1 00:00:00,000 --> 00:00:02,000 என் உரையை, ஒரு சம்பவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்: 2 00:00:02,000 --> 00:00:04,000 இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சி திட்டமிடுநர், என்னை தொலைபேசியில் அழைத்தார். 3 00:00:04,000 --> 00:00:06,000 ஏனென்றால், நான் ஒரு பொதுக் கூட்டத்தில், பேசவிருந்தேன். 4 00:00:06,000 --> 00:00:08,000 அவர் என்னை அழைத்து சொன்னார் 5 00:00:08,000 --> 00:00:10,000 "எனக்கு ஒரு சிக்கல் உள்ளது, எப்படி 6 00:00:10,000 --> 00:00:12,000 உங்களை பற்றிப் இந்த சிறிய அழைப்பிதழில், எழுத வேண்டுமென்று" 7 00:00:12,000 --> 00:00:14,000 நான் நினைத்தேன், "சரி, என்ன சிக்கல்?" 8 00:00:14,000 --> 00:00:16,000 அவர் சொன்னார், "நீங்கள் பேசி நான் பார்த்துள்ளேன். 9 00:00:16,000 --> 00:00:19,000 நான் உங்களை ஒரு ஆராய்ச்சியாளர் , என்று அழைத்தால், 10 00:00:19,000 --> 00:00:21,000 நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்று பயப்படுகிறேன். 11 00:00:21,000 --> 00:00:23,000 ஏனென்றால், சுவாரசியம் இல்லாமலும், தங்களுக்கு சம்பந்தம் இல்லாததுமாக, மக்கள் கருதுவார்கள். 12 00:00:23,000 --> 00:00:25,000 (சிரிப்பு) 13 00:00:25,000 --> 00:00:27,000 சரி. 14 00:00:27,000 --> 00:00:29,000 பிறகு அவர் கூறினார், "ஆனால், உங்களது பேச்சில், எனக்கு பிடித்தது என்னவென்றால் 15 00:00:29,000 --> 00:00:31,000 நீங்கள் ஒரு கதை சொல்லுபவர்." 16 00:00:31,000 --> 00:00:34,000 அதனால், நான் உங்களை ஒரு கதை சொல்பவர் என்றே அழைக்கப் போகிறேன்." 17 00:00:34,000 --> 00:00:37,000 கல்வியாளராக இருக்கும் நானோ, சற்றுத் தடுமாறி, 18 00:00:37,000 --> 00:00:39,000 "என்ன!!? என்னை என்னவென்று அழைக்க போகிறீர்கள்?", என்று கேட்டேன் 19 00:00:39,000 --> 00:00:42,000 அவர் சொன்னார், "நான் உங்களை ஒரு கதை சொல்லுபவர் என்று அழைக்கப் போகிறேன்." 20 00:00:42,000 --> 00:00:45,000 அதற்கு நான், "ஏன் என்னை ஒரு மாயாஜால மந்திரவாதி, என்று அழைக்கலாமே?" என்றேன். 21 00:00:45,000 --> 00:00:48,000 (சிரிப்பு) 22 00:00:48,000 --> 00:00:51,000 "சரி, இதைப் பற்றி, ஒரு கணம் யோசிக்கிறேன்", என்றேன் 23 00:00:51,000 --> 00:00:54,000 மனதில் தைரியத்தை வரவழைத்து, 24 00:00:54,000 --> 00:00:57,000 நான் சிந்தித்தேன். ஆம், நான் ஒரு கதைசொல்பவள் தான். 25 00:00:57,000 --> 00:00:59,000 பண்புகளைச் சார்ந்த ஆராய்ச்சி செய்பவள் நான். 26 00:00:59,000 --> 00:01:01,000 கதைகளை சேகரிபவள் நான்; அதை தான் நான் செய்கிறேன். 27 00:01:01,000 --> 00:01:04,000 கதைகள் எல்லாம், உயிருள்ள தகவல்கள் தானே. 28 00:01:04,000 --> 00:01:06,000 அப்படி என்றால், நான் ஒரு கதை சொல்லுபவள் தானே. 29 00:01:06,000 --> 00:01:08,000 நான் அவரிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் இப்படி செய்யக் கூடாது? 30 00:01:08,000 --> 00:01:11,000 "நீங்கள் என்னை, ஆராய்ச்சியாளர் - கதைசொல்லுபவர், என்று அழைக்கலாமே?" 31 00:01:11,000 --> 00:01:14,000 அவர் சிரித்துவிட்டு "அப்படி ஒன்று உள்ளதா!?" என்று கூறினார். 32 00:01:14,000 --> 00:01:16,000 (சிரிப்பு) 33 00:01:16,000 --> 00:01:18,000 அவ்வகையில், நான் ஒரு கதை சொல்லும் ஆராய்ச்சியாளராக 34 00:01:18,000 --> 00:01:20,000 உங்களிடம் பேச வந்துள்ளேன், இன்று -- 35 00:01:20,000 --> 00:01:22,000 விரிகின்ற கண்ணோட்டங்களைப் பற்றி நாம் பேச போகிறோம் -- 36 00:01:22,000 --> 00:01:24,000 மற்றும் நான் உங்களுக்கு சில கதைகளை சொல்லப் போகிறேன். 37 00:01:24,000 --> 00:01:27,000 என் ஆராய்ச்சியைச் சார்ந்த கதைகள் அவை. 38 00:01:27,000 --> 00:01:30,000 என் கண்ணோட்டத்தை விரிவுப்படுத்திய கதைகள். 39 00:01:30,000 --> 00:01:33,000 நான் வாழும் முறையை, நான் அன்பு கொள்ளும் முறையை, 40 00:01:33,000 --> 00:01:35,000 வேலை செய்யும் முறையை, வளர்ப்பு முறையை மாற்றிய கதைகள். 41 00:01:35,000 --> 00:01:37,000 என் கதை இங்கு ஆரம்பிக்கிறது. 42 00:01:37,000 --> 00:01:40,000 என் இளமையில், ஒரு ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது 43 00:01:40,000 --> 00:01:42,000 முதல் ஆண்டில், என் பேராசிரியர் 44 00:01:42,000 --> 00:01:44,000 எங்களிடம் சொன்னார், 45 00:01:44,000 --> 00:01:46,000 "இதை புரிந்துக் கொள்ளுங்கள், 46 00:01:46,000 --> 00:01:49,000 ஒரு பொருளை அளவிட முடியாது என்றால், அந்த பொருள் இல்லை என்று அர்த்தம்" 47 00:01:49,000 --> 00:01:52,000 அது அவர் விளையாட்டுத்தனமாக சொன்னார் என்று எண்ணினேன். 48 00:01:52,000 --> 00:01:55,000 "ஒ! அப்படியா?" என்றேன். "ஆம், நிச்சயமாக!", என்றார். 49 00:01:55,000 --> 00:01:57,000 நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் 50 00:01:57,000 --> 00:01:59,000 நான், சமூக சேவையில், முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன். 51 00:01:59,000 --> 00:02:01,000 முனைவர் பட்டமும், பெறவிருந்தேன். 52 00:02:01,000 --> 00:02:03,000 என் முழு கல்விப் பணியில், 53 00:02:03,000 --> 00:02:05,000 என்னை சுற்றி இருந்த மக்கள், 54 00:02:05,000 --> 00:02:07,000 நம்பியது என்னவென்றால், 55 00:02:07,000 --> 00:02:10,000 குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். 56 00:02:10,000 --> 00:02:12,000 நான் நம்பியதோ, வாழ்க்கை குழப்பமானது, குளறுபடியானது. 57 00:02:12,000 --> 00:02:15,000 அதை சுத்தப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி, 58 00:02:15,000 --> 00:02:17,000 ஒரு பெட்டியில், அழகாகப் போட்டு வைக்கலாமென்று. 59 00:02:17,000 --> 00:02:19,000 (சிரிப்பு) 60 00:02:19,000 --> 00:02:22,000 அப்படியொரு நோக்கம் கொண்ட நான், 61 00:02:22,000 --> 00:02:25,000 தேர்ந்தெடுத்த தொழிலோ, சமூக சேவை. 