பின்னங்களின் வகுத்தல் பற்றி காண்போம்
இப்பொழுது தொடங்கலாம்
பின்னங்களை எப்படி வகுப்பது
என்பதை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
இது பின்னப் பெருக்கலை விட
கடினமானது அல்ல..
1/2 ÷ 1/2 = ?
பின்ன வகுத்தலில் எந்த எண்ணால் வகுக்கிறோமோ
அந்த எண்ணின் பெருக்கல் தலைகீழியால் பெருக்கலாம்...
1/2 ÷ 1/2 = 1/2 * 2/1
இரண்டாவது எண்ணை தலைகீழாக எழுதி உள்ளோம்
1/2 * 2/1 = 2/2
2/2 = 1
ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால்
விடை 1 வரும்..
5/5 = 1
100/100 = 1
இது மாறாது
இதை எப்பொழும் செய்யலாம்
2 * 1/2 = 1 ?
இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன்
12 ÷ 4 = ?
12 * 1/4 = ?
12/1 * 1/4 = 12/4 = 3
இது புதிய முறை அல்ல
ஏற்கனவே நாம் பார்த்த பின்ன வகுத்தல் முறை தான் ..
நாம் ஒரு எண்ணை எந்த எண்ணால் வகுக்கிறோமோ
அந்த எண்ணை தலைகீழாக போட்டு பெருக்க வேண்டும்..
A இன் பெருக்கல் தலைகீழி 1/A ஆகும்..
2/3 இன் பெருக்கல் தலைகீழி 3/2
5 இன் பெருக்கல் தலைகீழி 1/5
இப்பொழுது சில கணக்குகளை போடலாம்
2/3 ÷ 5/6 = ?
2/3 * 6/5 = ?
2/3 * 6/5 = 12/15
பகுதி மற்றும் தொகுதி எண்களை 3-ஆல் வகுத்தால் 4/5 கிடைக்கும்..
7/8 ÷ 1/4 = ?
7/8 * 4/1 = ?
1/4 ஆல் வகுப்பது என்பது 4/1 ஆல் பெருக்குவது ஆகும்..
8 / 4 = 2
4 / 4 = 1
7/8 * 4/1 = 7/2
இதை கலப்பு எண்ணாக கூட எழுதலாம்
இது ஒரு தகாபின்னம் ஆகும்..
தகாபின்னத்தில் பகுதி எண் சிறியதாக இருக்கும்
தொகுதி எண் பெரியதாக இருக்கும்..
7-ஐ 2-ஆல் வகுத்தால்
ஈவு 3 மற்றும் மீதி 1 வரும்..3 1/2
மேலும் சில கணக்குகளை போடலாம்
-2/3 ÷ 5/2 = ?
-2/3 * 2/5 = ?
-2/3 * 2/5 = -4/15
3/2 ÷ 1/6 = ?
3/2 * 6/1 = ?
18 / 2 = 9
மேலும் சில கணக்குகளை போடலாம்
புரியவில்லை எனில் மேலே போட்டுள்ள
அனைத்து கணக்குகளையும் ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள்
-5/7 ÷ 10/3 = ?
-5/7 * 3/10
-5 * 3 = ?
-5 * 3= -15
7 * 10 = 70
-15/70. தொகுதி மற்றும் பகுதி எண்களை 5-ஆல் வகுக்க வேண்டும்.
-3 /14
மேலும் சில கணக்குகளை பார்க்கலாம்
1/2 ÷ -3 = ?
பின்னத்தை முழு எண்ணால் பெருக்கினால் என்ன வரும்?
முழு எண்ணை பின்னமாக எழுதலாம்
1/2 ÷ -3/1
-3/1 இன் பெருக்கல் தலைகீழி -1/3
1/2 * -1/3 = -1/6
மேலும் சில கணக்குகளை பார்க்கலாம்
-3 ÷ 1/2 = ?
-3/1 ÷ 1/2 = ?
3/1 * 2/1 = ?
3/1 * 2/1 = 6/1 = 6
இது எப்படி வருகிறது என்பதை காணலாம்
2 ÷ 1/3
2/1 * 3/1
2/1 * 3/1 = 6
2 மற்றும் 1/3-ஐ எப்படி தொடர்புப்படுத்துவது?
என்னிடம் இரண்டு பிட்சா உள்ளது
இரண்டு பிட்சாவையும்
3 பிரிவுகளாக பிரிக்க போகிறேன்..
நான் இதை பிரித்து விட்டேன்
இரண்டிலும் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது?
1, 2, 3, 4, 5, 6.
மொத்தம் பிரிவுகள் உள்ளது
மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம்
-7/2 ÷ -4/9
-7/2 * -9/4 = ?
-4/9 இன் தலைகீழியால் பெருக்கி இருக்கிறேன்..
-7 * -9 = 63 ; 2 * 4 = 8
-7/2 * -9/4 = 63 / 8
இதை போல சில கணக்குகளை செய்து பாருங்கள்