WEBVTT 00:00:00.789 --> 00:00:04.600 "இயற்கை விதிகள் என்பவை, கடவுளின் கணிதச் சிந்தனைகள்தான்.” 00:00:04.862 --> 00:00:07.523 இப்படிச் சொன்னவர், அலெக்ஸாண்ட்ரியாவின் யூக்லிட் 00:00:07.523 --> 00:00:12.655 அவர் கிமு 300ல் கிரேக்க நாட்டில் வாழ்ந்த கணித மேதை, தத்துவ அறிஞர் 00:00:12.655 --> 00:00:19.691 இந்த யூக்லிட், ஜியோமிதியின் தந்தையாகக் கருதப்படுகிறார் 00:00:19.691 --> 00:00:22.663 நீங்கள் கடவுளைப்பற்றி என்ன நினைத்தாலும், இது ஒரு நல்ல வாசகமே! 00:00:22.663 --> 00:00:25.054 கடவுள் இருக்கிறாரா, இல்லையா, அவருடைய தன்மை என்ன, 00:00:25.054 --> 00:00:27.516 அதையெல்லாம் தாண்டி, இது இயற்கை அடிப்படையை பேசுகிறது 00:00:27.516 --> 00:00:31.649 இயற்கை விதிகள், கடவுளின் கணிதச் சிந்தனைகள் 00:00:31.649 --> 00:00:35.016 இயற்கை விதிகள் அனைத்துக்கும் கணிதமே அடிப்படை 00:00:35.016 --> 00:00:37.802 ஜியோமிதியின் ஆங்கிலச் சொல் ஜியோமிட்ரி கிரேக்கத்திலிருந்து வந்தது 00:00:37.802 --> 00:00:40.983 ’ஜியோ’ என்றால் கிரேக்க மொழியில் ’பூமி’ 00:00:40.983 --> 00:00:44.211 ’மெட்ரி’ என்றால் கிரேக்க மொழியில் ’அளத்தல்’ 00:00:44.211 --> 00:00:47.183 ‘மெட்ரிக்’ அமைப்பைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 00:00:47.183 --> 00:00:50.132 யூக்லிட் ஜியோமிதியின் தந்தையாகக் கருதப்படுகிறார் 00:00:50.132 --> 00:00:52.802 இதன் காரணம், அவர்தான் முதலில் ஜியோமிதியைப் படித்தார் என்பதல்ல 00:00:52.802 --> 00:00:56.285 ஆதிமனிதர்கள் ஜியோமிதி படித்திருப்பார்கள் 00:00:56.562 --> 00:01:00.024 அவர்கள் நிலத்தில் இப்படிக் கிடந்த இரண்டு குச்சிகளைப் பார்த்திருப்பார்கள் 00:01:00.024 --> 00:01:02.462 இப்படி வேறு குச்சிகளையும் பார்த்திருப்பார்கள் 00:01:02.462 --> 00:01:05.178 ‘இந்தத் திறப்பு பெரிதாக உள்ளது ஏன்?’ என யோசித்திருப்பார்கள் 00:01:05.178 --> 00:01:13.654 அல்லது, இப்படிக் கிளை வளர்ந்த ஒரு மரத்தை அவர்கள் பார்த்திருப்பார்கள் 00:01:13.654 --> 00:01:18.274 ‘இந்தத் திறப்புக்கும் இந்தத் திறப்புக்கும் ஏதோ தொடர்பு உள்ளது’ என யோசித்திருப்பார்கள் 00:01:18.274 --> 00:01:19.737 அல்லது, அவர்கள் தங்களையே 00:01:19.737 --> 00:01:26.123 ’வட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கும், அதன் குறுக்குப் பகுதிக்கும் உள்ள விகிதம் என்ன? 00:01:26.123 --> 00:01:28.352 அது எல்லா வட்டத்துக்கும் ஒரேமாதிரி இருக்குமா? 00:01:28.352 --> 00:01:31.812 அதை எப்படி உறுதிப்படுத்துவது?’ என்று கேட்டுக்கொண்டிருப்பார்கள் 00:01:31.812 --> 00:01:34.412 ஆதி கிரேக்கர்கள் 00:01:34.412 --> 00:01:39.010 ஜியோமிதிபற்றி நிறைய சிந்தித்தார்கள் 00:01:39.010 --> 00:01:43.259 உதாரணமாக, கிரேக்கக் கணித மேதை பிதாகரஸ் 00:01:43.259 --> 00:01:45.535 (அவர் யூல்கிடுக்கு முன் வந்தவர்) 00:01:45.535 --> 00:01:54.511 மக்கள் அடிக்கடி ‘யூக்லிட் ஜியோமிதி’பற்றிப் பேசுவது ஏன் என்றால், 00:01:54.511 --> 00:01:59.832 (இது ராஃபெல் வரைந்த யூக்லிட் ஓவியம், அவர் எப்படி இருந்தார் என