[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:04.00,Default,,0000,0000,0000,,உங்களை நான் வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்று, Dialogue: 0,0:00:04.00,0:00:06.00,Default,,0000,0000,0000,,தினம் ஒரு டாலர் கூட செலவு செய்யாமல் வாழ்பவர்களான Dialogue: 0,0:00:06.00,0:00:10.00,Default,,0000,0000,0000,,45 கால பழமையான ஒரு ஏழையின் Dialogue: 0,0:00:10.00,0:00:13.00,Default,,0000,0000,0000,,காதல் கதையை Dialogue: 0,0:00:13.00,0:00:16.00,Default,,0000,0000,0000,,பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், Dialogue: 0,0:00:18.00,0:00:22.00,Default,,0000,0000,0000,,நான் இந்தியாவில் ஒரு மேற்தட்ட, பகடியான, Dialogue: 0,0:00:22.00,0:00:26.00,Default,,0000,0000,0000,,மிகவும் விலையுயர்ந்த கல்வியை பெற்றேன், Dialogue: 0,0:00:26.00,0:00:29.00,Default,,0000,0000,0000,,அதனால் ஏறக்குறைய நான் அழிந்துவிட்டேன். Dialogue: 0,0:00:31.00,0:00:33.00,Default,,0000,0000,0000,,வருங்காலத்தில் என்னை Dialogue: 0,0:00:33.00,0:00:36.00,Default,,0000,0000,0000,,ஒரு துதராகவோ, ஒரு ஆசிரியராகவோ, ஒரு மருத்துவராகவோ Dialogue: 0,0:00:36.00,0:00:40.00,Default,,0000,0000,0000,,ஆக்க திட்டங்கள் இருந்தன. Dialogue: 0,0:00:40.00,0:00:43.00,Default,,0000,0000,0000,,பார்ப்பதற்கு, அப்படி தோன்றவில்லை என்றாலும், நான் இந்திவாவின் தேசிய ஸ்குவாஷ் வீரராக Dialogue: 0,0:00:43.00,0:00:45.00,Default,,0000,0000,0000,,மூன்று வருடங்களுக்கு இருந்தேன். Dialogue: 0,0:00:45.00,0:00:47.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:00:47.00,0:00:50.00,Default,,0000,0000,0000,,பரந்த உலகம் என் முன்னால் இருந்தது. Dialogue: 0,0:00:50.00,0:00:52.00,Default,,0000,0000,0000,,அனைத்தும் என் காலடியில். Dialogue: 0,0:00:52.00,0:00:55.00,Default,,0000,0000,0000,,நான் தவறு ஏதும் செய்ய வாய்ப்பில்லை. Dialogue: 0,0:00:55.00,0:00:57.00,Default,,0000,0000,0000,,பிறகு, ஓர் ஆர்வத்தில், நான் ஒரு கிராமத்திற்கு Dialogue: 0,0:00:57.00,0:00:59.00,Default,,0000,0000,0000,,சென்று, வாழ்ந்து, வேலை செய்து Dialogue: 0,0:00:59.00,0:01:01.00,Default,,0000,0000,0000,,பார்க்க வேண்டும் என்று யோசித்தேன். Dialogue: 0,0:01:01.00,0:01:03.00,Default,,0000,0000,0000,,இதனால், 1965-ல், Dialogue: 0,0:01:03.00,0:01:07.00,Default,,0000,0000,0000,,நான் கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருந்த பீகார் மாநிலத்துக்கு சென்றேன். Dialogue: 0,0:01:07.00,0:01:10.00,Default,,0000,0000,0000,,நான் அங்கு பார்த்தது - பசியும், பட்டினியும், சாவும். Dialogue: 0,0:01:10.00,0:01:13.00,Default,,0000,0000,0000,,முதன் முறையாக பட்டினியால் மக்கள் இறப்பதை பார்த்தேன். Dialogue: 0,0:01:13.00,0:01:16.00,Default,,0000,0000,0000,,அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. Dialogue: 0,0:01:16.00,0:01:18.00,Default,,0000,0000,0000,,நான் வீடு திரும்பினேன். Dialogue: 0,0:01:18.00,0:01:20.00,Default,,0000,0000,0000,,என் அம்மாவிடம் சொன்னேன். Dialogue: 0,0:01:20.00,0:01:23.00,Default,,0000,0000,0000,,"நான் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வேலை செய்ய விரும்புகிறேன்" என்று. Dialogue: 0,0:01:23.00,0:01:25.00,Default,,0000,0000,0000,,அம்மாவுக்கோ, மிகுந்த அதிர்ச்சி! கோமாவிற்கே போய்விட்டது போலிருந்தாள். Dialogue: 0,0:01:25.00,0:01:28.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:01:28.00,0:01:30.00,Default,,0000,0000,0000,,"என்னது இது? Dialogue: 0,0:01:30.00,0:01:33.00,Default,,0000,0000,0000,,உலகம் முழுவதும் உனக்காகவே உள்ளது. சிறந்த வேலைவாய்ப்புகள் உனக்காக காத்திருக்கின்றன. Dialogue: 0,0:01:33.00,0:01:35.00,Default,,0000,0000,0000,,ஆனால், நீ கிராமத்திற்கு சென்று வேலை செய்ய போகிறாயா? Dialogue: 0,0:01:35.00,0:01:37.00,Default,,0000,0000,0000,,உனக்கு ஏதாவது ஆகிவிட்டதா?" Dialogue: 0,0:01:37.00,0:01:39.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "இல்லை, எனக்கு சிறந்த கல்வி கிடைத்திருக்கிறது. Dialogue: 0,0:01:39.00,0:01:41.00,Default,,0000,0000,0000,,அதனால், நான் யோசித்தேன். Dialogue: 0,0:01:41.00,0:01:44.00,Default,,0000,0000,0000,,என்னால் முடிந்த வரை, Dialogue: 0,0:01:44.00,0:01:46.00,Default,,0000,0000,0000,,நான் ஏதேனும் திருப்பி தர வேண்டும்." Dialogue: 0,0:01:46.00,0:01:48.00,Default,,0000,0000,0000,,"நீ கிராமத்திற்கு சென்று என்னை செய்ய விரும்புகிறாய்? Dialogue: 0,0:01:48.00,0:01:50.00,Default,,0000,0000,0000,,வேலை இல்லை. பணமும் இல்லை. Dialogue: 0,0:01:50.00,0:01:52.00,Default,,0000,0000,0000,,பாதுகாப்பும் இல்லை, வாய்ப்புகளும் இல்லை." Dialogue: 0,0:01:52.00,0:01:54.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "நான் அங்கு வாழ விரும்புகிறேன். Dialogue: 0,0:01:54.00,0:01:57.00,Default,,0000,0000,0000,,அடுத்த ஐந்து வருடங்களுக்கு கிணறு வெட்ட போகிறேன்." Dialogue: 0,0:01:57.00,0:01:59.00,Default,,0000,0000,0000,,"கிணறு வெட்ட போகிறாயா, ஐந்து வருடங்களுக்கு? Dialogue: 0,0:01:59.00,0:02:02.00,Default,,0000,0000,0000,,நீ இந்திவாவின் மிகவும் விலையுயர்ந்த பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுள்ளாய். Dialogue: 0,0:02:02.00,0:02:04.00,Default,,0000,0000,0000,,ஆனால், ஐந்து வருடங்களுக்கு கிணறு வெட்ட விரும்புகிறாயே?" Dialogue: 0,0:02:04.00,0:02:08.00,Default,,0000,0000,0000,,அவள் என்னிடம் நீண்ட காலத்திற்கு பேசவே இல்லை, Dialogue: 0,0:02:08.00,0:02:11.