1 00:00:00,000 --> 00:00:00,510 செயலிகளின் வரிசை 2 00:00:00,510 --> 00:00:03,570 செயலிகளின் வரிசையைப் புரிந்து கொள்வதற்குச் சில 3 00:00:03,570 --> 00:00:05,435 உதாரணக் கணக்குகளைப் பார்ப்போம் 4 00:00:05,435 --> 00:00:08,730 முதலில் கணக்கு 1பி-யிலிருந்து தொடங்குவோம் 5 00:00:08,730 --> 00:00:10,900 இதுதான் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை 6 00:00:10,900 --> 00:00:21,290 2 + 7 x 11 - 12 ÷ 3 7 00:00:21,290 --> 00:00:24,890 அடைப்புக் குறிக்குள் உள்ள செயலிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் 8 00:00:24,890 --> 00:00:26,320 என்பது நீங்கள் அறிந்ததே. 9 00:00:26,320 --> 00:00:28,900 செயலிகளின் முக்கியத்துவ வரிசையை எழுதி வைத்துக் கொள்வோம். 10 00:00:28,900 --> 00:00:31,730 முதலில் அடைப்புக் குறிக்குள் வரும் செயலிகள் 11 00:00:31,730 --> 00:00:36,410 அடுத்து அடுக்குக்குறித் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 12 00:00:36,410 --> 00:00:40,990 அதற்கடுத்து பெருக்கலும், வகுத்தலும் வரும். 13 00:00:40,990 --> 00:00:42,190 கடைசியாகக் கூட்டலும், கழித்தலும். 14 00:00:42,190 --> 00:00:44,320 இந்த வரிசையை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 15 00:00:44,320 --> 00:00:45,930 இது மிகவும் முக்கியம். 16 00:00:45,930 --> 00:00:48,940 இந்தக் கணக்கில் அடைப்புக் குறியுமில்லை 17 00:00:48,940 --> 00:00:51,840 அடுக்குக் குறியுமில்லை. அப்படியென்றால் பெருக்கலும், வகுத்தலும் தான் 18 00:00:51,840 --> 00:00:53,060 முதலில் வரும். 19 00:00:53,060 --> 00:00:56,990 ஆக இந்தக் கணக்கில் கூட்டலுக்கும், கழித்தலுக்கும் முன்பு நாம் 20 00:00:56,990 --> 00:00:59,640 முதலில் செய்யவேண்டியது பெருக்கலும், வகுத்தலும் தான். 21 00:00:59,640 --> 00:01:02,590 இந்தக் கணக்கில் பெருக்கலையும், வகுத்தலையும் சுற்றி 22 00:01:02,590 --> 00:01:05,040 அடைப்புக்குறியிட்டால் இன்னும் தெளிவாகப் புரியும். 23 00:01:05,040 --> 00:01:08,100 இந்த அடைப்புக்குறியால் கொடுக்கப்பட்ட கணக்கு எந்தவிதத்திலும் 24 00:01:08,100 --> 00:01:10,680 மாறுபடப் போவதில்லை. 25 00:01:10,680 --> 00:01:14,730 ஆக முதலில் பெருக்கலையும், பின்னர் வகுத்தலையும் செய்வோம். கூட்டலும், கழித்தலும் 26 00:01:14,730 --> 00:01:17,210 செய்வதற்கு எளிதாக உள்ளதென்று முதலில் செய்தால் கணக்கின் விடை தவறாகிவிடும். 27 00:01:17,210 --> 00:01:27,230 ஆக 7 மடங்கு 11, 77, அப்புறம் 12-ஐ 3 ஆல் வகுக்க 4 கிடைக்கும் 28 00:01:27,230 --> 00:01:31,380 அப்புறம் இந்தக் கணக்கை இப்படி எழுதலாம். 29 00:01:31,380 --> 00:01:34,420 2 + 77 - 4 30 00:01:34,420 --> 00:01:36,770 இதில் கூட்டலும், கழித்தலும் தான் உள்ளது. 