இந்த இரண்டு பின்னங்களின் பகுதி எண்ணையும்
மீச்சிறு பொது பகுதியாக மாற்ற வேண்டும்.
எனவே, இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின்
மீச்சிறு பொதுமடங்கை
கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு
பின்னங்களையும் மாற்றவேண்டும்..
நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின்
LCM-ஐ கண்டுப்பிடிப்போம், 8 & 6 -ன் LCD
LCM = LCD ஆகும்.
இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும்
8,6 -ன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால்
நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம்
6 -ன் மடங்குகள் - 6,12,18,24,30...
8 -ன் மடங்குகள் - 8, 16, 24, 32..
இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24.
இது தான் இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு
இதற்கு வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72...
ஆனால், நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு.
எனவே, அது 24. LCM -ஐ கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன.
இந்த எண்ணின் பகாக்காரணியை கண்டறிய வேண்டும். 6 - 2x3.
எனவே, 6-ன் LCM -ல் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும்.
8 -ன் பகாக்காரணிகள், 2x2x2 ஆகும்.
8 ஆல் வகுபட வேண்டும் என்றால், அதில் மூன்று 2 கள் இருக்க வேண்டும்.
6 ஆல் வகுபட வேண்டுமென்றால், அதன் பகாக்காரணிகளில்
2 மற்றும் 3 இருக்க வேண்டும். 8 ஆல் வகுபட
மூன்று 2 கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு 2 உள்ளது, இரண்டு 2 தேவை.
எனவே, இது 6 மற்றும் 8 ஆல் வகுபடும்.
எனவே, 2x2x2x3 = 24. இது 8 & 6 -ன் LCM.
அதாவது இதன் LCD, 24.
எனவே, நாம் இரண்டு பின்னங்களின் பகுதியையும்
24 ஆக மாற்றவேண்டும்.
முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம்.
இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால்
நாம் அதை 3-ஆல் பெருக்க வேண்டும்
பகுதி எண்ணை பெருக்கினால்,
தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்.
ஆகையால் தொகுதி எண்; 2x3 = 6 ஆக மாறிவிடும்
2/8 = 6/24 ஆகும்
2/8 x 3/3 = 6/24
இதேபோல் நாம் 5/6 என்ற பின்னத்தின்
பகுதி எண்ணை 24 ஆக மாற்ற வேண்டும்
இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால்
நாம் இதை 4-ஆல் பெருக்கவேண்டும்
இதன் தொகுதி எண்ணையும் பெருக்க வேண்டும்; 5x4 = 20
5/6 = 20/24
நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின்
பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்