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், அவள் நான் என் குடும்பத்தை ஏமாற்றிவிட்டேன் என்று நினைத்தாள். Dialogue: 0,0:02:13.00,0:02:15.00,Default,,0000,0000,0000,,ஆனால், Dialogue: 0,0:02:15.00,0:02:18.00,Default,,0000,0000,0000,,நானோ, மிகவும் அசாதாரமான ஞானமும் திறமையும், Dialogue: 0,0:02:18.00,0:02:20.00,Default,,0000,0000,0000,,மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மக்கள் கொண்டுள்ளதை கண்டேன். Dialogue: 0,0:02:20.00,0:02:23.00,Default,,0000,0000,0000,,அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை -- Dialogue: 0,0:02:23.00,0:02:25.00,Default,,0000,0000,0000,,அவற்றை மதித்து, அடையாளம் கண்டு, Dialogue: 0,0:02:25.00,0:02:27.00,Default,,0000,0000,0000,,ஒரு பெரிய அளவில் உபயோகம் செய்ததும் இல்லை. Dialogue: 0,0:02:27.00,0:02:29.00,Default,,0000,0000,0000,,அப்போது, நான் சிந்தித்தேன் - வெறுங்கால் கல்லூரி ஒன்றை துவக்க வேண்டும் என்று -- Dialogue: 0,0:02:29.00,0:02:31.00,Default,,0000,0000,0000,,ஏழைகளுக்கான ஒரு கல்லூரி. Dialogue: 0,0:02:31.00,0:02:33.00,Default,,0000,0000,0000,,ஏழைகள் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ Dialogue: 0,0:02:33.00,0:02:36.00,Default,,0000,0000,0000,,அதை பிரதிபலிக்கும் ஒரு கல்லூரி. Dialogue: 0,0:02:37.00,0:02:39.00,Default,,0000,0000,0000,,நான் முதன் முறையாக ஒரு கிராமத்திற்கு சென்றேன். Dialogue: 0,0:02:39.00,0:02:41.00,Default,,0000,0000,0000,,அங்கே, பெரியவர்கள் என்னிடம் வந்து Dialogue: 0,0:02:41.00,0:02:43.00,Default,,0000,0000,0000,,கேட்டார்கள், "நீ காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடிவந்தவனா?" என்று. Dialogue: 0,0:02:43.00,0:02:45.00,Default,,0000,0000,0000,,"இல்லை", என்றேன். Dialogue: 0,0:02:45.00,0:02:48.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:02:49.00,0:02:51.00,Default,,0000,0000,0000,,"நீ உன் பரீட்சையில் தோல்வி கண்டவனா?" Dialogue: 0,0:02:51.00,0:02:53.00,Default,,0000,0000,0000,,"இல்லை", என்றேன். Dialogue: 0,0:02:53.00,0:02:56.00,Default,,0000,0000,0000,,"உனக்கு அரசு வேலை கிடைக்கவில்லையா?" "இல்லை" என்றேன். Dialogue: 0,0:02:56.00,0:02:58.00,Default,,0000,0000,0000,,"நீ இங்கு என்னை செய்கிறாய்? Dialogue: 0,0:02:58.00,0:03:00.00,Default,,0000,0000,0000,,எதற்காக இங்கு வந்துள்ளாய்? Dialogue: 0,0:03:00.00,0:03:02.00,Default,,0000,0000,0000,,இந்தியாவின் கல்வி முறை Dialogue: 0,0:03:02.00,0:03:05.00,Default,,0000,0000,0000,,உன்னை பாரீஸ், டெல்லி, ஜுறிச் போன்ற இடங்களுக்கு வழிகாட்டும்; Dialogue: 0,0:03:05.00,0:03:07.00,Default,,0000,0000,0000,,ஆனால், நீ இந்த கிராமத்தில் என்னை செய்யபோகிறாய்? Dialogue: 0,0:03:07.00,0:03:10.00,Default,,0000,0000,0000,,உன்னிடம் எதாவது குறை இருந்து, எங்களிடம் மறைக்கிறாயா?" Dialogue: 0,0:03:10.00,0:03:13.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "இல்லை, நான் உண்மையாக ஒரு கல்லூரி தொடங்க விரும்புகிறேன், Dialogue: 0,0:03:13.00,0:03:15.00,Default,,0000,0000,0000,,ஏழைகளுக்காக மட்டும். Dialogue: 0,0:03:15.00,0:03:18.00,Default,,0000,0000,0000,,ஏழைகள் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ அதை இந்த கல்லூரி பிரதிபலிக்கும்." Dialogue: 0,0:03:18.00,0:03:22.00,Default,,0000,0000,0000,,அந்த பெரியவர்களோ, எனக்கு ஒரு சிறப்பான, ஆழமான புத்திமதி கூறினர். Dialogue: 0,0:03:22.00,0:03:24.00,Default,,0000,0000,0000,,அவர்கள் சொன்னார்கள், "தயவு செய்து, Dialogue: 0,0:03:24.00,0:03:27.00,Default,,0000,0000,0000,,ஒரு பட்டம் பெற்றவனையோ, கல்வி தகுதி பெற்றவனையோ, கொண்டு வராதே, Dialogue: 0,0:03:27.00,0:03:29.00,Default,,0000,0000,0000,,உன் கல்லூரிக்குள்." Dialogue: 0,0:03:29.00,0:03:32.00,Default,,0000,0000,0000,,ஆதலின், இது தான் இந்தியாவின் ஒரே கல்லூரி, Dialogue: 0,0:03:32.00,0:03:35.00,Default,,0000,0000,0000,,எங்கு உங்களிடம் ஒரு பேரறிஞர் பட்டம் இருந்தாலோ, முனைவர் பட்டம் இருந்தாலோ, Dialogue: 0,0:03:35.00,0:03:37.00,Default,,0000,0000,0000,,உங்களுக்கு கல்லூரிக்குள் வர அனுமதி கிடையாது. Dialogue: 0,0:03:37.00,0:03:42.00,Default,,0000,0000,0000,,நீங்கள் கல்வியை கைவிட்டவனாகவோ, அல்லது எதுவும் தெரியாதவனாகவோ இருந்தால் தான் Dialogue: 0,0:03:42.00,0:03:45.00,Default,,0000,0000,0000,,எங்கள் கல்லூரிக்கு வர இயலும். Dialogue: 0,0:03:45.00,0:03:47.00,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்கள் கைகளால் வேலை செய்ய வேண்டும். Dialogue: 0,0:03:47.00,0:03:49.00,Default,,0000,0000,0000,,நீங்கள் எல்லா பணிகளுக்கும் கௌரவம் தர வேண்டும். Dialogue: 0,0:03:49.00,0:03:52.00,Default,,0000,0000,0000,,சமூகத்திற்கு உபயோகம் அளிக்கும் ஒரு திறமை, உங்களுக்கு இருக்க வேண்டும். Dialogue: 0,0:03:52.00,0:03:55.00,Default,,0000,0000,0000,,அதனால், சமூகத்திற்கு பலனளிக்க வேண்டும். Dialogue: 0,0:03:55.00,0:03:58.00,Default,,0000,0000,0000,,இதற்காக, நாங்கள் ஒரு வெறுங்கால் கல்லூரியை தொடங்கினோம். Dialogue: 0,0:03:58.00,0:04:00.00,Default,,0000,0000,0000,,தொழில் செய்யும் மனப்மான்மையை மாற்றி எழுதினோம். Dialogue: 0,0:04:00.00,0:04:02.00,Default,,0000,0000,0000,,தொழில் செய்பவன் யார்? Dialogue: 0,0:04:02.00,0:04:04.00,Default,,0000,0000,0000,,தொழில் செய்பவன் ஒரு தொழிலர், Dialogue: 0,0:04:04.00,0:04:06.00,Default,,0000,0000,0000,,ஆற்றல், திறன் Dialogue: 0,0:04:06.00,0:04:09.00,Default,,0000,0000,0000,,நம்பிக்கை மற்றும் கோட்பாடுகள் கொண்டவனாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:04:09.00,0:04:12.00,Default,,0000,0000,0000,,உற்று உணர்பவன் ஒரு தொழிலர். Dialogue: 0,0:04:12.00,0:04:14.00,Default,,0000,0000,0000,,மகப்பேறு உதவியாளர் அல்லது ஒரு மருத்துவச்சி Dialogue: 0,0:04:14.00,0:04:16.00,Default,,0000,0000,0000,,ஒரு தொழிலர். Dialogue: 0,0:04:16.00,0:04:19.00,Default,,0000,0000,0000,,புத்துக் கட்டு போடுபவன், ஒரு தொழிலர். Dialogue: 0,0:04:19.00,0:04:21.00,Default,,0000,0000,0000,,இந்த உலகம் முழுவதும் தொழிலர்கள் இருக்கிறார்கள். Dialogue: 0,0:04:21.00,0:04:25.00,Default,,0000,0000,0000,,எட்ட முடியாத கிராமங்களில், அவர்களை பார்க்கலாம் உலகம் முழுவதும். Dialogue: 0,0:04:25.00,0:04:28.00,Default,,0000,0000,0000,,நாங்கள் நினைத்தோம், இந்த மக்களை முக்கியமான போக்கில் கொண்டு வர வேண்டும். Dialogue: 0,0:04:28.00,0:04:31.00,Default,,0000,0000,0000,,இவர்களின் ஞானமும் திறமையும், வெளிக்காட்ட வேண்டும், Dialogue: 0,0:04:31.00,0:04:33.00,Default,,0000,0000,0000,,அவை பொதுவானவை, உலகம் எங்கும் பின்பற்ற தகுதியானவை என்று. Dialogue: 0,0:04:33.00,0:04:35.00,Default,,0000,0000,0000,,அவற்றை உபயோகிக்க வேண்டும். பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும். Dialogue: 