31 00:01:36,770 --> 00:01:40,560 இடமிருந்து வலமாகச் செய்தால் 32 00:01:40,560 --> 00:01:49,210 2 + 77, 79 79 - 4 = 75 33 00:01:49,210 --> 00:01:52,380 ஆக இந்தக் கணக்கிற்கு விடை 75. 34 00:01:52,380 --> 00:01:54,160 மிகவும் எளிதாக உள்ளது அல்லவா! 35 00:01:54,160 --> 00:01:57,140 அடுத்த கணக்கை இப்போது பார்ப்போம். 36 00:01:57,140 --> 00:01:59,400 அதாவது 1d 37 00:01:59,400 --> 00:02:05,900 2 x (3 + (2 -1)) -ஐ 38 00:02:05,900 --> 00:02:15,110 (4 - (6+2)) -ஆல் வகுத்துப் பின்னர் 39 00:02:15,110 --> 00:02:18,890 (3-5)-ஐக் கழிக்க வேண்டும். அப்பாடா!! எத்தனை அடைப்புக்குறிகள்? 40 00:02:18,890 --> 00:02:21,540 இதை எப்படிச் சுருக்கலாமென்று பார்ப்போம். 41 00:02:21,540 --> 00:02:24,060 அடைப்புக்குறிக்குத்தான் முன்னுரிமை என்று நமக்கு ஏற்கனவே தெரியும். 42 00:02:24,060 --> 00:02:28,050 முதலில் (2-1) ஐச் சுருக்குவோம். 43 00:02:28,050 --> 00:02:30,120 2-லிருந்து ஒன்றைக் கழித்தால் ஒன்று. 44 00:02:30,120 --> 00:02:32,000 அடுத்து (3 - 5) 45 00:02:32,000 --> 00:02:36,560 - 2 அல்லது எதிர்மறை 2 கிடைக்கும் 46 00:02:36,560 --> 00:02:38,895 (6+2) எட்டாக மாறும் 47 00:02:38,895 --> 00:02:41,500 அடுத்துகட்ட அடைப்புக்குறிகளை இப்போது பார்ப்போம். 48 00:02:41,500 --> 00:02:43,860 அடைப்புக்குறிகளுக்குள் உள்ளவற்றை முடித்துவிட்டால் கணக்கு 49 00:02:43,860 --> 00:02:44,730 மிக எளிதாகிவிடும். 50 00:02:44,730 --> 00:02:46,190 அடுத்து எங்கே அடைப்புக்குறி உள்ளது? 51 00:02:46,190 --> 00:02:50,420 முதலில் (3 + 1) நான்காகிவிடும். 52 00:02:50,420 --> 00:02:51,328 அடுத்த வரியில் சுருக்கி எழுதலாம். 53 00:02:51,328 --> 00:02:55,250 2 மடங்கு (3+ 1). அதனைச் சுருக்கினால் 4 கிடைக்கும் 54 00:02:55,250 --> 00:02:58,000 ஆக 2 மடங்கு 4 55 00:02:58,000 --> 00:03:00,400 இதனை 4 - 8 ஆல் வகுக்க வேண்டும். 56 00:03:00,400 --> 00:03:05,820 4-8 என்பது -4 அல்லது 57 00:03:05,820 --> 00:03:08,080 எதிர்மறை நான்காகிவிடும் 58 00:03:08,080 --> 00:03:11,150 இதிலிருந்து -2-ஐக் கழிக்க வேண்டும் . 59 00:03:11,150 --> 00:03:13,860 இப்போது கணக்கு மிக எளிதாகி விட்டது. 60 00:03:13,860 --> 00:03:19,770 ஆக இரண்டு மடங்கு நான்கு எட்டாகிவிடும் 61 00:03:19,770 --> 00:03:21,980 இரண்டு எதிர்மறைச் செயலிகள் அடுத்தடுத்து வந்தால் 62 00:03:21,980 --> 00:03:23,470 நேர்மறை அல்லது கூட்டல் செயலியாக மாறிவிடும். 63 00:03:23,470 --> 00:03:27,280 எட்டை எதிர்மறை நான்கால் வகுத்தால் கிடைப்பது 64 00:03:27,280 --> 00:03:29,410 - 2 அல்லது எதிர்மறை 2 65 00:03:29,410 --> 00:03:31,950 கடைசியாக -2 + 2 66 00:03:31,950 --> 00:03:33,620 பூஜ்ஜியமாகி விடும். 