62 00:02:25,000 --> 00:02:28,000 சமூக சேவையில் இருப்போர், சொல்வது போல 63 00:02:28,000 --> 00:02:31,000 சேவையில் உள்ள அசௌகரியங்களைத் நாம் தழுவிக் கொள்ள வேண்டும். 64 00:02:31,000 --> 00:02:34,000 எனக்கோ, அசௌகரியங்களைத் தகர்த்து, 65 00:02:34,000 --> 00:02:36,000 இலக்கு பாதையிலிருந்து, அகற்றிவிட்டு வெற்றி பெறவேண்டும், 66 00:02:36,000 --> 00:02:39,000 என்பதே, தாரக மந்திரமாக இருந்தது. 67 00:02:39,000 --> 00:02:41,000 உத்வேகத்துடன் இருந்தேன். 68 00:02:41,000 --> 00:02:44,000 நான் சிந்தித்தேன், "ஆம், இது தான் என் வாழ்க்கைப்பணி!" 69 00:02:44,000 --> 00:02:47,000 நான் குழப்பமான, கடினமான விஷயங்களை ஆராய்ச்சி செய்ய ஆர்வப்படுகிறேன். 70 00:02:47,000 --> 00:02:49,000 குழப்பங்களை அகற்றி அதனை 71 00:02:49,000 --> 00:02:51,000 புரிந்து கொள்ள வேண்டும். 72 00:02:51,000 --> 00:02:53,000 காரணக் காரியங்களை கண்டுபிடித்து, 73 00:02:53,000 --> 00:02:55,000 முக்கியமானவைகளின் 74 00:02:55,000 --> 00:02:57,000 விதிகளை, கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும். 75 00:02:57,000 --> 00:03:00,000 மனிதர்களிடம் உள்ள இணைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். 76 00:03:00,000 --> 00:03:03,000 பத்து வருடங்களாக, சமூக சேவகராக நீங்கள் இருந்தால், 77 00:03:03,000 --> 00:03:05,000 நீங்கள் இதை உணர்வீர்கள். 78 00:03:05,000 --> 00:03:08,000 மற்றவர்களிடம் நமக்குள்ள இணைப்பு, இருப்பதால் தான் நாம் இங்கு இருக்கிறோம். 79 00:03:08,000 --> 00:03:11,000 அதுதான், நம் வாழ்விற்கு, அர்த்தமும், நோக்கமும் தருகிறது. 80 00:03:11,000 --> 00:03:13,000 இதுதான், அனைத்துக்கும் விளக்கம் கொடுக்கிறது. 81 00:03:13,000 --> 00:03:15,000 நீங்கள் யாரிடம் பேசினாலும், 82 00:03:15,000 --> 00:03:18,000 சமுக நீதி, மன நலத்துறை, தாக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களாகட்டும், 83 00:03:18,000 --> 00:03:20,000 நாம் அறிவது, என்னவென்றால் இணைப்பு, 84 00:03:20,000 --> 00:03:23,000 அதாவது, மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் தான் -- 85 00:03:23,000 --> 00:03:26,000 நரம்பியல் ரீதியாகவும், நம்மை உருவாக்கி உள்ளது -- 86 00:03:26,000 --> 00:03:28,000 அதுவே, நாம் இங்கு வாழ்வதற்கு காரணமாகவும் உள்ளது. 87 00:03:28,000 --> 00:03:31,000 அதனால், நான் சிந்தித்தேன், நான் 'இணைப்பில்' இருந்து தொடங்கலாமென்று. 88 00:03:31,000 --> 00:03:34,000 சரி, நீங்கள் இந்த சூழ்நிலையை அறிவீர்கள். 89 00:03:34,000 --> 00:03:36,000 உங்களுடைய மேல் அதிகாரி, மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறார். 90 00:03:36,000 --> 00:03:39,000 அவர் உங்களிடம் உள்ள 37 நல்ல விஷயங்களைப் பாராட்டுக்கிறார். 91 00:03:39,000 --> 00:03:41,000 ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும், நீங்கள் கவனம் செலுத்தி வளரலாம், என்கிறார். 92 00:03:41,000 --> 00:03:43,000 (சிரிப்பு) 93 00:03:43,000 --> 00:03:46,000 நீங்களோ, கவனம் செலுத்த சொன்ன விஷயத்தை மட்டும், யோசிப்பீர்கள். அல்லவா? 94 00:03:47,000 --> 00:03:50,000 என்னுடைய ஆராய்ச்சியும், அப்படித் தான் போனது. 95 00:03:50,000 --> 00:03:53,000 ஏனென்றால், நீங்கள் மக்களிடம் அன்பு பற்றிக் கேட்டால், 96 00:03:53,000 --> 00:03:55,000 அவர்களுடைய ஆழ்ந்த துயரத்தை பற்றி கூறினர். 97 00:03:55,000 --> 00:03:57,000 மக்களிடம் சொந்தம் கொள்ளுதல் பற்றிக் கேட்டால், 98 00:03:57,000 --> 00:04:00,000 கடும் வேதனை தந்த அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள், 99 00:04:00,000 --> 00:04:02,000 ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி பேசுவார்கள். 100 00:04:02,000 --> 00:04:04,000 மக்களிடம் இணைப்பைப் பற்றி கேட்டால் 101 00:04:04,000 --> 00:04:07,000 இணைய முடியாமல், துண்டிக்கப்பட்ட கதைகளை சொல்வார்கள். 102 00:04:07,000 --> 00:04:10,000 மிக விரைவாக, ஆராய்ச்சி ஆரம்பித்த ஆறு வாரங்களில், 103 00:04:10,000 --> 00:04:13,000 ஒரு பெயரிட முடியாத விஷயமொன்று, தோன்றத் தொடங்கியது. 104 00:04:13,000 --> 00:04:16,000 இணைப்பு என்பது என்னவென்று, வெளிப்படையாக்கியது அது, 105 00:04:16,000 --> 00:04:19,000 எனக்கு புலப்படாத, என்றும் பார்த்திராத முறையில். 106 00:04:19,000 --> 00:04:21,000 நான் ஆராய்ச்சியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்து, 107 00:04:21,000 --> 00:04:24,000 நான் இதை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தேன். 108 00:04:24,000 --> 00:04:27,000 அது என்னவாக இருந்தது என்றால், அவமானம் என்கிற உணர்ச்சி தான். 109 00:04:27,000 --> 00:04:29,000 அவமானத்தை, நாம் எளிதில் புரிந்துக் கொள்ளலாம், 110 00:04:29,000 --> 00:04:31,000 மற்றவர்களிடம் இணைய முடியாமல் போய்விடுவோம், என்கிற பயம் என்று. 111 00:04:31,000 --> 00:04:33,000 என்னைப் பற்றி ஏதேனும் ஒன்று, உள்ளதா, 112 00:04:33,000 --> 00:04:36,000 அதை மற்றவர்கள் பார்த்தால் அல்லது அறிந்தால், 113 00:04:36,000 --> 00:04:39,000 என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன் ஆக்கிவிடும். 114 00:04:39,000 --> 00:04:41,000 நான் உங்களுக்கு சொல்ல போகிற விஷயங்கள் 115 00:04:41,000 --> 00:04:43,000 எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியவை; நாம் அனைவரும் அதை கொண்டுள்ளோம். 116 00:04:43,000 --> 00:04:45,000 அவமானத்தை அனுபவிக்க முடியாதவர்கள், 117 00:04:45,000 --> 00:04:47,000 மனிதாபிமானம், இணைப்பு ஆகியவற்றிற்கான ஆற்றல் இல்லாதவர்கள். 