0,0:04:35.00,0:04:37.00,Default,,0000,0000,0000,,வெளி உலகிற்கு நாம் காட்ட வேண்டும் அவற்றை -- Dialogue: 0,0:04:37.00,0:04:39.00,Default,,0000,0000,0000,,இந்த ஞானமும் திறமையும் Dialogue: 0,0:04:39.00,0:04:43.00,Default,,0000,0000,0000,,இன்றளவுக்கும் பயனுள்ளவை என்று. Dialogue: 0,0:04:43.00,0:04:45.00,Default,,0000,0000,0000,,இந்த கல்லூரி நடைபெறுகிறது Dialogue: 0,0:04:45.00,0:04:49.00,Default,,0000,0000,0000,,மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையையும், வேலை முறையையும் பின்பற்றி. Dialogue: 0,0:04:49.00,0:04:53.00,Default,,0000,0000,0000,,நீங்கள் தரையில் சாப்பிடுவீர்கள், தரையில் உறங்குவீர்கள், தரையில் வேலை செய்வீர்கள். Dialogue: 0,0:04:53.00,0:04:55.00,Default,,0000,0000,0000,,இங்கு ஒப்பந்தமும் இல்லை, எழுதிய ஒப்பந்த பத்திரிக்கையும் இல்லை. Dialogue: 0,0:04:55.00,0:04:58.00,Default,,0000,0000,0000,,நீங்கள் என்னுடன் 20 வருடங்கள் இருக்கலாம், இல்லை நாளையே சென்றுவிடலாம். Dialogue: 0,0:04:58.00,0:05:01.00,Default,,0000,0000,0000,,மற்றும் இங்கு யாருக்கும் 100 டாலர் மேல் சம்பளம் கிடைக்கக் கூடாது. Dialogue: 0,0:05:01.00,0:05:04.00,Default,,0000,0000,0000,,நீங்கள் பணத்திற்காக வந்தால், வெறுங்கால் கல்லூரிக்கு வரக்கூடாது. Dialogue: 0,0:05:04.00,0:05:06.00,Default,,0000,0000,0000,,நீங்கள் வேலைக்காக இங்கு வாருங்கள். சவால்களை எதிர்கொள்ள Dialogue: 0,0:05:06.00,0:05:08.00,Default,,0000,0000,0000,,வெறுங்கால் கல்லூரிக்கு வாருங்கள். Dialogue: 0,0:05:08.00,0:05:11.00,Default,,0000,0000,0000,,இங்கு நீங்கள் கிறுக்குத்தனமான கருத்துக்களை செயல் முறைபடுத்தலாம். Dialogue: 0,0:05:11.00,0:05:13.00,Default,,0000,0000,0000,,உங்களிடம் எதாவது ஒரு எண்ணம் இருந்தால், அதை இங்கு வந்து செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:05:13.00,0:05:15.00,Default,,0000,0000,0000,,நீங்கள் தோல்வி அடைந்தால், தவறில்லை. Dialogue: 0,0:05:15.00,0:05:18.00,Default,,0000,0000,0000,,கீழே விழுந்து, அடி வாங்கி நீங்கள் மீண்டும் முணைவீர்கள். Dialogue: 0,0:05:18.00,0:05:21.00,Default,,0000,0000,0000,,இந்த கல்லூரியில் மட்டும் தான், கற்பிப்பவன் கல்வி கற்பவன் ஆகிறான். Dialogue: 0,0:05:21.00,0:05:24.00,Default,,0000,0000,0000,,கல்வி கற்பவன் கற்பிப்பவன் ஆகிறான். Dialogue: 0,0:05:24.00,0:05:27.00,Default,,0000,0000,0000,,இந்த கல்லூரியில் மட்டும் தான், சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. Dialogue: 0,0:05:27.00,0:05:30.00,Default,,0000,0000,0000,,நீங்கள் சேவை செய்யும் சமூகம் உங்களை சான்றுபடுத்தும். Dialogue: 0,0:05:30.00,0:05:32.00,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒரு பொறியாளர் என்று காட்ட, Dialogue: 0,0:05:32.00,0:05:35.00,Default,,0000,0000,0000,,சுவரில் தொங்க விட ஒரு காகிதம் தேவை இல்லை. Dialogue: 0,0:05:37.00,0:05:39.00,Default,,0000,0000,0000,,நான் இதை சொன்ன போது, Dialogue: 0,0:05:39.00,0:05:42.00,Default,,0000,0000,0000,,அவர்கள் சொன்னார்கள், "சரி, இதனால் என்னை சாத்தியம் என்று காண்பியுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? Dialogue: 0,0:05:42.00,0:05:46.00,Default,,0000,0000,0000,,இது எல்லாம் உங்களால் இதை நடைமுறையில் காட்ட இயலவில்லை என்றால் வாய் பேச்சுதான்." Dialogue: 0,0:05:46.00,0:05:49.00,Default,,0000,0000,0000,,இதனால், 1986-ல், Dialogue: 0,0:05:49.00,0:05:52.00,Default,,0000,0000,0000,,நாங்கள் முதல் வெறுங்கால் கல்லூரியை கட்டினோம், Dialogue: 0,0:05:52.00,0:05:54.00,Default,,0000,0000,0000,,இது 12 வெறுங்கால் கட்டிடக்கலைஞர்களால் கட்டப்பட்டது. Dialogue: 0,0:05:54.00,0:05:56.00,Default,,0000,0000,0000,,இவர்களால் எழுத படிக்க முடியாது. Dialogue: 0,0:05:56.00,0:05:59.00,Default,,0000,0000,0000,,ஒரு சதுரடிக்கு ஒன்றரை டாலர் செலவில் கட்டப்பட்டது . Dialogue: 0,0:05:59.00,0:06:03.00,Default,,0000,0000,0000,,150 மக்கள் அங்கே வாழ்ந்தனர், வேலை செய்தனர். Dialogue: 0,0:06:03.00,0:06:06.00,Default,,0000,0000,0000,,2002-ல், அவர்கள் கட்டிடக்கலைக்கு ஆகா கான் விருதை பெற்றார்கள், Dialogue: 0,0:06:06.00,0:06:09.00,Default,,0000,0000,0000,,ஆனால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதற்கு ஒரு கட்டிடக்கலைஞர் உதவி செய்துள்ளார் என்று. Dialogue: 0,0:06:09.00,0:06:11.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "ஆமாம், அவர்கள் செயல்திட்டத்தை வரைந்தார்கள், Dialogue: 0,0:06:11.00,0:06:15.00,Default,,0000,0000,0000,,ஆனால் வெறுங்கால் கட்டிடக்கலைஞர்கள் தான் இதனை கட்டினர்." Dialogue: 0,0:06:16.00,0:06:19.00,Default,,0000,0000,0000,,நாங்கள் மட்டும் தான் அவர்கள் அளித்த $50,000 திருப்பி தந்து விட்டோம், Dialogue: 0,0:06:19.00,0:06:21.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், அவர்கள் எங்களை நம்பவில்லை. Dialogue: 0,0:06:21.00,0:06:25.00,Default,,0000,0000,0000,,அவர்கள் அவதூறு கூறுவது போல தோன்றியது, Dialogue: 0,0:06:25.00,0:06:28.00,Default,,0000,0000,0000,,டிலோனியாவின் வெறுங்கால் கட்டிடக்கலைஞர்கள் மீது. Dialogue: 0,0:06:28.00,0:06:30.00,Default,,0000,0000,0000,,காடுகளைக் கவனிக்கும் அதிகாரியிடம், நான் கேட்டேன் -- Dialogue: 0,0:06:30.00,0:06:33.00,Default,,0000,0000,0000,,அவர் ஒரு உயர் அதிகாரத்தில் இருந்த, மிகுந்த தகுதியான நிபுணர் -- Dialogue: 0,0:06:33.00,0:06:36.00,Default,,0000,0000,0000,,நான் கேட்டேன். "இந்த இடத்தில என்னை கட்ட முடியும்?" என்று. Dialogue: 0,0:06:36.00,0:06:38.00,Default,,0000,0000,0000,,அவர் நிலத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, "மறந்து விடு. எதுவும் முடியாது.", என்றார். Dialogue: 0,0:06:38.00,0:06:40.00,Default,,0000,0000,0000,,"இது எதற்கும் மதிப்பு இல்லை. Dialogue: 0,0:06:40.00,0:06:42.00,Default,,0000,0000,0000,,தண்ணீர் இல்லை. பாறைகள் நிறைந்த நிலம்." Dialogue: 0,0:06:42.00,0:06:44.00,Default,,0000,0000,0000,,நானோ, கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன். Dialogue: 0,0:06:44.00,0:06:46.