என் பெயர் அலே ஃப்ளோரெஸ், நான் அலெக்ஸாவில் தயாரிப்பு
மேலாளராக உள்ளேன்.
என் பெயர் டாக்டர். செல்ஸி ஹாப்ட். நான் அலென் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸில் பணியாற்றுகிறேன்,
நான் AI-சக்தியுட்டப்பட்ட கல்வி தேடு பொறி குறித்து வேலை செய்கிறேன்.
உங்களைச் சுற்றிலும், கணிப்பொறிகள்
முடிவுகளை எடுக்கின்றன, மேலும் அந்த முடிவுகள்
அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் செய்தியோடை ஊடாக நீங்கள் ஒரு இணைய
தேடுதல் அல்லது ஸ்க்ரோல் செய்கையில்,
நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என கணிப்பொறிகளே தீர்மானிக்கின்றன.
இப்போதே கணிப்பொறிகளால் உங்கள் முகத்தை அடையாளம் காண முடியும், உங்கள் குரலை புரிந்து கொள்ள முடியும்,
விரைவிலேயே அவை கார்கள் ஓட்டுவதையும், நோய்கள் கண்டறிவதையும், மனிதர்களை விடவும் சிறப்பாகச் செய்யும்.
ஆக, இவை ஒவ்வொன்றும் எவ்வாறு சாத்தியமாகிறது?
நீங்கள் AI அல்லது செயற்கை அறிதிறன் என அழைக்கப்படும் விஷயத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
உண்மையான செயற்கை அறிதிறன் இன்னும் சில பத்தாண்டுகள் தொலைவில் உள்ளது.
ஆனாலும், ஒரு வகை AI இன்று உள்ளது, அதுவே இயந்திரவழி கற்றல்.
இது நீங்கள் உங்களுக்கே தெரியாமல், அன்றாடம் ஊடாடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வகை AI ஆகும்.
இது, உலகின் மிகப்பெரும் சவால்களில் சிலவற்றை சமாளிப்பதற்கு நமக்கு உதவும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.
கணிப்பொறிகள்,
திட்டவட்டமாக புரோக்ராம் செய்யப்படாமலேயே, பாங்குகளை புரிந்து கொள்ளுவதும் தீர்மானங்களை எடுப்பதுமே இந்த இயந்திரவழி கற்றல் ஆகும்.
ஒரு கணிப்பொறியை,
முன் எப்போதும் நாம் செய்ததைக் காட்டிலும், முற்றிலும் வித்தியாசமான
முறையில் புரோக்ராம் செய்வது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் ஆகும்.
இயந்திரவழி கற்றலில், நீங்கள் ஒரு கணிப்பொறியை படிப்படியாக புரோக்ராம் செய்வதற்குப் பதிலாக, பரிசோதித்துப் புரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைய பயிற்சிகளின் மூலம் நீங்கள் எவ்வாறு கற்றுக் கொள்வீர்களோ,
அதே விதமாக கற்றுக் கொள்ளச் செய்ய நீங்கள் புரோக்ராம் செய்ய முடியும்.
கற்றுக் கொள்ளுதல் அனுபவத்தின் வாயிலாக வரும், இது மெஷின் லேர்னிங் விஷயத்திற்கும் பொருந்தும்.
இந்த விஷயத்தில், ”அனுபவம்” என்பது அதிகமான தரவைக் குறிக்கும்.
இயந்திரவழி கற்றல் எந்த விதமான தரவையும் ஏற்றுக் கொள்ளும்:
படங்கள், வீடியோ, ஆடியோ, அல்லது டெக்ஸ்ட், அதோடு
அந்த தரவில் உள்ள பாங்குகளை புரிந்து கொள்ளத் துவங்கும்.
தரவில் பாங்குகளை புரிந்து கொள்ள அது கற்றுக் கொண்டதும், அந்த பாங்குகளின் அடிப்படையில் அதனால்
கணிப்புகளை செய்யவும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு காரின் படம் மற்றும் ஒரு மிதிவண்டியின் படம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை காண்பது என்பது போல.
AI மற்றும் இயந்திரவழி கற்றல் ஆகியன மொத்தத்தில் சமுதாயத்தில் மிகப் பெரும் பங்கை ஆற்றுகிறது என்பதோடு,
நம் அனைவரின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது.
அதனால் தான், அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை, சில நடைமுறை பயிற்சிகளுடன் கற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
உங்கள் சொந்த இயந்திரவழி கற்றல் மாதிரியை பயிற்றுவிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.
நினைவில் கொள்ளுங்கள், AI என்பது எந்தவொரு கருவியையும் போன்றது தான்: முதலில் உங்களுக்கு அறிவு கிடைக்கிறது, பின்னர் ஆற்றல் கிடைக்கிறது!