Return to Video

உங்கள் மரபணுக்கள் உங்கள் விதியை நிர்ணயிக்கவில்லை எனக் கூறுகிறார் டீன் ஆர்நிஷ்.

 • 0:00 - 0:02
  நமது மரபணுக்களை மாற்ற உள்ள ஒரே வழி புதிய மரபணுக்களை உருவாக்குவதுதான்
 • 0:02 - 0:04
  என்பதைக் க்ரைக் வென்ட்டேர் குறிப்பிட்டுள்ளார்.
 • 0:04 - 0:07
  வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மற்றொரு வழி.
 • 0:07 - 0:11
  நாம் அறிந்துகொள்வது என்னவெனில், எவ்வளவு சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்த மாற்றங்களாக இவை இருக்கும்,
 • 0:11 - 0:14
  அத்துடன் அதன் பலனைப் பெற அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை என்பதுமே.
 • 0:14 - 0:19
  ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, உடற்பயிற்சி, அன்பு நிறைந்த வாழ்க்கை என்ற முறையைப் பின்பற்றினால்,
 • 0:19 - 0:21
  நமது மூளைக்கு அதிக இரத்தம் பாய்ந்து அதிக பிராண வாயுவும் கிடைக்கும்.
 • 0:21 - 0:24
  அதற்கும் மேலாக, மூளையும் பெரிதாக வளர்ச்சி அடையும்.
 • 0:24 - 0:26
  சிலகாலம் முன்பு இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று எண்ணியதை
 • 0:26 - 0:28
  இன்று நம்மால் அளக்கவும் முடிகிறது.
 • 0:28 - 0:31
  இதை ராபின் வில்லியம்ஸ்
 • 0:31 - 0:33
  நாம் அறிந்து கொள்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டார்.
 • 0:33 - 0:35
  இப்பொழுது நம்மாலும்
 • 0:35 - 0:38
  நமது மூளையில் அதிக உயிரணுக்கள் உருவாக வழி செய்ய முடியும்.
 • 0:38 - 0:40
  இதில் எனக்கு விருப்பமானவை, சாக்லேட் மிட்டாய் மற்றும் தேநீர், ப்ளுபெர்ரி உண்பது,
 • 0:40 - 0:44
  அளவுடன் கூடிய குடிப்பழக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு
 • 0:44 - 0:46
  மற்றும் மரிஜுவானா போதைப்பொருளில் உள்ள கன்னாபினாயிட் வேதிப்பொருள்.
 • 0:46 - 0:48
  நான் இந்த தகவல்களைத் தரும் தூதுவன் மட்டுமே.
 • 0:49 - 0:52
  (அவையில் சிரிப்பு)
 • 0:52 - 0:55
  நாம் இப்பொழுது எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்?
 • 0:55 - 0:57
  (அவையில் சிரிப்பு)
 • 0:57 - 0:59
  மற்ற சில ஆரோக்கியத்தை சீரழிக்கும்,
 • 0:59 - 1:01
  உங்கள் மூளையின் உயிரணுக்களை இழக்கச் செய்யும்.
 • 1:01 - 1:04
  பொதுவாக சந்தேகத்திற்குரிய காரணங்கள், நிறை கொழுப்பு, சர்க்கரை,
 • 1:04 - 1:08
  புகைப்பதால் நிக்கோட்டின், ஒபியேட் மற்றும் கோகைன் போதைப் பொருட்கள், அளவுக்கு மீறிய குடிப் பழக்கம் மற்றும் நிரந்தரமான மனஉளைச்சல்.
 • 1:08 - 1:11
  ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைபிடித்தால் தோல் அதிக இரத்த ஓட்டம் பெறும்.
 • 1:11 - 1:14
  அதனால் முதுமை அடைவதைத் தாமதிக்கலாம், தோலும் அதிக சுருக்கம் அடையாது.
 • 1:14 - 1:16
  இதயத்திற்கு அதிக இரத்தவோட்டம் கிடைக்கும்.
 • 1:16 - 1:18
  இதனால் இதயநோய் நிலையை நீக்க முடியும்.
 • 1:18 - 1:21
  இந்தப் படத்தில், மேற்புற இடது பக்க இரத்த நாளங்களில் காணப்படும் அடைப்பு
 • 1:21 - 1:23
  ஒரு ஆண்டுக்கு பிறகு அளவிடக் கூடிய வகையில் சிறிய அடைப்பாக மாறியது.
 • 1:23 - 1:25
  இருதய 'பெட் ஸ்கேன்' ஊடுகதிர் பரிசோதனையின் படத்தில், இடது கீழ்ப்புறம்
 • 1:25 - 1:27
  உள்ள நீல வண்ணம் குறிப்பது அங்கு இரத்த ஓட்டம் இல்லை என்பதை.
 • 1:27 - 1:30
  ஒரு ஆண்டுக்குப் பின் --- உள்ள படத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் ஆரஞ்சு வண்ணம், அங்கு மீண்டும் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டதை காண்பிக்கிறது.
 • 1:30 - 1:33
  எனவே, நோயினை தடுக்க, நோயின் தீவிரத்தை குறைக்க நம்மால் முடியும் என்பதை இதன் மூலம் உங்களுக்கு காண்பித்துள்ளோம்.
 • 1:33 - 1:35
  ஆரம்ப நிலையில் உள்ள சுக்கிலச் சுரப்பி மற்றும் மார்பகப் புற்றுநோயினை
 • 1:35 - 1:37
  ஆரோக்கிய வாழ்க்கை முறையினைக் கடைபிடிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.
 • 1:37 - 1:40