118 00:04:47,000 --> 00:04:49,000 அவமானத்தை பற்றி யாரும் பேச விரும்புவதில்லை 119 00:04:49,000 --> 00:04:52,000 எவ்வளவு குறைவாக அதை பற்றி நீங்கள் பேசுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களிடம் இருக்கிறது. 120 00:04:54,000 --> 00:04:56,000 அவமானத்தின் அடித்தளத்தில் உள்ள, 121 00:04:56,000 --> 00:04:58,000 "நான் அந்தளவிற்கு, சிறந்தவன் அல்ல" என்ற 122 00:04:58,000 --> 00:05:00,000 உணர்வை நாம் அனைவரும் அறிவோம் 123 00:05:00,000 --> 00:05:02,000 "நான் அவ்வளவு அதுவாக இல்லை, இதுவாக இல்லை. நான் அவ்வளவு ஒல்லியாக இல்லை, 124 00:05:02,000 --> 00:05:04,000 அவ்வளவு பணக்காரனாக இல்லை, அவ்வளவு அழகாக இல்லை, அவ்வளவு சாமர்த்தியமாக இல்லை, 125 00:05:04,000 --> 00:05:06,000 அவ்வளவு பதவி பெற்றவனாக இல்லை." 126 00:05:06,000 --> 00:05:08,000 இதற்கு அடிப்படையாக உள்ளது, 127 00:05:08,000 --> 00:05:11,000 கடும் வேதனை தரக்கூடிய, வடுபடத்தக்க தன்மையே. 128 00:05:11,000 --> 00:05:13,000 இது பின்வரும் கருத்தைச் சார்ந்தது. 129 00:05:13,000 --> 00:05:15,000 மற்றவர்களுடன் இணைந்து, சேர வேண்டுமாயின், 130 00:05:15,000 --> 00:05:18,000 மற்றவர்கள் நாம் எப்படிப்பட்டவர்கள், என்பதை காண அனுமதிக்க வேண்டும் 131 00:05:18,000 --> 00:05:20,000 உண்மையாக, நாம் யார் என்பதை, அவர்கள் காண வேண்டும். 132 00:05:20,000 --> 00:05:23,000 நீங்கள் அறிவீர், நான் இதை எப்படி உணருவேன் என்று. வடு படும் நிலையை, வெறுக்கிறேன். 133 00:05:23,000 --> 00:05:25,000 நான் யோசித்தேன். சரி, இது ஒரு வாய்ப்பு எனக்கு. 134 00:05:25,000 --> 00:05:28,000 என் அளவுக் கோல் கொண்டு, இதை அடித்து பின்னே தள்ளி விட வேண்டும். 135 00:05:28,000 --> 00:05:31,000 நான், உள்ளே சென்று, இதனை பற்றி கண்டு அறியப்போகிறேன். 136 00:05:31,000 --> 00:05:34,000 நான் ஒரு வருடம் செலவிடப் போகிறேன். அவமானம் என்ன என்பதை, உடைத்து அறிய போகிறேன். 137 00:05:34,000 --> 00:05:36,000 வடுபடத்தக்கத் தன்மை, எப்படி வேலை செய்கிறது, என்பதை புரிந்துக் கொள்ள போகிறேன் 138 00:05:36,000 --> 00:05:39,000 என் புத்திசாலித்தனத்தினால், இதனை வெல்ல போகிறேன். 139 00:05:39,000 --> 00:05:42,000 நான் தயாராக இருந்தேன். ஆர்வமுடன் இருந்தேன். 140 00:05:44,000 --> 00:05:46,000 உங்களுக்கே தெரியும், இது நன்றாக முடியாது என்று. 141 00:05:46,000 --> 00:05:49,000 (சிரிப்பு) 142 00:05:49,000 --> 00:05:51,000 உங்களுக்கு இது தெரியும். 143 00:05:51,000 --> 00:05:53,000 அவமானத்தைப் பற்றி, நான் நிறைய சொல்லலாம். 144 00:05:53,000 --> 00:05:55,000 அப்படியானால், நான் உங்களின் நேரத்தை கடன் வாங்க வேண்டியிருக்கும். 145 00:05:55,000 --> 00:05:58,000 ஆனால், உங்களிடம் ஒன்று சொல்ல போகிறேன், அது தான் இதற்கு விளக்கம் கொடுக்கிறது. 146 00:05:58,000 --> 00:06:01,000 நான் கற்றுக்கொண்டவற்றில் இது தான் மிக முக்கியமானவையாகவும் இருக்கலாம், 147 00:06:01,000 --> 00:06:04,000 பத்து வருட ஆராய்ச்சியில். 148 00:06:04,000 --> 00:06:06,000 எனது ஒரு வருடம் 149 00:06:06,000 --> 00:06:08,000 ஆறு வருடங்கள் ஆனது. 150 00:06:08,000 --> 00:06:10,000 ஆயிரக்கணக்கான கதைகள், 151 00:06:10,000 --> 00:06:13,000 நூற்றுக்கணக்கான, நீண்ட நேர்காணல்கள், மையக் குழுக்கள். 152 00:06:13,000 --> 00:06:15,000 ஒரு நேரத்தில், மக்கள் அவர்களின் தினக் குறிப்புகளை, அனுப்பத் தொடங்கினர். 153 00:06:15,000 --> 00:06:18,000 அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கூட அனுப்ப தொடங்கினர் -- 154 00:06:18,000 --> 00:06:21,000 ஆயிரமாயிரமான, தகவல் துணுக்குகள், ஆறு வருடங்களில். 155 00:06:21,000 --> 00:06:23,000 ஒரு விதமாக, நான் இது என்னவென்று அறிய தொடங்கினேன். 156 00:06:23,000 --> 00:06:25,000 அவமானம் என்றால் என்ன, என்பது புரியத் தொடங்கியது, 157 00:06:25,000 --> 00:06:27,000 இவ்வாறு தான், அது வேலை செய்கிறது என்று. 158 00:06:27,000 --> 00:06:29,000 ஒரு புத்தகம் எழுதினேன். 159 00:06:29,000 --> 00:06:31,000 ஒரு கோட்பாட்டை வெளியிட்டேன், 160 00:06:31,000 --> 00:06:34,000 ஆனால் ஏதோவொன்று, சரியாக இல்லை -- 161 00:06:34,000 --> 00:06:36,000 அது என்னவென்று பார்த்தேன். 162 00:06:36,000 --> 00:06:38,000 நான் நேர்காணல் செய்த, மக்களை தோராயமாக, எடுத்துக் கொண்டு, 163 00:06:38,000 --> 00:06:41,000 அவர்களை, இரு வகையாக பிரித்தேன். 164 00:06:41,000 --> 00:06:44,000 உண்மையாக, அவர்கள் தகுதியுடையவர்கள் என்ற உணர்வை கொண்டவர்கள் -- 165 00:06:44,000 --> 00:06:46,000 அது தான், அடிப்படையாக உள்ளது, 166 00:06:46,000 --> 00:06:48,000 தகுதியுடையவர்கள் என்ற உணர்வு -- 167 00:06:48,000 --> 00:06:51,000 அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள் -- 168 00:06:51,000 --> 00:06:53,000 மற்றொரு வகை, இவ்வனைத்துக்காகவும் போராடுபவர்கள், 169 00:06:53,000 --> 00:06:55,000 போதுமானளவுக்கு நன்றாக உள்ளார்களா என்று தங்களையே சந்தேகப்படுபவர்கள். 170 00:06:55,000 --> 00:06:57,000 இவர்களில் ஒரேயொரு மாறுநிலை மட்டுந்தான் உள்ளது. 171 00:06:57,000 --> 00:06:59,000 அது தான், இவர்களை வேறுபடுத்துகிறது, 172 00:06:59,000 --> 00:07:01,000 அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள் 173 00:07:01,000 --> 00:07:03,000 மற்றும் அதற்காக போராடுபவர்கள். 174 00:07:03,000 --> 00:07:05,000 அது என்னவென்றால், 175 00:07:05,000 --> 00:07:07,000 அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள், 176 00:07:07,000 --> 00:07:10,000 தாங்கள், அன்பிற்கும், சொந்தம் கொள்ளுதலுக்கும் தகுதியானவர்கள், என்று நம்புபவர்கள். 177 00:07:10,000 --> 00:07:12,000 அவ்வளவு தான். 