால் இது ஒரு ஆழ்ந்த தொழில்நுட்பம் எதிர்காலம் பற்றிய ஒரு மறக்க முடியாத பார்வை அதை விடவும் முக்கியமான ஒரு கேள்வியாக வடிவமைக்கப்பட்டுள்ளது "இது தான் நாம் உண்மையில் விரும்பும் எதிர்காலமா? " நம் எதிர்காலம் குரோம் என கூறப்பட்டுள்ளது அவை வெறும் சதைப்பற்றுள்ளதாக இருந்தால் என்ன செய்வது? அறிவியலும் மற்றும் அறிவியல் புனைகதைகளும் நாம் நட்சத்திரங்களால் ஆனவர் என்று நினைவுறுத்துகிறது அதே சமயம், நாம் சதையால் உருவானவர்கள் என்றும் நினைவூட்டி அதிசயிக்க வைக்கிறது உயிரியல் என்பது நம் உடல்களும், நாம் சாப்பிடுவதுமே. உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த படங்கள் தான் கேள்விகள் சாதாரண மற்றும் விரும்பக் கூடிய என்ணங்களை அவை சவால் செய்கின்றன எதிர்காலம் தேர்வுகள் நிறைந்தது என்றும் வித்தியாசமாக தேர்ந்தெடுக்கலாம் என்கிறது அழகை பற்றிய உடலின் எதிர்காலம் என்ன? நம் உடலை மாற்றினால், நமக்கு புது வகையான விழிப்புணர்வு கிடைக்குமா? அல்லது நுண்ணுயிர் உலகின் புதிய விழிப்புணர்வு உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துமா? எனது ஆய்வுக் கட்டுரையின் கடைசி அத்தியாயம் என் விரலிடுக்கு பாக்டீரியாவால் தயாரித்த சீஸ் பற்றியது ஒரு மலம் என் வாழ்க்கையை மாற்றியது என்றேன் வாசனை கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் சிசெல் டோலாஸ் நம் உடலும் சீஸும், வாசனை மற்றும் நுண்ணுயிரிகள் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன எல்லா வழிகளையும் ஆராய உதவினார் அதோடு நாங்கள் இந்த சீஸை வாழ்வின் பகுதியான மற்றும் ஆராய்ச்சிக்கான பாக்டீரியா இடையே உள்ள மாறுபட்ட எண்ணங்களை சவால் விடும் விதமாக உருவாக்கினோம் நாம் உண்ணுவது தான் உண்மையில் நாம் உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் சந்திக்கும் இடம் பொதுவாக உண்மை மீறும் கதையாக அடிக்கடி கூறப்படுகிறது உங்கள் மூளையை கணினிக்கு பதிவேற்ற முடிந்தால் நீங்கள் இனி மலம் கழிக்க தேவையில்லை. என்பது தானே பொதுவாக சரியான கதையாக சொல்லப்படுகிறது, ? கணினிகள் சுத்தம் என்றும் உயிரியல் குழம்பியது என்பதுமாக உள்ளது. கணினி பகுத்தறிவானவை எனவும் உயிரியல் கணிக்க முடியாதவை என தொடங்கி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும், புறநிலையானதாகவும் தூய்மையானதாகவும் அறியப்படுகிறது ஆனால் மனிதர்கள் குழப்பமானவர்கள் செயற்கை உயிரியலாளர்கள் போல இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் செயலாற்றுகின்றனர் கலைஞர்கள், வடிவமைப்பாளர் மற்றும் சமூக விஞ்ஞானிகள் இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமுகத்தின் இடையில் செயலாற்றுவது அதனினும் மென்மையானது என நினைக்கின்றனர் எதிர்கால சிந்தனைகளையும் இயற்கையை கட்டுப்படுத்துவது பற்றிய நமது கற்பனைகளையும் மறுபரிசீலனை செய்ய சவால் விடுகின்றனர் நம் எண்ணம், நம்பிக்கை மற்றும் மதிப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம் கேள்விகள் மற்றும் தேர்வுகளின் எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது என காட்டுகின்றனர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனிதர்கள் இடையில் உள்ளதால் அரசியல் சார்ந்தது என்கின்றனர் நம் சொந்த நோக்கத்திற்காக வாழ்வை கட்டுப்படுத்தினால் நமக்கு என்ன அர்த்தம் கிடைக்கும்? கலைஞர்கள் ஓரோன் கேட்ஸ், அயோனாட் ஜூர் "பாதிக்கப்படாத தோல்" திட்டம் உருவாக்கினர் எலியின் செல்களை வைத்து ஒரு சிறிய தோல் ஜாக்கெட் ஒன்றை வடிவமைத்தனர் இந்த ஜாக்கெட் உயிரினையா? இதை இப்படியே வைத்து வளர்த்தால் என்ன ஆகும்? இது உண்மையில் பாதிக்கப்பட்டதா? பாதிக்கப்படாததன் அர்த்தம் தான் என்ன? நம் முன்னேற்ற பாதையில் நாம் காண்பிக்க மறைக்க செய்யும் தேர்வுகள் அரசியல் சார்ந்ததால் உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும் மரபணு தொழில்நுட்பங்கள் எவ்வாறு நம்மை புரிந்துகொள்ளும் ஏதுவான உடல்களை வரையறுக்க வைக்கும்? கலைஞர் ஹீதர் டீவி-ஹாக்போர்க் குப்பைகளிலிருந்த டி.