67 00:03:33,620 --> 00:03:37,890 எவ்வளவோ இருப்பது போல முதலில் இருந்தது. ஆனால் இறுதியில் மதிப்பு பூஜ்ஜியமாகிவிட்டது. 68 00:03:37,890 --> 00:03:39,140 அடுத்து 2b கணக்கைப் பார்ப்போம். 69 00:03:39,140 --> 00:03:42,130 செயலிகளின் வரிசையை விட்டுவிட்டு மிச்சத்தை 70 00:03:42,130 --> 00:03:46,400 அழித்து விடுகிறேன். 71 00:03:46,400 --> 00:03:51,820 நீங்களும் உங்களின் மனதில் இந்தச் செயலிகளின் வரிசையை வைத்துக் கொள்ளுங்கள். 72 00:03:51,820 --> 00:03:57,880 இது தெரிந்தால் போதும். எத்தனை கடினமான கணக்கும் சுலபமே! 73 00:03:57,880 --> 00:03:59,800 அடுத்த கணக்கு என்ன? 74 00:03:59,800 --> 00:04:02,700 2 b 75 00:04:02,700 --> 00:04:03,800 பின்வரும் சமன்பாட்டில் மாறிகளின் மதிப்பை 76 00:04:03,800 --> 00:04:05,280 உள்ளிட்டு இறுதி மதிப்பு காண வேண்டும். 77 00:04:05,280 --> 00:04:05,810 2 y அடுக்கு இரண்டு 78 00:04:05,810 --> 00:04:10,600 என்பது கொடுக்கப்பட்ட சமன்பாடு. x -ன் மதிப்பு 1 79 00:04:10,600 --> 00:04:14,270 சமன்பாட்டில் x என்ற மாறியே இல்லை. அதனால் x - ஆல் எந்தப் பயன்பாடுமில்லை. 80 00:04:14,270 --> 00:04:16,310 அடுத்து y -ன் மதிப்பு 5. 81 00:04:16,310 --> 00:04:19,690 ஆக y -ன் மதிப்பு 5-ஆக உள்ளபோது இந்தச் சமன்பாடு 82 00:04:19,690 --> 00:04:25,840 2 மடங்கு 5-ன் வர்க்கம் என்றாகிவிடும். 83 00:04:25,840 --> 00:04:27,890 இப்போது அடுக்குக்குறி உள்ள எண்ணைச் சுற்றி அடைப்புக்குறி இடுகிறேன். 84 00:04:27,890 --> 00:04:31,070 இதை அடைப்புக்குறி இல்லாமலும் எழுதலாம். 85 00:04:31,070 --> 00:04:33,550 2.5 வர்க்கம் என்று. 86 00:04:33,550 --> 00:04:36,550 எனக்கு செயலிகளின் வரிசைப்படிப் பெருக்கலுக்கு முன் 87 00:04:36,550 --> 00:04:38,120 அடுக்குக்குறித்தொடர் வருமென்று தெரியும். 88 00:04:38,120 --> 00:04:41,240 அதனால்தான் அடைப்புக்குறியைச் 89 00:04:41,240 --> 00:04:41,950 சேர்த்தேன். 90 00:04:41,950 --> 00:04:44,170 முதலில் அடுக்குறிச் செயலி என்பதனால் 91 00:04:44,170 --> 00:04:53,130 5ன் வர்க்கம், 25 கிடைக்கும். பின்னர் 92 00:04:53,130 --> 00:04:58,030 25 மடங்கு 2, 50 ஆகிவிடும் 93 00:04:58,030 --> 00:05:00,090 ஆகக் கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மதிப்பு 50. 94 00:05:00,090 --> 00:05:01,340 அடுத்த கணக்கு 2d-ஐ இப்போது பார்ப்போம் 95 00:05:01,340 --> 00:05:05,470 . 96 00:05:05,470 --> 00:05:11,506 y-ன் வர்க்கத்திலிருந்து x-ஐக் கழித்துப் பின்னர் மீண்டும் வர்க்கம் காணவேண்டும். 97 00:05:11,506 --> 00:05:16,330 x-ன் மதிப்பு 2 மற்றும் y-ன் மதிப்பு 1 என்று கொடுக்கப்பட்டுள்ளது. 