WEBVTT 00:00:01.000 --> 00:00:11.000 (இசை) NOTE Paragraph 00:00:43.000 --> 00:00:46.000 [வடமொழி] 00:00:50.000 --> 00:00:52.000 இது தேவி அம்மனை போற்றும் துதி. 00:00:52.000 --> 00:00:55.000 இந்தியர்களில் பலர் இதனை சிறு வயதிலேயே கற்கின்றோம். 00:00:58.000 --> 00:01:00.000 இதனை நான் கற்ற போது எனக்கு வயது நான்கு, 00:01:00.000 --> 00:01:03.000 என் தாயின் மடியில் அமர்ந்து கற்றேன். 00:01:05.000 --> 00:01:08.000 அதே வருடம் அவர் எனக்கு நாட்டியத்தையும் அறிமுகம் செய்தார். 00:01:08.000 --> 00:01:10.000 இப்படித்தான் தொடங்கியது 00:01:10.000 --> 00:01:13.000 நாட்டியத்துடனான என் பயனம். 00:01:13.000 --> 00:01:16.000 அது முதல், இப்போது நாற்பது வருடங்களுக்கு மேலாக, 00:01:17.000 --> 00:01:19.000 பல மேன்மையான கலைஞர்களிடம் கற்றுள்ளேன், 00:01:19.000 --> 00:01:21.000 உலகம் முழுவதும் நடனமாடியுள்ளேன், 00:01:21.000 --> 00:01:24.000 பல்வேறு வயதினருக்கு கற்பித்துள்ளேன், 00:01:24.000 --> 00:01:26.000 நிகழ்ச்சிகள் படைத்துள்ளேன், 00:01:26.000 --> 00:01:28.000 வடிவமைத்துள்ளேன், 00:01:28.000 --> 00:01:30.000 இப்படி நாட்டியக் கலையில் 00:01:30.000 --> 00:01:33.000 என் சாதனைகளுக்காக கிடைத்தன பல விருதுகள். 00:01:34.000 --> 00:01:37.000 இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் 2007ம் வருடம் 00:01:37.000 --> 00:01:39.000 நாட்டின் நான்காம் உயரிய குடியியல் விருதான 00:01:39.000 --> 00:01:41.000 பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட்டது, 00:01:41.000 --> 00:01:43.000 கலைக்கான என் பங்களிப்புக்காக. NOTE Paragraph 00:01:43.000 --> 00:01:46.000 (கைதட்டல்) NOTE Paragraph 00:01:47.000 --> 00:01:50.000 ஆனால் எதுவுமே, எதுவுமே என்னை தயார்படுத்தவில்லை, 00:01:50.000 --> 00:01:53.000 நான் கேட்கவிருந்த செய்திக்காக, 00:01:53.000 --> 00:01:56.000 ஜூலை 1, 2008 அன்று எனக்கு கிடைத்த செய்தி. 00:01:56.000 --> 00:01:59.000 என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தை, "carcinoma". 00:01:59.000 --> 00:02:02.000 ஆம், மார்பக புற்றுநோய். 00:02:02.000 --> 00:02:05.000 அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்த போது, 00:02:07.000 --> 00:02:09.000 மேலும் சில வார்த்தைகள் என்னிடம் சொல்லப்பட்டது, 00:02:09.000 --> 00:02:12.000 "cancer" (புற்றுநோய்), "stage," "grade." 00:02:12.000 --> 00:02:14.000 அதுவரை என்னைப் பொறுத்தவரை, 'cancer' என்பது 00:02:14.000 --> 00:02:16.000 என் நண்பரின் ராசி, 00:02:16.000 --> 00:02:19.000 'stage' என்பது நான் நடனமாடும் மேடை, 00:02:19.000 --> 00:02:22.000 'grade' என்பது நான் பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள். 00:02:24.000 --> 00:02:26.000 அன்று நான் உணர்ந்தது, 00:02:26.000 --> 00:02:29.000 நான் அழையாத, விரும்பாத 00:02:29.000 --> 00:02:32.000 வாழ்க்கைத் துணை எனக்கு வாய்க்கப் பட்டிருந்ததை. 