Return to Video

நீள் பஸ்ரிச்சா : அற்புதத்தின் மூன்று அம்சங்கள்

  • 0:00 - 0:02
    இதோ ஒரு அற்புதமான கதை:
  • 0:02 - 0:04
    நாற்பது வருடங்களுக்கு முன் இந்தக் கதை தொடங்கியது,
  • 0:04 - 0:07
    என் அம்மாவும் அப்பாவும் கனடா வந்த போது.
  • 0:07 - 0:09
    என்னுடைய அம்மா கென்யாவில் உள்ள நைரோபியை விட்டு வந்தார்.
  • 0:09 - 0:12
    என்னுடைய அப்பா இந்தியாவில் உள்ள அம்ரிட்ஸர் அருகே உள்ள, ஒரு குக்கிராமத்தை விட்டு வந்தார்.
  • 0:12 - 0:15
    1960-களின் பிற்பகுதியில், இங்கு வந்தடைந்தனர்.
  • 0:15 - 0:18
    டொரோண்டோவிலிருந்து ஒரு மணி நேரம் கிழக்கேயுள்ள, அவ்வளவு பாதுகாப்பு இல்லாத ஓர் புறநகரில் தங்கினர்.
  • 0:18 - 0:20
    அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினர்.
  • 0:20 - 0:22
    அவர்கள் தங்களின் முதல் பல் மருத்துவரை சந்தித்தனர்,
  • 0:22 - 0:24
    அவர்கள் தங்களின் முதல் ஹம்பர்கரை உண்டனர்,
  • 0:24 - 0:26
    மற்றும் அவர்கள் தங்களின் முதல் குழந்தைகளைப் பெற்றனர்.
  • 0:26 - 0:28
    என்னுடைய தங்கையும், நானும்
  • 0:28 - 0:30
    இங்கு தான் வளர்ந்தோம்.
  • 0:30 - 0:33
    எங்களுடைய குழந்தைப் பருவம், அமைதியாகவும் சந்தோஷமாகவும் கழிந்தது.
  • 0:33 - 0:35
    எங்களுக்கு என்று ஒரு நெருக்கமான குடும்பம்,
  • 0:35 - 0:37
    நல்ல நண்பர்கள் மற்றும் ஒரு அமைதியான தெரு இருந்தது.
  • 0:37 - 0:39
    நாங்கள் வளரும் போது, தாராளமாக எடுத்துக்கொண்டோம்
  • 0:39 - 0:41
    பலவற்றை; அவை எங்களின் பெற்றோர்களால் தாளாரமாக எடுத்துக்கொள்ள முடியாதவை.
  • 0:41 - 0:43
    நாங்கள் வளரும் போது --
  • 0:43 - 0:45
    மின்சாரம் தடையின்றி எப்பொழுதும் இருந்தது
  • 0:45 - 0:47
    எங்கள் வீடுகளில்.
  • 0:47 - 0:49
    தெரு எதிரே பள்ளிகளும்
  • 0:49 - 0:51
    நடக்கும் தூரத்தில் மருத்துவமனைகளும்
  • 0:51 - 0:53
    வீட்டின் கொல்லைப்புறத்தில் அழகிய பூக்களும் இருந்தன.
  • 0:53 - 0:55
    நாங்கள் வளர்ந்தோம், பெரியவர்கள் ஆனோம்.
  • 0:55 - 0:57
    நான் மேல்நிலை பள்ளிக்கு சென்றேன்.
  • 0:57 - 0:59
    நான் பட்டதாரியானேன்.
  • 0:59 - 1:01
    வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு வேலை வாங்கிக் கொண்டேன்.
  • 1:01 - 1:04
    ஒரு பெண்ணை சந்தித்தேன், வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன் --
  • 1:04 - 1:07
    எனக்கு தெரியும், இது ஒரு கெட்ட தொடர்கதை போல, ஒரு கேட் ஸ்டீவென்ஸின் பாடல் போல தோன்றுகிறது என்று.
  • 1:07 - 1:09
    (சிரிப்பு)
  • 1:09 - 1:11
    ஆனால் வாழ்க்கை நன்றாக தான் இருந்தது.
  • 1:11 - 1:13
    வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது.
  • 1:13 - 1:16
    2006 ஒரு சிறந்த வருடமாக இருந்தது.
  • 1:16 - 1:19
    திராட்சை மதுவுக்கு பெயர் போன ஆண்டாரியோவில், நீல வானுக்கு கீழே , ஜூலை மாதத்தில்
  • 1:19 - 1:21
    எனக்கு திருமணம் நடந்தது,
  • 1:21 - 1:24
    150 உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில்.
  • 1:25 - 1:28
    2007 ஒரு சிறந்த வருடமாக இருந்தது.
  • 1:28 - 1:30
    நான் பட்டதாரியானேன் பின்னர்,
  • 1:30 - 1:33
    என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவருடன், சுற்றுப் பயணம் மேற்கொண்டேன்.
  • 1:33 - 1:36
    இதோ, நானும் என் நண்பன், கிரிஸ் இருக்கும் ஒரு புகைப்படம்.
  • 1:36 - 1:38
    பசிபிக் மகாசமுத்திரத்தின் கரையில் எடுக்கப்பட்டது.
  • 1:38 - 1:40
    கடல்நாய்களை பார்த்தோம், எங்களின் காரின் ஜன்னல் வழியே.
  • 1:40 - 1:42
    நிறுத்திவிட்டு, விரைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம்.
  • 1:42 - 1:45
    ஆனால், எங்களின் பெரிய தலைகள், அவைகளை மறைத்துவிட்டது.
  • 1:45 - 1:47
    (சிரிப்பு)
  • 1:47 - 1:49
    அதனால் நீங்கள் அவைகளை பார்க்க இயலாது.
  • 1:49 - 1:51
    ஆனால் அது மிகவும் அழகாக இருந்தது,
  • 1:51 - 1:53
    நம்புங்கள்!
  • 1:53 - 1:55
    (சிரிப்பு)
  • 1:55 - 1:58
    2008 மற்றும் 2009 கொஞ்சம் கடினமாக இருந்தது.
  • 1:58 - 2:00
    நான் அறிவேன், அவ்வருடங்கள் நிறைய மக்களுக்கு கடினமாக தான் இருந்தது
  • 2:00 - 2:02
    எனக்கு மட்டும் அல்ல.
  • 2:02 - 2:04
    முதலில், அந்த செய்தி மிகவும் கனமாக இருந்தது.
