இப்போது "11இன் கீழ் 25" (அல்லது 25இல் 11) என்ற பின்னத்தை தசமமாக எழுத முடியுமா என்று பார்ப்போம். தசமப் புள்ளியில் இருந்து வலது புறமாக மூன்று இடங்களுக்கு முழுமைப்படுத்துவோம். 11இன் கீழ் 25 என்பது உண்மையில் 11ஐ 25ஆல் வகுத்தால் கிடைக்கும் கூறு எனவே நாம் 25ஆல் 11ஐ வகுத்துப் பார்த்தால் என்ன விடை கிடைக்கிறதோ அதுவே 11இன் கீழ் 25 இன் தசம வெளிப்பாடு. நாம் ஒன்றுக்கும் கீழ் உள்ள இலக்கங்கங்களுக்கு செல்ல இருப்பதால் அதாவது தசமப் புள்ளியில் இருந்து ஓன்று, இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு செல்ல இருப்பதால், இந்த 11உடன் சில பூஜ்ஜியங்களை தசமப் புள்ளியின் வலது புறம் சேர்ப்போம். இப்போது வகுக்கத் துவங்கலாம். 1ஐ 25ஆல் வகுக்க முடியாது. 11ஐயும் 25ஆல் வகுக்க முடியாது 110ஐ 25ஆல் வகுக்கலாம். 110ஐ 25ஆல் வகுத்தால் நான்கு கிடைக்கும், ஏனெனில் 4 x 25 = 100. இங்கு தசமப் புள்ளியை வைத்துக் கொள்வோம். எனவே 0.4. நால் 25 100 என்பதால் 110இல் இருந்து 100ஐ கழித்தால் 10. இன்னொரு பூஜ்ஜியத்தை கொண்டு வருவோம். 100ஐ 25ஆல் வகுத்தால் மிகச் சரியாக. 4x25 என்பது 100, கழித்தால் பூஜ்ஜியம் மிச்சம். இதை முழுமைப் படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னம் மிகச்சரியாக 0.44 என்றாகிறது.