98 00:05:16,330 --> 00:05:17,920 முதல் வேலையாக மாறிகளின் மதிப்பைச் சமன்பாட்டில் இடுவோம். 99 00:05:17,920 --> 00:05:19,580 y-ன் மதிப்பு 1என்றும் 100 00:05:19,580 --> 00:05:25,370 x-ன் மதிப்பு 2 என்றும் 101 00:05:25,370 --> 00:05:27,600 சமன்பாட்டில் பதிந்தால் 102 00:05:27,600 --> 00:05:28,755 கொடுக்கப்பட்ட சமன்பாடு எளிதாகிவிடும். 103 00:05:28,755 --> 00:05:30,410 1-ன் வர்க்கம் 1 104 00:05:30,410 --> 00:05:32,880 ஆக 1-2 ஆகிவிடும். 105 00:05:32,880 --> 00:05:37,310 ஒன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் 106 00:05:37,310 --> 00:05:43,420 -1 அல்லது எதிர்மறை 1 கிடைக்கும். 107 00:05:43,420 --> 00:05:47,600 இப்போது -1-ன் வர்க்கம் காண வேண்டும். 108 00:05:47,600 --> 00:05:50,460 -1-ன் வர்க்கம் 1 அல்லது நேர்மறை ஒன்றுக்குச் சமம். 109 00:05:50,460 --> 00:05:52,180 1. அதுதான் கணக்கின் விடை. 110 00:05:52,180 --> 00:05:54,810 எப்போதும் எதிர்மறையும், எதிர்மறையும் பெருக்கினால் நேர்மறையாகிவிடும். 111 00:05:54,810 --> 00:05:56,110 அடுத்த கணக்கு 3b. 112 00:05:56,110 --> 00:06:00,760 எப்போதும் செயலிகளின் வரிசை ஞாபகம் இருக்கட்டும். 113 00:06:00,760 --> 00:06:02,210 ஏற்கனவே சொன்னது போல் அது தெரிந்தால் போதும். 114 00:06:02,210 --> 00:06:04,050 எல்லாக் கணக்கும் ரொம்ப சுலபம். 115 00:06:04,050 --> 00:06:05,160 பின்வரும் சமன்பாட்டின் 116 00:06:05,160 --> 00:06:06,850 மதிப்பை மாறிகளின் மதிப்பையிட்டு 117 00:06:06,850 --> 00:06:07,300 கண்டுபிடிக்க வேண்டும். 118 00:06:07,300 --> 00:06:08,010 . 119 00:06:08,010 --> 00:06:15,250 4 x -ஐ மற்றொரு சமன்பாட்டால் வகுக்க வேண்டும். 120 00:06:15,250 --> 00:06:19,130 மன்னிக்கவும். நாம் செய்ய வேண்டிய கணக்கு 3b. 121 00:06:19,130 --> 00:06:19,890 இதோ 3b கணக்கு. 122 00:06:19,890 --> 00:06:29,060 z -ன் வர்க்கத்தை (x + y)-ன் வர்க்கத்தால் வகுத்துப்பின்னர் அதனுடன் 123 00:06:29,060 --> 00:06:32,530 x-ன் வர்க்கத்தை (x - y)-ஆல் வகுத்துக் கூட்ட வேண்டும். 124 00:06:32,530 --> 00:06:36,220 x-ன் மதிப்பு 1, y-ன் மதிப்பு -2 125 00:06:36,220 --> 00:06:39,310 மேலும் z-ன் மதிப்பு 4 என்று கொடுக்கப்பட்டுள்ளது. 126 00:06:39,310 --> 00:06:41,660 முதலில் இந்த மாறிகளின் மதிப்பைச் சமன்பாட்டில் இடலாம். 127 00:06:41,660 --> 00:06:44,130 இப்போது கணக்கு இப்படி மாறிவிடும். 128 00:06:44,130 --> 00:06:53,480 4 -ன் வர்க்கத்தை (1 + (-2))-ன் வர்க்கத்தால் 129 00:06:53,480 --> 00:06:58,410 வகுத்துப்பின்னர் அதனுடன் 130 00:06:58,410 --> 00:07:01,770 1-ன் வர்க்கத்தை (1 - (-2))-ஆல் வகுத்து 131 00:07:01,770 --> 00:07:05,330 இரண்டையும் கூட்ட வேண்டும். 