  • 2:04 - 2:07
    இப்போவும் கனமாக தான் உள்ளது, ஆனால் இதை விட கனமாக இருந்தது அப்போது.
  • 2:07 - 2:10
    செய்தித்தாள் புரட்டிய போது, தொலைக்காட்சி பார்த்த போது,
  • 2:10 - 2:12
    நீங்கள் பார்த்தது; உருகிக்கொண்டிருந்த பனிக்கட்டிகள்,
  • 2:12 - 2:14
    உலகம் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த போர்கள்,
  • 2:14 - 2:17
    பூகம்பங்கள், சூறாவளிகள்
  • 2:17 - 2:20
    மற்றும் நிலைகுலையும் நிலைமையில் இருந்த ஒரு பொருளாதாரம்.
  • 2:20 - 2:23
    இறுதியில் அந்த பொருளாதாரம் இடிந்தே விழுந்தது.
  • 2:23 - 2:25
    அதனால், நம் மக்கள் பல பேர் வீடுகளை இழந்தோம்,
  • 2:25 - 2:27
    நம் வேலைகளை இழந்தோம்,
  • 2:27 - 2:29
    நம் ஓய்வூதியங்களை இழந்தோம்,
  • 2:29 - 2:31
    நம் வயிற்றுப் பிழைப்பை இழந்தோம்.
  • 2:31 - 2:34
    2008 , 2009 எனக்கு மிகவும் கடினமான வருடங்களாக இருந்தன, மற்றொரு காரணத்துக்காக.
  • 2:34 - 2:37
    அந்நேரம், என் தனிப்பட்ட வாழ்க்கையில், நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தேன்.
  • 2:38 - 2:41
    என் திருமண வாழ்க்கை சீராகச் செல்லவில்லை,
  • 2:41 - 2:45
    எங்களுக்குள் இருந்த விரிசல்கள் விரிந்துக் கொண்டேயிருந்தது.
  • 2:45 - 2:47
    ஒரு நாள், என் மனைவி, வீட்டுக்கு வந்தாள் வேலையிலிருந்து.
  • 2:47 - 2:50
    தைரியம் வரவழைத்து, அழுகை உடன்,
  • 2:50 - 2:53
    என்னிடம் ஒரு நேர்மையான உரையாடல் கொண்டாள்.
  • 2:53 - 2:56
    "நான் உன்னை விரும்பவில்லை", என்று அவள் சொன்னாள்.
  • 2:56 - 3:00
    நான் கேட்டதில், என்னை மிகவும் வேதனைப்படுத்திய விஷயங்களில், இதுவும் ஒன்று.
  • 3:00 - 3:03
    நான் கேட்டதில், என் மனதை மிகவும் வருத்தியது, இது தான்.
  • 3:03 - 3:05
    ஆனால், ஒரு மாதம் கழித்து,
  • 3:05 - 3:08
    அதை விட துயரமான விஷயம் ஒன்றை நான் சந்தித்தேன்.
  • 3:08 - 3:10
    என் நண்பன் கிரிஸ், என்னுடைய புகைப்படத்தில் நான் காட்டியவன்,
  • 3:10 - 3:12
    கொஞ்சம் காலமாக, மன நோயுடன் போராடிக்கொண்டிருந்தான்.
  • 3:12 - 3:14
    உங்களில் உள்ளவர்கள்,
  • 3:14 - 3:16
    மன நோயால், உங்களின் வாழ்க்கையில் எவரும் ஒரு வகையில், பாதிக்கப்படிருந்தால்,
  • 3:16 - 3:19
    அது மிகவும் கடினமான சவால் என்று நீங்கள் அறிவீர்கள்.
  • 3:19 - 3:21
    நான் அவனிடம் இரவு 10.30 மணியளவில் தொலைபேசியில் பேசினேன்,
  • 3:21 - 3:23
    ஞாயிறுக்கிழமையன்று.
  • 3:23 - 3:26
    நாங்கள் அன்று மாலை பார்த்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிப் பற்றிப் பேசினோம்.
  • 3:26 - 3:29
    திங்களன்று காலையில், அவன் மறைந்துவிட்டான் என்று தெரிய வந்தது.
  • 3:29 - 3:32
    அவன் தன் உயிரையே எடுத்துக்கொண்டான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
  • 3:33 - 3:36
    அந்த நேரம் மிகவும் கனமாக இருந்தது.
  • 3:36 - 3:38
    என்னை சுற்றி கறுப்பு மேகங்கள் சுழன்று கொண்டிருந்தது.
  • 3:38 - 3:41
    எனக்கு மிக மிக கடினமாக இருந்தது,
  • 3:41 - 3:43
    ஏதேனும், நல்லவற்றை சிந்திக்க.
  • 3:43 - 3:46
    நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், எனக்கு ஒரு வழி வேண்டும்,
  • 3:46 - 3:49
    எப்படியாவது நல்லதையே சிந்திக்க ஒரு வழி வேண்டும் என்று.
  • 3:49 - 3:51
    ஓர் இரவு, வேலை முடித்து விட்டு வீடு திரும்பினேன்.
  • 3:51 - 3:53
    என்னுடைய கணினி முன் அமர்ந்தேன்.
  • 3:53 - 3:55
    ஒரு சிறிய இணையதளம் ஒன்றை ஆரம்பித்தேன்.
  • 3:55 - 3:58
    1000awesomethings.com என்று பெயரிட்டேன்.
  • 3:59 - 4:01
    நான் எனக்கே ஞாபகப்படுத்திக்கொண்டேன்,
  • 4:01 - 4:03
    சாதாரண, எங்கும் உள்ள, சின்ன சின்ன சந்தோஷங்களை, நாம் விரும்பும் சந்தோஷங்களை.
  • 4:03 - 4:05
    ஆனால் அதை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை --
  • 4:05 - 4:07
    உணவகங்களில் மேசைப் பணியாளர்
  • 4:07 - 4:09
    நாம் கேட்காமலேயே, நமக்கு உணவு பரிமாறும் போது,
  • 4:09 - 4:11
    முதலாவது பந்தியில் அமர, நம்மை
  • 4:11 - 4:13
    ஒரு திருமண நிகழ்ச்சில் அழைக்கும் போது,
  • 4:13 - 4:15
    சலவை உலர்த்தியிலிருந்து வந்த சுத்தமான இதமான உள்ளாடை அணியும் போது,
  • 4:15 - 4:17
    அல்லது காய்கறிக் கடையில், பணம் செலுத்தும் இடத்தில், ஒரு புதிய வரிசை திறக்கும் போது
  • 4:17 - 4:19
    நீங்கள் முதலாவதாக வரிசையில் இருந்தால் --
  • 4:19 - 4:22
    இல்லையென்றால் நீங்கள் வேறு வரிசையில் கடைசியாக இருந்தபோதும், சடார் என்று முன் வரிசையில் வந்து நின்றால்!