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "சரி, நான் ஊர் பெரியவரிடம் சென்று, Dialogue: 0,0:06:46.00,0:06:49.00,Default,,0000,0000,0000,,கேட்கிறேன், 'இங்கு என்னை விளையும் என்று?'" Dialogue: 0,0:06:49.00,0:06:51.00,Default,,0000,0000,0000,,அந்த பெரியவர் நிதானமாக என்னை பார்த்து சொன்னார் , Dialogue: 0,0:06:51.00,0:06:53.00,Default,,0000,0000,0000,,"நீ இதை கட்டு, நீ இதை கட்டு, இதை போடு, வேலை செய்யும்." Dialogue: 0,0:06:53.00,0:06:56.00,Default,,0000,0000,0000,,இன்று, இது இப்படி தான் காட்சி அளிக்கிறது. Dialogue: 0,0:06:57.00,0:06:59.00,Default,,0000,0000,0000,,நான் மொட்டை மாடிக்கு சென்றேன், Dialogue: 0,0:06:59.00,0:07:01.00,Default,,0000,0000,0000,,அங்கு பெண்கள் எல்லாம் சேர்ந்து சொன்னார்கள், "வெளியே செலவும். Dialogue: 0,0:07:01.00,0:07:04.00,Default,,0000,0000,0000,,ஆண்கள் வெளியே செலவும். நாங்கள் எங்களுடைய தொழில் நுட்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். Dialogue: 0,0:07:04.00,0:07:06.00,Default,,0000,0000,0000,,நாங்கள் மாடியிலிருந்து நீர் இறந்காதவாறு செய்கிறோம்." Dialogue: 0,0:07:06.00,0:07:08.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:07:08.00,0:07:11.00,Default,,0000,0000,0000,,அது கொஞ்சம் பனைவெல்லம், கொஞ்சம் சிறுநீர், Dialogue: 0,0:07:11.00,0:07:13.00,Default,,0000,0000,0000,,மற்றும் நான் அறியாத சிலவற்றின் கலவை. Dialogue: 0,0:07:13.00,0:07:15.00,Default,,0000,0000,0000,,ஆனால், அது உண்மையாக ஒழுகுவதில்லை. Dialogue: 0,0:07:15.00,0:07:18.00,Default,,0000,0000,0000,,1986 இலிருந்து, அது ஒழுகவில்லை. Dialogue: 0,0:07:18.00,0:07:21.00,Default,,0000,0000,0000,,இந்த தொழில் நுட்பத்தை, பெண்கள் ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். Dialogue: 0,0:07:21.00,0:07:24.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:07:24.00,0:07:26.00,Default,,0000,0000,0000,,இந்த கல்லூரியில் மட்டும் தான் Dialogue: 0,0:07:26.00,0:07:30.00,Default,,0000,0000,0000,,மின் உற்பத்தி முழுமையாக சூரிய ஒளியினால் நடைபெறுகிறது. Dialogue: 0,0:07:30.00,0:07:32.00,Default,,0000,0000,0000,,அணைத்து சக்தியும் சூரியனிலிருந்து வருகிறது. Dialogue: 0,0:07:32.00,0:07:34.00,Default,,0000,0000,0000,,மொட்டை மாடியில், 45 கிலோவாட் சக்தி கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. Dialogue: 0,0:07:34.00,0:07:36.00,Default,,0000,0000,0000,,அடுத்த 25 வருடங்களுக்கு, அனைத்தும் சூரிய சக்தியினால் வேலை செய்யும். Dialogue: 0,0:07:36.00,0:07:38.00,Default,,0000,0000,0000,,சூரிய ஒளி இருக்கும் வரை, Dialogue: 0,0:07:38.00,0:07:40.00,Default,,0000,0000,0000,,எங்களுக்கு மின் உற்பத்தி பிரச்சனைகள் கிடையாது. Dialogue: 0,0:07:40.00,0:07:42.00,Default,,0000,0000,0000,,இதில் அழகு என்னவென்றால், Dialogue: 0,0:07:42.00,0:07:45.00,Default,,0000,0000,0000,,இதை அமைத்தது ஒரு Dialogue: 0,0:07:45.00,0:07:48.00,Default,,0000,0000,0000,,பூசாரி, ஒரு இந்து பூசாரி. Dialogue: 0,0:07:48.00,0:07:51.00,Default,,0000,0000,0000,,அவர் 8 வருடம் தான் தொடக்கப்பள்ளி சென்றார். Dialogue: 0,0:07:51.00,0:07:54.00,Default,,0000,0000,0000,,பள்ளிக்கூடம் சென்றது இல்லை, கல்லூரி சென்றது இல்லை. Dialogue: 0,0:07:54.00,0:07:56.00,Default,,0000,0000,0000,,அவருக்கு சூரிய சக்தி பற்றி நிறைய அறிவார், Dialogue: 0,0:07:56.00,0:08:00.00,Default,,0000,0000,0000,,உலகத்தில் யாருக்கும் எங்கேயும் தெரியாதாளவிற்கு, அவருக்கு தெரியும் என்று என்னால் உறுதியுடன் கூற முடியும். Dialogue: 0,0:08:02.00,0:08:04.00,Default,,0000,0000,0000,,உணவு, நீங்கள் வெறுங்கால் கல்லூரிக்கு வருமானால், Dialogue: 0,0:08:04.00,0:08:07.00,Default,,0000,0000,0000,,சூரிய சக்தி மூலமாக சமைக்கப்படுகிறது. Dialogue: 0,0:08:07.00,0:08:10.00,Default,,0000,0000,0000,,அந்த சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பை வடிவமைத்தது, Dialogue: 0,0:08:10.00,0:08:13.00,Default,,0000,0000,0000,,பெண்கள் தான், Dialogue: 0,0:08:13.00,0:08:15.00,Default,,0000,0000,0000,,படிப்பறிவில்லாத பெண்கள். Dialogue: 0,0:08:15.00,0:08:17.00,Default,,0000,0000,0000,,அவர்கள் வடிவமைத்தது Dialogue: 0,0:08:17.00,0:08:19.00,Default,,0000,0000,0000,,ஒரு மதிநுட்பமான சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பை. Dialogue: 0,0:08:19.00,0:08:22.00,Default,,0000,0000,0000,,அது ஒரு சாய்மலை வட்டமான ஷ்செயபர் சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பு. Dialogue: 0,0:08:25.00,0:08:29.00,Default,,0000,0000,0000,,அவர்கள் பாதி ஜெர்மனியர் ஆகி விட்டார்கள் , Dialogue: 0,0:08:29.00,0:08:31.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அவர்கள் மிகவும் துள்ளியமாக அதை வடிவமைத்துள்ளனர். Dialogue: 0,0:08:31.00,0:08:33.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:08:33.00,0:08:36.00,Default,,0000,0000,0000,,நீங்கள் இந்திய பெண்கள் இவ்வளவு துள்ளியமாக இருப்பதாக பார்த்திருக்க மாட்டீர்கள். Dialogue: 0,0:08:37.00,0:08:39.00,Default,,0000,0000,0000,,அந்த கிடைசி அங்குலம் வரை அவர்களால் Dialogue: 0,0:08:39.00,0:08:41.00,Default,,0000,0000,0000,,அந்த அடுப்பை தயாரிக்க முடியும். Dialogue: 0,0:08:41.00,0:08:43.00,Default,,0000,0000,0000,,நாங்கள் 60 சாப்பாடுகள் தயாரிக்கிறோம் தினமும். Dialogue: 0,0:08:43.00,0:08:45.00,Default,,0000,0000,0000,,சூரிய சக்தி சமையலின் மூலம். Dialogue: 0,0:08:45.00,0:08:47.00,Default,,0000,0000,0000,,எங்களுக்கு என்று ஒரு பல் மருத்துவர் ஒருவர் உள்ளார். Dialogue: 0,0:08:47.00,0:08:50.00,Default,,0000,0000,0000,,அவர் ஒரு மூதாட்டி, படிக்காதவர். Dialogue: 0,0:08:50.00,0:08:52.00,Default,,0000,0000,0000,,அவர் தான் பற்களின் ஆரோகியத்தை கவனித்துக்கொள்கிறார், Dialogue: 0,0:08:52.00,0:08:55.00,Default,,0000,0000,0000,,7000 குழந்தைகளுக்கு. Dialogue: 0,0:08:56.00,0:08:58.00,Default,,0000,0000,0000,,வெறுங்கால் தொழில் நுட்பத்தை: Dialogue: 0,0:08:58.00,0:09:01.00,Default,,0000,0000,0000,,இது 1986யில் -- பொறியாளர் இல்லாமல், கட்டிடக்கலைஞர் இல்லாமல் Dialogue: 0,0:09:01.00,0:09:04.00,Default,,0000,0000,0000,,நாங்கள் மழைத் தண்ணீர் மொட்டை மாடியிலிருந்து சேமித்து வந்தோம். Dialogue: 0,0:09:04.00,0:09:06.00,Default,,0000,0000,0000,,மிகவும் கொஞ்சம் தண்ணீர் தான் வீணாக போனது. Dialogue: 0,0:09:06.00,0:09:08.00,Default,,0000,0000,0000,,அணைத்து மொட்டை மாடிகளும் இணைக்கப்பட்டிருந்தன, நிலத்தடியில், Dialogue: 0,0:09:08.00,0:09:10.00,Default,,0000,0000,0000,,ஒரு 400,000 லிட்டர் குளத்திற்கு. Dialogue: 0,0:09:10.00,0:09:12.00,Default,,0000,0000,0000,,தண்ணீர் வீணாக்கப்படவில்லை. Dialogue: 0,0:09:12.00,0:09:15.00,Default,,0000,0000,0000,,எங்களுக்கு நான்கு வருடம் வறட்சி இருந்தாலும், எங்கள் வளாகத்தில் நீர் இருக்கும். Dialogue: 0,0:09:15.00,0:09:17.