வணக்கம். நான் ஒரு திரைப்பட நடிகன். எனக்கு 51 வயது ஆகிறது. இன்னும் நாம் போடாக்ஸ் உபயோகப்படுத்தவில்லை. (சிரிப்பொலி) நான் சுத்தமானவன், ஆனால் படங்களில் 21 வயதானவன் போல் நடந்துக் கொள்வேன். ஆமாம், உண்மை தான்! நான் உலகத்தில் சிறந்த காதலன் என நம்பும் கோடிக்கனக்கான இந்திய மக்களிடம் கனவுகளையும் காதலையும் விற்கிறேன். (சிரிப்பொலி) நீங்கள் யாரிடமும் கூறவில்லையெனில் நான் அவனில்லை தான் ஆனால் அந்த பட்டத்தை இழக்க மாட்டேன். (சிரிப்பொலி) எனது நடிப்பை இங்கு பலர் பார்க்கவில்லை என்று எனக்கு தெரிய வந்துள்ளது. உங்களை நினைத்து வருந்துகிறேன். (சிரிப்பொலி) (கைத்தட்டல்) இருப்பினும் நான் என்னைப் பற்றியே அதிகம் சிந்திப்பேன், ஒரு நடிகனைப் போலவே. (சிரிப்பொலி) அப்பொழுது தான் எனது நண்பர்கள் கிறிஸ் மற்றும் ஜூலியெட் வருங்கால "நீங்கள்" என்ற தலைப்பில் பேசுவதற்காக என்னை அழைத்தனர். இயற்கையாக, நான் "நிகழ்கால என்னை" பற்றி தான் பேச போகிறேன். (சிரிப்பொலி) ஏனெனில், மனித நேயம் எனைப் போன்றது என நான் நம்புகிறேன். (சிரிப்பொலி) ஆம். ஆம். ஒரு வயதாகிக் கொண்டிருக்கும் நடிகன் தன்னை சுற்றியுள்ள புதியவைகளை சமாளித்துக் கொண்டு சரியாக செய்கிறானா என்று வியந்துக்கொண்டு ஒரு வழியையும் தேட முயன்று எப்படியேனும் அதில் வெற்றி பெற முயலுகிறான். நான் இந்திய தலைநகர் புதுடெல்லியில் அகதிகள் குடியேற்றத்தில் பிறந்தேன். என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். என் தாயும் எல்லா தாய்களைப் போல் ஒரு வீராங்கணை. மற்ற மனித இனங்களைப் போல நாங்களும் உயிர்வாழ போராடினோம். என் இருபதுகளில் என் பெற்றோர்கள் இருவரையும் இழந்தேன். இப்பொழுது நினைத்தால் என் கவனக்குறைவு தான் என்று தோண்றுகிறது. ஆனால்... (சிரிப்பொலி) என் தந்தை மறைந்த இரவு நினைவிருக்கிறது. என் அண்டை வீட்டாரின் ஓட்டுனர் எங்களை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். அவர் "இறந்தவரிடம் பணம் கேட்க முடியாது" என்று நொந்து கொண்டு இருளுக்குள் சென்றூ விட்டார். அப்பொழுது எனக்கு வெறும் 14 வயது. என் காலமான தந்தையின் உடலை வாகனத்தின் பின் இருக்கையில் படுக்க வைத்தேன். என் தாய் என் பக்கத்தில் உட்கார, நான் மருத்துவமனையில் இருந்து விட்டிற்கு ஓட்டிச்சென்றேன். என் தாய் தன் மௌன அழுகையின் நடுவில் என்னைப் பார்த்து கேட்டது "எப்போதிருந்து வண்டி ஓட்ட தெரியும்?" நான் யோசித்தப்பின் என் தாயிடம் விடையளித்தேன் "இப்போது தான்" என்று. (சிரிப்பொலி) அந்த இரவு முதல், மனித நேயத்திற்கேற்ற வழிகளில் உயிர்வாழ வேண்டி பல வாழ்வியல் உத்திகளைக் கற்றுக்கொண்டேன். உண்மையில், வாழ்வின் கோட்பாடுகள் மிக எளிதாக இருந்தன. கிடைத்ததை சாப்பிடு சொன்னதை செய் சிலியாக் ஒரு காய்கறி என்று கூட நினைத்தேன். வீகன், ஸ்டார் ட்ரெக் ஸ்பாக்கின் தொலைந்த தோழர் என் நினைத்தேன் (சிரிப்பொலி) சந்தித்த முதல் பெண்ணை மணக்க வேண்டும் வாகன கார்பொரேட்டரை சரிசெய்தாலே நீ தொழில்நுட்ப வல்லவன். "கே" என்றால் ஆங்கிலத்தில் மகிழ்ச்சி