00:02:32.000 --> 00:02:34.000 நாட்டியக் கலைஞரான எனக்கு 00:02:34.000 --> 00:02:37.000 நவரசம் எனப்படும் ஒன்பது வகை உணர்ச்சிகள் பற்றித் தெரியும்: 00:02:37.000 --> 00:02:39.000 கோபம், வீரம், 00:02:39.000 --> 00:02:41.000 வெறுப்பு, ஹாஸ்யம், 00:02:41.000 --> 00:02:43.000 மற்றும் பயம். 00:02:43.000 --> 00:02:45.000 பயம் அறிந்தவளாக என்னைப் பற்றி நினைத்திருந்தேன். 00:02:45.000 --> 00:02:48.000 ஆனால் அன்று தான் பயம் என்றால் என்னவென்று கற்றுணர்ந்தேன். NOTE Paragraph 00:02:49.000 --> 00:02:52.000 மிகப்பெரிய இந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல், 00:02:52.000 --> 00:02:54.000 வாழ்க்கைப் பிடிப்பை இழந்து விட்ட ஓர் உணர்வுடன், 00:02:54.000 --> 00:02:56.000 கண்ணீர் மல்கினேன், 00:02:56.000 --> 00:02:59.000 பிறகு என் அருமை கணவர் ஜெயந்திடம் கேட்டேன். 00:02:59.000 --> 00:03:02.000 நான் கேட்டேன், "அவ்வளவு தானா? எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதா? 00:03:02.000 --> 00:03:05.000 என் நாட்டியத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதா?" 00:03:05.000 --> 00:03:08.000 நேர்மறை சிந்தனையாளரான அவர் சொன்னார், 00:03:08.000 --> 00:03:11.000 "இல்லை, இது ஒரு இடைவேளை மட்டுமே, 00:03:11.000 --> 00:03:13.000 சிகிச்சையின் போது ஒரு இடைவேளை, 00:03:13.000 --> 00:03:16.000 அதன் பிறகு நீ உன்னுடையதே ஆன வாழ்க்கைக்கு திரும்புவாய்." NOTE Paragraph 00:03:17.000 --> 00:03:19.000 அப்போது எனக்கு புரிந்தது என்னவென்றால், 00:03:19.000 --> 00:03:22.000 என் வாழ்க்கை முழுவதுமே என் வசம் இருந்ததாக நினைத்திருந்த எனக்கு, 00:03:22.000 --> 00:03:25.000 வசப்பட்டது உண்மையில் மூன்றே மூன்று விஷயங்கள் தான்: 00:03:25.000 --> 00:03:28.000 என் எண்ணம், என் மனம் -- 00:03:28.000 --> 00:03:30.000 எண்ணங்கள் உருவாக்கும் காட்சிகள் -- 00:03:30.000 --> 00:03:33.000 இதிலிருந்து உய்க்கும் செயல். 00:03:33.000 --> 00:03:35.000 இப்படி நான் மூழ்கிப்போனேன் 00:03:35.000 --> 00:03:37.000 பல்வேறு உணர்ச்சிகளின் சுழலில், 00:03:37.000 --> 00:03:39.000 மனச் சோர்வில், 00:03:39.000 --> 00:03:42.000 நான் இருந்த நிலையின் பாரம் தாங்காமல், 00:03:42.000 --> 00:03:45.000 ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்ட நிலைக்கு செல்ல விரும்பினேன். 00:03:46.000 --> 00:03:48.000 நான் இருந்த அந்த நிலையிலிருந்து 00:03:48.000 --> 00:03:50.000 நான் விரும்பிய நிலைக்குச் செல்ல 00:03:50.000 --> 00:03:53.000 எனக்கு ஏதாவது ஒன்றின் உதவி தேவைப்பட்டது. 00:03:53.000 --> 00:03:56.000 இந்த நிலையிலிருந்த என்னை மீட்டெடுக்கக் கூடிய ஒன்று எனக்கு தேவைப்பட்டது. 00:03:56.000 --> 00:03:58.000 ஆகவே நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு, 00:03:58.000 --> 00:04:01.000 உலகத்திடம் இவ்வாறு பிரகடனம் செய்தேன் ... 