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால் நாங்கள் மழை நீரை சேமிக்கிறோம். Dialogue: 0,0:09:17.00,0:09:20.00,Default,,0000,0000,0000,,60 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது இல்லை, Dialogue: 0,0:09:20.00,0:09:22.00,Default,,0000,0000,0000,,ஏனெனில், அவர்களுக்கு கால்நடை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளது -- Dialogue: 0,0:09:22.00,0:09:24.00,Default,,0000,0000,0000,,ஆடுகள் , செம்மறியாடுகள் -- Dialogue: 0,0:09:24.00,0:09:26.00,Default,,0000,0000,0000,,மற்றும் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். Dialogue: 0,0:09:26.00,0:09:29.00,Default,,0000,0000,0000,,இதனால், நாங்கள் ஒரு பள்ளியை ஆரம்பிக்க எண்ணினோம். Dialogue: 0,0:09:29.00,0:09:31.00,Default,,0000,0000,0000,,இரவில் குழந்தைகளுக்கு என்று. Dialogue: 0,0:09:31.00,0:09:33.00,Default,,0000,0000,0000,,டிலோனியாவின் இரவு பள்ளிகள் Dialogue: 0,0:09:33.00,0:09:36.00,Default,,0000,0000,0000,,75000 குழந்தைகளை படிக்க வைத்திருக்கின்றன. Dialogue: 0,0:09:36.00,0:09:38.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், ஒரு குழந்தைக்கு ஏற்றவாறு பள்ளி அமைய வேண்டும். Dialogue: 0,0:09:38.00,0:09:40.00,Default,,0000,0000,0000,,ஆசிரியருக்கு ஏற்றவாறு அல்ல. Dialogue: 0,0:09:40.00,0:09:42.00,Default,,0000,0000,0000,,இந்த பள்ளிகளில் நாங்கள் என்ன கற்று தருகிறோம்? Dialogue: 0,0:09:42.00,0:09:44.00,Default,,0000,0000,0000,,ஜனநாயகம், குடியுரிமை, Dialogue: 0,0:09:44.00,0:09:47.00,Default,,0000,0000,0000,,உங்களின் நிலத்தை எப்படி அளக்க வேண்டும், Dialogue: 0,0:09:47.00,0:09:49.00,Default,,0000,0000,0000,,நீங்கள் கைது செய்யபட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும், Dialogue: 0,0:09:49.00,0:09:53.00,Default,,0000,0000,0000,,உங்களது கால்நடைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது என்றால் என்ன செய்ய வேண்டும். Dialogue: 0,0:09:53.00,0:09:55.00,Default,,0000,0000,0000,,இதை தான் நாங்கள் கற்று தருகிறோம், இந்த இரவு பள்ளிகளில். Dialogue: 0,0:09:55.00,0:09:58.00,Default,,0000,0000,0000,,சூரிய சக்தி அனைத்து பள்ளிகளுக்கும் வெளிச்சம் தருகின்றன. Dialogue: 0,0:09:58.00,0:10:00.00,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு ஐந்து வருடமும் Dialogue: 0,0:10:00.00,0:10:02.00,Default,,0000,0000,0000,,ஒரு தேர்தல் நடக்கும். Dialogue: 0,0:10:02.00,0:10:06.00,Default,,0000,0000,0000,,6லிருந்து 14 வயது குழந்தைகள் Dialogue: 0,0:10:06.00,0:10:09.00,Default,,0000,0000,0000,,ஜனநாயக முறையில் பங்கேற்று Dialogue: 0,0:10:09.00,0:10:13.00,Default,,0000,0000,0000,,ஒரு பிரதமரை தேர்ந்தெடுப்பர். Dialogue: 0,0:10:13.00,0:10:16.00,Default,,0000,0000,0000,,எங்கள் பிரதமருக்கு 12 வயது. Dialogue: 0,0:10:17.00,0:10:19.00,Default,,0000,0000,0000,,அவள் 20 ஆடுகளை காலையில் மேய்கிறாள், Dialogue: 0,0:10:19.00,0:10:22.00,Default,,0000,0000,0000,,மாலையில் பிரதமர் வேலை செய்கிறாள். Dialogue: 0,0:10:22.00,0:10:24.00,Default,,0000,0000,0000,,அவளிடம் ஒரு அமைச்சரவை உள்ளது. Dialogue: 0,0:10:24.00,0:10:27.00,Default,,0000,0000,0000,,கல்வி அமைச்சர் ஒருவர், மின் வாரியத்துறை அமைச்சர் ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் உள்ளனர். Dialogue: 0,0:10:27.00,0:10:29.00,Default,,0000,0000,0000,,குழந்தைகளை. அவர்கள் தான் கண்காணித்து மேற்பார்வையிட்டு வருகின்றனர், Dialogue: 0,0:10:29.00,0:10:32.00,Default,,0000,0000,0000,,150 பள்ளிகளில் படிக்கும் 7000. Dialogue: 0,0:10:34.00,0:10:36.00,Default,,0000,0000,0000,,அவள் ஐந்து வருடங்களுக்கு முன்பு, உலக குழந்தைகள் விருதை பெற, Dialogue: 0,0:10:36.00,0:10:38.00,Default,,0000,0000,0000,,ஸ்வீடன் சென்றாள். Dialogue: 0,0:10:38.00,0:10:40.00,Default,,0000,0000,0000,,தனது கிராமத்தை விட்டு முதல் முறையாக வெளியே செல்கிறாள். Dialogue: 0,0:10:40.00,0:10:43.00,Default,,0000,0000,0000,,ஸ்வீடனை பார்த்ததும் இல்லை. Dialogue: 0,0:10:43.00,0:10:45.00,Default,,0000,0000,0000,,நிகழ்பவை கண்டு மிரட்சியடையவுமில்லை. Dialogue: 0,0:10:45.00,0:10:47.00,Default,,0000,0000,0000,,ஸ்வீடனின் ராணி, அங்கு இருந்தார். Dialogue: 0,0:10:47.00,0:10:50.00,Default,,0000,0000,0000,,என்னிடம் திரும்பி கேட்டார், "இந்த குழந்தையிடம் கேளுங்கள் அவளுக்கு எங்கே இருந்து இத்தனை தன்னம்பிக்கை வருகிறது என்று? Dialogue: 0,0:10:50.00,0:10:52.00,Default,,0000,0000,0000,,அவளுக்கு 12 வயதே ஆகிறது. Dialogue: 0,0:10:52.00,0:10:55.00,Default,,0000,0000,0000,,அவள் எதை கண்டும் மிரட்சியடையவேயில்லையே." Dialogue: 0,0:10:55.00,0:10:58.00,Default,,0000,0000,0000,,அந்த சிறுமி, ராணியின் இடது புறத்திலிருந்து, Dialogue: 0,0:10:58.00,0:11:01.00,Default,,0000,0000,0000,,திரும்பி, ராணியை நோக்கி சொன்னாள், Dialogue: 0,0:11:01.00,0:11:04.00,Default,,0000,0000,0000,,"அவரிடம் சொல்லுங்கள் நான் தான் பிரதமர் என்று." Dialogue: 0,0:11:04.00,0:11:06.