132 00:07:05,330 --> 00:07:10,700 4-ன் வர்க்கம் 16 133 00:07:10,700 --> 00:07:15,830 1-லிருந்து இரண்டைக் கழித்தால் -1 134 00:07:15,830 --> 00:07:21,310 அடுத்து ஒன்றின் வர்க்கம் ஒன்று. 135 00:07:21,310 --> 00:07:23,840 1 - (-2), நேர்மறையாக மாறி 1+2 136 00:07:23,840 --> 00:07:26,180 மூன்றாகி விடும். 137 00:07:26,180 --> 00:07:29,410 இப்போது 16/-1 உடன் 1/3 ஐக் கூட்டவேண்டும். 138 00:07:29,410 --> 00:07:37,100 அவ்வளவுதான்! 139 00:07:37,100 --> 00:07:40,480 இப்போது இரண்டு பின்னங்களைக் கூட்ட வேண்டுமானால், 140 00:07:40,480 --> 00:07:42,460 பொதுப்பகுவெண் (common denominator) கண்டுபிடிக்க வேண்டும் 141 00:07:42,460 --> 00:07:48,640 -16 என்பது 48-ன் கீழ் 3 என்ற பின்னத்திற்குச் சமம் 142 00:07:48,640 --> 00:07:51,210 அதாவது 48-ஐ மூன்றால் வகுத்தால் 16 கிடைக்கும் 143 00:07:51,210 --> 00:07:54,480 ஆக 16-ஐத்தான் இப்படி எழுதியுள்ளோம் 144 00:07:54,480 --> 00:07:55,970 எதிர்மறை அப்படியே வரும் 145 00:07:55,970 --> 00:07:59,800 இந்த பின்னத்துடன் 1/3-ஐக் கூட்ட வேண்டும். 146 00:07:59,800 --> 00:08:02,890 இப்போது இரண்டு எண்ணுக்கும் பொதுப்பகுவெண் 3 147 00:08:02,890 --> 00:08:10,740 -48 உடன் ஒன்றைக் கூட்டினால் -47 கிடைக்கும் 148 00:08:10,740 --> 00:08:16,760 ஆக இந்தக் கணக்கிற்கு விடை -47/3 149 00:08:16,760 --> 00:08:18,010 இனி அடுத்த கணக்கு 3d 150 00:08:18,010 --> 00:08:23,910 அதுவும் ஏற்கனவே பார்த்த கணக்கு போன்றதுதான் 151 00:08:23,910 --> 00:08:25,970 செயலிகளின் வரிசை நினைவில் இருந்தால் இதுவும் சுலபமே 152 00:08:25,970 --> 00:08:35,240 X-ன் வர்க்கத்திலிருந்து z-ன் வர்க்கத்தைக் கழித்து 153 00:08:35,240 --> 00:08:41,510 அதனை (xz - 2x (z-x)) ஆல் வகுக்கவேண்டும். x-ன் மதிப்பு -1, z-ன் மதிப்பு 3 154 00:08:41,510 --> 00:08:43,299 மாறிகளின் மதிப்பைச் சமன்பாட்டில் இடலாம் 155 00:08:43,299 --> 00:08:45,560 முதலில் x-ன் வர்க்கம் 156 00:08:45,560 --> 00:08:48,220 அதாவது -1-ன் வர்க்கம் 157 00:08:48,220 --> 00:08:53,670 அதிலுருந்து z-ன் வர்க்கத்தைக் அதாவது 3ன் வர்க்கத்தைக் கழிக்க வேண்டும் 158 00:08:53,670 --> 00:08:56,816 பின்னர் xz என்பது -1ன் மடங்கு 3 என்றாகும். 159 00:08:56,816 --> 00:09:06,200 அடுத்து -2x என்பது -2ன் மடங்கு -1 என்றுவரும் 160 00:09:06,200 --> 00:09:12,280 கடைசியாக z-x என்பது 3- (-1)என்றாகும் 161 00:09:12,280 --> 00:09:15,940 x-ன் மதிப்பு -1 என்று கொடுக்கப்பட்டுள்ளதால் 162 00:09:15,940 --> 00:09:18,370 x-ன் மதிப்பை -1 என்று பதிந்துள்ளோம் 163 00:09:18,370 --> 00:09:20,440 நினைவில் இருக்கிறதா? முதலில் அடைப்புக்குறிக்குள் வரும் 164 00:09:20,440 --> 00:09:22,280 தொடருக்கு முன்னுரிமை 165 00:09:22,280 --> 00:09:24,690 அடுத்தது அடுக்குத் தொடர் 166 00:09:24,690 --> 00:09:29,330 ஆக -1ன் வர்க்கம் நேர்மறை ஒன்றாகிவிடும் 167 00:09:29,330 --> 00:09:32,090 மூன்றின் வர்க்கம் ஒன்பது 168 00:09:32,090 --> 00:09:36,420 ஆகத் தொகுதி 1-9 என்பது 169 00:09:36,420 --> 00:09:38,170 -8 ஆகிவிடும் 170 00:09:38,170 --> 00:09:40,160 அடுத்தது பின்னப்பகுதியைச் சுருக்குவோம் 171 00:09:40,160 --> 00:09:45,040 -1ன் மடங்கு 3 என்பது -3ஆகிவிடும் 172 00:09:45,040 --> 00:09:47,300 அடுத்த அடைப்புக்குறித் தொடருக்குப் போவோம் 173 00:09:47,300 --> 00:09:50,540 3 - (-1) என்பது 3+1 க்குச் சமம் 174 00:09:50,540 --> 00:09:52,390 ஆக 3+1+1 175 00:09:52,390 --> 00:09:56,080 என்பது நான்காகிவிடும் 176 00:09:56,080 --> 00:10:01,650 ஆகப் பின்னப்பகுதி -1-2ன் மடங்கு 177 00:10:01,650 --> 00:10:05,010 -1*4 என்பது -8 ஆகிவிடும் 178 00:10:05,010 --> 00:10:07,880 - (-8) என்பதில் 179 00:10:07,880 --> 00:10:11,230 எதிர்மறையும் எதிர்மறையும் சேர்ந்து நேர்மறை 8 என்றாகிவிடும் 180 00:10:11,230 --> 00:10:21,320 ஆக இந்தக் கணக்கை இப்படி எழுதலாம். -8/ (-3+8) 181 00:10:21,320 --> 00:10:23,160 எதிர்மறை மூன்றுடன் எட்டைக் கூட்டினால் 182 00:10:23,160 --> 00:10:28,350 விடை 5 கிடைக்கும். ஆக இந்தக்கணக்கின் விடை -8/5 183 00:10:28,350 --> 00:10:31,170 ஆக அடைப்புக்குறியும், அடுக்குக் குறியும் முன்னால் வரும் 184 00:10:31,170 --> 00:10:33,500 அதனின் பின்னால் வருவது பெருக்கலும் வகுத்தலும் 185 00:10:33,500 --> 00:10:34,930 கடைசியாகக் கூட்டலும் கழித்தலும் 186 00:10:34,930 --> 00:10:38,380 தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இதனை மறக்கக் கூடாது. 187 00:10:38,380 --> 00:10:39,350 அடுத்த கணக்கு எண் 4 188 00:10:39,350 --> 00:10:41,770 அடைப்புக்குறியைக் கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருத்தி 189 00:10:41,770 --> 00:10:42,790 ஒரு சமன்பாட்டை உருவாக்க வேண்டும் 190 00:10:42,790 --> 00:10:44,040 மிகவும் ஆர்வமாக உள்ளதல்லவா? 191 00:10:44,040 --> 00:10:45,910 இதில் 4b-ஐப் பார்ப்போம் 192 00:10:45,910 --> 00:10:48,110 12ஐ நான்கால் வகுத்துப்பின்னர் 10 க்கூட்டவேண்டும் 193 00:10:48,110 --> 00:10:56,810 அதனுடன் 3ன் மடங்கு 3ஐயும், ஏழையும் கூட்டினால் 194 00:10:56,810 --> 00:10:59,100 11 கிடைக்கவேண்டும். 195 00:10:59,100 --> 00:11:01,270 இப்போது விடை கொடுக்கப்பட்டுவிட்டது. 