178 00:07:12,000 --> 00:07:14,000 அவர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள். 179 00:07:15,000 --> 00:07:18,000 எனக்கு, மிகக் கடினமான 180 00:07:18,000 --> 00:07:21,000 ஒன்றாக, நம்மை மற்றவரிடம் இணைய தடுக்கும் ஒன்றாக, 181 00:07:21,000 --> 00:07:24,000 அமைவது பயம், நாம் மற்றவரிடம் இணைய, சேர்ந்திருக்க தகுதியானவர்கள் கிடையாது, என்ற பயம், என்று விளங்கியது. 182 00:07:24,000 --> 00:07:26,000 அதை, தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் 183 00:07:26,000 --> 00:07:29,000 நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், என்று உணர்ந்தேன். 184 00:07:29,000 --> 00:07:32,000 அதனால், நான் என்ன செய்தேனென்றால் 185 00:07:32,000 --> 00:07:34,000 நான் அனைத்து நேர்காணல்களையும் எடுத்துக் கொண்டேன். 186 00:07:34,000 --> 00:07:37,000 தகுதியுடைமை, மற்றும் அவ்வாறு வாழும் மக்களைப் பற்றிய 187 00:07:37,000 --> 00:07:40,000 நேர்காணல்களை, மட்டும் பார்த்தேன். 188 00:07:40,000 --> 00:07:42,000 இவர்களிடம், எதேனும், பொதுவாக உள்ளதா? 189 00:07:42,000 --> 00:07:44,000 எனக்கு எழுது பொருள்கள் மீது, ஒரு லேசான போதை உள்ளது, 190 00:07:44,000 --> 00:07:47,000 ஆனால், அது வேறு சொற்பொழிவிற்காக, விட்டு விடலாம். 191 00:07:47,000 --> 00:07:50,000 நான் ஒரு மணீலா உறையையும், ஒரு குறிப்பு எடுக்கும் எழுதுகோளையும், எடுத்துக் கொண்டேன். 192 00:07:50,000 --> 00:07:52,000 சரி, இந்த ஆராய்ச்சியை என்னவென்று அழைக்கலாம்? 193 00:07:52,000 --> 00:07:54,000 என் மனதில் தோன்றிய முதல் வார்த்தைகள், 194 00:07:54,000 --> 00:07:56,000 முழுமனதோடு இருப்பவர்கள். 195 00:07:56,000 --> 00:07:59,000 இவர்கள், தாங்கள் தகுதியானவர்கள் என்ற ஆழமான உணர்வுடன், முழுமனதோடு வாழ்பவர்கள். 196 00:07:59,000 --> 00:08:02,000 அந்த மணீலா உறையின் மேல் எழுதினேன். 197 00:08:02,000 --> 00:08:04,000 நான் அதிலிருக்கும், தகவல்களை பார்க்க தொடங்கினேன். 198 00:08:04,000 --> 00:08:06,000 நான் அதை முதலில் 199 00:08:06,000 --> 00:08:08,000 நான்கு நாட்களாக 200 00:08:08,000 --> 00:08:11,000 தீவிர தகவல் ஆய்வு, செய்தேன். 201 00:08:11,000 --> 00:08:14,000 நான் திரும்பிச் சென்றேன். நேர்காணல்களை எடுத்தேன். கதைகளை எடுத்தேன். சம்பவங்களை எடுத்தேன். 202 00:08:14,000 --> 00:08:17,000 இதில் உள்ள முக்கிய கருத்து என்ன? இதில் தோன்றும் வடிவமைப்பு என்ன? 203 00:08:17,000 --> 00:08:20,000 என் கணவர், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். 204 00:08:20,000 --> 00:08:23,000 ஏனென்றால், எனக்கு 'ஜாக்சன் பொல்லாக்' போல் பித்து பிடித்ததாய் 205 00:08:23,000 --> 00:08:25,000 நான் எழுதிக் கொண்டே இருப்பேன், 206 00:08:25,000 --> 00:08:28,000 ஆராச்சியாளர்-ரகத்தில். 207 00:08:28,000 --> 00:08:30,000 நான், கண்டறிந்தது என்னவென்றால். 208 00:08:32,000 --> 00:08:34,000 அவர்களிடம், உள்ள பொதுவானது, 209 00:08:34,000 --> 00:08:36,000 ஒரு தைரிய உணர்வு. 210 00:08:36,000 --> 00:08:39,000 ஒரு நிமிடத்தில் தைரியம் மற்றும் வீரத்தை வேறுபடுத்திக் காட்ட எண்ணுகிறேன். 211 00:08:39,000 --> 00:08:41,000 தைரியம், அதற்கான பொருள் வரையறை, 212 00:08:41,000 --> 00:08:43,000 ஆங்கிலத்தில், முதன்முறையாக பழக்கத்தில் வந்த போது -- 213 00:08:43,000 --> 00:08:46,000 லத்தின் மொழியில், இருதயம் என்ற பொருள் கொண்ட, 'கொர்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது -- 214 00:08:46,000 --> 00:08:48,000 அதற்கான, அசல் வரையறை, 215 00:08:48,000 --> 00:08:51,000 முழுமனதோடு, நீங்கள் யார் என்பதைச் அழகுறச் சொல்வதாகும். 216 00:08:51,000 --> 00:08:53,000 அந்த மக்களிடம், 217 00:08:53,000 --> 00:08:55,000 இருந்தது, தைரியம் மட்டுமே. 218 00:08:55,000 --> 00:08:57,000 குறைபாடுகளுடன், இருக்கக்கூடிய தைரியம். 219 00:08:58,000 --> 00:09:00,000 அவர்களிடம், ஒரு இறக்க உணர்ச்சி இருந்தது. 220 00:09:00,000 --> 00:09:03,000 முதலில், தங்களுக்கு தானே அன்பாக இருந்தார்கள், பிறகு மற்றவர்களிடம். 221 00:09:03,000 --> 00:09:06,000 ஏனென்றால், நாம் பிறரிடம் இறக்கத்துடன் பழக முடியாது, 222 00:09:06,000 --> 00:09:09,000 நாம் நம்மையே, அன்பாக பரிவுடன் நடந்து கொள்ளாவிட்டால். 223 00:09:09,000 --> 00:09:11,000 இன்னும், அவர்களிடம் இணைப்பு இருந்தது, 224 00:09:11,000 --> 00:09:13,000 -- அது தான், கடிமான ஒன்று -- 225 00:09:13,000 --> 00:09:16,000 நம்பகத்தன்மையால் வந்த இணைப்பு. 226 00:09:16,000 --> 00:09:19,000 தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதை விட்டுக்கொடுக்கவும் முனைந்தார்கள், 227 00:09:19,000 --> 00:09:21,000 அவர்கள் அவர்களாக இருப்பதற்காக. 228 00:09:21,000 --> 00:09:24,000 அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும், 229 00:09:24,000 --> 00:09:26,000 மற்றர்வர்களுடன் இணைந்து வாழ்வதற்கு. 230 00:09:28,000 --> 00:09:30,000 அவர்களிடம் இருந்த ஒரு ஒற்றுமை 231 00:09:30,000 --> 00:09:32,000 இது தான். 232 00:09:35,000 --> 00:09:38,000 வடுபடத்தக்க தன்மையை, முழுமையாக தழுவினார்கள். 233 00:09:40,000 --> 00:09:43,000 அவர்கள் நம்பியது என்னவென்றால் 234 00:09:43,000 --> 00:09:46,000 எது அவர்களை காயப்படுத்தக் கூடியவையாக இருந்ததோ, 235 00:09:46,000 --> 00:09:48,000 அதுவே அவர்களை அழகுபடுத்தியது. 236 00:09:50,000 --> 00:09:52,000 அவர்கள் காயப்படுவது 237 00:09:52,000 --> 00:09:54,000 சுகமானதாக கருதவில்லை, 238 00:09:54,000 --> 00:09:57,000 அது மிகவும் வேதனை தரக்கூடியதாகவும் கருதவில்லை -- 239 00:09:57,000 --> 00:09:59,000 அவமானத்தை பற்றி அறிய நடத்திய நேர்காணல்களிலிருந்து நான் இதைத்தான் அறிந்தேன், . 