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:11:06.00,0:11:14.00,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:11:14.00,0:11:18.00,Default,,0000,0000,0000,,கல்லாமை எங்கு அதிகம் உள்ளதோ, Dialogue: 0,0:11:18.00,0:11:21.00,Default,,0000,0000,0000,,அங்கு நாங்கள் பொம்மலாட்டம் பயன்படுத்துவோம். Dialogue: 0,0:11:21.00,0:11:24.00,Default,,0000,0000,0000,,பொம்மலாட்டம் வாயிலாக நாங்கள் அவர்களிடம் பேசுவோம். Dialogue: 0,0:11:30.00,0:11:33.00,Default,,0000,0000,0000,,ஜோக்ஹீம் மாமா உள்ளார். Dialogue: 0,0:11:33.00,0:11:37.00,Default,,0000,0000,0000,,அவருக்கு வயது 300. Dialogue: 0,0:11:37.00,0:11:40.00,Default,,0000,0000,0000,,அவர் தான் என்னுடைய மனோதத்துவ நிபுணர் . அவர் தான் என்னுடைய குரு. Dialogue: 0,0:11:40.00,0:11:42.00,Default,,0000,0000,0000,,அவர் தான் என்னுடைய மருத்துவர். அவர் தான் என்னுடைய வழக்கறிஞர். Dialogue: 0,0:11:42.00,0:11:44.00,Default,,0000,0000,0000,,அவர் தான் என்னுடைய கொடையாளி. Dialogue: 0,0:11:44.00,0:11:46.00,Default,,0000,0000,0000,,அவர் தான் நிதி திரட்டுகிறார், Dialogue: 0,0:11:46.00,0:11:49.00,Default,,0000,0000,0000,,அவர் தான் சண்டைகளை தீர்த்துவைக்கிறார். Dialogue: 0,0:11:49.00,0:11:52.00,Default,,0000,0000,0000,,அவர் தான் கிராமத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார். Dialogue: 0,0:11:52.00,0:11:54.00,Default,,0000,0000,0000,,கிராமத்தில் ஏதேனும் பதற்றம் இருந்தாலோ, Dialogue: 0,0:11:54.00,0:11:56.00,Default,,0000,0000,0000,,பள்ளிகளில் வருகை குறைந்தாலோ, Dialogue: 0,0:11:56.00,0:11:58.00,Default,,0000,0000,0000,,ஆசிரியர் பெற்றோர் நடுவில் உராய்வு ஏற்பட்டாலோ, Dialogue: 0,0:11:58.00,0:12:01.00,Default,,0000,0000,0000,,கூத்தாட்டுப் பொம்மை ஆசிரியரையும் பெற்றோரையும் கிராமத்திற்கு முன்னால் அழைத்து Dialogue: 0,0:12:01.00,0:12:03.00,Default,,0000,0000,0000,,"கை குலுக்குங்கள். Dialogue: 0,0:12:03.00,0:12:05.00,Default,,0000,0000,0000,,வருகை குறைய கூடாது." என்று சொல்லும். Dialogue: 0,0:12:07.00,0:12:09.00,Default,,0000,0000,0000,,இந்த கூத்தாட்டுப் பொம்மைகள் Dialogue: 0,0:12:09.00,0:12:11.00,Default,,0000,0000,0000,,உலக வங்கியின் மீள்சுழற்சி செய்யப்பட்ட அறிக்கைகளினால் ஆனவை. Dialogue: 0,0:12:11.00,0:12:13.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:12:13.00,0:12:20.00,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:12:20.00,0:12:24.00,Default,,0000,0000,0000,,இந்த பகிர்தளும், எளிதான முறையை, Dialogue: 0,0:12:24.00,0:12:26.00,Default,,0000,0000,0000,,சூரிய ஒளினால் கிராமங்களுக்கு சக்தி தரும் முறையை, Dialogue: 0,0:12:26.00,0:12:28.00,Default,,0000,0000,0000,,நாங்கள் இந்தியா முழுவதுக்கும் கொண்டு சென்றிருக்கிறோம், Dialogue: 0,0:12:28.00,0:12:31.00,Default,,0000,0000,0000,,லதாக் முதல் பூட்டான் வர -- Dialogue: 0,0:12:33.00,0:12:35.00,Default,,0000,0000,0000,,சூரிய ஒளியினால் கிராமங்களுக்கு சக்தி தரும் முறையை Dialogue: 0,0:12:35.00,0:12:38.00,Default,,0000,0000,0000,,மக்களுக்கு கற்று தந்திருக்கிறோம். Dialogue: 0,0:12:39.00,0:12:41.00,Default,,0000,0000,0000,,நாங்கள் லடாக் சென்றோம், Dialogue: 0,0:12:41.00,0:12:43.00,Default,,0000,0000,0000,,அங்கு உள்ள ஒரு பெண்மணியை கேட்டோம் -- Dialogue: 0,0:12:43.00,0:12:46.00,Default,,0000,0000,0000,,அப்போது, மைனஸ் 40 , நீங்கள் மாடியை விட்டு வெளியே வந்தாக வேண்டும், Dialogue: 0,0:12:46.00,0:12:49.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், எல்லா இடத்திலேயும் பனி விழுந்திருந்தது. Dialogue: 0,0:12:49.00,0:12:51.00,Default,,0000,0000,0000,,நாங்கள் அந்த பெண்மணியிடம், Dialogue: 0,0:12:51.00,0:12:53.00,Default,,0000,0000,0000,,"உங்களுக்கு சூரிய மின் சக்தியினால் Dialogue: 0,0:12:53.00,0:12:55.00,Default,,0000,0000,0000,,என்னை லாபம்?" என்று கேட்டோம். Dialogue: 0,0:12:55.00,0:12:57.00,Default,,0000,0000,0000,,அவள் ஒரு நிமிடம் யோசித்து கூறினாள், Dialogue: 0,0:12:57.00,0:13:01.00,Default,,0000,0000,0000,,"நான் என்னுடைய புருஷனின் முகத்தை பார்க்க முடிந்தது, முதன் முறையாக, பனி காலத்தில்." Dialogue: 0,0:13:01.00,0:13:04.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:13:04.00,0:13:06.00,Default,,0000,0000,0000,,நாங்கள் ஆப்கானிஸ்தான் சென்றோம். Dialogue: 0,0:13:06.00,0:13:11.00,Default,,0000,0000,0000,,இந்தியாவில் நாங்கள் கற்ற ஒரு பாடம், Dialogue: 0,0:13:11.00,0:13:15.00,Default,,0000,0000,0000,,ஆண்களை பயிற்றுவிக்க முடியாது. Dialogue: 0,0:13:15.00,0:13:19.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:13:19.00,0:13:21.00,Default,,0000,0000,0000,,ஆண்கள் துருதுரு என்றுள்ளவர்கள். Dialogue: 0,0:13:21.00,0:13:23.00,Default,,0000,0000,0000,,ஆண்கள் பேராவலுடையவர்கள், Dialogue: 0,0:13:23.00,0:13:26.00,Default,,0000,0000,0000,,ஆண்கள் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள், Dialogue: 0,0:13:26.00,0:13:28.00,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரு சான்றிதழ். Dialogue: 0,0:13:28.00,0:13:30.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:13:30.00,0:13:33.00,Default,,0000,0000,0000,,உலகத்தில் எங்கு சென்றாலும், இந்த சுபாவம் பார்க்கலாம் -- Dialogue: 0,0:13:33.00,0:13:35.00,Default,,0000,0000,0000,,ஆண்கள் சான்றிதழ் விரும்புவது. Dialogue: 0,0:13:35.00,0:13:38.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், அவர்கள் நகரத்துக்கு சென்று வேலை தேட Dialogue: 0,0:13:38.00,0:13:41.00,Default,,0000,0000,0000,,கிராமத்தை விட்டு செல்ல விரும்புகிறார்கள். Dialogue: 0,0:13:41.00,0:13:44.00,Default,,0000,0000,0000,,இதனால், நாங்கள் ஒரு சீரிய தீர்வு கண்டோம். Dialogue: 0,0:13:44.00,0:13:46.00,Default,,0000,0000,0000,,மூதாட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது என்பது. Dialogue: 0,0:13:48.00,0:13:50.00,Default,,0000,0000,0000,,இன்றைய உலகில் Dialogue: 0,0:13:50.00,0:13:52.00,Default,,0000,0000,0000,,அறிவிப்பதற்கு எது சிறந்த வழி? Dialogue: 0,0:13:52.00,0:13:54.00,Default,,0000,0000,0000,,தொலைக்காட்சி? இல்லை. Dialogue: 0,0:13:54.00,0:13:56.00,Default,,0000,0000,0000,,தந்தி அனுப்புவது? இல்லை. Dialogue: 0,0:13:56.00,0:13:58.00,Default,,0000,0000,0000,,தொலைபேசி? இல்லை. Dialogue: 0,0:13:58.00,0:14:00.00,Default,,0000,0000,0000,,ஒரு பெண்மணியிடம் சொல்வது. Dialogue: 0,0:14:00.00,0:14:03.