பெட்டியில் என்ன இருக்கிறது? என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் நான் அதனோடு பயணித்திருக்கிறேன், அதனை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறேன், எப்படி என்றால், ஒரு அடுக்ககத்திலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்கும், அதிலிருந்து இன்னொரு அடுக்ககத்திற்குமாக. (சிரிப்பு) (கைதட்டல்) எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? நம் அமெரிக்கர்களுக்கு மும்மடங்கு இடம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது உள்ளது என்பது தெரியுமா? முழுதாக மூன்று மடங்குகள். இந்த அளவு கூடுதல் இடத்தைக் கொண்டு, நம் எல்லோருடைய பொருட்களையும் உள்ளடக்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. நாட்டில் இப்போது ஒரு புதிய தொழில் வந்துள்ளது. அது ஒரு 22 பில்லியன் டொலர் தொழில். அதுவொரு 2.2 பில்லியன் சதுரடி தொழிலும் கூட. அது நம் உடைமைகளை வைக்க பயன்படும் இடம் குறித்த தொழில். ஆக இப்போது நம்மிடம் மூன்று மடங்கு அதிகப்படியான இடவசதி உள்ளது. ஆனால் நாமோ தற்போது கடை கடையாய் ஏறி, இன்னும் அதிகப்படியான இடவசதி வேண்டிய அளவிற்கு நிறைய வாங்கி குவிக்கத் துவங்கிவிட்டோம். இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகிறது? கடனட்டை வாயிலாக நிறைய கடன் சுமை, பாரிய சுற்றுச்சூழல் அடித்தடம், தற்செயலாக இல்லாவிடினும், நமது மகிழ்ச்சியளவு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே மட்டத்தில் இருப்பது. ஆம். நான் இங்கு வந்திருப்பதன் நோக்கம், அதற்கும் மேலான ஒரு வழியாக, அதாவது குறைவாய் இருப்பினும் நிறைவாய் தரும் என்ற நிலையை எடுத்துரைப்பதற்கே. நம்மில் பலரும் ஏதோ ஒரு கட்டத்தில், குறைவாய் இருப்பதில் உள்ள உவகையை அனுபவித்து இருப்பீர்கள். கல்லூரியில், உங்கள் தாங்கும் விடுதியில், பயணம் செய்யும்போது, ஒரு விடுதியரையில், வெளியே கூடாரத்தில் தாங்கும் போது, ஒன்றுமே இருந்திருக்காது, ஒரு படகினைத் தவிர. இந்த நிலையை, எல்லா நிலைகளையும் விட, உங்களுக்கு, அதிகப்படியான விடுதலை உணர்வினையும், அதிகப்படியான நேரத்தினையும் அளித்தது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆக நான் அறிவுறுத்தப் போவது, குறைவான பொருட்களும், குறைவான இடமும், குறைவான சூழல் தடத்தை ஏற்படுத்தப் போகின்றன. உங்கள் பணத்தை நல்ல வழியில் சேமிக்க வைக்கும் நிறைவான திட்டம். அது மட்டுமல்ல, உங்கள் வாழ்வில் சிறிய அளவில் கடினங்களை போக்குவும் செய்யும். அதனால் நான் "Life Edited" என்ற திட்டத்தினை, (www.lifeedited.org), இந்த உரையாடலின் தொடர்ச்சியாகவும், இந்த மட்டத்தில் ஒரு செம்மையான தீர்வினை எட்டத் தீர்மானித்து, தொடங்கினேன். முதலாவது: எனக்கு எல்லாம் வேண்டியிருந்தது. வீட்டு அலுவலகம், பத்து பேர் அமரும்படியான உணவு பரிமாறும் அறை, விருந்தினர்களுக்கான அறை, கடற்கரை ஆட்ட பொருட்களை வைக்க, என எல்லாம் வேண்டி இருந்தது. உலகின் முன்னூறுக்கும் மேற்பட்ட தெரிவுகளில் இருந்து, எனது - எனக்கே உண்டான, நான் அடங்கி உறங்ககூடிய சிறிய கூடு கிடைத்தது