240 00:09:59,000 --> 00:10:02,000 அவர்கள் அது தேவையானது, என்று பேசினார்கள். 241 00:10:03,000 --> 00:10:05,000 விருப்புடன் முனைவதை பற்றி பேசினார்கள். 242 00:10:05,000 --> 00:10:08,000 "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று முதலில் சொல்ல முற்பட வேண்டும். 243 00:10:08,000 --> 00:10:11,000 விருப்பத்துடன் 244 00:10:11,000 --> 00:10:13,000 ஒன்றை செய்ய முனைய வேண்டும், 245 00:10:13,000 --> 00:10:16,000 எந்தவித உத்தரவாதமுமின்றி, 246 00:10:16,000 --> 00:10:18,000 விருப்பத்துடன் முனைய வேண்டும், 247 00:10:18,000 --> 00:10:20,000 பொறுமையுடன் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருக்க, 248 00:10:20,000 --> 00:10:22,000 உங்களுடைய மாம்மொகிரம் முடிந்த பின். 249 00:10:23,000 --> 00:10:26,000 ஒரு உறவில், முதலீடு செய்ய முனைந்தார்கள், 250 00:10:26,000 --> 00:10:29,000 கைக்கூடுமா கூடாதா, என்று பாராமல். 251 00:10:29,000 --> 00:10:32,000 இதை அவர்கள் அடிப்படையாக கருதினார்கள். 252 00:10:32,000 --> 00:10:35,000 நான் அதை, தனிப்பட்ட வகையில், துரோகம் என்று எண்ணினேன். 253 00:10:35,000 --> 00:10:38,000 நான் நம்பவில்லை என்னுடைய கடப்பாட்டை 254 00:10:38,000 --> 00:10:40,000 ஆராய்ச்சியில் மீது வைத்திருந்தேன் -- 255 00:10:40,000 --> 00:10:42,000 ஆராய்ச்சியின் வரையறை என்னவென்றால், 256 00:10:42,000 --> 00:10:45,000 கட்டுப்படுத்துவதும் கணிப்பதும் ஆகும்; நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை ஆய்வு செய்து, 257 00:10:45,000 --> 00:10:47,000 தெள்ளத் தெளிவான காரண காரியங்களை அறிந்து, 258 00:10:47,000 --> 00:10:49,000 கட்டுப்படுத்தி எதிர்வுகூறுவது. 259 00:10:49,000 --> 00:10:51,000 ஆனால், இப்போது என்னுடைய பணியான, 260 00:10:51,000 --> 00:10:53,000 கட்டுபடுத்துவதும் கணிப்பதும், 261 00:10:53,000 --> 00:10:56,000 எனக்கு அளித்த பதிலோ, வாழ்க்கையை வடுபடத்தக்கத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று. 262 00:10:56,000 --> 00:10:59,000 அதாவது, கட்டுப்படுத்துவதையும், எதிர்வுகூறுவதையும் நிறுத்த வேண்டும். 263 00:10:59,000 --> 00:11:02,000 இதனால் ஒரு சிறிய பிரச்சனைக்கு உள்ளானேன் -- 264 00:11:02,000 --> 00:11:06,000 (சிரிப்பு) 265 00:11:06,000 --> 00:11:09,000 -- ஆனால் அது நிஜத்தில் இப்படி தான் தோற்றமளித்தது. 266 00:11:09,000 --> 00:11:11,000 (சிரிப்பு) 267 00:11:11,000 --> 00:11:13,000 ஆம், அப்படி தான். 268 00:11:13,000 --> 00:11:16,000 இதை ஒரு பிரச்சினை என்று கூறினேன். எனது வைத்தியர் இதை ஒரு ஆன்மிக விழிப்புணர்ச்சி என்றார். 269 00:11:17,000 --> 00:11:19,000 பிரச்சினை என்று சொல்வதை விட, ஆன்மிக விழிப்புணர்ச்சி என்று சொன்னால், நன்றாகவே இருக்கிறது, 270 00:11:19,000 --> 00:11:21,000 ஆனால் அது ஒரு பிரச்சினை தான் என்று உங்களிடம் உறுதிப்படுத்துகிறேன். 271 00:11:21,000 --> 00:11:23,000 என்னுடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, ஒரு வைத்தியரைத் தேடி போனேன். 272 00:11:23,000 --> 00:11:26,000 உங்களிடம் இதை சொல்ல விரும்புகின்றேன்: நீங்கள் யார் என்பதை நீங்களே அறிவீர்கள், 273 00:11:26,000 --> 00:11:29,000 உங்களுடைய நண்பர்களை நீங்கள் அழைத்து கேட்டால், "நான் ஒரு வைத்தியர் பார்க்க வேண்டும். 274 00:11:29,000 --> 00:11:32,000 யாரையாவது நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?" என்று. 275 00:11:32,000 --> 00:11:34,000 ஏனென்றால், என் நண்பர்கள் ஐந்து பேர், 276 00:11:34,000 --> 00:11:36,000 "ஐயோ. நான் உனக்கு வைத்தியர் ஆக மாட்டேன்" என்றனர். 277 00:11:36,000 --> 00:11:39,000 (சிரிப்பு) 278 00:11:39,000 --> 00:11:41,000 நானோ, "அப்படி என்றால்?" 279 00:11:41,000 --> 00:11:44,000 அவர்கள் அதற்கு, "நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால். 280 00:11:44,000 --> 00:11:46,000 நீ உன்னுடைய அளவுக்கோலை கொண்டு வந்துவிடுவாய்." 281 00:11:46,000 --> 00:11:49,000 நானோ, "சரி." என்றேன். 282 00:11:51,000 --> 00:11:53,000 நான் ஒரு வைத்தியரைக் கண்டறிந்தேன். 283 00:11:53,000 --> 00:11:56,000 டயானாவிடம் நடந்த முதல் சந்திப்பில்,-- 284 00:11:56,000 --> 00:11:58,000 நான் ஒரு பட்டியலை கொண்டுவந்தேன், 285 00:11:58,000 --> 00:12:01,000 முழுமனதுடன் வாழ்பவர்கள், எம்முறையில் வாழ்கிறார்கள் என்ற பட்டியல். அமர்ந்தேன், 286 00:12:01,000 --> 00:12:03,000 அவர் சொன்னார், "எப்படி இருக்கீங்க?" 287 00:12:03,000 --> 00:12:06,000 நான் சொன்னேன், "நான் நன்றாகவே உள்ளேன்" 288 00:12:06,000 --> 00:12:08,000 அவர் சொன்னார், "சரி, என்ன நடந்தது?" 289 00:12:08,000 --> 00:12:11,000 இவர் மற்ற வைத்தியர்களைப் பார்க்கும் வைத்தியர். 290 00:12:11,000 --> 00:12:13,000 நாம் அத்தகையவர்களிடம் செல்ல வேண்டும், 291 00:12:13,000 --> 00:12:16,000 ஏனென்றால் அவர்கள் தான் நாம் சொல்லும் கதைகளை கேட்டு உண்மை அறிவார். 292 00:12:16,000 --> 00:12:18,000 (சிரிப்பு) 293 00:12:18,000 --> 00:12:20,000 நான் சொன்னேன், 294 00:12:20,000 --> 00:12:22,000 "சரி, இதை தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்." 295 00:12:22,000 --> 00:12:24,000 அவர் சொன்னார், "என்ன போராட்டம்?" 296 00:12:24,000 --> 00:12:27,000 சொன்னேன், "வடுபடும் தன்மை சார்ந்த பிரச்சனை ஒன்று உள்ளது. 297 00:12:27,000 --> 00:12:30,000 வடுபடத்தக்க தன்மை தான், கருவாக உள்ளது, 298 00:12:30,000 --> 00:12:32,000 அவமானத்திற்கும் , பயத்திற்கும் 299 00:12:32,000 --> 00:12:34,000 மற்றும் நம் தகுதியுடைமையின் போராட்டத்திற்கும். 