என்.ஏ களை எடுத்து அதன் அடிப்படையில் இந்த முகங்களை உருவாக்கியது நம் மரபணு தனியுரிமையை கேள்விகுறியாக்குகிறது அதோடு ஒரு டி.என்.ஏ எப்படி நம்மை வரையறுக்க முடியும். காலநிலை மாற்றத்தை நாம் எவ்வாறு சமாளித்து போரிடுவது? நம்முடன் சேர்ந்து வளர்ந்து அழியக்கூடிய உயிரியல் பொருட்கள் பயன்படுத்தி செய்யும் வழியை மாற்றுவோமா? நம்முடைய உடல்களை அல்லது இயற்கையையே மாற்றுவோமா? அறிவியல், சமூகம், இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின் இடையில் எல்லைகளை வலுப்படுத்தும் அமைப்பை மாற்ற முடியுமா? உறவுகள் நிலையல்லாத வடிவில் நம்மை பூட்டி வைத்துள்ளது இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமூகம் சார்ந்த கொரோனா வைரஸ் முதல் காலநிலை மாற்றம் போன்ற பதிலளிப்பது ஆழமான அரசியல் சார்ந்ததே அறிவியல் வெற்றிடத்தில் நடவாது ஐரோப்பிய குடியேறிகள் ஹவாய் வந்த காலத்திற்கு திரும்பிச் செல்வோம் அவர்கள் தங்களுடன் கால்நடைகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டு வந்தார்கள் கால்நடைகள் மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றிய வண்ணம் சுற்றின விஞ்ஞானிகள் அவ்வினங்களை பதிவிட்டு அவை அழியும் முன் அதன் கடைசி மாதிரியை எடுத்தனர் இது மஉய் ஹா குவாஹிவி, அல்லது ஹைபிஸ்காடெல்பஸ் வைல்டேரியனஸ், 1910 இல் கெரிட் வைல்டர் இவ்வாறு பெயரிட்டார். 1912 வாக்கில் அது அழிந்து போனது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஹெர்பேரியத்தில், உலகை சார்ந்த ஐந்து மில்லியன் மாதிரிகளுள் இதையும் கண்டேன் அறிவியலின் கடந்த கால துண்டை எடுத்து காலனித்துவத்துடன் பிணைத்து இயற்கை, அறிவியல், சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய யோசனைகளை உட்பொதித்து அறிவியலின் எதிர்காலத்திற்கு கேள்வி எழுப்ப விரும்பினேன். அற்புதமான ஜின்கோ குழு மற்றும் யு.சி. சாண்டா குரூஸ் சார்ந்தவர்களுடன் இந்த செடியின் ஒரு சிறு துகள் மாதிரியிலிருந்து அதன் டி.என்.ஏ வை பிரித்தெடுத்து பின்னர் அந்த டி.என்.ஏவை வரிசைப்படுத்தினோம் பின்பு தாவர வாசனை உருவாக்கிய மரபணுக்களின் சாத்திய பதிப்புகளை மீண்டும் ஒருங்கிணைத்தோம் அந்த மரபணுக்களை ஈஸ்டில் செலுத்துவதன் மூலம், அந்த வாசனையை சிறிதளவு நாம் உருவாக்க முடியும் அதே போல தொலைந்த வாசனை சில வற்றையும் நம்மால் நுகர முயற்சிக்க முடியும் சீஸ் திட்டத்தில் என்னுடன் பணியாற்றிய உடனிருந்த டெய்சி, சிசெல் டோலாஸுடன் ஒரு பூவின் வாசனையை புனரமைத்து இயற்றினோம் இயற்கை வரலாறு, மற்றும் செயற்கை எதிர்காலம் இணைந்த நிறுவலில் மக்களால் பங்கெடுக்க முடிகிறது 10 வருடங்களுக்கு முன், செயற்கை உயிரியலாளராக மரபணு பொறியியல் அறிவியல் தாண்டிய கலை என்றிருந்தேன் மக்கள் குளறுபடியாவர்கள் எனவும் உயிரியல் சிக்கலானது என்றிருந்தேன் இப்போது மரபணு பொறியியலை கலையாக பயன்படுத்தி நாம் இணைந்துள்ள வழிகளையும் ஆராய்ந்து மாறுபட்ட எதிர்காலங்களை கற்பனை செய்கிறேன் தொழில்நுட்ப மனித யதார்த்தங்களையும் இந்த இணைப்புகளையும் அங்கீகரிக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவோம் அது உயிரியலின் சக்தி, பின்னடைவு மற்றும் நிலைத்தன்மை, குணமடைய, வளர மற்றும் மாற்றியமைக்கும் திறனையும் அங்கீகரிக்கிறது எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு இன்று தேவையான மிகவும் அவசியமான மதிப்புகள் தருகிறது எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவு நம் கையில் தான் உள்ளது நன்றி