  • 4:22 - 4:25
    (சிரிப்பு)
  • 4:25 - 4:27
    காலப்போக்கில்,
  • 4:27 - 4:30
    நான் என்னையே ஒரு நல்ல மனநிலையில் ஆட்படுத்திக்கொண்டேன்.
  • 4:30 - 4:33
    50,000 வலைப்பதிவுகள்
  • 4:33 - 4:36
    ஒரு நாளில் தொடங்கப்படுகின்றன.
  • 4:36 - 4:39
    என்னுடைய வலைப்பதிவு, அந்த 50,000 வலைப்பதிவுகள் ஒன்று.
  • 4:39 - 4:42
    என்னுடைய அம்மா தவிர வேறு யாரும், அதை படித்ததில்லை.
  • 4:42 - 4:44
    ஆனால் என்னுடைய வலைப்பதிவின் வருகை கணக்கு, வானைத் தொட்டது,
  • 4:44 - 4:46
    ஒரு 100 சதகிவிதம் உயர்ந்தது,
  • 4:46 - 4:48
    என்னுடைய அம்மா என் அப்பாவிடம் காட்டியபோது.
  • 4:48 - 4:50
    (சிரிப்பு)
  • 4:50 - 4:52
    அதுக்கு பிறகு, நான் உற்சாகம் ஆனேன்,
  • 4:52 - 4:54
    பத்துகணக்கில் மக்கள் வருகை தந்தபோது.
  • 4:54 - 4:57
    மிகவும் உற்சாகமாக தொடங்கினேன், டசன் கணக்கில் மக்கள் வருகை தந்த போது,
  • 4:57 - 5:00
    பின்னர் நுற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில்,
  • 5:00 - 5:02
    கோடிக்கணக்கில் மக்கள் வருகை தந்த போது.
  • 5:02 - 5:04
    அது மிக மிக பெரிதாக உருவாகத் தொடங்கியது.
  • 5:04 - 5:06
    அப்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது,
  • 5:06 - 5:08
    மறுமுனையில் பேசிய குரல் என்னிடம் கூறியது,
  • 5:08 - 5:12
    "நீங்கள் உலகின் மிகச் சிறந்த வலைப்பதிவு விருது பெற்றிருக்கிறீர்கள்."
  • 5:12 - 5:14
    நானோ, இது போலித்தனமாக உள்ளதே என்று நினைத்தேன்.
  • 5:14 - 5:17
    (சிரிப்பு)
  • 5:17 - 5:22
    (கைத்தட்டல்)
  • 5:22 - 5:25
    எந்த ஆப்ரிக்கா நாட்டுக்கு என்னுடைய எல்லா பணத்தையும், அனுப்ப வேண்டும்?
  • 5:25 - 5:28
    (சிரிப்பு)
  • 5:28 - 5:30
    ஆனால், ஒரு விமானத்தில் சென்று,
  • 5:30 - 5:32
    செங்கம்பளத்தில், நடக்க நேரிட்டது
  • 5:32 - 5:35
    சாரா சில்வேர்மன் மற்றும் ஜிம்மி பால்லோன் மற்றும் மார்த்தா ஸ்டேவர்டின் மத்தியில்.
  • 5:35 - 5:38
    நான் மேடை ஏறி, சிறந்த வலைப்பதிவுக்கான வேப்பி விருதைப் பெற்றேன்.
  • 5:38 - 5:40
    அந்தத் திகைப்பும்,
  • 5:40 - 5:42
    அந்த நிகழ்ச்சி தந்த பேராச்சரியமும்
  • 5:42 - 5:45
    சற்று மங்கி போனது, நான் டொரோண்டோ திரும்பி,
  • 5:45 - 5:47
    என்னுடைய மின்னஞ்சல் பார்த்த போது,
  • 5:47 - 5:49
    10 இலக்கியக் கழகத்தை சார்ந்த முகவர்கள், எனக்காக காத்திருந்தன,
  • 5:49 - 5:52
    என்னுடைய வலைப்பதிவை ஒரு புத்தகமாக்க.
  • 5:52 - 5:54
    ஒரு வருடம் பின்னே,
  • 5:54 - 5:56
    "தி புக் ஒப் ஆவ்சொம்" வெளிவந்தது
  • 5:56 - 5:58
    தொடர்ந்து 20 வாரங்களுக்கு, சிறந்த விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் முதன் இடத்தை பிடித்தது.
  • 5:58 - 6:06
    (கைத்தட்டல்)
  • 6:06 - 6:08
    சரி, நான் உங்களிடம் முன்று விடயங்களை இன்று பேச விரும்பினேன்.
  • 6:08 - 6:10
    நான் உங்களிடம் அற்புதமான கதையை சொல்லப் போவதாக சொல்லியிருந்தேன்,
  • 6:10 - 6:12
    மற்றும் அற்புதத்தின் மூன்று அம்சங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
  • 6:12 - 6:14
    இந்த உரை நிறைவடையும் முன்பு ஒரு நிறைவான எண்ணத்துடன் உங்களை விட்டுச் செல்ல விரும்புகிறேன்.
  • 6:14 - 6:16
    சரி, நாம் அந்த மூன்று அம்சங்களைப் பற்றிப் பேசுவோம்.
  • 6:16 - 6:18
    கடந்த சில வருடங்களாக,
  • 6:18 - 6:20
    எனக்கு சிந்திக்க, உண்மையாக சிந்திக்க, நேரம் கிடைக்கவில்லை.
  • 6:20 - 6:23
    ஆனால், சமீப காலமாக, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு. ஒரு படி பின்னே சென்று
  • 6:23 - 6:26
    நான் எனக்கே சவால் விட: கடந்த சில வருடங்களில், எவை
  • 6:26 - 6:28
    என்னுடைய இணையத்தளத்தை மட்டும் அல்லாமல்
  • 6:28 - 6:30
    என்னையும் வளர உதவி செய்தன?
  • 6:30 - 6:32
    எனக்கு தனிப்பட்ட முறையில், அவைகளை தொகுத்துள்ளேன்,
  • 6:32 - 6:34
    மூன்று அம்சங்களாக.
  • 6:34 - 6:37
    அவை மனப்பாங்கு, விழிப்புணர்வு
  • 6:37 - 6:39
    மற்றும் நம்பகத்தன்மை.
