நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும் அதை எளிதாக்கி நம் விடையை கலப்புப் பின்னமாக எழுதவேண்டும் நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும் வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன் நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால் நாம் அதை கூட்ட இயலாது இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருக்க வேண்டும் என்றால் நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும் நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று கண்டறிந்தால் அது தான் இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்.. 9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........ 12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........ இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின் பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும். 4/9 = / 36 11 / 12 = / 36 4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால் நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை 4-ஆல் பெருக்கவேண்டும் பகுதி எண்ணை பெருக்கினால் தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும் 4/9 = 16/36 11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும் அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும் 11/12 = 33/36 நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண் கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம் இப்பொழுது இதை கூட்டுவது எளிது 16/36 + 33/36 = தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33 பகுதி எண் 36ஆக இருக்கும் 16/36+33/36 = 49/36 நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ? 49, 36 இன் GCD = 1 நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை 1ஆல் வகுக்கவேண்டும் இது தகா பின்னம் ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது இதை தகு பின்னமாக மாற்றலாம் 49/36 = 1.13/36