300 00:12:34,000 --> 00:12:37,000 ஆனால், அது தான் பிறப்பிடமாக உள்ளது, 301 00:12:37,000 --> 00:12:40,000 மகிழ்ச்சிக்கும், படைபாற்றலுக்கும், 302 00:12:40,000 --> 00:12:42,000 பிறரிடம் சொந்தம் கொண்டாடுவதற்கும், அன்பிற்கும். 303 00:12:42,000 --> 00:12:44,000 இதனால் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்று நினைக்கிறேன், 304 00:12:44,000 --> 00:12:47,000 எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது." 305 00:12:47,000 --> 00:12:49,000 நான் சொன்னேன். "ஆனால், இது தான் விஷயம், 306 00:12:49,000 --> 00:12:51,000 என்னுடைய குடும்பத்தை பற்றி பேச தேவையில்லை, 307 00:12:51,000 --> 00:12:53,000 என்னுடைய குழந்தைப்பருவம் பற்றி பேச தேவையில்லை." 308 00:12:53,000 --> 00:12:55,000 (சிரிப்பு) 309 00:12:55,000 --> 00:12:58,000 "எனக்கு சில உத்திகள் மட்டுமே தேவை." 310 00:12:58,000 --> 00:13:02,000 (சிரிப்பு) 311 00:13:02,000 --> 00:13:05,000 (கைத்தட்டல்) 312 00:13:05,000 --> 00:13:07,000 நன்றி. 313 00:13:09,000 --> 00:13:12,000 அவரோ, இப்படி செய்தார். 314 00:13:12,000 --> 00:13:14,000 (சிரிப்பு) 315 00:13:14,000 --> 00:13:17,000 நான் பிறகு சொன்னேன், "இது கெட்டது, தானே?" 316 00:13:17,000 --> 00:13:20,000 அவர் சொன்னார், "இது நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது." 317 00:13:20,000 --> 00:13:22,000 (சிரிப்பு) 318 00:13:22,000 --> 00:13:24,000 "இது என்னவாக இருக்கிறதோ, அதுவாக தான் இருக்கிறது." 319 00:13:24,000 --> 00:13:27,000 நான் சொன்னேன், "கடவுளே! இது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது." 320 00:13:27,000 --> 00:13:30,000 (சிரிப்பு) 321 00:13:30,000 --> 00:13:32,000 அப்படி தான் இருந்தது. அப்படி இல்லாமலும் இருந்தது. 322 00:13:32,000 --> 00:13:35,000 ஒரு வருடம் எடுத்துக் கொண்டது. 323 00:13:35,000 --> 00:13:37,000 மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்களே அறிவீர்கள். 324 00:13:37,000 --> 00:13:40,000 வடுபடத்தக்க தன்மையும், மென்மையும் தான் முக்கியம் என்று அறிந்து, 325 00:13:40,000 --> 00:13:43,000 அவர்கள் சரணடைந்து, அதை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று சொன்னால், 326 00:13:43,000 --> 00:13:45,000 அ : நான் அப்படிப்பட்டவன் கிடையாது, என்றும் 327 00:13:45,000 --> 00:13:48,000 ஆ : நான் அது போன்ற மக்களிடம் பழக கூடமாட்டேன், என்றும் சொல்வார்கள். 328 00:13:48,000 --> 00:13:51,000 (சிரிப்பு) 329 00:13:51,000 --> 00:13:54,000 எனக்கு, அது ஒரு வருட கால தெருச் சண்டை. 330 00:13:54,000 --> 00:13:56,000 அது ஒரு மல் யுத்தம். 331 00:13:56,000 --> 00:13:58,000 வடுபடத்தக்க தன்மை, என்னை தள்ளியது. நான் அதை பின்னே தள்ளினேன். 332 00:13:58,000 --> 00:14:01,000 நான் சண்டையில் தோற்றேன். 333 00:14:01,000 --> 00:14:03,000 ஆனால், என் வாழ்க்கையை மீட்டுக் கொண்டேன். 334 00:14:03,000 --> 00:14:05,000 அதற்கு பிறகு, நான் ஆராய்ச்சிக்கு மீண்டும் சென்றேன் 335 00:14:05,000 --> 00:14:07,000 அடுத்த இரண்டு வருடங்கள் அதில் கழித்தேன். 336 00:14:07,000 --> 00:14:10,000 முழுமனதுடன் வாழ்பவர்களை, பற்றி சரியாக புரிந்துக்கொள்ள, 337 00:14:10,000 --> 00:14:12,000 அவர்களுடைய விருப்பங்களை எப்படி தேர்வு செய்கிறார்கள், 338 00:14:12,000 --> 00:14:14,000 மற்றும் நாம் என்ன செய்கிறோம் 339 00:14:14,000 --> 00:14:16,000 வடுபடத்தக்க தன்மையை கொண்டு. 340 00:14:16,000 --> 00:14:18,000 நாம் ஏன் அதனுடன் போராடுகிறோம்? 341 00:14:18,000 --> 00:14:21,000 வடுபடத்தக்க தன்மையுடனான போராட்டத்தில், நான் மட்டும் தனியாக உள்ளேனா? 342 00:14:21,000 --> 00:14:23,000 இல்லை. 343 00:14:23,000 --> 00:14:25,000 நான் இதை தான் கற்றுக்கொண்டேன். 344 00:14:26,000 --> 00:14:29,000 நாம் வடுபடத்தக்க தன்மையை மரத்துப்போக செய்கிறோம் -- 345 00:14:29,000 --> 00:14:31,000 நாம் அந்த அழைப்புக்காக, காத்திருக்கும் போது. 346 00:14:31,000 --> 00:14:33,000 வேடிக்கையாக, நான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இல், ஒன்றை கேட்டேன். 347 00:14:33,000 --> 00:14:35,000 "நீங்கள் வடுபடத்தக்க தன்மை எப்படி வரையறுப்பீர்கள்? 348 00:14:35,000 --> 00:14:37,000 எது உங்களை வடுபடச் செய்யும் என்று உணர்கிறீர்கள்?" 349 00:14:37,000 --> 00:14:40,000 ஒன்றரை மணி நேரத்தில், எனக்கு 150 பதில்கள் கிடைத்தன. 350 00:14:40,000 --> 00:14:42,000 ஏனென்றால், நான் அறிய விரும்பினேன் 351 00:14:42,000 --> 00:14:44,000 வெளியுலகத்தில் என்ன உள்ளது என்று. 352 00:14:45,000 --> 00:14:47,000 என்னுடைய கணவனிடம் உதவி கேட்பது, 353 00:14:47,000 --> 00:14:50,000 ஏனென்றால் எனக்கு உடம்பு சரியில்லை, நாங்கள் புதிதாக திருமணமானவர்கள்; 354 00:14:50,000 --> 00:14:53,000 என் கணவனிடம் உடலுறவை தொடங்குவது; 355 00:14:53,000 --> 00:14:55,000 என் மனைவியிடம் உடலுறவை தொடங்குவது; 356 00:14:55,000 --> 00:14:58,000 மறுப்பை ஏற்பது; இன்னொருவரோடு வெளியே செல்ல அவரிடம் கேட்பது; 357 00:14:58,000 --> 00:15:00,000 டாக்டர் அழைப்புக்காக காத்திருப்பது; 358 00:15:00,000 --> 00:15:03,000 வேலையிலிருந்து நீக்கப்படுவது; மற்றவர்களை வேலை விட்டு நீக்குவது -- 359 00:15:03,000 --> 00:15:05,000 இத்தகைய உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம். 360 00:15:05,000 --> 00:15:08,000 வடுபடத்தக்க உலகத்தில் நாம் வாழ்கின்றோம். 361 00:15:08,000 --> 00:15:10,000 அதை சமாளிக்கும் வழிகளில் ஒன்றாக, 362 00:15:10,000 --> 00:15:12,000 நமது வடுபடும் தன்மையை மறத்துபோக செய்கிறோம். 