00:04:01.000 --> 00:04:04.000 "இந்த புற்றுநோய் என் வாழ்வெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் தான், 00:04:04.000 --> 00:04:07.000 என் மொத்த வாழக்கையையும் இது பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்." NOTE Paragraph 00:04:08.000 --> 00:04:10.000 மேலும் நான் பிரகடனம் செய்தேன், 00:04:10.000 --> 00:04:12.000 இந்நிலையை நான் கடந்து செல்வேன், 00:04:12.000 --> 00:04:14.000 புற்றுநோய் என்னை மிதித்து செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். 00:04:14.000 --> 00:04:16.000 ஆனால் நான் இருந்த நிலையில் இருந்து 00:04:16.000 --> 00:04:18.000 நான் விரும்பிய நிலைக்கு செல்ல, 00:04:18.000 --> 00:04:20.000 ஏதாவது ஒன்றின் துணை தேவைப்பட்டது. 00:04:20.000 --> 00:04:22.000 ஒரு நங்கூரம், ஒரு உருவகம், 00:04:22.000 --> 00:04:24.000 ஒரு பிடிமானம், 00:04:24.000 --> 00:04:26.000 அதை பிடித்துக் கொண்டு 00:04:26.000 --> 00:04:29.000 இந்நிலையிலிருந்து மீண்டெழ. 00:04:29.000 --> 00:04:32.000 அதை என் நடனத்தில் கண்டுகொண்டேன். 00:04:33.000 --> 00:04:35.000 என் நடனம், என் பலம், என் சக்தி, என் உவகை, 00:04:35.000 --> 00:04:37.000 என் உயிர் மூச்சு. 00:04:38.000 --> 00:04:40.000 ஆனால் அது எளிமையான காரியம் அல்ல. 00:04:40.000 --> 00:04:43.000 நம்புங்கள், அது எளிமையான காரியமே அல்ல. 00:04:43.000 --> 00:04:45.000 எப்படி ஒருவர் களிப்பு கொள்ள முடியும், 00:04:45.000 --> 00:04:47.000 மூன்றே நாட்களில் அழகான உருவம் 00:04:47.000 --> 00:04:50.000 வழுக்கைத் தலை உருவமாக மாறும் போது? 00:04:50.000 --> 00:04:53.000 எப்படி ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியும் 00:04:53.000 --> 00:04:56.000 வேதிச்சிகிச்சை (chemotherapy) உடலையே உலுக்கிப் போடும் போது? 00:04:56.000 --> 00:04:59.000 மாடிப் படி ஏறுவதே பெரும் போராட்டமாய் இருக்கும்போது, 00:04:59.000 --> 00:05:02.000 அதுவும் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடனமாடக் கூடிய என்னைப் போன்ற ஒருத்திக்கு? 00:05:04.000 --> 00:05:06.000 இது போன்ற துன்பகரமான நிலையில் 00:05:06.000 --> 00:05:09.000 திணறாமல் எப்படி இருக்க முடியும்? 00:05:09.000 --> 00:05:12.000 என்னால் முடிந்ததெல்லாம் சுருண்டுகொண்டு அழுவது மட்டுமே. 00:05:12.000 --> 00:05:14.000 ஆனால் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் இல்லையென்று 00:05:14.000 --> 00:05:17.000 என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன். NOTE Paragraph 00:05:17.000 --> 00:05:20.000 ஆகவே என்னை நானே என் நாட்டியக் கூடத்திற்கு இழுத்து சென்றேன், 00:05:20.000 --> 00:05:23.000 ஒவ்வொரு நாளும், என் உடல், மனம், ஆவி சகிதமாக என் நடனக் கூடத்திற்கு, 00:05:23.000 --> 00:05:25.000 சென்று நான் கற்றதையெல்லாம் திரும்பவும் கற்றேன், 00:05:25.000 --> 00:05:27.000 நான்கு வயதில் கற்றதெயெல்லாம் திரும்ப கற்றேன், 00:05:27.000 --> 00:05:30.000 அனைத்தையும் திரும்பக் கற்றேன். 