Tamil subtitles

← தாவரங்களால் நம் பூமியை எப்படி மாறியது?

நில ம் வாழ் தாவரங்கள் நம் பூமியை எப்படி எல்லாம் உருமாற்றின-டயனோசருக்கு முந்தைய காலத்திற்கு செல்லுங்கள்-420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவரங்களால் இந்நிகழ்வு நடந்தேறியது-அதற்கான சான்றுகள் நெடுகிலும் காணப்படுகின்றன.

Get Embed Code
35 Languages

Showing Revision 10 created 08/29/2019 by SethuRaman Arunachalam.

 1. இசை
 2. இன்று, எனக்கு ஒரு சுலபமான வேலை.
 3. உலகில் எனக்கு மிக பிடித்த விஷயத்தை பற்றி
  நான் இன்று பேசப் போகிறேன், தாவரங்கள்
 4. அவை தான் நிலத்தில் முதலில் தோன்றியவை.
 5. அது காலப்போக்கில் நிகழ்ந்தேறிய ஒரு
  அற்புதமான கதை
 6. சிறிய வகை தாவரங்கள் சற்று கூடுதல்
  திறனுள்ள தாவரங்கள் வர வழி
 7. ஏற்படுத்த அது உலகின் அடிப்படையையே
  மாற்றியது.
 8. பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் நாம்
  பின்னோக்கி செல்வோம்.
 9. நாம் டைனாசரஸை காண மாட்டோம், மன்னிக்கவும்.
 10. அதற்கும் முந்தைய , நிலத்தில் முதன்முதலாக
  முளைத்த தாவரங்களின் காலத்திற்கு போகிறோம்.
 11. நான் அங்கு வாழ விரும்பவில்லை, ஆனால் யார்
  தான் விரும்புவர்?
 12. இந்த தாவரங்கள் விரும்பும்.
 13. நிலத்தின் முதல் தாவரங்கள் மிக
  நுண்ணியவையாக இருந்தன.
 14. அவற்றுக்கு வேர்களோ இல்லை நாளங்களின்
  அமைப்புகளோ இல்லை.
 15. தாவரங்கள் வேர்கள் வாயிலாக நிலத்தில்
  உள்ள நீரை உறிஞ்சுகின்றன.
 16. ஆரம்ப கால தாவரங்கள், வேர்கள் இல்லாததால்
 17. நீர் நிலைகளுக்கு அருகில் வாழ்ந்தன
 18. ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்று
 19. நாளங்கள் வாயிலாகவே ஊட்டசத்துகளும் நீரும்
  தாவரத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும்
 20. இந்த அமைப்பு இல்லாமல் தாவரங்கள் அளவு
  பெரிதாக இருக்காது,
 21. காரணம் சில பகுதிகளுக்கு நீர் கிடைக்காது.
 22. நாம் இன்று காணும் பாசிகளே ஆரம்பகால
  தாவரங்களாக இருந்தன.
 23. அவைகளுக்கு வேர்களும் இல்லை.
 24. சில மில்லியன் ஆண்டுகள் பின் தாவரங்களுக்கு
  வேர்கள் மற்றும் நாள அமைப்புகள் உருவாயின.
 25. நீலத்தில் உள்ள நீரை வேர்களால் உறிய
  முடிந்ததால்
 26. அவை ஈர நிலங்களிலிருந்து விலகி வளர உதவின.
 27. நாளங்கள் மூலமாக நீர் நடுத் தண்டிற்கு
  போக முடிந்ததால்
 28. தாவரங்கள் மேலும் மேலும் உயரமாக வளர்ந்தன
 29. சூரிய ஒளிக்கு அவை போட்டியிட்டதால்.
 30. இங்கு தான் கதை இன்னும் சுவராஸ்யமானது.
 31. தாவரங்கள் வேர்களை வளர்த்துக் கொண்டதால்,
 32. அவை இயற்பியல் ரீதியாகவும் வேதியல்
  ரீதியாகவும் பூமியின் மேற்பரப்பை மாற்றின.
 33. முதலில் அவை மண்ணை உருவாக்கின.
 34. வேர்கள் பாறைகளின் மேற்புற பரப்பை ஊடுருவின,
 35. அவை ஆழமாக வளர்ந்து செல்ல
 36. பாறைகளை இன்னும் சிறிய சிறிய
  துகள்களாக உடைத்தன.
 37. வேர்கள் கரியமில வாயுவை பயன்படுத்தி
  உருவாக்கும் அமிலங்கள்
 38. பாறைகளை மேலும் உடைத்தன.
 39. இறுதியில், அந்த தாவரங்கள் மடிந்து
  அவை மேலும் ஊட்டச்சத்தை சேர்த்து,
 40. மண்ணை வளமாக்கின.
 41. ஆரம்ப கால தாவரங்கள் இவற்றை மட்டும்
  செய்யவில்லை,
 42. பருவநிலை மீதவை தாக்கத்தை
  ஏற்படுத்தின.
 43. வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவை
  தாவரங்கள் எடுத்துக் கொள்ளும்.
 44. ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்கள் சூரிய
