நாம் இந்த கோவையைக் கணக்கிட வேண்டும் . a² + 10b - 8 ... இதில் a=7, b=-4.
இதனை மதிப்பிட a மற்றும் b-ன் மதிப்பை 7 மற்றும் -4 ஆக பதிலீடு செய்ய வேண்டும்.
ஏனெனில், அவர்கள் a = 7 மற்றும் b = -4 ஆக மதிப்பிடச் சொல்கிறார்கள்.
எனவே, இந்த வெளிப்பாட்டில் a இருக்கும் இடங்களில் 7 ஐ வைக்க வேண்டும்.
இதனை 7 அடுக்கு 2 + 10 பெருக்கல் b, b என்பதற்கு பதில்
-4 என்று மாற்ற வேண்டும். ஆக, 10 பெருக்கல் -4
பிறகு, இங்கு -8 உள்ளது. இதனை மதிப்பிடலாம்.
7² என்பது 49. பிறகு 10 பெருக்கல் - 4 என்பது, செயல்முறை வரிசையின் படி,
கூட்டலுக்கு முன் பெருக்கல் வர வேண்டும், 10 பெருக்கல் -4
என்பது -40 ஆகும். எனவே, இது + (-40) பிறகு -8
49 + (-40), அப்படியென்றால் 49 - 40,
அதாவது 9. இதிலிருந்து 8-ஐ கழிக்க வேண்டும். ஆக, 1 கிடைக்கும்.
49 - 40 = 9, 9 - 8 = 1. அவ்வளவுதான்.
a = 7 மற்றும் b = -4 என்று இருக்கும் வெளிப்பாடை மதிப்பீடு செய்து விட்டோம்.