நன்றி இந்தியாவில், முன்பொரு காலத்தில் ஒரு மன்னர்,மகாராஜா இருந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எல்லா தலைவர்களும் மகாராஜாவிற்கு தகுந்த பரிசு அளிக்க வேண்டும் என்று. சிலர் உயர்ந்த பட்டாடைகள் கொண்டு வந்தனர், சிலர் ஆடம்பரமான வாள் பரிசாக அளித்தனர். இன்னும் சிலர் தங்கத்தாலான பரிசுகள் கொண்டு வந்தனர். நீண்ட வரிசையின் இறுதியில் ஒரு சிறிய, தோல் சுருங்கிய வயோதிகர் நடந்து வந்தார். அவரது கிராமத்திலிருந்து நெடு நாள் பயணமாக கடற்கரையோரமாக நடந்து வந்திருந்தார். "மகாராஜவிர்க்காக என்ன பரிசு கொண்டு வந்து இருகிறீர்கள் ?" என்று மன்னரது மகன் வயோதிகரைப் பார்த்துக் கேட்டார். அந்த முதியவர், மிக மெதுவாக தன் உள்ளங்கையிலிருந்த பொருளை திறந்து காட்டினார். அது ஒரு மிக அழகான சங்கு, சுருள் சுருளாக ஊதா , மஞ்சள், சிகப்பு மற்றும் நீலம் வர்ணங்களில் மகாராஜாவின் மகன் கேட்டார், இது என்ன பரிசு, இது மகாராஜாவிற்கு உரியதா என்ன. அந்த முதியவர் மெல்ல நிமிர்ந்து நோக்கி, கூறினார். பரிசின் ஒரு பகுதி, எனது நீண்ட நடை பயணம். (சிரிப்பு) இன்னும் ஒரு சில நொடிகளில் , நான் உங்களுக்கு ஒரு பரிசு தர போகிறேன் இந்தப் பரிசு உங்களுக்கு ஒரு மதிப்புள்ள பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அதற்க்கு முன் உங்களை எல்லாம் ஒரு நீண்ட பயணத்திற்கு என்னுடன் அழைத்து செல்ல போகிறேன். உங்களில் பலரைப் போல ஒரு சிறு குழந்தையாக என் வாழ்க்கை துவங்கியது. உங்களில் எத்தனை பேர் சிறு குழந்தையாக வாழ்க்கையை துவங்கினீர்கள் ? இளமையாக பிறந்தீர்கள் ? சுமார் பாதி பேர் .. சரி (சிரிப்பு )