  • 6:39 - 6:42
    ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பேசப் போகிறேன்.
  • 6:43 - 6:45
    முதலில், மனப்பாங்கு:
  • 6:45 - 6:47
    நாம் அனைவரும் தொண்டை அடைக்கும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளோம்.
  • 6:47 - 6:49
    நாம் அனைவரும் காயங்களை எதிர்கொண்டுள்ளோம்.
  • 6:49 - 6:52
    யாராலும் எதிர்காலத்தை கணிக்க முடியாது, ஆனால் நாம் அனைவரும் ஒன்றை அறிவோம்.
  • 6:52 - 6:55
    எதுவும் நாம் நினைத்தது போல நடக்காது.
  • 6:55 - 6:57
    நாம் பெரும் வெற்றியைச் சந்தித்து இருக்கிறோம்.
  • 6:57 - 6:59
    முக்கியமான நாட்களை, பெருமை கொண்ட கணங்களை பார்த்திருக்கிறோம்.
  • 6:59 - 7:01
    பட்டதாரியான போது உதிர்த்த புன்னகை.
  • 7:01 - 7:03
    கல்யாணங்களில் அப்பாவும் மகளும் ஆடிய நடனம்.
  • 7:03 - 7:06
    பிரசவ அறையில், செழிப்பான குழந்தைகள் வீரிட்டு அழுத சத்தம்.
  • 7:06 - 7:08
    ஆனால் இந்த சந்தோஷங்களின் இடையில்,
  • 7:08 - 7:11
    நாம் சில துன்பங்களும் காயங்களும் பெற்றிருப்போம்.
  • 7:11 - 7:14
    அது சோகமானது. அதனை பற்றி பேசுவது இனிமையானதல்ல.
  • 7:14 - 7:17
    உங்களின் கணவர் உங்களை விட்டு போகலாம்.
  • 7:17 - 7:19
    உங்களின் காதலி உங்களை ஏமாற்றிவிடலாம்.
  • 7:19 - 7:22
    உங்களின் தலை வலி, தாங்கள் நினைத்ததை விட ஆபத்தாக இருக்கலாம்.
  • 7:22 - 7:26
    இல்லையென்றால், தங்களின் நாய் தெருவில் ஒரு வாகனம் இடித்து இறந்துவிடலாம்.
  • 7:26 - 7:28
    இது ஒரு சந்தோஷமான எண்ணம் கிடையாது.
  • 7:28 - 7:31
    ஆனால் தங்களின் குழந்தைகள் ரௌடி கும்பலிடம் சேர்ந்து விடலாம்.
  • 7:31 - 7:33
    தப்பான நேரங்களில் மாட்டிக்கொள்ளலாம்.
  • 7:33 - 7:35
    தங்களின் அம்மாவுக்கு புற்று நோய் வரலாம்.
  • 7:35 - 7:37
    தங்களின் அப்பா எப்போதும் எரிச்சலுடன் இருக்கலாம்.
  • 7:37 - 7:39
    வாழ்க்கை, சில தருணங்களில்
  • 7:39 - 7:41
    உங்களை ஒரு பாழ்கிணற்றில் தள்ளிவிடும்.
  • 7:41 - 7:43
    உங்களின் வயிறு பிரட்டும். உங்களின் இதயத்தில் ஓட்டைகள் உண்டாகும்.
  • 7:43 - 7:45
    அந்த கெட்ட செய்தி நம்மை தாக்கிய பிறகு,
  • 7:45 - 7:48
    வலி நம்மில் ஊறிவிட்ட பிறகு,
  • 7:48 - 7:50
    நான் உணர்கிறேன், நீங்கள் இதை உணருவீர்கள் என்று
  • 7:50 - 7:52
    உங்களுக்கு இரு வழிகள் மட்டும் இருப்பது போல.
  • 7:52 - 7:54
    ஒன்று, நீங்கள் அதில் தத்தி தடுமாறி, வீழ்ந்து,
  • 7:54 - 7:56
    என்றென்றைக்கும் என மூழ்கிப் போவது.
  • 7:56 - 7:58
    இரண்டாவது வழி, நீங்கள் வருத்தப்பட்ட பிறகு,
  • 7:58 - 8:00
    எதிர்காலத்தை நீங்கள் எதிர்கொள்வது,
  • 8:00 - 8:02
    ஒரு புதிய, நிதானமான பார்வையுடன்.
  • 8:02 - 8:05
    இரண்டாவது வழியை தேர்ந்தெடுப்பது, ஒரு சிறந்த மனப்பாங்கைக் குறிக்கும்.
  • 8:05 - 8:07
    எவ்வளவு கடினமாக இருப்பினும் தேர்ந்தெடுக்க வேண்டும்,
  • 8:07 - 8:09
    எவ்வளவு வலி நம்மை தாக்கினாலும்,
  • 8:09 - 8:11
    முன்னே செல்ல, அதை கடந்து செல்ல முனைய வேண்டும்.
  • 8:11 - 8:13
    குழந்தை எடுக்கும் சிறு காலடிகள் போல, நடக்க வேண்டும் எதிர்காலத்தை நோக்கி.
  • 8:16 - 8:19
    இரண்டாவது அம்சம், விழிப்புணர்வு.
  • 8:20 - 8:23
    நான் மூன்று வயது சிறுவர்களுடன் பொழுதைக் களிக்க விரும்புவேன்.
  • 8:23 - 8:25
    அவர்கள், உலகைப் பார்க்கும் முறை, எனக்கும் மிகவும் பிடிக்கும்,
  • 8:25 - 8:27
    ஏனென்றால், அவர்கள் உலகத்தை முதன் முறையாக பார்க்கின்றனர்.
  • 8:27 - 8:30
    அவர்கள் ஒரு பூச்சி நடைப்பாதையில் செல்வதை முறைத்து முறைத்து பார்க்கும் விதம் எனக்குப் பிடிக்கும்.
  • 8:30 - 8:32
    வாயை திறந்துக் கொன்டு அவர்கள் வேடிக்கை பார்க்கும் விதம் எனக்கு பிடிக்கும்,
  • 8:32 - 8:34
    அவர்கள் தங்களின் முதல் பேஸ்பால் விளையாட்டைப் பார்க்கும் போது.
  • 8:34 - 8:36
    பரந்து விரிந்த கண்களுடன், கையுறை அணிந்து கொன்டு,
  • 8:36 - 8:38
    மட்டை பந்தை அடிக்கும் சத்தத்தையும், கடலை உண்ணும் சத்தத்தையும்,
  • 8:38 - 8:40
    ஹாட்டாக்சின் வாசனையும் அவர்கள் கவனிப்பார்கள்.
