வணக்கம், என் பெயர் இரின், நான் இங்கே Code.org ல் கணினி பொறியாளராக இருக்கிறேன் எனது உற்சாகத்திற்கு காரணம் இந்த பயிற்சி காணொளிகளை இப்போது உங்களுக்கு வழங்குவது தான் நாங்கள் இதை ஹலோ வேர்ல்டு என அழைக்கிறோம், ஹலோ வேர்ல்டு என்பது கணினி துறையில் மிகப் பரிச்சயமான சொற் தொடர் அதை காட்சிப்படுத்துவது கணினி பயிற்சிநுட்பங்களை கற்று கொள்வதில் முதல் படி. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஸ்பிரைட் லேப்-ல் புரோகிராமிங் முறைகளை கற்று கொள்வதன் மூலமாக நீங்கள் கணினி பயிற்சிநுட்பங்களை கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள், ஸ்பிரைட் லேப் என்பது ஒரு கருவியாகும். அதை கொண்டு உங்கள் கற்பனை படி நீங்கள் விறுவிறுப்பான செயல்பாடுகளில் ஈடுபடலாம். உங்களது திரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காண முடியும். இடது பக்க ஓரத்தில் இருப்பது ப்ளே ஸ்பேஸ். இங்கே தான் உங்களது ஸ்பிரைட்டுகள் தென்படும். ஸ்பிரைட்டுகள் என்பவை திரையில் தோன்றும் பொருட்கள், அவற்றோடு நீங்கள் தொடர்புறவு கொள்ளலாம். உதாரணமாக, அது ஒரு கதாபாத்திரமாகவோ அல்லது கதையில் வரும் பொருளாகவோ அல்லது ஒரு விளையாட்டாகவோ இருக்கலாம். இந்த மையபகுதிக்கு பெயர் டூல்பாக்ஸ் புதிய கோடு பிளாக்குகள் இந்தப் பகுதியில் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் போது. வலது பக்க பகுதிக்கு பெயர் வெர்க்ஸ்பேஸ். டூல்பாக்சில் இருக்கும் பிளாக்குகளை நீங்கள் டிராக் செய்து வெர்க்ஸ்பேசில் வைத்து உங்கள் புரோகிராமை நீங்கள் கட்டமைக்கலாம். ஒவ்வொரு படிநிலைக்குமான அறிவுறுத்தங்கள் இங்கே மேல் திரையில் வழங்கப்படும். உங்களுக்கு உதவி குறிப்புக்கள் ஏதேனும் தேவைப்பட்டால் லைட்பல்பு ஐ கிளிக் செய்யவும். தொடக்கமாக, ஒரு ஸ்பிரைட்டை உருவாக்குவோம். இந்த பிளாக் உங்கள் ஸ்பிரைட்டிற்கு ஒரு காஸ்ட்யூம் மற்றும் ஒரு லோக்கேஷன்-ஐ வழங்கும். ஒரு ஸ்பிரைட்டின் தோற்றத்தை வர்ணிக்க நாம் பயன்படுத்தும் வார்த்தை தான் காஸ்ட்யூம். ஸ்பிரைட்டின் லோக்கேஷன்-ஐ மாற்றுவதற்கு லோகேஷன் பிளாக்கில் உள்ள பின் ஐகான்-ஐ நீங்கள் கிளிக் செய்யலாம். பின்பு எங்கே அதை நகர்த்த வேண்டுமோ அங்கே கிளிக் செய்யுங்கள். இப்போது, ஸ்பிரைட் தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொள்ள செய்வோம். ஸ்பிரைட்-ஐ ஏதாவது சொல்ல வைக்க இந்த ’சே’ பிளாக் ஐ பயன்படுத்துங்கள். அதை உங்கள் புரோகிராமில் சேருங்கள். உங்களது சே பிளாக்கிற்கு நீங்கள் தேர்வு செய்த காஸ்ட்யூம் உங்களது ஸ்பிரைட் காஸ்ட்யூம் உடன் ஒத்துப்போவதை உறுதி செய்யவும். நீங்கள் ரன் ஐ அழுத்தும் போது, நீங்கள் வழங்கியுள்ள டெக்ஸ்ட் உரையை ஸ்பிரைட் சொல்லும். ஸ்பிரைட் லேப் ஐ செயல்படுத்த நேரம் வந்துவிட்டது உங்கள் கற்பனை வானில் நீங்கள் எங்கே பறக்கிறீர்கள் என்று பார்ப்போம்.