[சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர் பென் ஈஸ்டர் [பென்] ஹலோ சால் [சால்] இந்தப் பயிற்சியை இவர்தான் உருவாக்கினார் 9ன் காரணிகள் எவை? இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம் [பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் ஒரு வரிசையில் 9 புள்ளிகள் பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து இடப் பக்கம் நகர்த்துங்கள் [சால்] ஆஹா, அருமை! [பென்] அதே 9 புள்ளிகள் மாற்றி அமைக்கப்படும் [சால்] ஓஹோ [பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும் [சால்] முயற்சி செய்வோம் ஒரே எண் வரவில்லை 3, ஒரே எண் வருகிறது ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள் என்று மாற்றி அமைக்கலாம் [பென்] ஆமாம் [சால்] 9 வருகிறது [பென்] ஆகவே, 3 ஒரு காரணி [சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம் 3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா? ஒருமுறை எழுதினால் போதுமா? [பென்] 3 ஒரு காரணி [பென்] ஒருமுறை எழுதினால் போதும் [சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு? [பென்] அது தவறுதான் [சால்] ஓ, அப்படியா? 3, 3 பெருக்கினால் 9 முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே? [பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான் [சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா? [பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும் [சால்] அவ்வளவுதானே? பிற எண்களையும் பார்ப்போம் 2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை அது ஏன் சரியாக வரவில்லை என்று நீங்கள் யோசிக்கலாம் [பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது [சால்] ஆமாம் அருமை! மீண்டும் 1, 9தான் வருகிறது மறுபடி எழுதவேண்டாம் [பென்] அவை ஒரே காரணிகள்தான் [சால்] விடையைப் பார்ப்போம் சரிதான்! இன்னொரு கணக்கு [பென்] சரி [சால்] இன்னொரு கணக்கு 16ன் காரணிகளைக் கண்டறிவோம் 1, 16 இரண்டும் காரணிகள் [பென்] ஆமாம் அவை எப்போதும் காரணிகள்தான் [சால்] 1, 16 என எழுதுகிறேன் இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம் இது சரிவரவில்லை இது சரிவரவில்லை தொடர்ந்து முயற்சி செய்வோம் இது 2ஆல் வகுபடுகிறது 2 காரணியாக இருக்கலாம் ஆமாம்! [பென்] ஆக, 2 ஒரு காரணி [சால்] 2 வரிசை, 8 புள்ளிகள் ஆக, 2, 8 இரண்டும் காரணிகள் [பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும் [சால்] ஆம் [பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8, எட்டால் வகுத்தால் 2 [சால்] ஆம் 16 புள்ளிகளை நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம் அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள் [பென்] ஆமாம் [சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள் 8 கொண்ட 2 குழுக்கள் 4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4 [பென்] 4 x 4 [சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன் [பென்] 4 ஒரு காரணி [சால்] 4 ஒரு காரணி இன்னும் ஏதாவது உண்டா? இன்னும் ஏதாவது உண்டா? 8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன இரண்டுமே காரணிகள்தான் அடுத்து, மீண்டும் 16, 1 அவ்வளவுதான் என நினைக்கிறேன் [பென்] நானும் [சால்] விடையை காண்போம் [இருவரும்] அருமை! [சால்] இந்தப் பயிற்சி அருமை [பென்] நன்றி [சால்] அருமை, சிறப்பு! [பென்] ஓ, நன்றி!