1 00:00:08,300 --> 00:00:11,860 என் பெயர் அலே ஃப்ளோரெஸ், நான் அலெக்ஸாவில் தயாரிப்பு மேலாளராக உள்ளேன். 2 00:00:12,500 --> 00:00:15,220 என் பெயர் டாக்டர். செல்ஸி ஹாப்ட். நான் அலென் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸில் பணியாற்றுகிறேன், 3 00:00:15,360 --> 00:00:19,500 நான் AI-சக்தியுட்டப்பட்ட கல்வி தேடு பொறி குறித்து வேலை செய்கிறேன். 4 00:00:21,180 --> 00:00:26,020 உங்களைச் சுற்றிலும், கணிப்பொறிகள் முடிவுகளை எடுக்கின்றன, மேலும் அந்த முடிவுகள் 5 00:00:26,020 --> 00:00:31,259 அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் செய்தியோடை ஊடாக நீங்கள் ஒரு இணைய தேடுதல் அல்லது ஸ்க்ரோல் செய்கையில், 6 00:00:31,260 --> 00:00:34,360 நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என கணிப்பொறிகளே தீர்மானிக்கின்றன. 7 00:00:34,360 --> 00:00:39,060 இப்போதே கணிப்பொறிகளால் உங்கள் முகத்தை அடையாளம் காண முடியும், உங்கள் குரலை புரிந்து கொள்ள முடியும், 8 00:00:39,060 --> 00:00:44,080 விரைவிலேயே அவை கார்கள் ஓட்டுவதையும், நோய்கள் கண்டறிவதையும், மனிதர்களை விடவும் சிறப்பாகச் செய்யும். 9 00:00:44,480 --> 00:00:46,900 ஆக, இவை ஒவ்வொன்றும் எவ்வாறு சாத்தியமாகிறது? 10 00:00:47,520 --> 00:00:52,960 நீங்கள் AI அல்லது செயற்கை அறிதிறன் என அழைக்கப்படும் விஷயத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். 11 00:00:53,320 --> 00:00:56,780 உண்மையான செயற்கை அறிதிறன் இன்னும் சில பத்தாண்டுகள் தொலைவில் உள்ளது. 12 00:00:57,200 --> 00:01:01,520 ஆனாலும், ஒரு வகை AI இன்று உள்ளது, அதுவே இயந்திரவழி கற்றல். 13 00:01:01,520 --> 00:01:05,360 இது நீங்கள் உங்களுக்கே தெரியாமல், அன்றாடம் ஊடாடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வகை AI ஆகும். 14 00:01:05,360 --> 00:01:10,700 இது, உலகின் மிகப்பெரும் சவால்களில் சிலவற்றை சமாளிப்பதற்கு நமக்கு உதவும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. 15 00:01:12,660 --> 00:01:18,180 கணிப்பொறிகள், 16 00:01:18,180 --> 00:01:21,360 திட்டவட்டமாக புரோக்ராம் செய்யப்படாமலேயே, பாங்குகளை புரிந்து கொள்ளுவதும் தீர்மானங்களை எடுப்பதுமே இந்த இயந்திரவழி கற்றல் ஆகும். 17 00:01:21,820 --> 00:01:27,580 ஒரு கணிப்பொறியை, முன் எப்போதும் நாம் செய்ததைக் காட்டிலும், முற்றிலும் வித்தியாசமான 18 00:01:27,580 --> 00:01:29,620 முறையில் புரோக்ராம் செய்வது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் ஆகும். 19 00:01:31,340 --> 00:01:36,860 இயந்திரவழி கற்றலில், நீங்கள் ஒரு கணிப்பொறியை படிப்படியாக புரோக்ராம் செய்வதற்குப் பதிலாக, பரிசோதித்துப் புரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைய பயிற்சிகளின் மூலம் நீங்கள் எவ்வாறு கற்றுக் கொள்வீர்களோ, 20 00:01:37,360 --> 00:01:43,760 அதே விதமாக கற்றுக் கொள்ளச் செய்ய நீங்கள் புரோக்ராம் செய்ய முடியும். 21 00:01:44,560 --> 00:01:48,880 கற்றுக் கொள்ளுதல் அனுபவத்தின் வாயிலாக வரும், இது மெஷின் லேர்னிங் விஷயத்திற்கும் பொருந்தும். 22 00:01:49,280 --> 00:01:53,700 இந்த விஷயத்தில், ”அனுபவம்” என்பது அதிகமான தரவைக் குறிக்கும். 23 00:01:54,500 --> 00:01:57,560 இயந்திரவழி கற்றல் எந்த விதமான தரவையும் ஏற்றுக் கொள்ளும்: 24 00:01:57,560 --> 00:02:04,520 படங்கள், வீடியோ, ஆடியோ, அல்லது டெக்ஸ்ட், அதோடு அந்த தரவில் உள்ள பாங்குகளை புரிந்து கொள்ளத் துவங்கும். 25 00:02:06,300 --> 00:02:11,120 தரவில் பாங்குகளை புரிந்து கொள்ள அது கற்றுக் கொண்டதும், அந்த பாங்குகளின் அடிப்படையில் அதனால் 26 00:02:11,120 --> 00:02:12,980 கணிப்புகளை செய்யவும் கற்றுக் கொள்ள முடியும். 27 00:02:13,340 --> 00:02:18,420 ஒரு காரின் படம் மற்றும் ஒரு மிதிவண்டியின் படம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை காண்பது என்பது போல. 28 00:02:20,600 --> 00:02:26,200 AI மற்றும் இயந்திரவழி கற்றல் ஆகியன மொத்தத்தில் சமுதாயத்தில் மிகப் பெரும் பங்கை ஆற்றுகிறது என்பதோடு, 29 00:02:26,640 --> 00:02:29,000 நம் அனைவரின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. 30 00:02:29,000 --> 00:02:34,600 அதனால் தான், அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை, சில நடைமுறை பயிற்சிகளுடன் கற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். 31 00:02:35,000 --> 00:02:39,000 உங்கள் சொந்த இயந்திரவழி கற்றல் மாதிரியை பயிற்றுவிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. 32 00:02:40,940 --> 00:02:47,020 நினைவில் கொள்ளுங்கள், AI என்பது எந்தவொரு கருவியையும் போன்றது தான்: முதலில் உங்களுக்கு அறிவு கிடைக்கிறது, பின்னர் ஆற்றல் கிடைக்கிறது!