A என்ற புள்ளியில் தொடங்கி B என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது..
எனவே இதை கதிர் என்று கூறலாம்..
மற்றும் A என்ற புள்ளியில் தொடங்கி C என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது
எனவே AC-ஐ கதிர் என்று கூறலாம்..
இந்த இரண்டு கோட்டிற்கும் பொதுவாக A உள்ளது
எனவே அது கோண முனை எனப்படும்...இரண்டு கதிருக்கும் ஒரே முனை இருந்தால்
அவை கோணம் எனப்படும்.. ஆங்கிலத்தில் angle-னு எழுதிக்கலாம்
.
இங்கு B & C ஆகியவை A என்ற ஒரே கோண முனையை
கொண்டுள்ளதால் இவை கோணம் ஆகும்..
ஆக A என்பது கோணமுனை ஆகும்..இது AB & AC கதிர்களுக்கு
கோணமுனையாக உள்ளதால் A என்பது கோணத்தின் கோணமுனை எனப்படும்..
இதை எப்படி குறிப்பிடுவது என்று பார்க்கலாம்..
கோணத்தை எப்பொழுதும் இடையில் தான் குறிப்பிட வேண்டும்...
அதை ∠ என்ற குறி கொண்டு தான் குறிப்பிட வேண்டும்...
.
.
∠BAC அல்லது ∠CAB என்று குறிப்பிடலாம்.
கோணமுனை இடையில் தான் வரவேண்டும்..
ஏனெனில் கோணமுனை இரண்டு கதிர்களுக்கு
பொதுவாக உள்ளதால் அதை
இடையில் தான் குறிப்பிட வேண்டும்..
மேலும் ஒரு கோணத்தை வரையலாம்..
இப்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர வரைஞ்சிக்கலாம்
இந்த கோட்டுத்துண்டை DE-னு குறிச்சிக்கலாம்
DE என்ற கோட்டுத்துண்டு மற்றும்
அடுத்து இந்த கதிர வெட்டுர மாறி பச்சை நிறத்துல ஒரு கதிர வரைஞ்சு, FG -னு குறிச்சிக்கலாம்
இந்த இரு கதிர்களும் வெட்டிக் கொள்ளும் புள்ளிய
H -னு குறிச்சிக்கலாம்
இந்த கோணத்தில் H என்பது கோணமுனை ஆகும்..
H என்ற கோண முனையில் இருந்து பார்த்தால், இங்கு ஒரு கோணம், இங்கு ஒரு கோணம்
இங்கு ஒன்னு, இங்கு ஒன்னு- னு கோணங்கள் கிடைக்கும்
எத்தன கோணங்கள் கிடைக்குது பார்க்கலாம் வாங்க
.
இதை நாம் கோணம் EHG அல்லது
கோணம் GHE -னும் சொல்லலாம்
அடுத்து கோணம் DHG அல்லது கோணம் GHD -னு சொல்லலாம்
அடுத்து கோணம் FHE அல்லது கோணம் EHF -னு சொல்லலாம்
கடைசியா கோணம் FHD அல்லது கோணம் DHF -னும் சொல்லலாம்
இப்பொழுது கோணங்களை எப்படி குறிப்பது என்பதை அறிந்தோம்..
அனைத்து கோணங்களும் ஒரே குறியில் குறிக்கப்பட்டாலும்
அவை அனைத்தும் சமமான கோணங்கள் ஆகாது..
இதற்கு ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம்.. முதல்ல இப்படி ஒரு கோணத்த வரைஞ்சு ABC - னு குறிச்சிக்கலாம்..
இத கோணம் BAC-னு எழுதிக்கலாம்.. அடுத்து
ஒரு கோணம் வரைஞ்சு XYZ -னு குறிச்சிக்கலாம்.. இத கோணம் XYZ -னு எழுதிக்கலாம்..
கோணம் XYZ என்பது கோணம் ABC ஐ விட
விரிந்து உள்ளது... இத ஆங்கிலத்தில் more open -னு எழுதிக்கலாம்
ABC என்ற கோணம் குறுகி உள்ளது..
இத ஆங்கிலத்தில் more closed -னு எழுதிக்கலாம்
கோணம் ABC விட கோணம் XYZ விரிந்து இருக்கு
எனவே கோணங்களை எவ்வளவு விரிந்து உள்ளது அல்லது
எவ்வளவு குறுகி உள்ளது என்பதை பொருத்து தான் கணக்கிட முடியும்..