0:00:08.300,0:00:11.860 என் பெயர் அலே ஃப்ளோரெஸ், நான் அலெக்ஸாவில் தயாரிப்பு[br]மேலாளராக உள்ளேன். 0:00:12.500,0:00:15.220 என் பெயர் டாக்டர். செல்ஸி ஹாப்ட். நான் அலென் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸில் பணியாற்றுகிறேன், 0:00:15.360,0:00:19.500 நான் AI-சக்தியுட்டப்பட்ட கல்வி தேடு பொறி குறித்து வேலை செய்கிறேன். 0:00:21.180,0:00:26.020 உங்களைச் சுற்றிலும், கணிப்பொறிகள் [br]முடிவுகளை எடுக்கின்றன, மேலும் அந்த முடிவுகள் 0:00:26.020,0:00:31.259 அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் செய்தியோடை ஊடாக நீங்கள் ஒரு இணைய[br]தேடுதல் அல்லது ஸ்க்ரோல் செய்கையில், 0:00:31.260,0:00:34.360 நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என கணிப்பொறிகளே தீர்மானிக்கின்றன. 0:00:34.360,0:00:39.060 இப்போதே கணிப்பொறிகளால் உங்கள் முகத்தை அடையாளம் காண முடியும், உங்கள் குரலை புரிந்து கொள்ள முடியும், 0:00:39.060,0:00:44.080 விரைவிலேயே அவை கார்கள் ஓட்டுவதையும், நோய்கள் கண்டறிவதையும், மனிதர்களை விடவும் சிறப்பாகச் செய்யும். 0:00:44.480,0:00:46.900 ஆக, இவை ஒவ்வொன்றும் எவ்வாறு சாத்தியமாகிறது? 0:00:47.520,0:00:52.960 நீங்கள் AI அல்லது செயற்கை அறிதிறன் என அழைக்கப்படும் விஷயத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். 0:00:53.320,0:00:56.780 உண்மையான செயற்கை அறிதிறன் இன்னும் சில பத்தாண்டுகள் தொலைவில் உள்ளது. 0:00:57.200,0:01:01.520 ஆனாலும், ஒரு வகை AI இன்று உள்ளது, அதுவே இயந்திரவழி கற்றல். 0:01:01.520,0:01:05.360 இது நீங்கள் உங்களுக்கே தெரியாமல், அன்றாடம் ஊடாடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வகை AI ஆகும். 0:01:05.360,0:01:10.700 இது, உலகின் மிகப்பெரும் சவால்களில் சிலவற்றை சமாளிப்பதற்கு நமக்கு உதவும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. 0:01:12.660,0:01:18.180 கணிப்பொறிகள், 0:01:18.180,0:01:21.360 திட்டவட்டமாக புரோக்ராம் செய்யப்படாமலேயே, பாங்குகளை புரிந்து கொள்ளுவதும் தீர்மானங்களை எடுப்பதுமே இந்த இயந்திரவழி கற்றல் ஆகும். 0:01:21.820,0:01:27.580 ஒரு கணிப்பொறியை, [br]முன் எப்போதும் நாம் செய்ததைக் காட்டிலும், முற்றிலும் வித்தியாசமான 0:01:27.580,0:01:29.620 முறையில் புரோக்ராம் செய்வது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் ஆகும். 0:01:31.340,0:01:36.860 இயந்திரவழி கற்றலில், நீங்கள் ஒரு கணிப்பொறியை படிப்படியாக புரோக்ராம் செய்வதற்குப் பதிலாக, பரிசோதித்துப் புரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைய பயிற்சிகளின் மூலம் நீங்கள் எவ்வாறு கற்றுக் கொள்வீர்களோ, 0:01:37.360,0:01:43.760 அதே விதமாக கற்றுக் கொள்ளச் செய்ய நீங்கள் புரோக்ராம் செய்ய முடியும். 0:01:44.560,0:01:48.880 கற்றுக் கொள்ளுதல் அனுபவத்தின் வாயிலாக வரும், இது மெஷின் லேர்னிங் விஷயத்திற்கும் பொருந்தும். 0:01:49.280,0:01:53.700 இந்த விஷயத்தில், ”அனுபவம்” என்பது அதிகமான தரவைக் குறிக்கும். 0:01:54.500,0:01:57.560 இயந்திரவழி கற்றல் எந்த விதமான தரவையும் ஏற்றுக் கொள்ளும்: 0:01:57.560,0:02:04.520 படங்கள், வீடியோ, ஆடியோ, அல்லது டெக்ஸ்ட், அதோடு [br]அந்த தரவில் உள்ள பாங்குகளை புரிந்து கொள்ளத் துவங்கும். 0:02:06.300,0:02:11.120 தரவில் பாங்குகளை புரிந்து கொள்ள அது கற்றுக் கொண்டதும், அந்த பாங்குகளின் அடிப்படையில் அதனால் 0:02:11.120,0:02:12.980 கணிப்புகளை செய்யவும் கற்றுக் கொள்ள முடியும். 0:02:13.340,0:02:18.420 ஒரு காரின் படம் மற்றும் ஒரு மிதிவண்டியின் படம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை காண்பது என்பது போல. 0:02:20.600,0:02:26.200 AI மற்றும் இயந்திரவழி கற்றல் ஆகியன மொத்தத்தில் சமுதாயத்தில் மிகப் பெரும் பங்கை ஆற்றுகிறது என்பதோடு, 0:02:26.640,0:02:29.000 நம் அனைவரின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. 0:02:29.000,0:02:34.600 அதனால் தான், அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை, சில நடைமுறை பயிற்சிகளுடன் கற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். 0:02:35.000,0:02:39.000 உங்கள் சொந்த இயந்திரவழி கற்றல் மாதிரியை பயிற்றுவிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. 0:02:40.940,0:02:47.020 நினைவில் கொள்ளுங்கள், AI என்பது எந்தவொரு கருவியையும் போன்றது தான்: முதலில் உங்களுக்கு அறிவு கிடைக்கிறது, பின்னர் ஆற்றல் கிடைக்கிறது!