363 00:15:12,000 --> 00:15:14,000 அதற்கு ஆதாரமும் உண்டு என்று நினைக்கிறேன் -- 364 00:15:14,000 --> 00:15:16,000 இந்த ஆதாரம இருப்பதற்கு, இது மட்டும் காரணம் கிடையாது, 365 00:15:16,000 --> 00:15:18,000 ஆனால் இது தான் ஒரு பெரும் மூலக்காரணமாக உள்ளது -- 366 00:15:18,000 --> 00:15:22,000 நாம் தான் அதிகபடியான கடன்களில் சிக்கியுள்ள, 367 00:15:22,000 --> 00:15:25,000 மிகவும் குண்டாகி கொழுத்த, 368 00:15:25,000 --> 00:15:28,000 கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ள, மருந்துகளை சார்ந்து உயிர் வாழும் 369 00:15:28,000 --> 00:15:30,000 தலைமுறையினர், அமெரிக்க வரலாற்றிலேயே. 370 00:15:33,000 --> 00:15:36,000 பிரச்சினை என்னவென்றால் -- இதை நான் ஆராச்சியிலிருந்து அறிந்து கொண்டேன் -- 371 00:15:36,000 --> 00:15:39,000 உங்களால் உணர்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து மரத்துபோக செய்ய முடியாது. 372 00:15:40,000 --> 00:15:43,000 நீங்கள் இவ்வாறு சொல்ல முடியாது, இது தான் கெட்ட விஷயங்கள். 373 00:15:43,000 --> 00:15:45,000 இதோ வடுபடத்தக்க தன்மை, இதோ துக்கம், இதோ அவமானம், 374 00:15:45,000 --> 00:15:47,000 இதோ பயம், இதோ ஏமாற்றம், 375 00:15:47,000 --> 00:15:49,000 நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. 376 00:15:49,000 --> 00:15:52,000 நான் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிட போகிறேன். 377 00:15:52,000 --> 00:15:54,000 (சிரிப்பு) 378 00:15:54,000 --> 00:15:56,000 நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. 379 00:15:56,000 --> 00:15:58,000 எனக்கு தெரியும் நீங்கள் இதை புரிந்து கொண்டு தான் சிரிக்கிறீர்கள். 380 00:15:58,000 --> 00:16:01,000 என்னுடைய பணியே உங்களுடைய வாழ்க்கையை பற்றி அறிவது தானே. 381 00:16:01,000 --> 00:16:03,000 கடவுளே. 382 00:16:03,000 --> 00:16:05,000 (சிரிப்பு) 383 00:16:05,000 --> 00:16:08,000 நீங்கள அத்தகைய கடினமான உணர்வுகளை மறத்துபோகச் செய்ய முடியாது, 384 00:16:08,000 --> 00:16:10,000 அதன் பின்விளைவுகளை மறத்துபோக செய்யாமல். நமது உணர்ச்சிகளை, 385 00:16:10,000 --> 00:16:12,000 நீங்கள் தேர்ந்தெடுத்து மறத்துப்போக செய்ய முடியாது. 386 00:16:12,000 --> 00:16:15,000 அதனால், நாம் எப்போது அதனை மறத்துபோக செய்கிறோமோ, அப்போது 387 00:16:15,000 --> 00:16:17,000 நாம் மகிழ்ச்சியை மறத்துபோக செய்கிறோம், 388 00:16:17,000 --> 00:16:19,000 நாம் நன்றியறிதலை மறத்துபோகச் செய்கிறோம், 389 00:16:19,000 --> 00:16:21,000 நாம் சந்தோஷத்தை மறத்துபோக செய்கிறோம். 390 00:16:21,000 --> 00:16:24,000 அதற்கு பின், நாம் வாழ்க்கையை வெறுத்து சோகமாகிறோம். 391 00:16:24,000 --> 00:16:26,000 நாம் நம்முடைய நோக்கம் என்ன, இதற்கு அர்த்தம் என்னவென்று தேடுகிறோம், 392 00:16:26,000 --> 00:16:28,000 அதற்கு பிறகு நாம் வடுபடத்தக்கவர்களாக உணர்கிறோம், 393 00:16:28,000 --> 00:16:31,000 அதனால் நாம் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிடுவோம். 394 00:16:31,000 --> 00:16:34,000 இது ஒரு ஆபத்தான சுழற்சியாக மாறுகிறது. 395 00:16:36,000 --> 00:16:39,000 ஒரு விஷயம், நாம் யோசிக்க வேண்டியது என்று நினைக்கிறேன். 396 00:16:39,000 --> 00:16:41,000 அது என்னவென்றால், நாம் ஏன் மற்றும் எப்படி மறத்துபோக செய்கிறோம். 397 00:16:41,000 --> 00:16:44,000 இது ஒரு அடிமைத்தனமாக மட்டும் இருக்க வேண்டாம். 398 00:16:44,000 --> 00:16:46,000 மற்றொரு விஷயத்தையும் நாம் செய்கிறோம், 399 00:16:46,000 --> 00:16:49,000 நாம் நிச்சயமற்ற அனைத்தையும், நிச்சயமாக உள்ளவாறு செய்கிறோம். 400 00:16:50,000 --> 00:16:53,000 மதம், ஒரு பக்தி மற்றும் மர்மம் கொண்ட ஒரு நம்பிக்கையிலிருந்து 401 00:16:53,000 --> 00:16:55,000 கட்டாயமாய் நேரிடக்கூடிய உறுதிப்பாட்டு நியதி ஆகிவிட்டது. 402 00:16:55,000 --> 00:16:58,000 நான் தான் சரி. நீ செய்வது தவறு. வாயை மூடு. 403 00:16:58,000 --> 00:17:00,000 அவ்வளவு தான். 404 00:17:00,000 --> 00:17:02,000 நிச்சயமாக, இது தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். 405 00:17:02,000 --> 00:17:04,000 நாம் இவ்வளவு பயப்படுகிறோமோ, அவ்வளவு வடுபடத்தக்கவர்கள் ஆகிறோம், 406 00:17:04,000 --> 00:17:06,000 அவ்வளவு பயப்படுகிறோம். 407 00:17:06,000 --> 00:17:08,000 இன்று அரசியல் இப்படி தான் காட்சியளிக்கிறது. 408 00:17:08,000 --> 00:17:10,000 இனிமேல், உரையாடல்கள் கிடையாது. 409 00:17:10,000 --> 00:17:12,000 இனிமேல், பேச்சுவார்த்தைகள் கிடையாது. 410 00:17:12,000 --> 00:17:14,000 வெறும் குற்றச்சாட்டுகள் தான் உண்டு. 411 00:17:14,000 --> 00:17:17,000 ஆராய்ச்சியில், குற்றச்சாட்டு எவ்வாறு விவரிக்கப்படுகிறது என்று தெரியுமா? 412 00:17:17,000 --> 00:17:20,000 நம் வலிகளையும், அசௌகரியங்களையும், வெளியேற்றுவதற்கான ஒரு வழி. 413 00:17:21,000 --> 00:17:23,000 நாம் குற்றமற்றவர்களாக இருக்க முயல்கிறோம். 414 00:17:23,000 --> 00:17:26,000 யாரேனும் தான் வாழும் வாழ்க்கை, இப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது நானாக தான் இருக்கும் 415 00:17:26,000 --> 00:17:28,000 ஆனால், அது அப்படி அமைவது இல்லை. 416 00:17:28,000 --> 00:17:30,000 ஏனென்றால், நாம் என்ன செய்கிறோம் என்றால் நம் பிட்டத்தில் உள்ள சதையை எடுத்து 417 00:17:30,000 --> 00:17:32,000 நம் கன்னங்களில் ஒட்டிக் கொள்கிறோம். 418 00:17:32,000 --> 00:17:35,000 (சிரிப்பு) 419 00:17:35,000 --> 00:17:37,000 இதை நான் நம்புகிறேன் ஒரு நூற்றாண்டில், 420 00:17:37,000 --> 00:17:39,000 மக்கள் திரும்பி பார்த்து, "அடே" என்று சொல்வார்கள். 