  • 8:40 - 8:43
    கொல்லைப்புறத்தில், அவர்கள் மணிக்கணக்காக பூக்கள் பறிக்கும் விதம் எனக்கு பிடிக்கும்.
  • 8:43 - 8:45
    அவற்றை கொன்டு, அழகிய மலர்கொத்து செய்து,
  • 8:45 - 8:47
    அதை 'நன்றி நவிலுதல்' விருந்துக்கான அலங்காரங்களில் வைப்பார்கள்.
  • 8:47 - 8:49
    அவர்கள் உலகத்தை பார்க்கும் விதம் எனக்கு பிடிக்கும்.
  • 8:49 - 8:51
    ஏனென்றால், அவர்கள் உலகத்தை பார்க்கின்றனர்
  • 8:51 - 8:53
    முதன் முறையாக.
  • 8:54 - 8:56
    விழிப்புணர்வு கொள்வது என்பது,
  • 8:56 - 8:59
    உங்களின் உள்ளே உள்ள மூன்று வயது சிறுவனை தழுவிக்கொள்வது என்பதாகும்.
  • 8:59 - 9:01
    ஏனென்றால், நீங்கள் அனைவரும் மூன்று வயது குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்.
  • 9:01 - 9:03
    அந்த மூன்று வயது சிறுவன் இன்னும் தங்களின் ஒரு பகுதியாக உள்ளான்.
  • 9:03 - 9:05
    அந்த மூன்று வயது சிறுமி இன்னும் தங்களின் ஒரு பகுதியாக உள்ளாள்.
  • 9:05 - 9:07
    அவர்கள் உள்ளே உள்ளனர்.
  • 9:07 - 9:10
    விழிப்புணர்வுடன் இருப்பது என்பது, ஞாபகம் கொள்வது ஆகும்.
  • 9:10 - 9:12
    நீங்கள் பார்க்கும் அனைத்தும், நீங்கள் பார்த்திருக்கிரீர்கள்
  • 9:12 - 9:14
    ஒரு முறை, முதல் தடவையாக, என்று ஞாபகம் கொள்வது.
  • 9:14 - 9:17
    தருணங்கள் இருக்கின்றன. நீங்கள் முதன் முறையாக
  • 9:17 - 9:19
    வேலையிலிருந்து வீடு செல்லும் வழியில், பச்சை விளக்குகள் மட்டும் எரிய தடையின்றி சென்ற போது.
  • 9:19 - 9:22
    நீங்கள் முதன் முறையாக, இனிப்பகம் உள்ளே நடந்து சென்று,
  • 9:22 - 9:24
    அந்த வாசனையை நுகர்ந்த போது.
  • 9:24 - 9:27
    இல்லை என்றால், எதிர்பாரா விதமாக தங்களின் பழைய சட்டைப்பையிலிருந்து, ஒரு இருபது ரூபாய் எடுத்து,
  • 9:27 - 9:30
    "அட, இங்கே காசு இருக்கிறதே!" என்று சொன்ன போது.
  • 9:31 - 9:34
    மூன்றாவது அம்சம், நம்பகத்தன்மையாகும்.
  • 9:34 - 9:37
    இதற்கு விரைவாக, ஒரு சின்ன கதையை சொல்ல போகிறேன்.
  • 9:38 - 9:40
    நாம் 1932 க்கு செல்லலாம்.
  • 9:40 - 9:43
    ஜோர்ஜியாவில் ஒரு கடலைப் பண்ணையில்,
  • 9:43 - 9:46
    ரூஸ்வெல்ட் க்ரியர், என்ற பெயர் கொண்ட ஒரு பையன் பிறந்தான்.
  • 9:47 - 9:50
    ரூஸ்வெல்ட் க்ரியர் அல்லது ரோசே க்ரியர் என்று அழைக்கப்பட்ட அவன்,
  • 9:50 - 9:52
    வளர்ந்து, பெரியவனான்
  • 9:52 - 9:56
    ஒரு 150 கீலோகிராம் எடை கொண்ட ஆறு அடி ஐந்தங்குல உயரமுடைய விளையாட்டு வீரனாய்.
  • 9:56 - 9:59
    புகைப்படத்தில், 76 எண் கொண்ட சட்டையை அணிந்துருப்பவர் அவர்.
  • 9:59 - 10:02
    அவர், "பயமுறுத்தும் நால்வர்" உடன் நின்றுக்கொண்டிருக்கிறார்.
  • 10:02 - 10:04
    1960 களில், லாஸ் ஏன்ஜல்ஸ் ராம்ஸ் அணியை சேர்ந்த, இந்த நான்கு பேரை,
  • 10:04 - 10:06
    எதிர்த்து விளையாட தயங்குவார்கள்.
  • 10:06 - 10:09
    இவர்கள் ஆக்ரோஷமான கால்பந்து வீரர்கள். அவர்களுக்கு பிடித்ததை செய்தவர்கள்.
  • 10:09 - 10:11
    அதாவது, பிறரின் மண்டையை உடைப்பது.
  • 10:11 - 10:13
    இல்லையென்றால், தோள்பட்டையை பிரித்து எடுப்பது, கால்பந்து களத்தில்.
  • 10:13 - 10:15
    ஆனால், ரோசே க்ரியருக்கு
  • 10:15 - 10:17
    மற்றொன்று பேரார்வம் இருந்தது.
  • 10:17 - 10:20
    அவர் தனது, ஆழ்ந்த உண்மையான சுயமாக இருந்த போது,
  • 10:20 - 10:23
    அவர் பூத்தையல் செய்வதை விரும்பினார். (சிரிப்பு)
  • 10:24 - 10:26
    அவருக்கு பின்னல் வேலை மிகவும் பிடித்து இருந்தது.
  • 10:26 - 10:28
    அது அவருக்கு நிதானமும், அமைதியும் அளித்ததாக கூறினார்.
  • 10:28 - 10:31
    அது அவரின் விமானத்தில் பறக்கும் பயத்தை போக்கியது என்றும், பெண்களை சந்திக்க உதவியதும் என்றும்,
  • 10:31 - 10:33
    அவர் கூறினார்.
  • 10:34 - 10:36
    அவருக்கு பின்னுவது, மிகவும் பிடித்து இருந்தது, அவர் என்.எப்.எல் அணியிலிருந்து ஓய்வு பெற்றபின்,
  • 10:36 - 10:38
    அவர் அதற்கான சங்கங்களில் சேர்ந்தார்.