என நினைத்தேன். மற்றும் லெஸ்பியன், நீங்கள் அறிந்தது போல் போர்ச்சுகளின் தலைநகரம். (சிரிப்பொலி) எங்கிருந்தேன்? நம்மை காப்பதற்காக நமது முன்னோர் கடும் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய அமைப்புகளை சார்ந்து நாம் இருந்தோம் அரசாங்கம் நம் நலனுக்காக வேலை செய்வதாக நினைத்தோம். அறிவியல், சுலபமானது மற்றும் தருக்கமானது ஆப்பிள் வெறும் பழமாகத்தான் இருந்தது முதலில் ஏவாளிடம் பிறகு நியூட்டனிடம் அன்று வரையிலாவது. ஸ்டீவ் ஜாப்ஸிடம் இல்லை தெருவில் துணியின்றி ஓடுகையில் "யுரேக்கா!" என்று கத்தினோம் வேலை கிடைத்த இடங்களுக்கெல்லாம் சென்றோம் மக்கள் பெரும்பாலும் நம்மை வரவேற்றார்கள். புலம்பெயர்வு என்பது சைபீரிய கொக்குகளை குறித்தது மனிதர்களை அல்ல. மிக முக்கியமாக, நீ நீயாக இருந்தாய் மற்றும் நினைத்ததை பேசினாய். என் பிந்தைய 20களில் நெரிசலான பம்பாய்க்கு இடம்பெயர்ந்தேன். என் முழு அமைப்பும் புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட மனித நேயத்தைப் போல் மாற தொடங்கியது. நகர நெரிசலில் புது அலங்கார பிழைப்பில் எல்லாம் விசித்திரமானது உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்த மக்களை சந்தித்தேன்: முகங்கள், இனங்கள், பாலினங்கள், கடன் வழங்குபவர்கள். அர்த்தங்கள் மேன்மேலும் இளகின. உன் வேலை உன்னை தீர்மானித்தது ஒரு பெரும் சமப்படுத்தப்பட்ட முறையில். எந்த அமைப்புகளையும் அதிகமாக நம்ப முடியவில்லை மனிதகுலத்தின் பன்முகத்தன்மைக்கும் மனித முன்னேற்றம், வளர்ச்சியின் தேவைக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது யோசனைகளும் அதிக சுதந்திரம் மற்றும் வேகத்துடன் வருகிறது மனித கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பின் அதிசயத்தை அனுபவித்தேன் என் சொந்த படைப்பாற்றலும் கூட்டு முயற்சியின், வளத்தால் ஆதரிக்கப்படும் போது நான் உயர்ந்த நட்சத்திரம் ஆனேன் என் வெற்றியை உணர்ந்தேன் 40 வயதில், நான் உண்மையில், பறந்து கொண்டிருந்தேன். அனைவரும் என்னை வரவேற்றனர் அது வரையில், நான் செய்திருந்தது 50 படங்களும் 200 பாடல்களுமே மலேசியர்களால் மரியாதை செய்யப்பட்டேன். பிரெஞ்சு அரசு வழங்கிய உயரிய சிவில் மரியாதையின் பெயரை கூட இன்று வரை உச்சரிக்க தெரியாது (சிரிப்பொலி) மன்னிக்கவும், ஆனால் பிரான்ஸுக்கும் என்றும் நன்றிகள் ஏஞ்சலினா ஜோலியை சந்தித்தது அதைவிட பெரிது (சிரிப்பொலி) அதுவும் இரண்டரை வினாடிகள் (சிரிப்பொலி) அவரும் என்னை மறந்திருக்க முடியாது மறந்திருக்கலாமோ விருந்தில் ஹன்னா மொன்டானா அருகில் அமர்ந்தேன் பெரும்பாலும் அவரின் முதுகு தான் தெரிந்தது மைலி ஜோலி என என் வாழ்க்கை பறந்தது மனிதநேயம் என்னுடன் உயர்ந்தது இருவருமே வாழ்வில் கட்டுக்கடங்காமல் பறந்தோம் பின்னர் நடந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இணையம் பிறந்தது. அப்போது, என் 40 வயதில் பறவைக் கூண்டில் கேனரி போல நான் ட்வீட் செய்ய ஆரம்பித்தேன் நான் அறிந்த அதிசயத்தை என் உலகை சார்ந்த