நான் 18 மாதக்குழந்தையாக இருக்கையில் கார் தீ விபத்தில் சிக்கினேன். அப்போதிலிருந்து 5 வயது வரை வைக்டோ மருத்துவமனையில் இருந்தேன். தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் இருந்தேன், ஏதோ ஆனதில், எனக்கு தண்டுவடத் தொற்று ஏற்பட்டு என்னை முடக்கியது. பெருங்கோபமும் மன அழுத்தமும் கொண்டு இங்கிருக்கவே வேண்டாம் போல உணர்ந்தேன். என் பராமரிப்பாளர், லெடிசியா [லெடிசியா] நான் ஒரு புது நிறுவனத்தில் வேலை செய்தேன், அவர்கள் சொன்னது "இந்த மாவோரி பெண்ணை நீங்கள் சந்திக்க வேண்டும், அவள் மிகவும் கூச்ச சுபாவமாய் இருக்கிறாள். நீங்கள் அவளை அற்புதமாய் கவனிப்பீர்கள் என்று நினைக்கிறோம்" என்றதும், எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதனால், இப்போது, பெருமகிழ்ச்சியுடன் நாம் லெடிசியாவை மேடைக்கு அழைத்து அவர் மையா-விற்காக எழுதி அற்பணித்த பாடலை பாடிக்காட்ட வேண்டுகிறோம். கவனமாகக் கேளுங்கள், சகோதர சகோதரிகளே, இதோ, லெடிசியா ஹெடர் என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் எப்போதும் என் முழு ஆற்றலை அளிக்கிறேன் நான் இதை அடைவேன் என கனவிலும் எண்ணவில்லை, இந்த நொடிகளை பெற்றுள்ளேன் என்னால் முடியும், நான், இந்த நொடியில் இருந்துதான் வந்துள்ளேன், நானாக. என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். நான் முழு ஆற்றலுடன் இருக்கிறேன், வெற்றி வந்து சேருமெனத் தெரியும், என் வழியில், நான் ஏற்கிறேன், சில நாட்கள் நான் மகிழ்கிறேன், சில நாட்கள் மிகவும் சோர்ந்துள்ளேன் நாட்கள் செல்லச் செல்ல கற்றுக்கொள்கிறேன், நான் செய்தவற்றில் இருந்து துணிவை அறிகிறேன். என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். எல்லோரும் என்னை வெறித்துப் பார்க்கிறார்கள், என்னைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள், அவர்கள் காண்பதெல்லாம் என் தழும்புகள் தான், அவர்களுக்கு என்னைத் தெரியாது எதுவும் எப்போதும், மிகவும் நியாயமானதாகத் தோன்றியதில்லை, நம் மகத்தான உறுதியால் வாழ்க்கை மாறி வருகிறது நான் செய்வதெல்லாம் இன்னும் வியக்கவைக்கிறது நான் ஏறத்தாழ அங்கிருக்கிறேன் என்று என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் , இந்த நொடிகளை பெற்றுள்ளேன் அன்புடன், மையா [ஆரவாரம் மற்றும் கரவொலி]