-- நம்மிடம் எதிர்மறை 3/4 கழித்தல் 7/6 கழித்தல் 3/6 உள்ளது. இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால் இறுதியில் உள்ள இந்த இரண்டு எண்களும் பகுதியில் 6 ஐ பெற்றுள்ளன என்பது என்னை ஈர்க்கின்றது. முதலில் இதைப்பற்றி சிந்திப்போம். இதனை எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 எனலாம். எதிர்மறை 7/6 கழித்தல் 3/6 என்றால், அது எதிர்மறை 7 கழித்தல் 3-ன் கீழ் 6-ற்கு சமம் இந்த எதிர்மறை 3/4 ஐ இங்கு இருப்பதோடு கூட்டப்போகிறோம். இது இந்த இரண்டு கூற்றுகளையும் கூட்டுதல் ஆகும். எதிர்மறை 7 கழித்தல் 3 என்பது எதிர்மறை 10 ஆகும். எனவே எதிர்மறை 10-ன் கீழ் 6 ஆகும். பிறகு அதை எதிர்மறை 3/4 -உடன் கூட்ட வேண்டும். - இப்பொழுது ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை ஒரு ஒருமித்த அளவைப் பெறும். எனவே ஒரு பொதுவான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். 4 மற்றும் 6-ற்கு பொதுவான மீச்சிறு மடங்கு எது? உங்களுக்கு 12 என்று உடனடியாகத் தோன்றக் கூடும். நீங்கள் 4-ன் மடங்குகள் வழியாகச் சென்றால் இது கிடைக்கும். இல்லையெனில் இந்த 2 எண்களின் பகா காரணிகளைப் பார்க்கலாம். இந்த 2 எண்களின் அனைத்து பகா காரணிகளையும் கொண்டுள்ள மிகச்சிறிய எண் எது? நமக்கு இரண்டு 2-களும், ஒரு 2-ம், ஒரு 3-ம் தேவை. இரண்டு 2-ம், ஒரு 3-ம், அது 4 பெருக்கல் 3, அதாவது 12 ஆகும். எனவே இதை 12 என எழுதலாம் 12. - பகுதியை 4-லிருந்து 12 ஆக்க, அதை 3 ஆல் பெருக்க வேண்டும். எனவே, நமது தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். எனவே, எதிர்மறை 3 பெருக்கல் 3, எதிர்மறை 9 ஆகும். பகுதியை 6 லிருந்து 12 ஆக்க, 2 ஆல் பெருக்க வேண்டும். எனவே, நமது தொகுதியையும் 2 ஆல் பெருக்கலாம். நமது பின்னத்தின் மதிப்பு மாறாது. எனவே இது, எதிர்மறை 20 ஆகும். இப்பொழுது இதை கூட்டலாம். நமது பொது பகுதி, 12 ஆகும். இது எதிர்மறை 9 கூட்டல் எதிர்மறை 20 ஆகும் அல்லது, இதை - 20 என எழுதலாம். அதன் கீழ் 12, இது, -29 கீழ் 12. 29 ஒரு பகா எண். எனவே, இதற்கு 1 மற்றும் 12 ஐ தவிர வேறு காரணிகள் இருக்காது. எனவே, இதை எளிமைபடுத்திவிட்டோம். -