மற்றவரும் போற்றுவர் என நம்பியிருந்தேன் ஆனாம் எனக்கும் மனிதத்துக்கும் வேரொன்று நடந்தது இந்த மேம்படுத்தப்பட்ட உலக இணைப்பு கனவுகளின் விரிவாக்கமாக இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் கிராமம் போன்ற இந்த குறுகிய சிந்தனை தீர்ப்பு, வரையறை சுதந்திரமும் புரட்சியும் நடக்கும் அதே இடத்திலிருந்து பாயும் என எதிர்பார்க்கவில்லை என் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டனர் என் நல்ல, தவறிய செயல்களையும் விமர்சிக்க உலகம் தயாராக இருந்தது உண்மையில், நான் சொல்லாத செய்யாத அனைத்தும் கூட அதே விதியை சந்தித்து நான்கு ஆண்டுகளுக்கு முன் என் மனைவி கவுரியும் நானும் மூன்றாவது குழந்தை பெற முடிவு செய்தோம். ஆனால் வலைதளங்கள் அது எங்கள் மகனின் காதல் குழந்தை என்றது அவருக்கு வயது 15 ருமேனியாவில் ஒரு பெண்ணுடனான கார் பயணத்தில் அவர் இதை செய்ததாக கூறப்பட்டது அதனுடன் ஒரு போலி வீடியோ காட்சியும் இணைக்கப்படது எங்கள் குடும்பத்தை அதிகமாக பாதித்தது இப்போது 19 வயதாகும் என் மகனிடம் "ஹலோ" என்று கூறும்போது, அவர் ஆச்சர்யமாக கேட்பது... "என்னிடம் ஐரோப்பிய ஓட்டுநர் உரிமம் கூட இல்லையே" (சிரிப்பொலி) ஆமாம் இந்த புதிய உலகில் மெல்ல, உண்மை மெய்நிகர் ஆனது மெய்நிகர் உண்மையானது, நான் அதை உணரும் போது நான் நானாக இருக்க மற்றும் கூற நினைத்ததை கூற முடியவில்லை மனித நேயமும் அதே நேரத்தில் இதை முழுமையாக உணர்ந்தது நாங்கள் இருவருமே வாழ்விய நெருக்கடியை சந்தித்தோம் மனித நேயமும் இதில் இருந்து தப்ப முடியவில்லை எண்ணெய், டீசல் ஜெனரேட்டர் என அனைத்தையும் விற்றேன் மனிதநேயமும் விடாமல் கச்சா எண்ணெய், அணு உலைகளை வாங்கியது சூப்பர் ஹீரோ ஆடை அணிந்து நடிக்க முயற்சித்தேன் ஒரு மாற்றதிற்காக ஆனால் தோல்வியடைந்தேன் ஆனால் உண்மையில் பேட்மேன், ஸ்பைடர் மென் மற்றும் உலகின் சூப்பர்மேன், அனைவரையும் பாராட்ட வேண்டும், ஏனெனில் அந்த ஆடை அணிவது உண்மையில சுலபமில்லை (சிரிப்பொலி) இதனிடையில் ஒரு விஷயம் நிகழ்ந்தது உண்மை நான் தற்செயலாக ஒரு புது நடன வடிவத்தைக் கண்டுபிடித்தேன் அது பிரபலம் ஆகும் என நான் உணரவில்லை நீங்கள் பார்த்து தான் நான் வெட்கமற்றவன், அதனால் உங்களுக்குக் காண்பிக்கிறேன் அதன் பெயர் லுங்கி டான்ஸ் உங்களுக்குக் காண்பிக்கிறேன் நான் திறமையானவனும் தான் (ஆரவாரம்) இப்படி ஆரம்பிக்கும் லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், மிக பிரபலமானது (ஆரவாரம்) உண்மையாக நீங்கள் கவனித்ததைப் போல, யாருக்கும் எதுவும் புலப்படவில்லை நானும் அதை பொருட்படுத்தவில்லை ஏனெனில் முழு உலகமும் மனித நேயமும் என்னைபோலவே குழம்பியிருந்தது ஆனால் நான் விடவில்லை சமூக ஊடகங்களில் நானும் மற்றவரை போல் அடையாளத்தை புனரமைக்க முயன்றேன் தத்துவ ட்வீட் போட்டால் ஆதரிப்பார்கள் என நினைத்தேன் ஆனால் அது இன்னும் குழப்பியது எனக்கு கிடைத்த சில பதில்கள் ட்வீட்கள் மிக குழப்பமான சுருக்கெழுத்துக்கள் மட்டுமே? ROFL, LOL. "அடிடாஸ்," என்று கூட யாரோ எழுதினர் நான் யோசித்துக்கொண்டிருந்தேன் தத்துவத்திற்கும் காலணிக்கும் என்ன தொடர்பு என்று எனது 16 வயது மகளை நான் கேட்ட போது, அதன் அர்த்தம் "நாள் முழுக்க செக்ஸ் கனவு" என அறிவூட்டினாள் (சிரிப்பொலி) உண்மை நீங்கள் அறிய வாய்ப்பில்லை திரு. அடிடாஸுக்கு "WTF" என அனுப்பினேன் இதற்கு அர்த்தம் மாறியிருக்காது என நம்பினேன் WTF. ஆனால் இன்று என் 51 வயதில், இந்த சுருக்கெழுத்துக்களுக்கு மத்தியில் நான் கூற விரும்புவது மனிதநேயம் நிலைக்க ஒரு முக்கிய தருணம் இருந்தால் அது இன்று தான் ஏனெனில் தற்போது நீங்கள் தைரியமனவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் புதுமையான மற்றும் வளமானவர்கள் முக்கியமாக வரையறை இல்லாதவர்கள் அந்த மகிமையான சூழலில் அபூரண தருணத்தில் கொஞ்சம் தைரியமாக உணர்கிறேன் சற்று முன்பு என் முகத்தை பார்த்த போது என் மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை போல என்னை உணர்ந்தேன் (சிரிப்பொலி) அந்த தருணத்தில் நான் உணர்ந்தேன் என்னிடமும் மனிதகுலத்திடமும் மையமாகக் கேட்ட கேள்வி: என் முகத்தை சரிசெய்ய வேண்டுமா? நான் ஒரு நடிகன் மனித படைப்பாற்றலின் நவீன வெளிப்பாடு நான் வந்த இடம் விவரிக்க முடியாத அதே சமயம் எளிமையான ஆன்மீகத்தின் ஆதாரம் அவர்களூக்கு மகத்தான தாராள மனப்பான்மை இல்லையெனில், என் இந்திய நாடு நலிந்த சுதந்திர போராளியின் முஸ்லிம் மகனை தற்செயலாக கனவுகளை விற்க துணிந்தவனை காதல் நாயகனாக "பாலிவுட்டின் பத்ஷா," என நாட்டின் மிகப் பெரிய காதலனாக இந்த முகத்தை எப்படி ஏற்றது ஆமாம் (சிரிப்பொலி) நான் அசிங்கமானவன் வழக்கத்திற்கு மாறானவன் வித்தியாசமானவன் இனிமையானவனும் இல்லை. (சிரிப்பொலி) இந்த பண்டைய நில மக்கள் அவர்களின் எல்லையற்ற அன்பில் என்னைத் தழுவினர் நான் அவர்களிடமிருந்து கற்றுது அதிகாரமோ வறுமையோ வாழ்க்கையை ஏற்றவும் முடியாது கெடுக்கவும் முடியாது ஒரு வாழ்க்கையின் கண்ணியம், மனித கலாச்சாரம், ஒரு மதம், ஒரு நாடு உண்மையில் கருணை மற்றும் இரக்கத்தை பொதிந்திருக்கும் திறனில் வாழ்கிறது என அறிந்து கொண்டேன் உங்களை உருக வைக்க உருவாக்க, கட்டமைக்க, தோல்வியடையாமல் தடுக்க நீங்கள் உயிர்வாழ உதவுவது மனிதகுலத்தின் பழைய எளிய உணர்ச்சி மட்டுமே அது காதல் என் நிலத்தின் மாய கவி கூறுகையில் (ஹிந்தி கவிதை வாசிக்கிறார்) (கவிதை முடிந்தது) இது மொழிபெயர்த்தால் உங்களுக்கு புரியும் இந்தி தெரிந்தால் தயவுசெய்து கைதட்டவும், ஆம் (கரவொலி) நினைவில் கொள்வது மிக கடினம் அது சொல்வது புத்தகங்கள் படித்தாலும் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல், தொழில்நுட்பம் மூலமும், அறிவை பகிர்ந்தாலும் சக மனிதர்களிடம் காதலையும் இரக்கத்தையும் இணைக்காவிட்டால் மனித இனம் எதிர்காலத்தில் மேன்மை அடையாது "ப்ரேம்" என்ற இரண்டரை எழுத்துக்களின் பொருள் "அன்பு," நீங்கள் அதை புரிந்து கொண்டு பயிற்சி செய்தால் மனிதகுலத்தை அறிவூட்ட. அதுவே போதும் எனவே எதிர்கால "நீங்கள்" உங்களை விரும்புமாறு இருக்க