421 00:17:39,000 --> 00:17:41,000 (சிரிப்பு) 422 00:17:41,000 --> 00:17:43,000 நாம் சரி செய்ய நினைப்பது, மிக அபாயகரமாக, 423 00:17:43,000 --> 00:17:45,000 நம் குழந்தைகளை. 424 00:17:45,000 --> 00:17:47,000 நான் நம் குழந்தைகளை பற்றி என்ன நினைக்கிறோம், என்பதை சொல்லப்போகிறேன். 425 00:17:47,000 --> 00:17:50,000 அவர்கள் போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளனர், பிறந்தபோது. 426 00:17:50,000 --> 00:17:53,000 ஆனால், நாம் அந்த குற்றமற்ற பச்சிளங் குழந்தைகளை, கையில் கொள்ளும் போது, 427 00:17:53,000 --> 00:17:55,000 நமது வேலை இதுவாக இருக்கக்கூடாது, "அடே, பார் இவளை. பரிபூரணமாக உள்ளாள். 428 00:17:55,000 --> 00:17:57,000 எனது வேலை இவளை இவ்வாரே, பரிபூரணமாக குறைபாடற்றவளாக வைத்துக் கொள்ளவதே -- 429 00:17:57,000 --> 00:18:00,000 ஐந்தாம் வகுப்புக்குள் டென்னிஸ் டீம் சேர்த்து விட வேண்டும், யேல் பள்ளிக்கு ஏழாம் வகுப்பிலே சேர்த்து விட வேண்டும்." 430 00:18:00,000 --> 00:18:02,000 அது நம் வேலை கிடையாது. 431 00:18:02,000 --> 00:18:04,000 நமது வேலை, அவர்களை பார்த்து சொல்ல வேண்டும், 432 00:18:04,000 --> 00:18:07,000 "உனக்கு தெரியுமா? உனக்கும் குறைப்பாடுகள் உண்டு. நீ போராட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளாய். 433 00:18:07,000 --> 00:18:09,000 ஆனால் நீ அன்பிற்கும், பிறருடன் சொந்தம் கொண்டாடுவதற்கும், தகுதியாய் உருவாக்கப்பட்டவள்." 434 00:18:09,000 --> 00:18:11,000 அது தான் நமது வேலை. 435 00:18:11,000 --> 00:18:13,000 என்னிடம் காட்டுங்கள், இவ்வாறு சொல்லி வளர்த்த குழந்தைகளை கொண்ட தலைமுறையை. 436 00:18:13,000 --> 00:18:16,000 அப்படியானால், நாம் இன்று பார்க்கும் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். 437 00:18:16,000 --> 00:18:20,000 நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ, 438 00:18:20,000 --> 00:18:23,000 அது மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்று. 439 00:18:23,000 --> 00:18:25,000 நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் இதை செய்கிறோம். 440 00:18:25,000 --> 00:18:27,000 நாம் நம் நிறுவனங்களில் இதை செய்கிறோம் -- 441 00:18:27,000 --> 00:18:29,000 ஒரு பிணையாக இருக்கட்டும், ஒரு எண்ணெய் கசிவாக இருக்கட்டும், 442 00:18:29,000 --> 00:18:31,000 ஒரு மீள்அழைப்பாக இருக்கட்டும் -- 443 00:18:31,000 --> 00:18:33,000 நாம் பாசாங்கு காட்டுகிறோம், நாம் என்ன செய்கிறோமோ 444 00:18:33,000 --> 00:18:36,000 அதனால் பிற மக்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை என்று. 445 00:18:36,000 --> 00:18:39,000 நான் நிறுவங்களுக்கு சொல்ல விழைவது, இது ஒன்றும் புதிதாக நடக்கும் ஜல்லிக்கட்டு கிடையாது. 446 00:18:40,000 --> 00:18:42,000 எங்களுடைய விருப்பம், நீங்கள் நம்பகத்தன்மையுடன் உண்மையாக இருந்து, 447 00:18:42,000 --> 00:18:44,000 இதை சொல்லவதே, "எங்களை மன்னிக்கவும். 448 00:18:44,000 --> 00:18:47,000 நாங்கள் இதை சரி செய்துவிடுவோம்." 449 00:18:50,000 --> 00:18:52,000 இன்னொரு வழியுமுண்டு, அதை கூறிக்கொண்டு நான் விடைபெறுகிறேன். 450 00:18:52,000 --> 00:18:54,000 இதை தான் நான் கண்டு அறிந்தேன்: 451 00:18:54,000 --> 00:18:56,000 மற்றவர்களுக்கு நாம் நாமாக தெரிய வேண்டும், 452 00:18:56,000 --> 00:18:58,000 ஆழமாக தெரியப்பட வேண்டும், 453 00:18:58,000 --> 00:19:01,000 காயப்பட கூடிய அளவிற்கு, தெரியப்பட வேண்டும்; 454 00:19:01,000 --> 00:19:03,000 முழுமனதுடன் அன்புக் கொள்ள வேண்டும், 455 00:19:03,000 --> 00:19:05,000 எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் -- 456 00:19:05,000 --> 00:19:07,000 அது மிகவும் கடினமானது. 457 00:19:07,000 --> 00:19:10,000 நான் ஒரு தாயாய் சொல்கிறேன், அது கடுவேதனை தரக்கூடிய கடிமான செயல் -- 458 00:19:12,000 --> 00:19:15,000 நன்றிக் கடனும், மகிழ்ச்சியையும் கடைப்பிடிக்க 459 00:19:15,000 --> 00:19:17,000 அந்த அச்சுறுத்தும் தருணங்களில், 460 00:19:17,000 --> 00:19:19,000 நாம் நினைக்கும் போது, "நான் உன்னை இவ்வளவு நேசிக்க முடியுமா? 461 00:19:19,000 --> 00:19:21,000 நான் இதை இவ்வளவு அதீத ஆர்வத்துடன் நம்ப முடியுமா? 462 00:19:21,000 --> 00:19:24,000 நான் இதை பற்றி இவ்வளவு மூர்க்கமாக இருக்க முடியுமா?" 463 00:19:24,000 --> 00:19:26,000 அத்தருணங்களில், நாம் சற்று நின்று, என்ன விபரிதங்கள் நடக்குமோ என்று எண்ணி பயப்படாமல், 464 00:19:26,000 --> 00:19:29,000 சொல்ல துணிய வேண்டும், "நான் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன், 465 00:19:29,000 --> 00:19:32,000 ஏனென்றால் நான் காயப்பட கூடிய நிலையில் உள்ளேன் என்றால், நான் உயிரோடு துடிப்புணர்வுடன் வாழ்கிறேன் என்று அர்த்தம்." 466 00:19:33,000 --> 00:19:36,000 கடைசியாக, நான் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதும் ஒன்று, 467 00:19:36,000 --> 00:19:39,000 நாம் போதுமானவர்கள் என்ற மனநிறைவுடன் நம்புவது ஆகும். 468 00:19:39,000 --> 00:19:41,000 ஏனென்றால், நாம் அந்த நம்பிக்கையுடன் வேலை செய்தால், 469 00:19:41,000 --> 00:19:44,000 நான் போதுமானவன் என்ற மன நிறைவு அளிக்கும் நம்பிக்கையுடன் வேலை செய்தால், 470 00:19:45,000 --> 00:19:48,000 நாம் கத்தி அலறுவதை விட்டுவிட்டு, நாம் செவி சாய்த்து கேட்க தொடங்குவோம், 471 00:19:49,000 --> 00:19:51,000 நம்மை சுற்றி உள்ளவர்களிடம், அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம், 472 00:19:51,000 --> 00:19:54,000 மற்றும், நாம் நமக்கே அன்பாகவும், மென்மையாகவும் இருப்போம். 473 00:19:54,000 --> 00:19:56,000 இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி! 474 00:19:56,000 --> 00:19:59,000 (கைத்தட்டல்)