இது ஒரு உடற்பயிற்சி அல்ல.
என் பெயர் க்ரேடா துன்பெர்க்
ஒரு வெகுஜன அழிவின் தொடக்கத்தில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் காலநிலை தகர்ந்து வருகிறது.
என் போன்ற குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க
தங்கள் கல்வியை விட்டுவிடுகிறார்கள்.
ஆனால் இதை நாம் இப்போதும் கூட
சரி செய்யலாம்.
நீங்கள் இதை இப்போதும் கூட சரி செய்யலாம்.
பிழைக்க, நாம் புதைபடிவ எரி பொருள் எரிவதை தடுப்பது மட்டில் போதாது
நிறைய தீர்வுகள் பேசப்படுகிறது, ஆனால்
நம் கண்முன் இருக்கும்
தீர்வைப் பற்றி சிந்தித்தால் என்ன?
என் நண்பர் ஜார்ஜ்-ஐ விளக்கச் சொல்கிறேன்.
காற்றில் இருந்து கரியத்தை உறிஞ்சும்
ஒரு மலிவான தன்னைத்தானே கட்டுவிக்கும் ,
ஒருமாய இயந்திரம் இருக்கிறது.
அதன் பெயர் .... ஒரு மரம்
ஒரு மரம் இயற்கை காலநிலை
தீர்வுக்கு ஒரு உதாரணமாகும்.
சதுப்புநிலங்கள், கரிசகதிகள், காடுகள், ஈரநிலம், கடல் படுகைகள், பாசி காடுகள்,
பவளப்பாறைகள் ஆகியவை காற்றிலிருந்து
கரியத்தை வெளியே எடுத்து பதுக்குகின்றன.
சிதைந்த காலநிலையை சீராக்க இயற்கையை
ஒரு கருவியாக நாம் உபயோகிக்கலாம்
இந்த இயற்கை காலநிலை தீர்வுகள்
ஒரு பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும்.
மிகவும் அருமையாக இருக்கிறது, அல்லவா?
ஆனால் புதைபடிவ (சுவட்டு) எரிபொருட்களையும் நாம் நிலத்தில் விட்டிருந்தால் மட்டுமே.
இங்குதான் பித்துப்பிடித்த செயல் ... இப்போது நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம்.
இயற்கை சார்ந்ததை விட உலகளாவிய
புதைபடிவ எரிபொருள் மானிய தீர்வைக்கு
நாம் ஆயிரம் மடங்கு
அதிகமாக செலவிடுகிறோம்.
இயற்கை காலநிலை தீர்வுகள் வெறும் 2% மட்டுமே பெருகின்றன.
காலநிலை முறிவைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பணத்திலும்.
இது உங்கள் பணம், இது உங்கள் வரிப்பணம் மற்றும் உங்கள் சேமிப்புப் பணம்.
இயற்கை மிக அதிகமாகத் தேவைப்படும்
இச்சமயத்தில் இது இன்னமும் பித்துபிடித்தது
நாம் முன்னெப்போதையும் விட வேகமாக அதை அழித்து வருகிறோம்
ஒவ்வொரு நாளும் 200
இனங்கள் வரை அழிந்து வருகின்றன.
ஆர்க்டிக் பனியின் பெரும்பகுதி போய்விட்டது.
நம் காட்டு விலங்குகளின்
பெரும்பகுதி அழிந்துவிட்டது
நம் மண்ணின் பெரும்பகுதி போய்விட்டது.
எனவே நாம் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இது எளிதானது ... நாம் பாதுகாக்க,
மீட்டெடுக்க மற்றும் நிதியளிக்க வேண்டும்.
பாதுகாப்பளி
வெப்பமண்டலக் காடுகள்
வெட்டப்பட்டு வருகின்றன
ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து
ஆடுகளங்கள் என்ற விகிதத்தில்
முக்கியமான ஒன்றை இயற்கை செய்கிற போது, அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
மீட்டெடுத்தல்.
நமது கிரகத்தின்
பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
ஆனால் இயற்கையால்
மீண்டும் மறு உற்பத்தி செய்ய முடியும்.
சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் பழைய
நிலக்கு வர நாம் உதவ முடியும்.
நிதி.
இயற்கையை அழிக்கும் விஷயங்களுக்கு நிதியளிப்பதை நாம் நிறுத்த வேண்டும்.
இயற்கைக்கு உதவும் விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.
அது அவ்வளவு எளிமையானது.
பாதுகாப்புசெய், மீட்டெடு, நிதியளி.
இது எல்லா இடங்களிலும் நடக்கலாம்.
பலமக்கள் ஏற்கனவே இயற்கை காலநிலை
தீர்வுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
நாம் அதை பெரிய அளவில் செய்ய வேண்டும்
நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்க முடியும்.
இயற்கையை காக்கும் மக்களுக்கு வாக்களியுங்கள்
இந்தக் கானொலியைப் பகிரவும்
இது பற்றி பேசுங்கள்.
உலகெங்கிலும் இயற்கைக்காகப் போராடும் அற்புதமான இயக்கங்கள் உள்ளன.
அவர்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்!
எல்லாமே முக்கியமானது
நீங்கள் செய்வது முக்கியமாகக் கருதப்படும்