196 00:11:01,270 --> 00:11:03,500 சமன்பாட்டில் சரியான இடத்தில் அடைப்புக்குறியிட்டு 197 00:11:03,500 --> 00:11:06,570 விடையைக் கண்டுபிடித்து 198 00:11:06,570 --> 00:11:08,420 அதனைச் சரிபார்க்க வேண்டும் 199 00:11:08,420 --> 00:11:09,740 அதுதான் கணக்கு 200 00:11:09,740 --> 00:11:14,220 இந்தக்கணக்கை அடைப்புக் குறியிடாமல் செய்தாலும் அதே வரிசைதான் 201 00:11:14,220 --> 00:11:15,570 கிடைக்குமென்று நினைக்கிறேன். 202 00:11:15,570 --> 00:11:20,670 12ஐ 4-ஆல் வகுத்தால் மூன்று கிடைக்கும் 203 00:11:20,670 --> 00:11:25,010 மூன்றையும், மூன்றையும் பெருக்கினால் ஒன்பது கிடைக்கும் 204 00:11:25,010 --> 00:11:32,940 மூன்றையும், பத்தையும் கூட்டினால் பதின்மூன்று 205 00:11:32,940 --> 00:11:36,210 பின்னர் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது நான்கு 206 00:11:36,210 --> 00:11:36,990 அதனுடன் 7-ஐச் சேர்த்தால் 207 00:11:36,990 --> 00:11:37,980 11 கிடைக்கும் 208 00:11:37,980 --> 00:11:41,410 இது சரியான விடைதான் 209 00:11:41,410 --> 00:11:44,060 இந்தக் கணக்கைப் பொருத்தவரை பெருக்கல் வகுத்தலுக்கு 210 00:11:44,060 --> 00:11:46,760 முன்னுரிமை கொடுத்தால் போதுமானது. 211 00:11:46,760 --> 00:11:52,030 அதைத் தவிர கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலேயே இந்தக் கணக்கைச் செய்யலாம் 212 00:11:52,030 --> 00:11:53,730 ஆனாலும் இந்த விதி 213 00:11:53,730 --> 00:11:55,030 எல்லாக் கணக்கிற்கும் பொருந்தாது. 214 00:11:55,030 --> 00:11:56,740 இன்னொருமுறை சரிபார்க்கலாம் 215 00:11:56,740 --> 00:12:04,900 பன்னிரண்டை நான்கால் வகுத்தால் மூன்று, மூன்றுடன் மூன்றைப் 216 00:12:04,900 --> 00:12:11,650 பெருக்கினால் ஒன்பது. பின்னர் மூன்றுடன் பத்தைக் கூட்டினால் 217 00:12:11,650 --> 00:12:18,910 பதின்மூன்று, அதிலிருந்து ஒன்பதைக் கழித்தால் நான்கு. அதோடு 218 00:12:18,910 --> 00:12:19,940 ஏழைக் கூட்டினால் பதினொன்று 219 00:12:19,940 --> 00:12:21,140 பெருக்கல் வகுத்தலுக்கு முன்னுரிமை கொடுப்பதால் 220 00:12:21,140 --> 00:12:23,400 அவற்றைச் சுற்றி அடைப்புக்குறியிடலாம் 221 00:12:23,400 --> 00:12:24,220 மிச்சமிருப்பது கூட்டலும் 222 00:12:24,220 --> 00:12:26,330 கழித்தலும்தான். அதனை அப்படியே செய்யலாம் 223 00:12:26,330 --> 00:12:28,450 அடைப்புக்குறியிட்டால் எளிதாகப் புரியும் 224 00:12:28,450 --> 00:12:30,170 அவ்வளவுதான். 225 00:12:30,170 --> 00:12:32,210 இனி அடுத்த கணக்கைப் பார்ப்போம் 226 00:12:32,210 --> 00:12:35,050 4d 227 00:12:35,050 --> 00:12:43,390 பன்னிரெண்டிலிருந்து எட்டைக் கழித்து, பின்னர் நான்கு மடங்கு ஐந்தைக் 228 00:12:43,390 --> 00:12:45,260 கழித்தால் எதிர்மறை எட்டு 229 00:12:45,260 --> 00:12:46,260 விடையாகக் கிடைக்க வேண்டும் 230 00:12:46,260 --> 00:12:49,170 செயலிகளின் வரிசை விதிப்படி இங்கே முதலில் வருவது 231 00:12:49,170 --> 00:12:53,050 பெருக்கல். நான்கை ஐந்தால் 232 00:12:53,050 --> 00:13:00,380 பெருக்கினால் இருபது வரும் 233 00:13:00,380 --> 00:13:04,010 பின்னர் பன்னிரெண்டிலிருந்து எட்டைக் கழித்தால் நான்கு. 