யாருக்கும் தெரியாது, 00:01:59.832 --> 00:02:05.793 அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார், தெரியாது. ராஃபெல் யூக்லிடைக் கற்பனை செய்து 00:02:05.793 --> 00:02:08.383 அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் கற்பித்த காட்சியை வரைந்தார்) 00:02:08.383 --> 00:02:14.397 யூக்லிட் “ஜியோமிதியின் தந்தை” ஆகக் காரணம், அவர் எழுதிய “யூக்லிட் கூறுகள்”தான் 00:02:14.397 --> 00:02:21.263 ”யூக்லிட் கூறுகள்” 13 தொகுதி கொண்ட பாடப் புத்தகம் 00:02:21.263 --> 00:02:24.773 (இன்றுவரை உலகின் மிகப் பிரபலமான பாடப் புத்தகம் அதுவாக இருக்கலாம்) 00:02:24.773 --> 00:02:31.441 அந்தத் தொகுதிகளில் அவர் ஜியோமிதி, எண் கோட்பாடு, திட (முப்பரிமாண) ஜியோமிதி 00:02:31.441 --> 00:02:37.524 போன்றவற்றைத் தீவிரமாகச் சிந்தித்துத் தர்க்கரீதியில் எழுதினார் 00:02:37.524 --> 00:02:40.682 இதோ, இதுதான் அதன் ஆங்கில வடிவத்தின் முன் அட்டை 00:02:40.682 --> 00:02:44.955 “யூக்லிட் கூறுகள்” நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 00:02:44.955 --> 00:02:47.532 இது 1570ல் மொழிபெயர்க்கப்பட்டது 00:02:47.532 --> 00:02:51.851 முதலில் அது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது, பின்னர் மத்தியகாலங்களில் 00:02:51.851 --> 00:02:55.334 அது அரேபியர்களால் முன்னிறுத்தப்பட்டு, அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 00:02:55.334 --> 00:03:02.393 மத்தியகாலங்களின் பிற்பகுதியில் லத்தீன், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது 00:03:02.393 --> 00:03:05.806 இங்கே “தீவிர ஆய்வு” என்பது என்ன? 00:03:05.806 --> 00:03:14.374 ”செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின் வர்க்கம், அதன் விட்டத்தின் வர்க்கத்துக்கு 00:03:14.374 --> 00:03:18.182 சமம்” என்பதுபோல் அவர் சொல்லி நிறுத்தவில்லை (இதை நாம் பின் விளக்கமாகப் பேசுவோம்) 00:03:18.182 --> 00:03:24.475 அவர் “சரியாக இருக்கலாம் என சொல்வது போதாது, அது சரியே என நிரூபிக்க ஆசை” என்கிறார் 00:03:24.475 --> 00:03:29.723 ”கூறுகள்” நூலில் ஆறு தொகுதிகள் சமதள ஜியோமிதியைப் பேசுபவை. அவற்றில் அவர் 00:03:33.215 --> 00:03:37.721 அடிப்படை ஊகங்களைப்பற்றிப் பேசத் தொடங்குகிறார். 00:03:37.721 --> 00:03:43.747 அந்த அடிப்படை ஊகங்களை ஜியோமிதிப் பேச்சில் “axioms" அல்லது “postulates" என்பார்கள் 00:03:43.747 --> 00:03:51.549 இதிலிருந்து அவர் பல வாசகங்களை கண்டறிந்தார், இவற்றை Propositions(அ) Theorems என்பார்கள் 00:03:51.549 --> 00:03:55.729 இப்போது அவர், ‘இது சரி, இது சரி, என்றால் இது சரியாகதான் இருக்கவேண்டும்’ என்கிறார் 00:03:55.729 --> 00:03:58.492 மற்றது சரியாக இருக்காது என்றும் அவரால் நிரூபிக்க இயலுகிறது 00:03:58.492 --> 00:04:01.255 இது சரியல்ல என்று அவரால் நிரூபிக்க இயலுகிறது 00:04:01.255 --> 00:04:04.042 அவர் “நான் பார்த்த வட்டங்கள் இப்படி” என்று சொல்லவில்லை 00:04:04.042 --> 00:04:06.155 “இது உண்மை என்று