வேண்டும். இல்லையெனில் தன்னிலையிலேயே தன் வளர்ச்சியை நிறுத்தி விடும் எனவே நீங்கள் உங்கள் சக்தியால் சுவர்கள் கட்டி மக்களை தடுக்கலாம் அல்லது அவர்களுக்கு பாலமாக்கி வரவேற்கலாம் உங்கள் நம்பிக்கையை பயன்படுத்தி மக்களை பயப்முறுத்தி சரணடைய செய்யலாம் அல்லது மக்களுக்கு தைரியம் கொடுத்து அவர்களின் அறிவொளியை உயர்த்தலாம் உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி அணு குண்டுகளை உருவாக்கி அழிவின் இருளைப் பரப்பலாம் அல்லது திரளான மக்களுக்கு மகிழ்ச்சி ஒளி கொடுக்கலாம் நீங்கள் கடல்களை மாசுபடுத்தி காடுகளை வெட்டி சூழலியல் அழிக்க முடியும் அல்லது அவைகளை அன்போடு பராமரித்து நீர் மற்றும் மரங்களிலிருந்து வாழ்வை மீட்கலாம் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இறங்கி போர் கோட்டைகளை உருவாக்கலாம் அல்லது அங்கு வாழ் வடிவங்கள், இனங்களை மதித்து கற்றுணரலாம். நாம் அனைவரும் சம்பாதித்ததை பயன்படுத்தி பயனற்ற போர்களை நடத்தலாம் சிறுவர் ஒருவரையொருவர் கொல்ல, அவர்களின் கையில் துப்பாக்கிகள் தரலாம் அல்லது அதைப் பயன்படுத்தி அவர்களின் வயிற்றை நிரப்ப அதிக உணவு தயாரிக்கலாம் என் நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது ஒரு மனிதனை நேசிப்பது தெய்வபக்திக்கு ஒத்ததாகும். நாகரிகம் மோசமாக்கிவிட்ட உலகில் அன்பு மட்டுமே நிலையாகி பிரகாசிக்கிறது கடந்த சில நாட்களில், இந்த அற்புதமான மக்களின் திறமைகள், தனிப்பட்ட சாதனைகள், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், அறிவியல் பற்றிய TED பேச்சுக்களே நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது அதுவே நம் எதிர்கால "நம்மை" கொண்டாட போதுமான காரணங்கள் தருகிறது அந்த கொண்டாட்டத்தின் இடையில் அன்பு மற்றும் இரக்கத்தை பயிரிடுவதற்கான தேடலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் சமமாக. எனவே எதிர்கால "நீங்கள்" எல்லையற்றவர் ஆவீர் இந்தியாவில், அதை சக்கரம் அதாவது வட்டம் என்போம் அது தொடங்கிய இடத்திலேயே முடிந்து முழுமையாகிறது நேரம் மற்றும் இட வித்தியாசத்தை உணரும் நீங்கள் கற்பனை செய்ய முடியாத உங்கள் அருமையான முக்கியத்துவத்தையும் உங்கள் முழுமையான முக்கிய மற்றவையையும் இந்த பிரபஞ்சத்தின் பெரும் சூழலில் புரிந்து கொள்கிறது மனிதகுலத்தின் அசல் அப்பாவித்தனத்திற்கு திரும்பி வரும் நீங்கள் இதயத்தின் தூய்மையிலிருந்து நேசிக்கிறீர்கள், சத்தியத்தின் கண்களிலிருந்து பார்க்கிறீர்கள் ஒரு உடையாத மனதின் தெளிவிலில் கனவு காண்கிறீர்கள் எதிர்கால "நீங்கள்" வயதாகும் திரை நட்சத்திரமாக தன்னை முழுவதுமாகவும் சுய வெறியுடன் விரும்பும் ஒரு உலகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என என முற்றிலுமாக நம்ப வைத்திருக்க வேண்டும் உலகம் உண்மையில், நீங்களாக தன்னை தானே நேசிக்கும் காதலனாக உருவாகியிருக்க வேண்டும் அது மட்டுமே, என் அன்புக்குரியவர்களே எதிர்கால "நீங்கள்". மிக்க நன்றி நன்றி. (கைத்தட்டல்) நன்றி. (கைத்தட்டல்) நன்றி. (கைத்தட்டல்)