  ஆய்வக புறச்சோதனை பரிசோதனையில், புற்றுநோய் வளர்ச்சியினை முடக்க முடிந்தது.
 • 1:40 - 1:42
  ஆரோக்கிய வாழ்வினைக் கடைபிடித்த 70 சதவிகித நோயாளிகளிடம் ஏற்பட்ட மாற்றம்,
 • 1:42 - 1:45
  9 சதவீத, ஒப்பீட்டு குழுவினர் அடைந்த மாற்றத்துடன் ஒப்பிட்ட பொழுது கண்டது,
 • 1:45 - 1:47
  குறிப்பிடத் தக்க கணிசமான மாற்றமாகும்.
 • 1:47 - 1:49
  புணர்ச்சி உறுப்புகளும் அதிக இரத்த ஓட்டம் பெறுவதால்
 • 1:49 - 1:51
  புணர்ச்சி வீரியம் மேம்படுகிறது.
 • 1:51 - 1:53
  சிறந்த, புகைபிடிப்பதற்கு எதிரான விளம்பரங்களில் ஒன்றினை
 • 1:53 - 1:55
  சுகாதாரத்துறை வெளியிட்டது.
 • 1:55 - 1:57
  அதில், புகையிலையின் வேதிப்பொருளான நிக்கோட்டின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்,
 • 1:57 - 1:59
  இதயநோய் அல்லது பக்க வாதம் போன்ற நோய்கள் தாக்க வழி செய்வதுடன் மட்டும்
 • 1:59 - 2:01
  நில்லாமல் ஆண்மைக்குறைவை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டது.
 • 2:01 - 2:03
  புகைப்பவர்களில் பாதிப்பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.
 • 2:03 - 2:04
  என்ன ஒரு அற்புதமான தகவல் இது?
 • 2:04 - 2:06
  நாங்கள் இப்பொழுது ஒரு ஆராய்ச்சியின் முடிவை வெளியிடப் போகிறோம்,
 • 2:06 - 2:09
  சுக்கிலச் சுரப்பி புற்று நோய் உள்ளவர்களின் மரபணு வெளிப்பாட்டை மாற்றமுடியும் என்பதற்கு ஆதாரமான முதல் ஆராய்ச்சியின் முடிவு இது.
 • 2:09 - 2:11
  இது 'ஹீட் மேப்' என்னும் வெப்ப வரைபடம்,
 • 2:11 - 2:14
  பல வேறு வண்ணங்களில் காணப்படுவதில், வலப்பக்கம் உள்ளவை மாறுபட்ட மரபணுக்கள்.
 • 2:14 - 2:17
  500 க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆரோக்கியமானவைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்தது.
 • 2:17 - 2:20
  இதன் விளைவாக, நோய் எதிர்க்கும் நல்ல மரபணுக்களை செயல்படுத்தவும்,
 • 2:20 - 2:24
  நோய் ஏற்படுத்தும் மரபணுக்களை செயலிழக்க செய்யவும் முடியும்.
 • 2:24 - 2:27
  அதனால், இந்த ஆராய்ச்சி முடிவுகள் சக்தி வாய்ந்தது.
 • 2:27 - 2:29
  பலருக்கு நம்பிக்கையையும், புதிய வாய்ப்புகள் உள்ளதையும் அறிவிக்கிறது.
 • 2:29 - 2:34
  நாவிஜெநிக்ஸ், டிஎன்ஏ டைரக்ட், மற்றும் 23 அண்ட் மீ நிறுவனங்கள்
 • 2:34 - 2:37
  உங்கள் 'ஜெனிடிக் ப்ரோஃபைல்' மரபியல் பண்போவியத்தை பெறுவதில் உதவி செய்கின்றன.
 • 2:37 - 2:40
  இந்த மரபியல் பண்போவியங்களினால் என்ன பலன்? என்பவர்களுக்காக,
 • 2:40 - 2:43
  நமது மரபணுக்கள் என்பது நம் விதியல்ல, நாம் மாற்றங்களை கடைப்பிடித்தால்
 • 2:43 - 2:45
  பிறப்பிலே தீர்மானிக்கப்பட்ட பண்புகளிலும் பெரிய மாற்றங்கள் மூலம்
 • 2:45 - 2:47
  முற்றிலும் மாற்பட்ட முறையினால்,
 • 2:47 - 2:50
  மரபணுவின் வெளிப்பாடுகளை மாற்ற உண்மையில் நம்மால் சாத்தியமாகிறது.
 • 2:50 - 2:51
  நன்றி.
 • 2:51 - 2:53
  (கரவொலி)
Title:
உங்கள் மரபணுக்கள் உங்கள் விதியை நிர்ணயிக்கவில்லை எனக் கூறுகிறார் டீன் ஆர்நிஷ்.
Speaker:
Dean Ornish
Description:

டீன் ஆர்நிஷ், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மரபணு அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தன் ஆராய்ச்சியின் முடிவை பகிர்ந்து கொள்கிறார். அவரின் கூற்றின்படி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, அன்பு நிறைந்த வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பதன் மூலம், மூளையின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதாகும்.

more » « less
Video Language:
English
Team:
TED
Project:
TEDTalks
Duration:
02:53
Tharique Azeez approved Tamil subtitles for Your genes are not your fate
Tharique Azeez accepted Tamil subtitles for Your genes are not your fate
Tharique Azeez edited Tamil subtitles for Your genes are not your fate
Tharique Azeez edited Tamil subtitles for Your genes are not your fate
J.S. Themozhi added a translation

Tamil subtitles

Revisions