நிரூபித்துவிட்டேன்” என்றார் 00:04:06.155 --> 00:04:11.402 அங்கிருந்து அவர் மற்ற Prepositions அல்லது Theoremsகளைக் கண்டறிந்தார் 00:04:11.402 --> 00:04:14.096 (இதைச் செய்ய நாம் நமது மூல "axioms" சிலவற்றைப் பயன்படுத்தலாம்) 00:04:14.096 --> 00:04:17.068 இதன் சிறப்பு, அதற்குமுன் யாரும் அப்படிச் செய்ததில்லை 00:04:17.068 --> 00:04:23.477 பல விஷயங்களைத் துளி சந்தேகமில்லாதபடி தீவிரமாகச் செயல்பட்டு நிரூபித்தார் 00:04:23.477 --> 00:04:30.095 இங்கே ஒரு நிரூபணம், அங்கே ஒரு நிரூபணம் அல்ல,முழு அறிவுத் தொகுப்பையும் நிரூபித்தார் 00:04:30.884 --> 00:04:39.692 பாடங்களைத் தீவிரமாக ஆய்ந்து, axioms, postulates, theorems, propositionsஐ உருவாக்கினார் 00:04:39.692 --> 00:04:42.022 (theorems, propositions இரண்டும் ஒன்றுதான்) 00:04:43.069 --> 00:04:47.881 யூக்லிடுக்குப்பின் 2,000 ஆண்டுகள் அவரது புத்தகம் நிலைத்திருந்தது 00:04:47.881 --> 00:04:55.427 யூக்லிடின் “கூறுகளை” வாசித்து, புரிந்துகொள்ளாதவரைப் படித்தவராகவே யாரும் எண்ணமாட்டார்கள் 00:04:55.427 --> 00:04:59.862 மேற்கு உலகில் அதிகம் அச்சான 2வது நூல், “யூக்லிடின் கூறுகள்”தான், 00:04:59.862 --> 00:05:01.581 பைபிளுக்கு அடுத்த இடம் 00:05:01.581 --> 00:05:04.344 பைபிளுக்கு அடுத்து, ஒரு கணக்கு பாடப் புத்தகம் 00:05:04.344 --> 00:05:07.943 அச்சகங்கள் வந்தவுடன் “முதலில் பைபிள் அச்சிடுவோம், அடுத்து என்ன?” என யோசித்து 00:05:07.943 --> 00:05:09.940 யூக்லிடின் கூறுகளை அச்சிட்டார்கள் 00:05:10.525 --> 00:05:16.606 சமீப காலம்வரை அது பொருந்துவதாகவே இருந்தது, 00:05:16.606 --> 00:05:19.416 சமீப காலம் என்றால், சுமார் 150-160 ஆண்டுகளுக்குமுன் 00:05:19.816 --> 00:05:23.779 இந்த வாசகத்தைச் சொன்னவர் ஆபிரகாம் லிங்கன் 00:05:23.779 --> 00:05:26.612 சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவர், அவரது இந்தப் படம் எனக்குப் பிடிக்கும் 00:05:26.612 --> 00:05:29.747 லிங்கன் முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தபோது எடுத்தது 00:05:29.747 --> 00:05:35.900 அவர் யூக்லிட் கூறுகளின் பெரிய ரசிகர், அவரது மனத்தை ஒழுங்குபடுத்த அது உதவியதாம் 00:05:35.900 --> 00:05:38.872 அவர் குதிரை ஓட்டும்போது யூக்லிடின் கூறுகளைப் படிப்பார் 00:05:38.872 --> 00:05:40.777 வெள்ளை மாளிகையிலும் யூக்லிட் கூறுகளைப் படித்தார் 00:05:41.207 --> 00:05:43.795 இது லிங்கன் சொன்ன வாசகம், 00:05:43.795 --> 00:05:48.415 ”சட்டப் புத்தகங்களில் அடிக்கடி Demonstrate என்ற சொல் வரும், 00:05:48.415 --> 00:05:53.454 அது எனக்குப் புரிந்துவிட்டதாக முதலில் நினைத்தேன், புரியவில்லை எனப் பிறகுதான் புரிந்தது 00:05:53.454 --> 00:05:59.375 புரிந்துகொள்ளுதல் அல்லது நிரூபித்தலுக்கும் Demonstrateக்கும் என்ன வித்தியாசம்? 00:05:59.375 --> 00:06:02.580 மற்ற நிரூபணங்களிலிருந்து இந்த Demonstration எப்படி மாறுபடுகிறது? 