0:00:01.170,0:00:03.364 மீப்பெரு பொது வகுத்தி அல்லது 0:00:03.364,0:00:06.020 மீப்பெரு பொதுக் காரணி காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம் 0:00:06.030,0:00:09.548 முதலாவதாக, யாரேனும் ஒருவர் உங்களைக 0:00:09.548,0:00:16.520 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 0:00:16.530,0:00:22.758 அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன என அவர்கள் உங்களைக் கேட்டால்? 0:00:22.758,0:00:25.130 பொது என்பதிற்கு இங்கு பொ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது 0:00:25.140,0:00:26.590 அது ஏன் அதைப்போன்று வந்தது என்பது எனக்குத் தெரியாது. 0:00:26.600,0:00:27.563 அவர்கள் உங்களிடம் அதையே கேட்கிறார்கள். 0:00:27.563,0:00:31.014 அதாவது, உண்மையில் ஒரு வகுத்தி என்பது ஏதேனும் எண்ணை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும், 0:00:31.014,0:00:34.167 மற்றும் ஒரு காரணி -- அதுவும் ஒன்றை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும். 0:00:34.180,0:00:37.130 எனவே ஒரு வகுத்தி மற்றும் ஒரு காரணி என்பது ஒரே மாதிரியானவை. 0:00:37.140,0:00:39.769 எனவே இந்த வழியில், நாம் கண்டுபிடிப்போம். 0:00:39.769,0:00:41.620 மீப்பெரு பொது வகுத்தி என்றால் என்ன 0:00:41.620,0:00:43.890 அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன? 0:00:43.890,0:00:45.960 நாம் செய்ய வேண்டியது மிகவும் எளிதானது. 0:00:45.970,0:00:48.930 முதலில், ஒவ்வொறு எண்ணின் காரணிகளையும் நாம் கண்டுபிடிப்போம். 0:00:48.930,0:00:52.350 முதலில், பன்னிரண்டின் அனைத்துக் காரணிகளையும் நாம் எழுதலாம். 0:00:52.360,0:00:57.250 ஒன்று ஒரு காரணி. பன்னிரண்டு இரண்டால் வகுபடும். 0:00:57.250,0:00:59.090 பன்னிரண்டு மூன்றால் வகுபடும். 0:00:59.100,0:01:00.770 பன்னிரண்டு நான்கால் வகுபடுm. 0:01:00.780,0:01:03.950 பன்னிரண்டு ஐந்தால் வகுபடாது. 0:01:03.960,0:01:06.700 பன்னிரண்டு ஆறால் வகுபடுகின்றது, ஏனெனில் அது இரண்டு பெருக்கல் ஆறு. 0:01:06.700,0:01:10.220 பின்னர், நிச்சயமாக பன்னிரண்டு பன்னிரண்டால் வகுபடும். 0:01:10.230,0:01:11.070 ஒன்று பெருக்கல் பன்னிரண்டு. 0:01:11.070,0:01:12.920 எனவே, இவை அனைத்தும் பன்னிரண்டின் காரணிகள். 0:01:12.930,0:01:15.430 எட்டின் காரணிகளை நாம் எழுதலாம். 0:01:15.430,0:01:17.600 எட்டு ஒன்றால் வகுபடும். 0:01:17.600,0:01:18.940 எட்டு இரண்டால் வகுபடும். 0:01:18.950,0:01:20.630 எட்டு மூன்றால் வகுபடாது. 0:01:20.640,0:01:22.930 எட்டு நான்கால் வகுபடும். 0:01:22.930,0:01:27.830 பிறகு ஒன்றுடன் சேர்ந்து கடைசியாக எட்டு வரும் 0:01:27.840,0:01:31.090 எனவே, நாம் பன்னிரண்டு மற்றும் எட்டின் அனைத்துக் காரணிகளையும் எழுதியுள்ளோம். 0:01:31.090,0:01:34.570 இப்பொழுது, பன்னிரண்டு மற்றும் எட்டின் பொதுவான காரணிகளை கண்டு பிடிக்க வேண்டும் 0:01:34.570,0:01:37.000 அவை இரண்டிற்கும் ஒன்று பொதுவான காரணியாக உள்ளது. 0:01:37.010,0:01:38.380 அது அவ்வளவு சிறப்பானது அல்ல. 0:01:38.390,0:01:40.324 ஒவ்வொரு முழு எண்ணும் 0:01:40.324,0:01:43.490 அல்லது ஒவ்வொரு முழுவும் ஒன்றை பொதுவான காரணியாகப் பெற்றுள்ளன. 0:01:43.500,0:01:47.499 அவை இரண்டிற்கும் இரண்டு பொதுக் காரணியாக உள்ளது. 0:01:47.499,0:01:51.070 மேலும், அவை இரண்டிற்கும் நான்கு பொதுக் காரணியாக உள்ளது. 0:01:51.070,0:01:54.589 பொதுக் காரணிகளை கண்டுபிடிப்பது மட்டுமே நமக்கு முக்கியமானது அல்ல. 0:01:54.589,0:01:57.380 மீப்பெரு பொதுக் காரணியைக் கண்டுபிடிப்பதில் தான் நாம் ஆர்வமாக இருக்கிறோம். 