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:14:03.00,0:14:07.00,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:14:07.00,0:14:09.00,Default,,0000,0000,0000,,நாங்கள் ஆப்கானிஸ்தான் சென்றோம், முதல் முறையாக, Dialogue: 0,0:14:09.00,0:14:11.00,Default,,0000,0000,0000,,அங்கு முன்று பெண்களை தேர்ந்தெடுத்தோம். Dialogue: 0,0:14:11.00,0:14:13.00,Default,,0000,0000,0000,,"நாங்கள் இவர்களை இந்தியா அழைத்து செல்கிறோம்" , என்றோம். Dialogue: 0,0:14:13.00,0:14:15.00,Default,,0000,0000,0000,,அவர்கள், "முடியவே முடியாது. இவர்கள் தங்களின் அறையை விட்டு கூட செல்வது இல்லை. Dialogue: 0,0:14:15.00,0:14:17.00,Default,,0000,0000,0000,,அவர்களை நீங்கள் இந்தியா அழைத்து செல்ல போகிறீர்களா.", என்றனர். Dialogue: 0,0:14:17.00,0:14:19.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "சரி, நான் ஒரு தள்ளுபடி தருகிறேன். இவர்களின் கணவர்களையும் அழைத்துச் செல்கிறேன்." Dialogue: 0,0:14:19.00,0:14:21.00,Default,,0000,0000,0000,,அவர்களின் கணவர்களையும் கூட்டிக்கொண்டு சென்றேன். Dialogue: 0,0:14:21.00,0:14:24.00,Default,,0000,0000,0000,,ஐயத்திற்கிடமின்றி, பெண்கள் தான் ஆண்களை விட புத்திசாலியாக இருந்தார்கள். Dialogue: 0,0:14:24.00,0:14:26.00,Default,,0000,0000,0000,,ஆறு மாதத்தில், Dialogue: 0,0:14:26.00,0:14:29.00,Default,,0000,0000,0000,,இந்த பெண்களுக்கு எப்படி பயிற்சியளிப்பது? Dialogue: 0,0:14:29.00,0:14:31.00,Default,,0000,0000,0000,,சைகை மொழி. Dialogue: 0,0:14:31.00,0:14:34.00,Default,,0000,0000,0000,,நீங்கள் எழுத்து வடிவத்தை தேர்ந்தெடுக்க முடியாது. Dialogue: 0,0:14:34.00,0:14:36.00,Default,,0000,0000,0000,,நீங்கள் பேச்சை தேர்ந்தெடுக்க முடியாது. Dialogue: 0,0:14:36.00,0:14:39.00,Default,,0000,0000,0000,,நீங்கள் சைகை மொழியை பயன்படுத்த தொடங்குவீர்கள். Dialogue: 0,0:14:39.00,0:14:41.00,Default,,0000,0000,0000,,ஆறு மாதத்தில் Dialogue: 0,0:14:41.00,0:14:45.00,Default,,0000,0000,0000,,அவர்கள் சூரிய சக்தி பொறியாளர்கள் ஆகிவிட்டனர். Dialogue: 0,0:14:45.00,0:14:48.00,Default,,0000,0000,0000,,அவர்கள் திரும்பி சென்று, அவர்களது கிராமத்தில் சூரிய சக்தி உற்பத்தி செய்வார்கள். Dialogue: 0,0:14:48.00,0:14:50.00,Default,,0000,0000,0000,,அப்பெண்கள் திரும்பி சென்று, Dialogue: 0,0:14:50.00,0:14:53.00,Default,,0000,0000,0000,,ஒரு கிராமத்தில் சூரிய சக்தி உற்பத்தி செய்ய தொடங்கினார்கள், Dialogue: 0,0:14:53.00,0:14:55.00,Default,,0000,0000,0000,,ஒரு பட்டறையை அமைத்தார்கள் -- Dialogue: 0,0:14:55.00,0:14:58.00,Default,,0000,0000,0000,,ஆப்கானிஸ்தானில், சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்ட முதல் கிராமம், Dialogue: 0,0:14:58.00,0:15:01.00,Default,,0000,0000,0000,,மூன்று பெண்களால் சாத்தியம் ஆனது. Dialogue: 0,0:15:01.00,0:15:03.00,Default,,0000,0000,0000,,இந்த பெண்மணி Dialogue: 0,0:15:03.00,0:15:05.00,Default,,0000,0000,0000,,ஒரு அசாதாரமான ஒரு பாட்டி. Dialogue: 0,0:15:05.00,0:15:10.00,Default,,0000,0000,0000,,55 வயதான இவள், எனக்காக ஆப்கானிஸ்தானில் 200 வீடுகளில் சூரிய சக்தி உற்பத்தி செய்துருக்கிறாள். Dialogue: 0,0:15:10.00,0:15:13.00,Default,,0000,0000,0000,,அவை நிலைகுலையவில்லை. Dialogue: 0,0:15:13.00,0:15:16.00,Default,,0000,0000,0000,,அவள் ஆப்கானிஸ்தானில் ஒரு பொறியியல் துறையில் அங்கே உள்ள Dialogue: 0,0:15:16.00,0:15:18.00,Default,,0000,0000,0000,,துறை தலைவரிடம் சென்று ஏ.சி மற்றும் டி.சி Dialogue: 0,0:15:18.00,0:15:20.00,Default,,0000,0000,0000,,மின்சாரத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கினாள். Dialogue: 0,0:15:20.00,0:15:22.00,Default,,0000,0000,0000,,அவருக்கு தெரியவில்லை. Dialogue: 0,0:15:22.00,0:15:25.00,Default,,0000,0000,0000,,அந்த மூன்று பெண்மணிகள் 27 பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளித்து, Dialogue: 0,0:15:25.00,0:15:28.00,Default,,0000,0000,0000,,100 கிராமங்களில் சூரிய சக்தி உற்பத்தி செய்துள்ளார்கள். Dialogue: 0,0:15:28.00,0:15:31.00,Default,,0000,0000,0000,,நாங்கள் ஆப்ரிக்கா சென்றோம், Dialogue: 0,0:15:31.00,0:15:33.00,Default,,0000,0000,0000,,அங்கேயும் அதையே செய்தோம். Dialogue: 0,0:15:33.00,0:15:36.00,Default,,0000,0000,0000,,எட்டு ஒன்பது நாடுகளிலிருந்து வந்த பெண்கள் அனைவரும் ஒரே மேசையில்அமர்ந்து, Dialogue: 0,0:15:36.00,0:15:39.00,Default,,0000,0000,0000,,பேசிக்கொண்டு இருந்தார்கள், ஒரு வார்த்தைக் கூட புரியாமல், Dialogue: 0,0:15:39.00,0:15:41.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால், அவர்கள் அனைவரும் பேசுவது ஒரு மாறுப்பட்ட மொழி. Dialogue: 0,0:15:41.00,0:15:43.00,Default,,0000,0000,0000,,ஆனால் அவர்களின் உடல் மொழி, பிரமாதமாக இருந்தது. Dialogue: 0,0:15:43.00,0:15:45.00,Default,,0000,0000,0000,,ஒருவருக்கொருவரிடம் பேசிக்கொண்டே Dialogue: 0,0:15:45.00,0:15:47.00,Default,,0000,0000,0000,,அவர்கள் சூரிய சக்தி பொறியாளர்கள் ஆகிக்கொண்டிருந்தார்கள். Dialogue: 0,0:15:47.00,0:15:50.00,Default,,0000,0000,0000,,நான் சியாரா லீஒன் சென்றேன். Dialogue: 0,0:15:50.00,0:15:53.00,Default,,0000,0000,0000,,நடு இரவில், ஒரு மந்திரி காரை ஓட்டிக்கொண்டு சென்ற போது, Dialogue: 0,0:15:53.00,0:15:55.00,Default,,0000,0000,0000,,ஒரு கிராமத்தை கடந்து சென்றார். Dialogue: 0,0:15:55.00,0:15:58.00,Default,,0000,0000,0000,,திரும்பி வந்து, அந்த கிராமத்துக்கு சென்று கேட்டார், "சரி, இங்கே என்ன நடக்கிறது?" Dialogue: 0,0:15:58.00,0:16:00.00,Default,,0000,0000,0000,,அவர்கள் கூறினர், "இந்த இரண்டு மூதாட்டிகள்..." Dialogue: 0,0:16:00.00,0:16:03.00,Default,,0000,0000,0000,,"மூதாட்டிகளா?" அவரால், நடந்திருப்பதை கண்டு நம்ப முடியவில்லை. Dialogue: 0,0:16:03.00,0:16:06.00,Default,,0000,0000,0000,,"அவர்கள் எங்கே சென்றார்கள்?" என்று கேட்டார். "இந்தியா சென்று திரும்பி வந்தனர்." Dialogue: 0,0:16:06.00,0:16:08.00,Default,,0000,0000,0000,,அவர் உடனே, ஜனாதிபதியை பார்க்க சென்றார். Dialogue: 0,0:16:08.00,0:16:10.00,Default,,0000,0000,0000,,அவர் சொன்னார், " உங்களுக்கு தெரியுமா, சூரிய சக்தி உற்பத்தி செய்யும் ஒரு கிராமம், சியாரா லீஒனில் உள்ளதென்று?" Dialogue: 0,0:16:10.00,0:16:13.00,Default,,0000,0000,0000,,அவர் "இல்லை" என்றார். பாதி அமைச்சரவை அந்த பாட்டிகளை, சந்திக்க சென்றது அடுத்த நாள். Dialogue: 