Tamil sottotitoli

← Eating Insects to Save a Forest

Ottieni il codice di inserimento
22 Lingue

Mostrare Revisione 2 creata 04/16/2019 da SethuRaman Arunachalam.

  1. "வலாலே இரே ஹிஃபானா பஹானா” எதை
    சுட்டிக்காட்டுகிறது என்றால்
  2. மடகாஸ்கர் மக்களின் பரந்த மனதை.
  3. அது ஒரு பழமொழி, அதன் இன்னொரு பொருள்,
    என்னிடம் ஒரு கிரிக்கெட் பூச்சியிருந்தால்,
  4. அதில் பாதியை உன்னோடு பகிர்வேன்
  5. அதையே உண்மையில் செய்ய
    முயல்கிறோம்.
  6. மடகாஸ்கருக்கு முழுதும் சொந்தமான
    ஒன்றையே நாங்கள் கையில் எடுத்து
  7. அதை அவர்களுடன் பகிர நினைக்கிறோம்.
  8. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அறிவியலை
    பயன்படுத்த நினைப்பவன் நான்.
  9. எனக்கு சிறிது காலம் பிடித்தது,
  10. ஒன்றை புரிந்து கொள்ளாமல் அதை
    பாதுகாக்க முடியும் என்பதை உணர
  11. மக்கள் ஏன் பாதுகாப்பது இல்லை என்று.
  12. மடகாஸ்கரில், உணவு ஒரு குறிப்பிட
    வேண்டிய பிரச்சினை.
  13. மடகாஸ்கரின் மக்கள் தொகை
    தொடர்ந்து உயர்கிறது,
  14. நான் இங்கு பணி செய்யும் காலம் தொட்டு,
    புல்வெளிகள்
  15. கால்நடை மேய்ச்சலால்
  16. கெடுகின்றன. 10% காடுகளே மீதமிருக்கின்றன.
  17. அதோடு நிற்காமல்,
  18. ஐந்து வயதுக்கு குறைவான 53%
    குழந்தைகளுக்கு போதிய உணவில்லை.
  19. அவர்கள் பசியோடு இருக்கிறார்கள், தெரிகிறது.
  20. ஆனால், அவர்ளுக்கு எது உணவு?
  21. அவர்களுக்கு ஒரு புதிய உணவு உற்பத்தி தேவை.
  22. புதியது என்று சொன்னால், அவர்களது
  23. மரபுக்கு உட்பட்டதாக.
  24. ஆனால் சில தொழில்நுட்பங்களை புகுத்தி
  25. அதன் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தி
    பெரிய அளவில்
  26. மக்களுக்கும் அவ்வுணவு கிடைக்கும்
    படி செய்ய முடியும்.
  27. மக்கள் பழங்காலத்திலிருந்தே பூச்சிகளை
    உண்டு வந்து இருக்கிறார்கள்.
  28. உலகெங்கும் பாரம்பரிய கலாசாரங்களில் பூச்சி
    உணவாக இருக்கிறது.
  29. ஆய்வுக்ள தெரிவிப்பது சில பூச்சிகளில்
  30. இருந்து அதிக நுண்ஊட்டச்சத்து
    கிடைப்பதாக. பூச்சி புரதமாக,
  31. பவுடராக அல்லது முழு பூச்சியாக
    உண்டால்
  32. மாட்டிறைச்சியை விட அதிக சத்தானது.
  33. பூச்சி உணவு குறைந்த ஆச்சிரியப்படுமளவு
    தாக்கத்தையே
  34. சுற்றுச்சூழலில் ஏற்படுத்துவதால்
  35. மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கு
  36. இது தான் ஒரே உண்மையான தீர்வு.
  37. இன பெருக்க பண்ணைகளை இரண்டு
    வகையாக பிரிக்க முடிவு
  38. செய்து முயற்சித்தோம்.
  39. முதலாவது, மடகாஸ்கரில் நிலவும் சத்துணவு
    பஞ்ச பிரச்சினைக்கு தீர்வாக
  40. கிரிக்கெட் பூச்சியை தேர்வு செய்தோம்.
  41. அதன் பெயர் “க்ரைலஸ் மடகாஸ்கரின்ஸிஸ்,”
  42. அதை இப்போது பண்னைகளில் வளர்க்கிறோம்.
  43. அதற்கு வலாலா ஃபார்ம்ஸ் என்று
    பெயரிட்டு இருக்கிறோம்.
  44. அவற்றை நாங்கள் பயன்படுத்தி
  45. ஒரு குடும்ப உணவு திட்டத்தை வகுத்து
  46. உணவு பஞ்சம் பாதித்த பகுதிகளான
    தென்மேற்கு மடகாஸ்கரில்
  47. அது விநியோகிக்கப்படுகிறது.
  48. இரண்டாவது கிராமங்களுக்கு ஒரு
    தீர்வாக அவர்களது புரத தேவையை
  49. அவர்களே வளர்த்து எடுத்து அதன்
  50. சுவையை கண்டு அவர்கள் விரும்பி உண்பார்கள்.
  51. மக்கள், உணவிற்காக லெமுர்களை
    கொன்று தின்கிறார்கள்.
  52. எனவே இப்போது வளர்க்கும் சுவையான
    மொறுமொறுப்பான பூச்சியின்
  53. பெயர் ஃபுல்கோரிட் ,
    மலகாசி மொழியில் செகுந்திரி--
  54. லெமுர் இறைச்சி உணவு நுகர்வுக்கு
    மாற்றாக இருக்கிறது.
  55. இப்போது நாங்கள் ஒரு பீன்சை வளர்க்கிறோம்,
    செகுந்திரியை வளர்க்கும் பொருட்டு,
  56. அப்புறம் மக்கள் சுவையான இந்த
    செகுந்திரியை உண்பார்கள்
  57. லெமுர்களை உண்பதற்கு பதிலாக.
  58. இது ஒரு முக்கிய அறிவியல்.
  59. இப்போது நிறைய மாணவர்களை ஈடுபடுத்தி
    உண்ணத் தகுந்த பூச்சிகளை ஆய்வு செய்கிறோம்,
  60. பல்வகை உயிரினங்களை ஆவனப்படுத்த
    ஈடுபடுத்தப்பட்டதை விட அதிகமாகவே,
  61. அம்மாணவர்களும் அதில் வெற்றி பெறுகிறார்கள்,
  62. நிறைய கற்று கொள்கிறார்கள்,
  63. காரணம் அதன் நேரடி பயன்பாட்டை
    காண்கிறார்கள்.
  64. உணவுக்கு வழியில்லாத சூழல் மேம்பாட்டை
    எப்படி பேச முடியும்?
  65. ஏதாவது செய்தாக வேண்டும்,
    நாம் காத்திருக்க முடியாது.