நாம் அறுபத்தியெட்டிலிருந்து நாற்பத்திரண்டை கழிக்கலாம். இந்த கணக்கை எப்படி செய்வது என்று நான் காட்டிகிறேன். பிறகு, இந்த கணக்கை எதற்காக இந்த விதத்தில் செய்கிறோம் என்று சொல்கிறேன். இந்த கணக்கை செய்வதற்கு ஒரு விதம்- இந்த விதத்தைதான் நிறைய பேர் பயன்படுத்துவார்கள்- முதலில் பெரிய எண்ணை மேலே எழுதுவோம். சிறிய எண்ணை அதற்கு அடியில் எழுதுவோம். நாம் அறுபத்தியெட்டு கழித்தல் நாற்பத்திரண்டை செய்யபோகிறோம். நீங்கள் ஒன்றை முக்கியமாக செய்யவேண்டும்- எண்களை இடத்துக்கேற்ற விதத்தில் எழுதவேண்டும். அதனால், இரண்டை எட்டிற்கு அடியில் எழுதவேண்டும். (இந்த இரண்டு எண்களும் ஒன்றுகளின் இடத்தில் இருக்கின்றன.) அதே வகையில், நான்கை ஆறிற்கு அடியில் எழுதுவோம். (இந்த இரண்டு எண்களும் பத்துகளின் இடத்தில் இருக்கின்றன.) அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். நாம் ஒன்றுகளின் இடத்தில் பார்த்தால், அங்கே எட்டு இருக்கிறது. இந்த எட்டிலிருந்து நாம் இரண்டை கழிக்கபோகிறோம்.எட்டு கழித்தல் இரண்டு செய்தால், ஆறு வரும். இங்கு அதனை எழுதுவோம் 8-2 எனபது 6 8-2=6. எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். நாம் இப்பொழுது பத்துகளின் இடத்தை பார்க்கலாம். இங்கே ஆறு கழித்தல் நான்கு இருக்கிறது. பத்துகளின் இடத்தில் இந்த எண்கள் இருப்பதால், இது உண்மையிலே அறுவது கழித்தல் நாற்பதுதான். ஆறு கழித்தல் நான்கு இரண்டை தரும். 6 - 4 = 2 இந்த எங்கள் பத்துகளின் இடத்தில் இருப்பதால், இது "அறுவது கழித்தல் நாற்பது இருபதை தரும்" என்று சொல்வதுபோல்தான். இதை சிறிது நேரத்தில் விளக்குகிறேன். இந்த கணக்கை நாம் முடித்துவிட்டோம். 68-42=26 இது சரியாக செய்திருக்கிறோமா என்று நீங்கள் பார்க்கலாம். நீங்கள் "இருபத்தியாறு கூட்டல் நாற்பத்திரண்டு" என்ற கணக்கை செய்தால், அறுபத்தியெட்டு வரும். பிறகு, இதை நீங்கள் செய்துபாருங்கள்- நாற்பத்திரண்டு கூட்டல் இருபத்தியாறு அறுபத்தியெட்டுதானா என்று பாருங்கள். 42 +26 = 68 தானா என்று சரி பார்க்கவும் 68 இர்க்கு சமமமாகும் மேலும் 68 - 26 எவ்வளவு என்று சரி பார்க்கவும் அது 42 இற்கு இணை ஆவதை காண்பீர்கள் எனவே எவை இரண்டையும் நீங்களே சரி பார்த்து கொள்ளுங்கள் நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். நான் அறுபத்தியெட்டை அறுபது கூட்டல் எட்டாக பார்ப்பேன். இப்படி நீங்கள் எழுதவேண்டாம்- அனால் உங்களுக்கு புரிவதற்கு இப்படி காட்டுகிறேன். "அறுபத்தியெட்டு" என்பது அறுபது கூட்டல் எட்டுதான். இதிலிருந்து நாம் நாற்பத்திரண்டை கழிக்கிறோம். ஆனால், "நாற்பத்திரண்டு" என்பது நாற்பது கூட்டல் இரண்டுதான். அதனால், நாம் நாற்பதை கழிக்கிறோம். இரண்டையும் கழிக்கிறோம். நாற்பத்திரண்டை கழிக்கிறோம்- நாற்பதையும் இரண்டையும் கழிக்கிறோம். அதனால், நீங்கள் இதை இரண்டு தனி கணக்குகளாக பார்க்கலாம். ஒன்றுகளின் இடத்தில் "எட்டு கழித்தல் இரண்டு" வைத்திருக்கிறோம். அதேதான் இங்கு செய்தோம். எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். பத்துகளின் இடத்தில், "அறுபது கழித்தல் நாற்பது" வைத்திருக்கிறோம். இது இருபதை தரும். அதனால், நாம் "இருபது கூட்டல் ஆறு" என்ற கணக்கை வைத்திருக்கிறோம். உங்களுக்கு இது இருபத்தியாறுதான் என்று தெரியும்.