எதிர்ம மற்றும் நேர்ம எண்களை எவ்வாறு பெருக்க வேண்டுமென்று நமக்கு தெரியும். இப்பொழுது அதை எவ்வாறு வகுக்கலாம் என்று பார்ப்போம். நீங்கள் பார்க்க போவதும் அதே போன்ற முறை தான். இரு எண்களும் நேர்ம எண்களாக இருந்தால் விடை நேர்மமாக இருக்கும். ஒரு எண் எதிர்மமாக இருந்தால், விடை எதிர்மம். இரண்டுமே எதிர்மம் என்றால், விடை நேர்மம். காணொளியை இடை நிறுத்தம் செய்து உங்களுக்கும் இதே விடை வருகிறதா என்று முயற்சியுங்கள். 8 வகுத்தல் எதிர்ம 2. 8 வகுத்தல் 2 என்றால், இது நேர்ம 4 ஆகும். ஆனால், இரண்டில் ஒரு எண் எதிர்மமாக இருக்கிறது, எனவே, இதன் விடை எதிர்மம் ஆகும். 8 வகுத்தல் -2 என்பது -4 ஆகும். அடுத்தது, -16 வகுத்தல் 4 இப்பொழுது கவனமாக பாருங்கள். நேர்ம 16 வகுத்தல் நேர்ம 4 என்றால், இது 4 ஆகும். ஆனால், இதில் ஒரு எண் எதிர்மம் ஆகும். இரண்டில் சரியாக ஒரு எண் எதிர்மம், எனவே, நமது விடையும் எதிர்மத்தில் இருக்கும். இப்பொழுது எதிர்ம 30 வகுத்தல் எதிர்ம 5 ஆகும். 30 வகுத்தல் 5 என்றால், 6 ஆகும். எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால் எதிர்மங்கள் நீங்கி விடை நேர்மத்தில் கிடைக்கும். தேவைப்பட்டால், இங்கு + என்று எழுதலாம். இது + 6 ஆகும். எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்பதன் விடை நேர்மம் ஆகும். 18 வகுத்தல் 2 இது சற்று குழப்பமான கேள்வி. எதிர்ம எண்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நேர்மம் வகுத்தல் நேர்மம், இதன் விடை நேர்மம் தான், எனவே, இதன் விடை + 9 ஆகும். இப்பொழுது சுவாரஸ்யமான கேள்விகளை பார்க்கலாம். இது சற்று கடினமான கணக்கு. இதில் பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளது. இங்கு எழுதியிருப்பது போல, முதலில் தொகுதியை பெருக்க வேண்டும். இந்த புள்ளி எதை குறிக்கிறது என்றால், இது மேலும் ஒரு பெருக்கல் குறி ஆகும். இதை "x" என்றும் எழுதலாம். இயற்கணிதத்தில் இந்த புள்ளியை தான் அதிகமாக பார்ப்பீர்கள். x என்பது வேறு ஒரு அமைப்பு ஆகும். இதனை "x" உடன் குழப்ப வேண்டாம், அது இயற்கணிதத்தில் வருவது. அதனால் தான் நான் புள்ளியை உபயோகிக்கிறேன். -7 பெருக்கல் 3 இது தொகுதியில் உள்ளது, இதன் விடையை -1 உடன் வகுக்க வேண்டும். எனவே, இந்த தொகுதி, -7 x 3 என்பது, 7 x 3 என்றால், 21 ஆகும். ஆனால், இதில் ஒன்று எதிர்மம் என்பதால், இது -21 ஆகும், எனவே, இது -21 வகுத்தல் -1 ஆகும் -21 வகுத்தல் -1, எதிர்மங்கள் நீங்கி விடும், இது நேர்மம் ஆகும். இது நேர்ம 21 ஆகும். இது அனைத்தையும் எழுதிக்கொள்கிறேன், நேர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால், விடை எதிர்மம் ஆகும். எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், விடை எதிர்மம் ஆகும். எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், அதன் விடை நேர்மம் ஆகும். பிறகு, நேர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், இதன் விடை நேர்மம் தான். இப்பொழுது, இறுதியாக ஒன்று, இது அனைத்தும் பெருக்கல் தான், இது சுவாரஸ்யமானது, நாம் 3 எண்களை பெருக்குகிறோம், நாம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் செல்லலாம் பிறகு, முதலில் எதிர்ம 2 பெருக்கல் -2 x -7 -2 பெருக்கல் -7 இவை இரண்டும் எதிர்மங்கள் தான், எதிர்மங்கள் நீங்கி விடும், இந்த பகுதி, இது 14 ஆகும். நாம் இப்பொழுது நேர்ம 14 ஐ எதிர்ம 1 உடன் பெருக்குகிறோம். நேர்மம் பெருக்கல் எதிர்மம் ஆகும். இதில் ஒன்று எதிர்ம எண். எனவே, இதன் விடை எதிர்மத்தில் இருக்கும். இதன் விடை -14 ஆகும். மேலும் சிலவற்றை பார்க்கலாம். இது சற்று குழப்பமான கணக்கு. 0 வகுத்தல் -5 0 வகுத்தல் -5 என்றால் என்ன. இது 0/-5 ஆகும். 0 வை எந்த எண்ணால் வகுத்தாலும் அதன் விடை 0 தான். இது மாறாக இருந்தால் என்ன செய்வது? அதாவது, -5 வகுத்தல் 0, நமக்கு ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவாகும் என்று தெரியாது. இதை நாம் இன்னும் வரையறுக்க வில்லை. இது போன்ற கூற்றுகளை நாம் வரையறுக்காதது என்று கூறுவோம். நாம் ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவென்று வரையறுக்கவில்லை. இதேபோன்று, 0 வகுத்தல் 0 என்றாலும், வரையறுக்காதது தான்.