  • 10:38 - 10:40
    அவர் ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
  • 10:40 - 10:42
    அதன் பெயர் "ரோசே கிரியரின், ஆண்களுக்கான தையல் புத்தகம்".
  • 10:42 - 10:44
    (சிரிப்பு)
  • 10:44 - 10:47
    (கைத்தட்டல்)
  • 10:47 - 10:49
    அந்த புத்தகத்தின் அட்டை, பிரமாதமாக இருந்தது.
  • 10:49 - 10:52
    நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர் தனது முகத்தையே பூத்தையல் செய்துக்கொண்டிருக்கிறார்.
  • 10:52 - 10:54
    (சிரிப்பு)
  • 10:54 - 10:57
    இந்த கதையில் எனக்கு பிடித்தது என்னவென்றால்,
  • 10:57 - 10:59
    ரோசே கிரியர்,
  • 10:59 - 11:01
    உண்மையாகவே ஒரு நம்பகத்தனமான மனிதர்.
  • 11:01 - 11:03
    இது தான் நம்பகத்தன்மை என்பது.
  • 11:03 - 11:06
    நீங்கள் நீங்களாக இருந்து, நீங்கள் அதை இயல்பாக கொள்வது.
  • 11:06 - 11:08
    நீங்கள் உண்மையாக நம்பகத்தன்மையுடன் இருந்தால்,
  • 11:08 - 11:10
    நீங்கள் உங்களின் இதயம் சொல்வதை கேட்பீர்கள்.
  • 11:10 - 11:12
    உங்களை இடங்களுக்கு நீங்களே கொண்டு செல்வீர்கள் மற்றும்
  • 11:12 - 11:14
    சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள் மற்றும் உரையாடல்கள் கொள்வீர்கள்,
  • 11:14 - 11:16
    உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், நீங்கள் விரும்பும் வகையில்.
  • 11:16 - 11:18
    நீங்கள் பேச விரும்பும் மக்களை சந்திப்பீர்கள்.
  • 11:18 - 11:20
    நீங்கள் கனவு கண்ட இடங்களுக்கு செல்வீர்கள்.
  • 11:20 - 11:22
    உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றுவீர்கள்
  • 11:22 - 11:25
    மன நிறைவுடன்.
  • 11:25 - 11:28
    இவை தான் அற்புதத்தின் மூன்று அம்சங்கள்.
  • 11:28 - 11:30
    இந்த உரை நிறைவடையும் முன்பு, நான் உங்களை மீண்டும் அழைத்து செல்ல விரும்புகிறேன்,
  • 11:30 - 11:33
    என் பெற்றோர் கனடா வந்த காலத்திற்கு.
  • 11:33 - 11:35
    எனக்கு தெரியவில்லை, எப்படி அவர்கள் உணர்ந்தார்கள் என்று,
  • 11:35 - 11:38
    அவர்களின் இருபதுகளில் ஒரு புதிய நாட்டிற்கு வந்த போது.
  • 11:38 - 11:40
    எனக்கு தெரியவில்லை, ஏனென்றால் நான் அதைச் செய்ததில்லை.
  • 11:40 - 11:43
    ஆனால், என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அதைச் செய்ய ஒரு சிறந்த மனப்பாங்கு தேவைப்படும்.
  • 11:43 - 11:46
    என்னால் கற்பனை செய்ய முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி நீங்கள் அறிய வேண்டும்,
  • 11:46 - 11:48
    சின்னச் சின்ன அதிசயங்களைக் கண்டு மகிழ வேண்டும்,
  • 11:48 - 11:51
    உங்களின் புதிய உலகத்தை நீங்கள் பார்க்கும் போது.
  • 11:51 - 11:53
    நீங்கள் நம்பகத்தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
  • 11:53 - 11:55
    நீங்கள், உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டும்,
  • 11:55 - 11:58
    இதை அனைத்தையும் அனுபவிக்க.
  • 11:59 - 12:01
    என்னுடைய TEDTalk யில் ஒரு இடைவேளை
  • 12:01 - 12:03
    விட விரும்புகிறேன், இப்போது 10 விநாடிகளுக்கு.
  • 12:03 - 12:05
    ஏனென்றால், உங்களின் வாழ்க்கையில், இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இதைச் செய்வதற்கு.
  • 12:05 - 12:07
    என்னுடைய தாய் தந்தை, முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
  • 12:07 - 12:09
    அவர்களை, எழுந்து நிற்கும்படி, கேட்டுக் கொள்கிறேன்.
  • 12:09 - 12:11
    அவர்களுக்கு என் நன்றிகளை, நான் அர்ப்பணிக்கிறேன்!
  • 12:11 - 12:30
    (கைத்தட்டல்)
  • 12:30 - 12:33
    நான் வளரும் போது, என்னுடைய அப்பா எனக்கு ஒரு கதை சொல்ல விரும்புவார்.
  • 12:33 - 12:35
    கனடாவில், அவர் வந்து இறங்கிய முதல் நாளின் கதை.
  • 12:35 - 12:38
    அது ஒரு சிறப்பான கதை, ஏனென்றால்
  • 12:38 - 12:41
    அவர் விமானத்தில் டொரோண்டோ விமான நிலையத்தை வந்து அடைந்த போது,
  • 12:41 - 12:43
    அவரை வரவேத்தது, ஒரு லாப-நோக்கமற்ற குழு.
  • 12:43 - 12:45
    அக்குழு, நிச்சயமாக, இந்த அறையில் உள்ள யாரோ ஒருத்தரால் நடத்தப்படுகிறது, என்று நான் நம்புகிறேன்.
  • 12:45 - 12:47
    (சிரிப்பு)
  • 12:47 - 12:50
    இந்த லாப-நோக்கமற்ற குழு, ஒரு பெரிய வரவேற்பு விருந்து தந்தார்கள்,
  • 12:50 - 12:53
    கனடாவிற்கு புதிதாக குடியேறுபவர்களுக்கு.
  • 12:53 - 12:56
    என் அப்பா சொன்னார், அவர் விமானத்தைவிட்டு இறங்கி, இந்த விருந்துக்கு சென்றார்.
  • 12:56 - 12:58
    அங்கு, வகை வகையான உணவு இருந்தது.
  • 12:58 - 13:01
    ரொட்டி இருந்தது. சின்ன சின்ன, சிறிய வெங்காய ஊறுகாய்கள் இருந்தன.
  • 13:01 - 13:03
    ஆலிவ்கள் இருந்தன. சின்ன வெள்ளை வெங்காயங்கள் இருந்தன.