  ஒளியை பயன்படுத்தி
 45. கரியமிலவாயு மற்றும் நீரை, சர்க்கரையாஎவும்
  உயிர்காற்றாகவும் மாற்றுகின்றன.
 46. வளிமண்டலத்துக்குள் மீண்டும்
  செலுத்துகின்றன,
 47. ஆனால் சர்க்கரை சத்தை வளர்ச்சிக்கு
  பயன்படுத்திக் கொள்கின்றன.
 48. பெரும்பாலும் சர்க்கரையே தாவரங்களின்
  கட்டமைப்பு
 49. வடிவிற்கான மூலப் பொருளாகும்.
 50. கரியமில வாயுவிலிருந்து கரிமத்தை
  அடிப்படையாக உட்கொண்டு
 51. அது திசுக்களில் தேக்கப்படுகிறது.
 52. தாவரங்கள் இறக்கும் போது, அவை மண்ணில்
  அழுகி போகின்றன
 53. சில தாவர பொருட்கள், அதிலுள்ள கரிமச்சத்து
  உட்பட,
 54. மண்ணில் அகப்பட்டுக் கொள்கின்றன.
 55. இருங்கள், இன்னும் இருக்கிறது!
 56. கரியமிலவாயுவை பயன்படுத்தி தாவரங்கள்
  அமிலம் தயாரிப்பது நினைவிருக்கிறதா?
 57. அந்த அமிலம் பாறைகளுடன் செயல் புரிவதால்
  கூடுதல் கரியமிலவாயு மண்ணுள் அடைக்கின்றது.
 58. கரியமிலவாயு தான் நமது வளிமண்டலத்தை
  வெப்பமாக வைத்திருக்கின்றது,
 59. எனவே அவற்றின் அளவு காற்றில் குறை
 60. பூமி, இந்த காலகட்டத்தில் குளிர்ந்தது.
 61. தாவரங்கள் எந்த அளவு பூமியை காலத்துக்கும்
  உருமாற்றம் செய்திருப்பதை பாருங்கள்?
 62. இந்த கதையின் பெரும் பகுதிக்கு நமக்கு
  சான்றுகள் இருக்கின்றன.
 63. தாவரங்கள் மென்மையாக, நுண்ணியாதாக
  இருந்ததற்கான
 64. புதைபடிவங்கள் இருக்கின்றன.
 65. அவை தாவரங்கள் என நமக்கு எப்படி தெரியும்?
 66. அவை இன்றும் காணப்படும் தாவரங்கள்
  போன்றுரிருப்பதால்.
 67. இங்கே உயிருள்ள கல்லீரல் பாசியிருக்கிறது,
 68. மற்றும் இங்கே புதைபடிவத்தின்
  உருதோற்ற பெருக்கு.
 69. இது நமக்கு தாவரங்கள் மிக சிறியதாக
  இருந்ததை காட்டுகின்றன,
 70. வேர்களும் நாளங்களும் இல்லாமல்.
 71. வேர்களும் குழாய்களும் தாவரங்களில்
  வளர்ந்த போது,
 72. அவைகளால் பல்வேறு இடங்களில் வளர முடிந்தது,
  வலிமையாகவும் வளர்ந்தன.
 73. அதன் பொருள் புதைபடிவ சான்றுகள்
  இன்னும் வலிமையாகின்றன?
 74. -ஆமாம்.
  -இங்கே என்ன இருக்கிறது, சின்டி?
 75. இன்னும் சிறிய தாவரத்தின் புதைபடிவ்த்தை
  நான் இங்கே வைத்திருக்கிறேன்.
 76. இவை தான் நடுத்தண்டு,
 77. அவை பெரிதாக வளராமல் இருப்பதை
  நீங்கள் காணலாம்.
 78. அதை, காலத்தால் வெகுவாக குறைந்த
  இத்துடன் ஒப்பிடுங்கள்.
 79. இதுவும் ஒரு நடுத்தண்டு தான்.
 80. குறுக்காக வெட்டப்பட்ட ஒரு நடுத்தண்டின்
  பாகம் இது.
 81. எனவே, இது மரமாக இருந்தது.
 82. இதன் மீது வளர்ந்த கிளைகள் கூட .
  இதோ இங்கிருக்கின்றன.
 83. புதைபடிவமான மண்ணும் நம்மிடம் இருக்கிறது.
 84. தாவரங்கள், எரிமலை பாறைகளிலிருந்து மண்ணை
  உருவாக்குவதை நாம் இன்று காணலாம்.
 85. தாவரங்கள், மண்ணை உருவாக்கிய விதத்தை நாம்
  புரிந்துக் கொள்ள அந்த தகவல்கள் உதவும்,
 86. தாவரங்கள் பெரிதாக வளரும் அதே நேரம்,
 87. பூமியின் தட்ப வெப்ப நிலை குறைகிறது.
 88. இதற்கான சான்றுகள் காணப்படுவது
 89. பண்டைய கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில்.
 90. இதில் ஆச்சரியமானது என்னவென்றால்
  அறிவியலாளர்களால், அவ்வோடுகள்
 91. உருவான சுற்றுச்சூழலின் வெப்பத்தை
 92. உண்மையில் அளக்க முடியும்.
 93. இதை நாம் புதை படிவ மண்ணிற்கும் செய்யலாம்.
 94. தாவரங்கள் இந்த பூமியை எப்படி காலம் உள்
  அளவும் உருமாற்றியிருக்கின்றன என பாருங்கள்?
 95. நன்றி, தாவரங்களே!
 96. ♪ (இசை) ♪