Return to Video

பொத்தான் என்பது எப்படி நடப்பை மாற்றியது

  • 0:00 - 0:03
    கெட்ட பொத்தான்களே இல்லை,
    கெட்ட நபர்கள் தான் உள்ளனர்.
  • 0:03 - 0:04
    அது கேட்க எப்படி உள்ளது? சரியாக உள்ளதா?
  • 0:04 - 0:05
    [சிறிதான ஒன்று.]
  • 0:05 - 0:06
    [பெரிய கருத்து.]
  • 0:07 - 0:10
    [பொத்தான் பற்றி ஈசாக்கு மிஸ்ராஹி]
  • 0:11 - 0:13
    பொத்தானை முதல்முறையாகக் கண்டுபிடித்தது
    யார் என்று யாருக்கும் தெரியாது.
  • 0:13 - 0:17
    கிமு 2000 ல் கூட அது அறிமுகப்படுத்தப்பட்டு
    இருக்கலாம்.
  • 0:17 - 0:19
    தொடக்கத்தில், பொத்தான்கள் அலங்காரங்களாய்
    தான் காணப்பட்டு இருந்தன —
  • 0:19 - 0:21
    தனது ஆடையில் தைத்து வைக்கும்
    ஒன்றாக மட்டும் தான்.
  • 0:21 - 0:24
    அதன் பிறகு, சுமார் 3000 ஆண்டுகளுக்கு பிறகு,
  • 0:24 - 0:26
    ஒருவர் பொத்தான் துளையை உண்டாக்கி,
  • 0:26 - 0:28
    பொத்தான்களை பயனுள்ளவையாக மாற்றினார்.
  • 0:28 - 0:32
    பொத்தானும் பொத்தான் துளையும் மிக உபயோகமுள்ள
    கண்டுபிடிப்புகள்.
  • 0:32 - 0:34
    இந்த பொத்தான், துளைக்குள் நுழைவது மட்டுமின்றி,
  • 0:34 - 0:36
    அங்கே விழாமல் நிற்கிறது.
  • 0:36 - 0:39
    இதனால், பொத்தான்கள் திறக்க போவதல்ல என
    தெரிந்து, நீங்கள் பாதுகாப்பை உணர்கிறீர்கள்.
  • 0:39 - 0:43
    ஐரோப்ப நடுக்காலத்தில் இருந்து, பொத்தானின்
    வடிவமைப்பு அதிக மாற்றம் கண்டதில்லை.
  • 0:43 - 0:46
    வரலாற்றின் மிக நிரந்தரமான வடிவமைப்பாக
    அமைகின்றது.
  • 0:46 - 0:50
    என்னை பொறுத்தவரை, வட்டமான
    பொத்தான்கள் தான் சிறந்தவை.
  • 0:50 - 0:52
    ஒன்று, ஒரு சிறிய கொக்கி கொண்ட வட்டமான
    பொத்தானாக இருக்கும்,
  • 0:52 - 0:57
    அல்லது ஓரளவு வட்டமான, விளிம்பு கொண்டு,
    அல்லது விளிம்பில்லாமல்,
  • 0:57 - 0:58
    இரண்டு துளைகள் அல்லது நான்கு துளைகள்
    கொண்டு இருக்கும்.
  • 0:58 - 1:01
    பொத்தானை விட மிக முக்கியமானது பொத்தானின்
    துளையாகும்.
  • 1:01 - 1:03
    இதை கண்டறியும் முறை இது:
  • 1:03 - 1:06
    பொத்தானின் விட்டத்தையும் பொத்தானின்
    அகலத்தையும் கூட்டிப் பார்த்து,
  • 1:06 - 1:07
    கொஞ்சம் எளிமைக்கு இடம் விட வேண்டும்.
  • 1:07 - 1:10
    பொத்தான்களின் தோற்றத்திற்கு முன்பு,
    துணிமணி பெரிதாக இருந்தது --
  • 1:11 - 1:12
    ஒரு விதத்தில் உருவமற்ற
    நிலையில் இருந்தது,
  • 1:12 - 1:14
    மனிதர்கள் அவற்றில் ஊடுருவி சென்றோ,
  • 1:14 - 1:17
