ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப் மாவு தேவை. ஆனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் மட்டும் செய்யப்போகிறோம். நாம் எவ்வளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்? முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை. நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல் பாதி வேண்டும். நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில் பாதி வேண்டும். எனவே நமக்கு 3/4 இன் 1/2 வேண்டும். எனவே நாம் 3/4 உம் 1/2 உம் பெருக்க வேண்டும். முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம். 1 x 3 = 3. அடுத்த எண்களை பெருக்கோவோம். 2 x 4 = 8. நாம் முடித்து விட்டோம். நமக்கு 3/8 கப் மாவு தேவை. இதை பற்றி சற்று யோசித்து பார்ப்போம். நான் 3 / 4 ஐ அல்லது முழு கேக்குக்கு தேவையான மாவை வரைந்துக் கொள்வோம். இது ஒரு முழு கப் மாவை ஒப்பிடுகிறது. இதை நாம் நான்கால் பிரித்துக் கொள்வோம். இதில் மூன்று பகுதிகள் 3/4 ஐ குறிக்கிறது. இதில் இருந்து நமக்கு பாதி தேவை. ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம். இதை நாம் பாதியில் பிரிக்கலாம். இதற்கு, நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன். நாம் முழு கேக் செய்யவதற்கு இவ்வளவு மாவு பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு பாதி மாவுதான் தேவை. எனவே நமக்கு எவ்வளவு மாவு தேவை. இது ஒரு கப் மாவு என்பது எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்... ? இதை செய்யவதற்கு ஒரு வழி இருக்கிறது... இதில் ஒவ்வொரு பகுதியையும் பாதியாக பிரித்துக் கொள்வோம். இதை செய்தால் என்ன ஆகும்? இது முழு கப்பை எட்டால் பிரிபதற்கு சமமாகும். இவற்றை இரண்டால் பிரிக்கலாம். இது முதல் பகுதி. இதை நாம் பாதியாக பிரிக்கலாம். இது இரண்டாவது பகுதி. இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம். இதை போல மூன்றாவது பகுதியையும் நான்காவது பகுதியையும் இரண்டாக பிரிக்கலாம். இது முழு கப்பில் எந்த பகுதி? நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன. ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்து விட்டு மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டால் பிரித்தோம். எனவே, வகுக்கும் எண் 8. நமக்கு 3/4 இல் பாதி தேவை. நினைவிருக்கட்டும், 3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. நான் இதை இன்னும் விவரமாக கூறுகிறேன். 3/4 இங்கு இருந்தது. இது தான் 3/4 கப். ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி. இதில் எத்தனை 1/8 பகுதிகள் உள்ளன? இங்கு ஒன்று... இரண்டு... மூன்று.. மூன்று 1/8 பகுதிகள் உள்ளன. இது 3/4 இன் பாதி எடுப்பதற்கு உங்களுக்கு உபயோகமாய் இருந்திருக்கும்.