1.501 ஐ சதவிகிதத்தில் மாற்றி எழுத வேண்டும்.
இதை நாம் 100 -ன் மேல் உள்ள தொகுதியாக மாற்ற வேண்டும்.
எனவே, இதை நாம் 1.501 கீழ் 1 என்று கூறலாம்.
இதன் மதிப்பு மாறவில்லை, இப்பொழுது 100 ஆல் மேலும் கீழும் பெருக்கலாம்
இவ்வாறு பெருக்கும் போது, இதன் மதிப்பு மாறது,
ஒன்றால் பெருக்குவது போல தான்.
இவ்வாறு செய்வதன் மூலம், இதை வேறு வழியில் குறிப்பிடலாம்.
இதன் பகுதி, 1 பெருக்கல் 100 ஆகப்போகிறது.
அப்படியென்றால், 100.
பிறகு, இதன் தொகுதி, 1.501 பெருக்கல் 100.
அப்படியென்றால்,
இதை 10 ஆல் பெருக்கினால்,
இந்த தசம புள்ளி ஒரு இடம் நகரும்,
இதை 100 ஆல் பெருக்க வேண்டும்,
எனவே, மீண்டும் ஒரு முறை 10 ஆல் பெருக்க வேண்டும்.
எனவே, இதன் தசம புள்ளி வலது பக்கம் இரு இடம் நகரும்.
நாம் இதை 10 ஆல் இரு முறை பெருக்குகிறோம்.
அல்லது 100 ஆல் பெருக்குகிறோம்.
இது 10 ஆல் பெருக்குவது,
இது 100 ஆல் பெருக்குவது.
இதன் தசம புள்ளி எங்கு இருக்கும்?
இது 150.1 என்பதாகும்.
எனவே 1.501 என்பதை 150.1 -ன் கீழ் 100,
அல்லது ஒரு 100-க்கு 150.1 என்று மாற்றி விட்டோம்.
இதை ஒரு 100-க்கு 150.1 என்று எழுதுகிறேன்.
அப்படியென்றால், 150 .1 சதவிகதம்.
அதாவது, 150.1 %.
அவ்வளவு தான்.
நாம் என்ன செய்தோம் என்றால்,
இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,
150.1 கிடைப்பதற்காக 100 ஆல் பெருக்குகிறோம்.
பிறகு அதை சதவிகிதத்தில் எழுதுகிறோம்.
சதவிகிதம் அல்லது % என்று குறிப்பிட்டுள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.