    அல்லது பொருட்களினால் சுற்றிக்கொண்டனர்.
  • 1:17 - 1:20
    அனால் பொத்தான்களுக்கான பயன்பாடுகளை
    நாம் கண்டுபிடித்ததும்
  • 1:20 - 1:23
    நடப்புகள் அதனை
    உடலோடு நெருக்கியது.
  • 1:23 - 1:29
    ஒரு கட்டத்தில், ஆடையை உடலுக்கு பொருத்த
    வைக்க, பொத்தான் தான் ஒரே கருவியாக இருந்தது.
  • 1:29 - 1:33
    பொத்தான்களின் வரலாற்றிய நிரந்தரத்தின்
    ஒரு பிரதம காரணம்,
  • 1:33 - 1:36
    அவற்றின் திறன் என நான் கருதுகிறேன்.
  • 1:36 - 1:37
    பல்லிணைவுப் பட்டிகைகள் உடைகின்றன;
  • 1:37 - 1:40
    வெல்க்ரோ மிக சப்தமானது, மற்றும் சற்று நேரத்தில்
    அதனது பயன் குறைய தொடங்கும்.
  • 1:40 - 1:43
    ஆனால், ஒரு பொத்தான் அவிழ்ந்து விழுந்தால்,
    அதை மறுபடியும் தைத்து வைத்தாலே போதும்.
  • 1:43 - 1:45
    இதனாலே பொத்தான்கள்
    அதிக நாட்கள் இருக்கிறது.
  • 1:45 - 1:49
    அது மிக பயனுள்ள வடிவமைப்பு மட்டும் இல்லாமல்,
  • 1:49 - 1:53
    பொத்தான் என்பது ஒரு ஒய்யாரச் சின்னமாகவும் உள்ளது.
  • 1:53 - 1:56
    என் சிறிய வயதில், என் அம்மா எனக்காக
    ஒரு அழகான சுவெட்டரை தைத்து கொடுத்தார்.
  • 1:56 - 1:57
    எனக்கு அதை பிடிக்கவில்லை.
  • 1:57 - 1:59
    ஆனால் அதன் பிறகு, இந்த பொத்தான்களை
    நான் கண்டறிந்தேன்,
  • 1:59 - 2:02
    பொத்தான்களை சுவெட்டரில் தைத்தவுடனே,
    அச்சுவெட்டர் எனக்கு பிடித்தது.
  • 2:02 - 2:05
    உங்களுக்கு ஒரு பொத்தானை தேர்ந்தெடுக்க தெரியவில்லையென்றாலோ அல்லது
  • 2:05 - 2:06
    சரியான சுவை இல்லை என்றாலோ
    வேறொருத்தரை செய்ய வைக்கவும்.
  • 2:07 - 2:08
    உண்மையிலே.
Title:
பொத்தான் என்பது எப்படி நடப்பை மாற்றியது
Speaker:
ஈசாக்கு மிஸ்ராஹி
Description:

ஆடை வடிவமைப்பாளர் ஈசாக்கு மிஸ்ராஹியை கண்ணோட்டத்தில்,
ஒரு எளிதான பொத்தான் எப்படி உலகத்தை மாற்றியது.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TED Series
Duration:
02:20
Tharique Azeez approved Tamil subtitles for How the button changed fashion
Tharique Azeez edited Tamil subtitles for How the button changed fashion
Vijaya Sankar N accepted Tamil subtitles for How the button changed fashion
Vijaya Sankar N edited Tamil subtitles for How the button changed fashion
Retired user edited Tamil subtitles for How the button changed fashion
Retired user edited Tamil subtitles for How the button changed fashion

Tamil subtitles

Revisions