00:05:30.000 --> 00:05:33.000 இது தாங்க முடியாத வலியாக இருந்தது, ஆனால் செய்தேன். 00:05:33.000 --> 00:05:35.000 கஷ்டம். 00:05:36.000 --> 00:05:39.000 முத்திரைகள் மீது கவனம் செலுத்தினேன், 00:05:39.000 --> 00:05:41.000 நடனம் உருவாக்கும் காட்சிகள் மீது, 00:05:41.000 --> 00:05:43.000 அதன் கவித்துவம், உவமைகள் மீது, 00:05:43.000 --> 00:05:45.000 மேலும் நடன தத்துவத்தின் மீதே கவனம் செலுத்தினேன். 00:05:45.000 --> 00:05:47.000 இப்படி மெதுவாக அந்த 00:05:47.000 --> 00:05:50.000 கவலை கொள்ளச் செய்யும் மனநிலையிலிருந்த வெளியேறினேன். NOTE Paragraph 00:05:51.000 --> 00:05:53.000 ஆனால் அதற்கு மேலும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. 00:05:53.000 --> 00:05:56.000 அந்த கடைசி தூரத்தை கடக்க உதவும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. 00:05:56.000 --> 00:05:58.000 அதை நான் உருவகத்தில் கண்டுகொண்டேன், 00:05:58.000 --> 00:06:01.000 நான்கு வயதில் என் தாயிடமிருதந்து நான் கற்ற கதையில் உள்ள உருவகம். 00:06:01.000 --> 00:06:04.000 மஹிஷாசுர மர்த்தினி எனப்படும் 00:06:04.000 --> 00:06:06.000 துர்க்கையின் பாவனை. 00:06:06.000 --> 00:06:09.000 பயமற்ற துர்கா தேவி, 00:06:09.000 --> 00:06:12.000 இந்துக் கடவுள்களால் உருவாக்கப் பட்டவள் 00:06:12.000 --> 00:06:15.000 துர்க்கை, ஒளி பொருந்தியவள், அழகியவள், 00:06:16.000 --> 00:06:18.000 பதினெட்டு கைகளுடன் 00:06:18.000 --> 00:06:20.000 போருக்கு தயாராகி, 00:06:20.000 --> 00:06:23.000 சிம்ம வாகினியாய் 00:06:23.000 --> 00:06:26.000 மஹிஷாசுரனை அழிக்க போர்முனைக்குச் சென்றவள். 00:06:27.000 --> 00:06:29.000 ஆக்கப்பூர்வ பெண்மை சக்திக்கு 00:06:29.000 --> 00:06:31.000 துர்க்கை ஒரு எடுத்துக்காட்டு, 00:06:31.000 --> 00:06:33.000 அவளே சக்தி. 00:06:33.000 --> 00:06:35.000 பயமறியா துர்க்கை. 00:06:35.000 --> 00:06:37.000 துர்க்கையின் அந்த உருவத்தை 00:06:37.000 --> 00:06:39.000 அவளுடைய குணம், நடை, பாவனை அனைத்தையும் 00:06:39.000 --> 00:06:41.000 என்னுடையதாகவே ஆக்கிக்கொண்டேன். NOTE Paragraph 00:06:41.000 --> 00:06:44.000 தொன்மம் காட்டிய இவ் உருவகத்தின் துணை கொண்டு, 00:06:44.000 --> 00:06:47.000 மேலும் நடனத்தின் மீதிருந்த உவகையையும் துணை கொண்டு 00:06:47.000 --> 00:06:50.000 என் நடனத்தின் மீது கூர்மையான கவனத்தை செலுத்தினேன். 00:06:50.000 --> 00:06:52.000 எப்படிப்பட்ட கூர்மையான கவனம் என்றால், 00:06:52.000 --> 00:06:55.000 அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நான் மீண்டும் நடனமாடினேன். 00:06:55.000 --> 00:06:58.000 வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த வேளையிலேயே நடனமாடினேன், 00:06:58.000 --> 00:07:01.000 என் மருத்துவருக்கே இது தொல்லையாக இருந்தது. 