நாம் இந்த கோவையைக் கணக்கிட வேண்டும் . a² + 10b - 8 ... இதில் a=7, b=-4. இதனை மதிப்பிட a மற்றும் b-ன் மதிப்பை 7 மற்றும் -4 ஆக பதிலீடு செய்ய வேண்டும். ஏனெனில், அவர்கள் a = 7 மற்றும் b = -4 ஆக மதிப்பிடச் சொல்கிறார்கள். எனவே, இந்த வெளிப்பாட்டில் a இருக்கும் இடங்களில் 7 ஐ வைக்க வேண்டும். இதனை 7 அடுக்கு 2 + 10 பெருக்கல் b, b என்பதற்கு பதில் -4 என்று மாற்ற வேண்டும். ஆக, 10 பெருக்கல் -4 பிறகு, இங்கு -8 உள்ளது. இதனை மதிப்பிடலாம். 7² என்பது 49. பிறகு 10 பெருக்கல் - 4 என்பது, செயல்முறை வரிசையின் படி, கூட்டலுக்கு முன் பெருக்கல் வர வேண்டும், 10 பெருக்கல் -4 என்பது -40 ஆகும். எனவே, இது + (-40) பிறகு -8 49 + (-40), அப்படியென்றால் 49 - 40, அதாவது 9. இதிலிருந்து 8-ஐ கழிக்க வேண்டும். ஆக, 1 கிடைக்கும். 49 - 40 = 9, 9 - 8 = 1. அவ்வளவுதான். a = 7 மற்றும் b = -4 என்று இருக்கும் வெளிப்பாடை மதிப்பீடு செய்து விட்டோம்.