என் பெயர் ஆலு பிளேக்
நான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர்
கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க வேண்டியது மிக முக்கியம்
ஏனென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் நம் எதிர்காலம்
மக்கள் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில்
வைக்க அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன்
அதாவது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைப்பது என்று பொருள்
இசைக்கேற்ப சரியான தருணத்தில் நடன அசைவுகளை ஏற்படுத்த
நீங்கள் Events-ஐ பயன்படுத்தலாம்.
நடக்கப்போவதை கவனிக்க Events உங்களது புரோக்கிராமிடம் சொல்கிறது
பிறகு எதிர் செயல் ஆற்றுகிறது
Events க்கு ஓர் உதாரணம் மவுஸ் கிளிக் செய்வதை கேட்பது தான்
ஓர் அம்பு பொத்தான் அல்லது திரையில் டேப் செய்வது
நாம் தற்போது பயன்படுத்தவிருக்கும் Event, பாடலில் வரும் மாற்றங்களை கவனிக்கும்
அந்த மாற்றம் டான்ஸர் புதிய டான்ஸ் ஆடத்தொடங்க காரணமாகும்
புரொபெஷனல் டான்ஸர்ஸ் நடனம் பயில்வது பாடலின் பீட்டுகளை எண்ணிக்கொண்டு தான்.
மியூசிக்கில் Measure என்பது குறிப்பிட்ட பீட்டுகளின் எண்ணிக்கையை குறிக்கும்
பெரும்பாலான பாப்புலர் சாங்குகளிலும் ஒரு மெஷர் என்பது 4 பீட்டுகள் ஆகும்
உங்கள் டான்ஸர்ஸை ஆட விடுவதற்கு, உங்களிடம் ஒரு பச்சை Event Bloc வேண்டும்
4 மெஷர்களுக்கு பிறகு என்று இந்த Event Bloc சொல்கிறது
இந்த ஊதா நிற 'do forever' Code Bloc-ஐ நீங்கள் வெளியே இழுக்குமானால், உங்களது டான்ஸருக்கான டான்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்
அது 4 மெஷர்கள் Event Bloc-க்கு உட்பட்டது என்பதால்
உங்கள் டான்ஸர் பாடலின் 4 மெஷர்களுக்காக காத்திருக்கும் அதன் பிறகே ஆடத்தொடங்கும்
டிஸ்பிளே பகுதியின் மேல் பகுதியில் உள்ள Measure Counter ஐ கவனியுங்கள்
Dance Code ஐ தொடங்கவைக்கும் Event ஐ கவனியுங்கள்
Cue வந்ததும் டான்ஸர் ஆடத்தொடங்குவதை காணலாம்