0,0:16:13.00,0:16:15.00,Default,,0000,0000,0000,,"சரி, கதை தான் என்ன?" Dialogue: 0,0:16:15.00,0:16:19.00,Default,,0000,0000,0000,,அவர் என்னை அழைத்து கேட்டார், "உங்களால் 150 மூதாட்டிகளை பயிற்சியளிக்க முடியுமா?" Dialogue: 0,0:16:19.00,0:16:21.00,Default,,0000,0000,0000,,"இல்லை, என்னால் முடியாது, ஜனாதிபதி அவர்களே. Dialogue: 0,0:16:21.00,0:16:23.00,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த மூதாட்டிகளால் முடியும்", என்றேன். Dialogue: 0,0:16:23.00,0:16:26.00,Default,,0000,0000,0000,,அதனால், அவர் எனக்கு சியாரா லீஒனின் முதல் வெறுங்கால் பயிற்சி மையத்தை உருவாக்கிக் கொடுத்தார். Dialogue: 0,0:16:26.00,0:16:30.00,Default,,0000,0000,0000,,150 மூதாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, சியாரா லீஒனில். Dialogue: 0,0:16:30.00,0:16:32.00,Default,,0000,0000,0000,,காம்பியா: Dialogue: 0,0:16:32.00,0:16:35.00,Default,,0000,0000,0000,,நாங்கள் ஒரு மூதாட்டியை தேர்வு செய்ய சென்றோம் காம்பியாவிற்கு. Dialogue: 0,0:16:35.00,0:16:37.00,Default,,0000,0000,0000,,இந்த கிராமத்திற்கு சென்றோம். Dialogue: 0,0:16:37.00,0:16:39.00,Default,,0000,0000,0000,,அங்கே எந்த பெண்மணியை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். Dialogue: 0,0:16:39.00,0:16:42.00,Default,,0000,0000,0000,,ஆனால், அவர்களின் சமூகம் ஒன்று சேர்ந்து, "இந்த இரண்டு பெண்மணிகளை கூடிக்கொண்டு செல்லுங்கள்", என்றனர். Dialogue: 0,0:16:42.00,0:16:44.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "இல்லை, நான் இந்த பெண்மணியைத் தான் அழைத்து செல்வேன்" Dialogue: 0,0:16:44.00,0:16:46.00,Default,,0000,0000,0000,,அவர்கள், " ஏன்? அவர்களுக்கு மொழி தெரியாது. உனக்கு அவள் பரிச்சியமில்லை." என்று கூறினர். Dialogue: 0,0:16:46.00,0:16:49.00,Default,,0000,0000,0000,,"அவரின் உடல் மொழி நன்றாக உள்ளது. அவர் பேசும் விதம் எங்களுக்கு பிடித்து இருக்கிறது." என்றேன். Dialogue: 0,0:16:49.00,0:16:51.00,Default,,0000,0000,0000,,"சாத்தியம் இல்லை. கணவன் ஒப்புக்கொள்ள மாட்டான்." Dialogue: 0,0:16:51.00,0:16:53.00,Default,,0000,0000,0000,,கணவனை அழைத்தேன். அவர் வந்தார். Dialogue: 0,0:16:53.00,0:16:56.00,Default,,0000,0000,0000,,அவர் ஒரு அரசியல்வாதி, கையில் அலைபேசி கொண்டு வந்தார். "முடியாது" என்றார். Dialogue: 0,0:16:56.00,0:16:59.00,Default,,0000,0000,0000,,"ஏன்", என்றேன். "பாருங்கள், அவள் எவ்வளவு அழகாக உள்ளாள்." Dialogue: 0,0:16:59.00,0:17:01.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், " ஆமாம், அழகாகவே உள்ளாள்." Dialogue: 0,0:17:01.00,0:17:03.00,Default,,0000,0000,0000,,"அவள் ஒரு இந்தியனோடு ஓடிப்போய்விட்டாள் என்றால் என்னாவது?" Dialogue: 0,0:17:03.00,0:17:05.00,Default,,0000,0000,0000,,அது தான் அவரின் பெரிய பயமாக இருந்தது. Dialogue: 0,0:17:05.00,0:17:08.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னேன், "அவள் சந்தோஷமாக இருப்பாள். அவள் உன்னிடம் அலைபேசியில் பேசுவாள்." Dialogue: 0,0:17:08.00,0:17:11.00,Default,,0000,0000,0000,,அவள் ஒரு மூதாட்டி போல் சென்று, Dialogue: 0,0:17:11.00,0:17:13.00,Default,,0000,0000,0000,,ஒரு புலியைப் போல் திரும்பி வந்தாள். Dialogue: 0,0:17:13.00,0:17:15.00,Default,,0000,0000,0000,,அவள் விமானத்திலிருந்து இறங்கி நடந்தாள். Dialogue: 0,0:17:15.00,0:17:18.00,Default,,0000,0000,0000,,மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போல், பத்தரிக்கைகாரர்களிடம் பேசினாள். Dialogue: 0,0:17:18.00,0:17:21.00,Default,,0000,0000,0000,,அவள் தேசிய பத்தரிக்கைகாரர்களுக்கு அபாரமாக பேட்டி அளித்து, Dialogue: 0,0:17:21.00,0:17:23.00,Default,,0000,0000,0000,,ஒரு மாபெரும் நட்சத்திரமாகிவிட்டாள். Dialogue: 0,0:17:23.00,0:17:26.00,Default,,0000,0000,0000,,நான் ஆறு மாதங்களுக்கு பிறகு, திரும்பி அங்கு சென்றேன். அவளிடம் கேட்டேன், "எங்கே உங்களுடைய கணவர்?" Dialogue: 0,0:17:26.00,0:17:28.00,Default,,0000,0000,0000,,"அவரா, இங்கே எங்கயோ இருந்தார். அது முக்கியமில்லை." Dialogue: 0,0:17:28.00,0:17:30.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:17:30.00,0:17:32.00,Default,,0000,0000,0000,,இது ஒரு வெற்றிக் கதை. Dialogue: 0,0:17:32.00,0:17:34.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:17:34.00,0:17:37.00,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:17:37.00,0:17:43.00,Default,,0000,0000,0000,,நான் என் உரையை முடித்துக்கொள்ளும் முன்பு, சொல்ல விரும்புவது என்னவென்றால் Dialogue: 0,0:17:43.00,0:17:47.00,Default,,0000,0000,0000,,நாம் வெளியே சென்று தீர்வுகள் கண்டுபிடிக்க தேவையில்லை. Dialogue: 0,0:17:47.00,0:17:49.00,Default,,0000,0000,0000,,தீர்வுகள் நமக்கு அருகேயே தேடலாம். Dialogue: 0,0:17:49.00,0:17:52.00,Default,,0000,0000,0000,,மக்கள் சொல்வதை கேட்கலாம். அவர்கள் தீர்வுகளை நம்முன் வைத்துள்ளார்கள். Dialogue: 0,0:17:52.00,0:17:54.00,Default,,0000,0000,0000,,அவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். Dialogue: 0,0:17:54.00,0:17:56.00,Default,,0000,0000,0000,,நாம் கவலைப்பட அவசியமே இல்லை. Dialogue: 0,0:17:56.00,0:17:59.00,Default,,0000,0000,0000,,உலக வங்கி சொல்வதை நாம் கேட்க தேவையில்லை. நம்முடன் இருக்கும் மக்கள் சொல்வதை கேட்டால் போதும். Dialogue: 0,0:17:59.00,0:18:02.00,Default,,0000,0000,0000,,அவர்கள் இந்த உலகத்திலுள்ள அனைத்து தீர்வுகளையும் அறிவர். Dialogue: 0,0:18:02.00,0:18:05.00,Default,,0000,0000,0000,,நான் மகாத்மா காந்தியின் வார்த்தைகளைக்கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன். Dialogue: 0,0:18:05.00,0:18:07.00,Default,,0000,0000,0000,,"முதலில் அவர்கள் உங்களை பொருட்படுத்தமாட்டார்கள், Dialogue: 0,0:18:07.00,0:18:09.00,Default,,0000,0000,0000,,பிறகு உங்களை கேலி செய்வார்கள், Dialogue: 0,0:18:09.00,0:18:11.00,Default,,0000,0000,0000,,பிறகு உங்களிடம் சண்டையிடுவார்கள், Dialogue: 0,0:18:11.00,0:18:13.00,Default,,0000,0000,0000,,அதன், பிறகு நீங்கள் வெல்வீர்கள்." Dialogue: 0,0:18:13.00,0:18:15.00,Default,,0000,0000,0000,,நன்றி. Dialogue: 0,0:18:15.00,0:18:46.00,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்)