21/28, 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிட்டு பெரியது எதுவென்று கூறவும்.
இதைக் கண்டறிய சில வழிகள் உள்ளது
இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால்,
நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருக்கிறது.
எனவே, நாம் ஒரு பொது பகுதியை கண்டறிய வேண்டும்.
நாம் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் -
அதன் பிறகு நாம் இவ்விரண்டு பின்னங்களின்
தொகுதி எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
முதலில் இவ்விரண்டு பின்னங்களை எளிதாக்குவோம்
எனவே, 21/28, இவை இரண்டும் 7 ஆல் வகுபடும்.
நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை
7 ஆல் வகுக்க வேண்டும்.
இரண்டையும் 7 ஆல் வகுப்பதால், இதன்
மதிப்பு மாறது. 21/7 = 3.
28 / 7 = 4.
எனவே, 21/28 = 3/4.
6/9 ஐயும் இதே போல செய்யலாம்.
6 மற்றும் 9, இரண்டுமே 3 ஆல் வகுபடும்.
எனவே, 6 மற்றும் 9 ஐ 3 ஆல் வகுக்கலாம்.
6 ÷ 3 = 2
9 ÷ 3 = 3
21/28 = 3/4
6/9 = 2/3
3/4 & 2/3, இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியும்
ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்றால்,
28 மற்றும் 9 -இன் பொதுவான பகுதியை
கண்டறிய வேண்டும்.
அதன் பின்பு
3/4 & 2/3 என்பது 4 & 3 -ன்
மீச்சிறு பொது மடங்கு ஆகும்.
4 & 3 -இற்கு பொதுவான பகா காரணிகள் கிடையாது.
எனவே 4 & 3-ன் மீ.பொ.ம. அந்த எண்களின் பெருக்குத்தொகை தான்.
3/4 = /12
2/3 = /12
3 & 4 ஐ பெருக்கியதால் நமக்கு 12 கிடைத்தது.
இதை வேறு வழியில், இதன் பகா காரணிகளை
கொண்டு அறியலாம், 4 = 2x2
3 என்பது ஒரு பகா எண். எனவே,
3 -ன் பகா காரணிகள் 3 தான்
4 & 3 -ன் பகா காரணிகள் 2,2 & 3.
2x2x3 = 12. இது தான் அதன் மீ.பொ.ம.
4 ஐ 12 ஆக்க, 3 ஆல் பெருக்க வேண்டும்.
நாம் இதன் பகுதியை 3 ஆல் பெருக்கி 12 ஆக்கிவிட்டோம்,
இதன் தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும்.
3 x 3 = 9
3 ஐ 12 ஆக்க, 4 ஆல் பெருக்க வேண்டும்
இதன் தொகுதியையும் 4 ஆல் பெருக்க வேண்டும்
4 x 2 = 8
21/28 = 3/4 = 9/12
6/9 = 2/3 = 8/12
இதில் பெரிய பின்னம் எது?
நம்மிடம் பொதுவான பகுதி இருப்பதால்,
இதன் தொகுதிகளை ஒப்பிட வேண்டும். 9 > 8
எனவே, 21/28, 6/9 விட பெரிய எண். 21/28 > 6/9.
அவ்வளவு தான்.
இதை வேறு வழியில் செய்யலாம்.
இதை எளிதாக்க வேண்டியதில்லை.
21/28 & 6/9 ஐ எளிதாக்காமல் செய்யலாம்.
28 & 9 -ன் மீ.பொ.ம (LCM)
28 -ன் பகா காரணிகள் 2x2x7 ஆகும்
9 -ன் பகா காரணிகள் 3x3 ஆகும்.
28 & 9 -ன் மீ.பொ.ம. வில் கண்டிப்பாக 2x2x3x3x7 இருக்க வேண்டும்.
அதாவது 28 பெருக்கல் 9.
28 பெருக்கல் 10, 280 ஆகும். கழித்தல் 28, 252 ஆகும்.
அல்லது, வேறு வழியில், 9 பெருக்கல் 8, 72 ஆகும்.
9 பெருக்கல் 2, 18 ஆகும்.
18 பெருக்கல் 7, 25 ஆகும்.
எனவே, இதன் பெருக்கம் 252 ஆகும்.
அதாவது 28x9 = 252 ஆகும்.
எனவே, இதன் பொது பகுதி 252 ஆகும்
28 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால்,
இதை 9 ஆல் பெருக்க வேண்டும்; 28 x 9
இதன் தொகுதியையும் 9 ஆல் பெருக்க வேண்டும்.
20x9=180.. 180+1=189. எனவே, 21x9 = 189
9 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால்
இதை 28 ஆல் பெருக்க வேண்டும்.
எனவே, இதன் தொகுதியையும் 28 ஆல் பெருக்க வேண்டும்.
6x20 =120...6x8=48...120+48=168.. 6x28 = 168.
6x8 = 48, 8... 6x2=12.. 12+4=16... எனவே 168.
இப்பொழுது நம்மிடம் பொதுவான பகுதி உள்ளது.
இப்போழுது இதன் தொகுதியை ஒப்பிடலாம்.
189, 168 ஐ விட பெரிய எண் 189 > 168.
எனவே, 21/28, 6/9 ஐ விட பெரிய எண்.