நான் ஒரு வடிவமைப்பாளர் மற்றும் ஒரு கல்வியாளர்.
நான் ஒரு பல்பணி நபர், மற்றும் என் மாணவர்களை
மிகவும் ஆக்கப்பூர்வமான, பல்பணி வடிவமைப்பு செயல்முறையைச் செய்ய ஊக்குவிக்கிறேன்
ஆனால் உண்மையில் இந்த பல்பணி எவ்வளவு சிறந்தது?
சிறிது நேரத்திற்கு ஓர்பணியை கவனத்தில் கொள்வோம்.
ஒரு சில உதாரணங்கள்.
அதைப் பாருங்கள்.
இது என் பல்பணி செயலின் முடிவு. (சிரிப்பொலி)
சமைக்க முயற்சிப்பது, தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி எழுதுவது,
மற்றும் இந்த அருமையான பார்பெக்யூவை பற்றிய
சில புகைப்படங்களை தரவேற்றுவது.
மிகைஉன்னதப் பணியாளர்கள் பற்றிய கதையை யாராயினும் சொல்லும்பொழுது,
ஆக இந்த இரண்டு சதவீத மக்களால்
பல்பணி வேலை நிலையைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் உண்மையில் நம்மைப் பற்றி நிஜம் என்ன?
உங்கள் நண்பனின் குரலினை மட்டும்
கடைசியாக ரசித்தது எப்பொழுது?
ஆக இந்த திட்டத்தை தான் நான் இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்,
மேலும் சூப்பர், ஹைபரை குறைக்க
இது முன் பக்கங்களின் தொடர் --
(சிரிப்பொலி) (கைதட்டல்)
நமது சூப்பர், ஹைப்பர் -- கைப்பேசியை
அதன் அத்தியாவசிய தொழிற்பாட்டுக்காய் மாற்றுதல்.
மற்றுமொரு உதாரணம்: வெனிஸ்ஸிற்கு யாராவது போயிருக்கிறீர்களா?
இந்த சிறிய தீவின் வீதியில் நம்மை இழப்பது
எவ்வளவு ஆனந்தம்.
ஆனால் நமது பல்பணி உண்மையில் கொஞ்சம் வித்தியாசமானது,
நிறைய தகவல்களைக் கொண்டது.
நமது சாகச உணர்வை போன்றதே, இதனை
மீண்டும் கண்டுபிடிப்பது எப்படி?
சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்பொழுது மோனோவை பற்றி பேசுவது
வித்தியாசமாக இருக்கும் என்பதை நான் அறிவேன்,
ஆனாலும் உங்களை நான் ஒரு வேலையில் மட்டும்
கவனம் செலுத்தச் சொல்லுகிறேன் ,
அல்லது, உங்களது டிஜிட்டல் உணர்வுகளை முற்றிலுமாக அணைத்துவிடவும்.
இந்த காலத்தில் எல்லோரும் தங்களது மோனோவை தயாரிக்கலாம்.
ஏன் முடியாது? உங்களது ஒருபணியை
இந்த பல்பணி உலகில் கண்டறியவும்.
நன்றி.
(கைதட்டல்)