00:07:01.000 --> 00:07:03.000 வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த நாட்களுக்கு இடையிலேயே நடனமாடியதால் 00:07:03.000 --> 00:07:05.000 சிகிச்சையின் கால நிரலை மருத்துவர் மாற்ற வேண்டியிருந்தது, 00:07:05.000 --> 00:07:08.000 என் நாட்டிய நிகழ்ச்சிகளின் அட்டவணைக்கு ஏற்ப. 00:07:10.000 --> 00:07:12.000 நான் செய்தது என்னவென்றால் 00:07:12.000 --> 00:07:14.000 என் கவனத்தை புற்றுநோயிலிருந்து 00:07:14.000 --> 00:07:17.000 நாட்டியத்தின் மீது திசைதிருப்பினேன். 00:07:18.000 --> 00:07:21.000 ஆம், புற்றுநோய் என் வாழ்க்கையெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் மட்டுமே. NOTE Paragraph 00:07:23.000 --> 00:07:25.000 என் கதை 00:07:25.000 --> 00:07:27.000 வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள், 00:07:27.000 --> 00:07:29.000 தடங்கல்கள், சவால்கள் 00:07:29.000 --> 00:07:31.000 இவற்றை எதிர்கொள்ளும் கதை. 00:07:31.000 --> 00:07:34.000 எண்ணத்தின் ஆற்றலை பறைசாற்றுவது என் கதை. 00:07:34.000 --> 00:07:37.000 நாம் எடுக்கும் முடிவுகளின் ஆற்றல் பற்றியது என் கதை. 00:07:37.000 --> 00:07:39.000 கவனம் கொள்வதின் ஆற்றல் பற்றியது. 00:07:39.000 --> 00:07:42.000 இது என்னவென்றால் 00:07:42.000 --> 00:07:45.000 நம் கவனத்தை நாம் மிகவும் விரும்பும் விஷயத்தின் மீது 00:07:45.000 --> 00:07:47.000 செலுத்தினால், 00:07:47.000 --> 00:07:50.000 புற்றுநோய் போன்ற பெரும் தடங்கல் கூட சிறியதாகிவிடுகிறது. 00:07:50.000 --> 00:07:52.000 என் கதை பாவனையின் சக்தியைப் பற்றியது. 00:07:52.000 --> 00:07:54.000 உருவகத்தின் சக்தியைப் பற்றியது. 00:07:54.000 --> 00:07:56.000 என்னுடைய பாவனை துர்க்கையினது, 00:07:56.000 --> 00:07:59.000 பயமறியா துர்க்கை. 00:07:59.000 --> 00:08:01.000 சிம்மநந்தினி என்றும் அவள் அழைக்கப்படுகிறாள், 00:08:01.000 --> 00:08:03.000 சிம்ம வாகனத்தை செலுத்திவளாதலால். NOTE Paragraph 00:08:05.000 --> 00:08:07.000 அதுபோல் நான், 00:08:07.000 --> 00:08:09.000 என் மன உறுதியையும், 00:08:09.000 --> 00:08:11.000 விட்டுக் கொடுக்காத் தன்மையையும் வாகனமாய் கொண்டு, 00:08:11.000 --> 00:08:14.000 மருத்துகளை ஆயுதமாய் கொண்டு, 00:08:14.000 --> 00:08:16.000 சிகிச்சையை தொடர்கையில், 00:08:16.000 --> 00:08:18.000 புற்றுநோய் எனும் போர்முனைக்கு நான் சென்று, 00:08:18.000 --> 00:08:21.000 அயோக்கிய உயிரனுக்களை கட்டுப்படுத்துகையில், 00:08:23.000 --> 00:08:26.000 புற்றுநோயிலிருந்து மீண்டவளாக நான் அறியப்பட விரும்பவில்லை, 00:08:26.000 --> 00:08:28.000 நோயை வென்றவளாகவே அறியப்பட விரும்புகிறேன். NOTE Paragraph 00:08:28.000 --> 00:08:30.000 இந்த நாட்டியப் படைப்பின் ஒரு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் 00:08:30.000 --> 00:08:33.000 "சிம்மநந்தினி." NOTE Paragraph 00:08:33.000 --> 00:08:36.000 (கைதட்டல்) NOTE Paragraph 00:08:36.000 --> 00:08:45.000 (இசை) NOTE Paragraph 00:15:09.000 --> 00:15:44.000 (கைதட்டல்)