  • 13:03 - 13:05
    சுற்றிவைக்கப்பட்ட, வான்கோழி குளிர் வெட்டுக்கள் இருந்தன.
  • 13:05 - 13:07
    சுற்றிவைக்கப்பட்ட, பன்றிக் கறி மற்றும் மாட்டிறைச்சி, குளிர் வெட்டுக்கள் இருந்தன.
  • 13:07 - 13:09
    சிறிய பாலாடைக்கட்டிகள் இருந்தன.
  • 13:09 - 13:12
    சூரை மீன் கொண்ட அடுக்கு ரொட்டிகள், முட்டை அடுக்கு ரொட்டிகள் மற்றும்
  • 13:12 - 13:14
    நன்னீர் மீன் கொண்ட அடுக்கு ரொட்டிகள் ஆகியவை இருந்தன.
  • 13:14 - 13:16
    லாசக்னியா மற்றும் காசெரோல்கள் இருந்தன.
  • 13:16 - 13:19
    பிரௌனி இருந்தன. வெண்ணெயால் ஆன புளிப்பு பண்டங்கள் இருந்தன.
  • 13:19 - 13:22
    மற்றும் பழக் கேக்குகள் இருந்தன. இன்னும் பல பல பண்டங்கள் இருந்தன.
  • 13:22 - 13:24
    என்னுடைய அப்பா இந்த கதை சொல்லும் போது, அவர் சொல்லுவார்,
  • 13:24 - 13:28
    "இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால், நான் இவற்றில் ரொட்டியைத் தவிர வேறு எதையும் பார்த்ததே இல்லை,"
  • 13:28 - 13:30
    (சிரிப்பு)
  • 13:30 - 13:32
    இதில் எது மாமிச உணவு, எது சைவ உணவு என்று தெரியவில்லை எனக்கு.
  • 13:32 - 13:34
    நான் ஆளிவ்களை உண்டேன், பதார்த்தத்துடன்.
  • 13:34 - 13:37
    (சிரிப்பு)
  • 13:37 - 13:40
    இவ்ளோ பொருள்கள் இங்கு கிடைக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை!"
  • 13:40 - 13:42
    (சிரிப்பு)
  • 13:42 - 13:44
    நான் ஐந்து வயது இருக்கும் போது,
  • 13:44 - 13:46
    என்னுடைய அப்பா என்னை காய்கறி வாங்குவதற்கு கூட்டிச் செல்வார்.
  • 13:46 - 13:48
    அங்கு அவர் வியப்புடன்,
  • 13:48 - 13:51
    பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ஒட்டப்பட்டுள்ள சிறிய தாள்களை பார்ப்பார்.
  • 13:51 - 13:54
    அவர் சொல்லுவார், "பார், உன்னால் நம்ப முடிகிறதா, இந்த மாம்பழம் மெக்ஸிகோ இருந்து வருகிறது?
  • 13:54 - 13:57
    இந்த ஆப்பிள் பழம், தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்துள்ளது.
  • 13:57 - 14:00
    இந்த பேரிச்சம்பழம், மொரோக்கோ இருந்து வந்துள்ளது?"
  • 14:00 - 14:03
    பின்னர் அவர் கேட்பார், "மொரோக்கோ எங்கே உள்ளது என்று உனக்குத் தெரியுமா?"
  • 14:03 - 14:06
    அதற்கு நான் சொல்லுவேன், "எனக்கு ஐந்து வயது ஆகிறது. நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை
  • 14:06 - 14:09
    இது அ அண்டு பி கடையா?"
  • 14:09 - 14:12
    அவர் பதில் அளிப்பார், "எனக்கும் மொரோக்கோ எங்கே உள்ளது என்று தெரியவில்லை, ஆனால் நாம் அதை கண்டு அறிவோம்!"
  • 14:12 - 14:14
    அந்த பேரிச்சம்பழம் வாங்கிக் கொண்டு, வீடு திரும்புவோம்.
  • 14:14 - 14:16
    தேசப்படப் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து,
  • 14:16 - 14:19
    அந்த மர்ம தேசம் எங்கே உள்ளது என்று நாங்கள் பக்கங்களை திருப்பிப் பாப்போம்.
  • 14:19 - 14:21
    அதை செய்யும் போது, அப்பா சொல்லுவார்,
  • 14:21 - 14:23
    "உன்னால் நம்ப முடிகிறதா, யாரோ ஒருவர் அங்கே ஒரு மரம் ஏறி,
  • 14:23 - 14:25
    இந்த பழத்தை பறித்து, ஒரு வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு ,
  • 14:25 - 14:28
    துறைமுகத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
  • 14:28 - 14:30
    பின்னர் அது ஒரு கப்பலில், இவ்வளவு தூரம்,
  • 14:30 - 14:32
    அட்லாண்டிக் மகாசமுத்திரத்தைக் கடந்து,
  • 14:32 - 14:34
    இங்கு வந்து அடைந்துள்ளது. பின்னர், ஒரு வாகனத்தில் ஏற்றி
  • 14:34 - 14:37
    நம் வீட்டு அருகிலுள்ள, இந்த சின்ன காய்கறி கடையை வந்து அடைந்து,
  • 14:37 - 14:40
    25 சதத்திற்கு நம்மிடம் விலை போனது?"
  • 14:40 - 14:42
    நான் சொல்லுவேன், "என்னால் இதை நம்ப முடியவில்லை."
  • 14:42 - 14:44
    அவர் சொல்லுவார், "என்னால் கூட இதை நம்ப முடியவில்லை.
  • 14:44 - 14:47
    எவ்வளவு அற்புதமாக உள்ளது. நம்மைச் சந்தோஷப்படுத்த எத்தனையோ விஷயங்கள் உள்ளன!"
  • 14:47 - 14:49
    நான் கொஞ்சம் நிறுத்தி யோசிக்கும் போது, அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்கு புரிகிறது.
  • 14:49 - 14:51
    எத்தனையோ விஷயங்கள் நம்மை சந்தோஷப்படுத்துகின்றன.
  • 14:51 - 14:54
    இனங்களில், நம்முடைய இனம் தான்
  • 14:54 - 14:57
    இந்த உயிர் அளிக்கும் பாறையின் மீது,
  • 14:57 - 15:00
    இந்த பிரபஞ்சத்தில், நாம் அறிந்த அளவிற்கு,
  • 15:00 - 15:02
    அனுபவிக்கும் திறனை கொண்டுள்ளது.