234 00:13:04,010 --> 00:13:06,410 அதிலிருந்து இருபதைக் கழித்தால் எதிர்மறை 235 00:13:06,410 --> 00:13:07,465 பதினாறு கிடைக்கும். 236 00:13:07,465 --> 00:13:09,100 ஆனால் இதுவல்ல நமக்கு வேண்டிய விடை 237 00:13:09,100 --> 00:13:10,050 ஆக எங்கோ 238 00:13:10,050 --> 00:13:14,040 அடைப்புக்குறி வரவேண்டும். 239 00:13:14,040 --> 00:13:17,390 அடைப்புக்குறியை சில இடங்களில் பொருத்தி 240 00:13:17,390 --> 00:13:18,780 விடை வருகிறதா என்று பார்க்கலாம் 241 00:13:18,780 --> 00:13:25,650 பன்னிரெண்டிலுருந்து எட்டைக் கழித்து, பின்னர் நான்கையும் 242 00:13:25,650 --> 00:13:26,650 கழித்து, அதனுடன் ஐந்தைப் பெருக்கினால் என்னவாகும்? 243 00:13:26,650 --> 00:13:27,740 பூஜ்ஜியம் கிடைக்கும். 244 00:13:27,740 --> 00:13:30,230 அதுவும் சரியான விடையில்லை. 245 00:13:30,230 --> 00:13:36,170 இப்படிச் செய்து பார்க்கலாம். 246 00:13:36,170 --> 00:13:38,960 எட்டிலிருந்து நான்கைக் கழித்தால் நான்கு கிடைக்கும் 247 00:13:38,960 --> 00:13:43,240 பிறகு நான்குடன் ஐந்தைப் பெருக்கினால் இருபது, அதனைப் 248 00:13:43,240 --> 00:13:44,270 பன்னிரெண்டிலிருந்து கழித்தால் 249 00:13:44,270 --> 00:13:46,090 வரும் விடை எதிர்மறை எட்டு. ஆக இது சரியான விடை. 250 00:13:46,090 --> 00:13:49,370 இப்போது அடைப்புக்குறியை இட்டு விடையைச் சரிபார்க்கலாம். 251 00:13:49,370 --> 00:13:51,740 8-4 ஐச் சுற்றி அடைப்புக்குறி வரவேண்டும் 252 00:13:51,740 --> 00:13:56,370 எட்டிலிருந்து நான்கைக் கழித்தால் வரும் விடை நான்கு 253 00:13:56,370 --> 00:13:59,190 ஆக இந்தச் சமன்பாட்டை 12-4.5 254 00:13:59,190 --> 00:14:01,990 என்று எழுதலாம் 255 00:14:01,990 --> 00:14:03,890 இதில் முதலில் பெருக்கலுக்கு முன்னுரிமை 256 00:14:03,890 --> 00:14:07,360 நான்கையும் ஐந்தையும் பெருக்கினால் கிடைப்பது இருபது 257 00:14:07,360 --> 00:14:09,370 இதனை இன்னும் புரியும்படி எழுத வேண்டுமெனில் 258 00:14:09,370 --> 00:14:09,890 இப்படி எழுதலாம் 259 00:14:09,890 --> 00:14:11,480 இன்னுமொரு அடைப்புக்குறியை 260 00:14:11,480 --> 00:14:13,040 இப்படிச் சேர்த்தால் 261 00:14:13,040 --> 00:14:15,450 கணக்கு எளிதாகிவிடும் 262 00:14:15,450 --> 00:14:20,870 ஆக இப்போது நமக்கு வேண்டிய விடை 263 00:14:20,870 --> 00:14:22,540 எதிர்மறை எட்டு கிடைத்துவிட்டது