0:01:57.390,0:02:00.200 எனவே, ஒன்று, இரண்டு, மற்றும் நான்கு ஆகிய அனைத்தும் பொதுக் காரணிகள் தான். 0:02:00.200,0:02:01.580 அவற்றில் மிகப்பெரியது எது? 0:02:01.590,0:02:02.820 அது மிகவும் சுலபமானது. 0:02:02.820,0:02:03.890 அது தான் நான்கு. 0:02:03.900,0:02:07.230 எனவே, பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 0:02:07.230,0:02:09.520 அதை அழுத்திக் கூறுவதற்காக நான் கீழே எழுதுகிறேன். 0:02:09.530,0:02:14.650 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 0:02:14.660,0:02:16.940 நிச்சயமாக, சொன்னது போலவே நாம் எளிதாக கண்டறிந்து விட்டோம், 0:02:16.940,0:02:23.500 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 0:02:23.500,0:02:27.718 சில சமயங்களில், இது வேடிக்கையாகிவிடுகின்றது. 0:02:27.718,0:02:30.929 நாம் வேறொரு கணக்கைச் செய்வோம். 0:02:30.929,0:02:41.891 இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 0:02:41.900,0:02:44.170 நன்று, நாம் இதையும் அதைப் போன்றே கண்டுபிடிப்போம். 0:02:44.170,0:02:47.050 இருபத்தைந்தின் காரணிகள் யாவை? 0:02:47.060,0:02:48.430 ஒன்று ஒரு காரணி. 0:02:48.430,0:02:49.390 இரண்டால் அது வகுபடாது. 0:02:49.400,0:02:50.150 மூன்றால் அது வகுபடாது. 0:02:50.150,0:02:51.420 நான்கால் அது வகுபடாது. 0:02:51.430,0:02:52.352 ஐந்தால் அது வகுபடும். 0:02:52.352,0:02:54.270 அது, ஐந்து பெருக்கல் ஐந்து ஆகும். 0:02:54.280,0:02:57.130 அதன் பின்பு இருபத்து-ஐந்து. 0:02:57.130,0:02:59.560 இது மூன்று காரணிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது வியப்புக்குரியதாகும். 0:02:59.560,0:03:02.322 இந்த எண்ணுக்கு ஏன் மூன்று காரணிகள் மட்டுமே இருக்கின்றன 0:03:02.322,0:03:07.958 மேலும் மற்ற எண்களுக்கு இரட்டைப்படை காரணிகள் உள்ளன என்பதை உங்களுடைய சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். 0:03:07.958,0:03:12.782 அதன் பின் இப்பொழுது நாம் இருபதின் காரணிகளைக் கண்டுபிடிப்போம். 0:03:12.782,0:03:21.025 இருபதின் காரணிகள் ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, பத்து மற்றும் இருபது. 0:03:21.025,0:03:22.977 இதை ஒரு மேர்ப்பார்வையிட்டால், அவை இரண்டிற்கும் ஒன்று என்பது 0:03:22.977,0:03:25.050 பொதுக் காரணியாக இருக்கும், ஆனால் அதில் அவ்வளவு சிறப்பு இல்லை. 0:03:25.060,0:03:28.110 அவை இரண்டுக்கும் பொதுக் காரணி இருக்கின்றதா? 0:03:28.110,0:03:30.550 நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் -- ஐந்து. 0:03:30.560,0:03:35.638 எனவே இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி அல்லது காரணி 0:03:35.638,0:03:41.030 ஐந்து ஆகும். 0:03:41.030,0:03:44.895 நாம் வேறொரு கணக்கைச் செய்யலாம். 0:03:44.895,0:03:54.687 ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி என்ன? 0:03:54.690,0:03:56.420 ஐந்தின் பொதுக் காரணிகள்? 0:03:56.430,0:03:57.330 மிகவும் எளிமையானது. 0:03:57.330,0:03:59.340 ஒன்று மற்றும் ஐந்து. 0:03:59.340,0:04:00.283 ஏனெனில் அது ஒரு பகா எண். 0:04:00.283,0:04:03.378 ஒன்றையும் அந்த எண்ணையும் தவிர அதற்கு வேறு காரணிகள் கிடையாது. 0:04:03.393,0:04:05.370 பன்னிரண்டின் காரணிகள் யாவை? 0:04:05.370,0:04:06.170 பன்னிரண்டிற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. 