00:06:02.580 --> 00:06:08.454 லிங்கன் சொல்கிறார், Demonstration என்றால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தல் 00:06:08.454 --> 00:06:13.307 தீவிரமாக நிரூபிக்கவேண்டும். சும்மா எதையோ நினைத்தாலோ சிந்தித்தாலோ போதாது 00:06:13.307 --> 00:06:17.998 “நான் வெப்ஸ்டர் அகராதியைப் பார்த்தேன்” (லிங்கன் காலத்தில் வெப்ஸ்டர் அகராதி இருந்துள்ளது) 00:06:17.998 --> 00:06:23.060 அங்கே சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தல் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 00:06:23.060 --> 00:06:28.005 அது எந்தமாதிரி நிரூபணம் என்று புரியவில்லை. பல விஷயங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி 00:06:28.005 --> 00:06:32.649 நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை Demonstrationஆக இருந்தனவா? 00:06:32.649 --> 00:06:35.668 நான் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளேனா? 00:06:35.668 --> 00:06:41.241 நான் எல்லா அகராதிகள், மேற்கோள் நூல்களையும் பார்த்தேன். பலன் இல்லை. 00:06:41.241 --> 00:06:45.676 கண் தெரியாத ஒருவருக்கு ‘நீலம்’ என்ற சொல்லை விளக்குவதுபோல் அது இருந்தது. 00:06:45.676 --> 00:06:55.150 நிறைவாக நான் சொன்னேன், ‘லிங்கன், இந்த சொல் புரியாவிட்டால், நீ வழக்கறிஞராக இயலாது.’ 00:06:55.150 --> 00:07:00.467 நான் ஸ்ப்ரிங்ஃபீல்டை விட்டு என் தந்தை வீட்டுக்கு சென்றேன், அங்கேயே தங்கி 00:07:00.467 --> 00:07:04.345 யூக்லிடின் ஆறு புத்தகங்களையும் வாசித்தேன். 00:07:04.345 --> 00:07:06.806 (அவர் சொல்வது தள ஜியோமிதிதொடர்பான ஆறு புத்தகங்களை) 00:07:06.806 --> 00:07:11.868 அப்போது எனக்கு ‘Demonstrate'ன் பொருள் புரிந்தது. சட்டம் படிப்பதற்குத் திரும்பினேன் 00:07:11.868 --> 00:07:17.348 ஆக, சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவர் யாரேனும் சிறந்த வழக்கறிஞராக விரும்பினால் 00:07:17.348 --> 00:07:24.128 அவர் யூக்லிடின் கூறுகள் 6 தொகுதிகளில் உள்ள Propositionகளையெல்லாம் நிரூபிக்கவேண்டும் என நினைத்தார் 00:07:24.128 --> 00:07:30.885 அதுமட்டுமில்லை, அவர் வெள்ளை மாளிகை வந்ததும், தன் மனத்தை ஒழுங்குபடுத்தி 00:07:30.885 --> 00:07:32.954 சிறந்த அதிபரானார் 00:07:33.447 --> 00:07:36.922 ஆகவே, நாம் ஜியோமிதிப் பாடங்களில் கற்கவுள்ளது என்னவென்றால் 00:07:36.922 --> 00:07:42.806 நாம் விஷயங்களைத் தீவிரமாக நிரூபிப்பது எப்படி? 00:07:42.868 --> 00:07:49.624 2,300 ஆண்டுகளுக்குமுன் யூக்லிட் படித்ததை நாம் நவீன முறையில் படிக்கவுள்ளோம் 00:07:49.624 --> 00:07:59.812 பல வாசகங்களை நன்கு புரிந்துகொண்டு, நாம் சொல்வது எதுவானாலும் 00:07:59.812 --> 00:08:01.972 அதை நிஜமாக நிரூபிக்கவேண்டும் 00:08:01.972 --> 00:08:06.388 இவை அடிப்படையான, “நிஜமான” கணக்குகள் 00:08:06.388 --> 00:08:08.525 Arithmetic என்பது வெறும் கணக்கிடல்தான் 00:08:08.525 --> 00:08:12.820 ஜியோமிதிதான் (யூக்லிட் ஜியோமிதியை நாம் காணப்போகிறோம்) நிஜமான கணிதம் 00:08:12.820 --> 00:08:17.000 -- 00:08:17.000 --> 00:08:21.388 சில ஊகங்களைச் செய்துகொண்டு, அவற்றிலிருந்து பிற விஷயங்களைக் கண்டறிவது