0:04:06.180,0:04:14.270 அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியன. 0:04:14.270,0:04:20.519 எனவே, ஒன்று மட்டும் தான் அவைகளுக்கு இடையே இருக்கும் பொதுவான காரணி. 0:04:20.519,0:04:23.360 எனவே, இது சற்று ஏமாற்றமளிப்பதாக உள்ளது 0:04:23.370,0:04:28.750 ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி ஒன்று. 0:04:28.750,0:04:31.500 உங்களுக்காக இங்கே சில கலைச்சொற்களை நான் வழங்குகின்றேன். 0:04:31.500,0:04:35.476 இரண்டு எண்கள் 1-ஐ மட்டுமே பொதுவான காரணியாகக் கொண்டிருந்தால், 0:04:35.476,0:04:37.292 அவை சார்பகா எண்கள் எனப்படுகின்றன. 0:04:37.292,0:04:39.992 இது பொருளுடையதாக இருக்கின்றது, ஏனெனில் பகா எண் என்பது 0:04:39.992,0:04:42.880 ஒன்றையும் தன்னையும் மட்டுமே காரணியாகக் கொண்டுள்ள ஒரு எண் ஆகும். 0:04:42.880,0:04:45.161 மேலும் இரண்டு சார்பகா எண்கள் 0:04:45.161,0:04:50.190 என்பவை ஒன்றை மட்டுமே தங்களுடைய மீப்பெரு பொதுக் காரணியாகப் பெற்றுள்ள எண்கள் ஆகும். 0:04:50.190,0:04:51.680 நான் உங்களைக் குழப்பவில்லை என நினைக்கிறேன். 0:04:51.680,0:04:56.744 நாம் மற்றொரு கணக்கைச் செய்வோம். 0:04:56.744,0:05:04.567 ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் கண்டறிவோம். 0:05:04.570,0:05:05.670 பன்னிரண்டு பலமுறை வருகின்றது என்பது எனக்குத் தெரியும். 0:05:05.680,0:05:08.810 என்னுடைய எண்களை மிகவும் புதுமையான முறையில் நான் முயற்சி செய்கிறேன். 0:05:08.810,0:05:11.040 ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 0:05:11.050,0:05:12.920 ஆறின் காரணிகள் 0:05:12.920,0:05:17.760 ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஆறு. 0:05:17.760,0:05:22.788 பன்னிரண்டின் காரணிகள்: ஒன்று, இரண்டு, மூன்று -- 0:05:22.788,0:05:24.384 இப்பொழுது நாம் கிட்டத்தட்ட இவற்றை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். 0:05:24.384,0:05:29.060 மூன்று, நான்கு, ஆறு மற்றும் பன்னிரண்டு. 0:05:29.060,0:05:33.935 நல்லது, ஒன்று என்பது இவை இரண்டின் பொதுவான காரணி என்பது தெரிகின்றது. 0:05:33.935,0:05:36.350 இரண்டும் இவற்றின் பொதுக் காரணி தான். 0:05:36.350,0:05:39.540 மூன்றும் ஒரு பொதுக் காரணி தான். 0:05:39.550,0:05:42.100 ஆறும் இவற்றின் ஒரு பொதுக்காரணி தான். 0:05:42.100,0:05:43.910 இதில், மீப்பெரு பொதுக் காரணி என்ன? 0:05:43.920,0:05:46.048 அது, ஆறு தான். 0:05:46.048,0:05:46.770 இது சுவாரஸ்யமாக உள்ளது. 0:05:46.770,0:05:49.518 இந்த சூழ்நிலையில் மீப்பெரு பொது வகுத்தி -- 0:05:49.518,0:05:52.600 மேலும், வகுத்திக்கும் காரணிக்கும் இடையே மாறுவதற்கு என்னை மன்னிக்கவும். 0:05:52.600,0:05:55.175 கணித சமுதாயம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். 0:05:55.175,0:06:00.210 ஆறு மற்றும் பன்னிரண்டின் மீப்பெரு பொது வகுத்தி என்பது ஆறு. 0:06:00.220,0:06:01.670 உண்மையில் இது, அந்த எண்களில் ஒரு எண்ணிற்கு சமம். 0:06:01.680,0:06:02.906 இது மிகவும் பொருளுள்ளதாக இருக்கின்றது 0:06:02.906,0:06:07.710 ஏனெனில் பன்னிரண்டு ஆறால் வகுபடும். 0:06:07.720,0:06:08.930 அவ்வளவுதான். 0:06:08.930,0:06:11.630 நீங்கள் இப்பொழுது மீப்பெரு பொது வகுத்தி 0:06:11.640,0:06:12.810 காரணி கணக்க்குகளைச் செய்வதற்கு நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறீர்கள். 0:06:12.810,0:06:14.940 கூடிய விரைவிலேயே மற்றொரு தொகுதியை நான் தயாரிக்கிறேன். 0:06:14.950,0:06:18.155 அது உங்களுக்கு மேலும் பல எடுத்துக்காட்டுக் கணக்குகளைக் கொடுக்கும்.