  • 15:02 - 15:04
    இவை அனைத்தையும் அனுபவிக்கும் திறனை கொண்டுள்ளது.
  • 15:04 - 15:07
    நாம் மட்டும் தான், விவசாயம் மற்றும் கட்டிடக்கலை அறிந்தவர்கள்.
  • 15:07 - 15:10
    நாம் மட்டும் தான், நகை மற்றும் ஜனநாயகத்தை உருவாக்கியவர்கள்.
  • 15:10 - 15:13
    நம்மிடம் விமானங்கள் உள்ளன. நெடுஞ்சாலைகள் உள்ளன.
  • 15:13 - 15:15
    ஜாதிடம் மற்றும் உட்புற வடுவமைப்புக் கலை அறிந்தவர்கள்.
  • 15:15 - 15:18
    நம்மிடம் ஃபேஷன் வார இதழ்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளன.
  • 15:18 - 15:20
    நீங்கள் ஒரு பேய் படத்தை, ராட்ஷசகர்களுடன் பார்க்கலாம்.
  • 15:20 - 15:23
    ஒரு கச்சேரிக்கு சென்று, வீணை வாசிப்பதை ரசிக்கலாம்.
  • 15:23 - 15:25
    நாம் புத்தகங்கள், விருந்துகள், வானொலி பெட்டிகள்,
  • 15:25 - 15:27
    மணமகள்கள் மற்றும் கேளிக்கை சவாரிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளோம்.
  • 15:27 - 15:29
    நாம் சுத்தமான படுக்கையில் படுக்கலாம்.
  • 15:29 - 15:31
    படங்கள் பார்க்க செல்லலாம். நல்ல இருக்கையில் அமர்ந்துக் கொண்டு படங்களைப் பார்க்கலாம்.
  • 15:31 - 15:34
    நாம் இனிப்பகம் சென்று, அங்குள்ள வாசனையில் தொலைந்து போகலாம், மழையில் நனைந்து கொண்டே நடந்து செல்லலாம்,
  • 15:34 - 15:37
    பிளாஸ்டிக் பைகளை உடைக்கலாம், வேலை செய்யும் போது யாரும் அறியாமல் உறங்கலாம்.
  • 15:37 - 15:39
    நாம் இவை அனைத்தையும் கொண்டுள்ளோம்,
  • 15:39 - 15:42
    ஆனால் 100 வருடங்கள் தான் உள்ளன இவை அனைத்தையும் ரசித்து மகிழ.
  • 15:43 - 15:45
    அது தான் சோகமான விஷயம் ஆகும்.
  • 15:47 - 15:50
    காய்கறி கடையில் வேலை செய்யும் காசாளர்,
  • 15:50 - 15:53
    உங்களின் தொழிற்சாலையில் உள்ள மேலதிகாரி,
  • 15:53 - 15:56
    உங்களை நெடுஞ்சாலையில் பின் தொடர்ந்து வருபவர்,
  • 15:56 - 15:59
    உங்களை இரவு உணவு அறுந்தும் போது தொலைபேசியில் அழைக்கும் விற்பனையாளர்
  • 15:59 - 16:01
    உங்களுக்கு சொல்லி தந்த ஒவ்வொரு வாத்தியாரும்,
  • 16:01 - 16:04
    காலையில் உங்கள் பக்கத்தில் எழுந்த ஒவ்வொருத்தரும்,
  • 16:04 - 16:06
    ஒவ்வொரு நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும்,
  • 16:06 - 16:08
    ஒவ்வொரு படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும்,
  • 16:08 - 16:11
    உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், நீங்கள் அன்புகொள்ளும் ஒவ்வொருவரும்,
  • 16:11 - 16:14
    இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரும், நீங்களும்
  • 16:14 - 16:17
    இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இறந்து போயிருப்பீர்கள்.
  • 16:17 - 16:20
    வாழ்க்கை அற்புதமானது. ஆனால் சிறிய காலம் தான் உள்ளது
  • 16:20 - 16:22
    அதை அனுபவித்து ரசித்து மகிழ.
  • 16:22 - 16:24
    நம் வாழ்க்கையை அழகுபடுத்துவது, அந்த சின்னச் சின்ன தருணங்கள்.
  • 16:24 - 16:26
    அந்த தருணம் தான், இந்த கணம்.
  • 16:26 - 16:29
    அந்த தருணங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
  • 16:29 - 16:32
    அந்த கணங்கள் மிக மிக மிக வேகமாக பறந்து சென்றுக் கொண்டு இருக்கின்றன.
  • 16:34 - 16:38
    நீங்கள் இப்பொழுது இக்கணம், இருக்கும் இளமையுடன் என்றும் இருக்க போவதில்லை.
  • 16:39 - 16:42
    அதனால் தான் நான் நம்புகிறேன், நீங்கள் உங்கள் வாழ்க்கையை
  • 16:42 - 16:44
    ஒரு சிறந்த மனப்பாங்குடன் வாழ வேண்டும்.
  • 16:44 - 16:46
    கடந்து முன்னே செல்ல முனைய வேண்டும்,
  • 16:46 - 16:48
    நம் வாழ்க்கையில் நாம் அடி வாங்கும் போது.
  • 16:48 - 16:51
    நம்மை சுற்றியுள்ள உலகத்தை பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
  • 16:51 - 16:53
    உங்களில் உள்ள மூன்று வயது சிறுவனைத் தழுவிக்கொண்டு,
  • 16:53 - 16:56
    நம் வாழ்க்கையை இனிதாக்கும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்களை பார்த்து அனுபவிக்க வேண்டும்.
  • 16:56 - 16:58
    உங்களுக்கு நீங்களே உண்மையானவராக இருக்க வேண்டும்.
  • 16:58 - 17:00
    நீங்கள் நீங்களாகவிருந்து, நீங்கள் அதை இயல்பாகக் கொள்ள வேண்டும்.
  • 17:00 - 17:03
    உங்களின் இதயம் உங்களை வழிகாட்ட அனுமதிக்க வேண்டும். உங்களை திருப்திப்படுத்தும் அனுபவங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
  • 17:03 - 17:05
    அப்போது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • 17:05 - 17:07
    ஒரு திருப்திகரமான, செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • 17:07 - 17:09
    அதுவோர் அற்புதமான வாழ்க்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
  • 17:09 - 17:11
    நன்றி!
Title:
நீள் பஸ்ரிச்சா : அற்புதத்தின் மூன்று அம்சங்கள்
Speaker:
Neil Pasricha
Description:

நீள் பஸ்ரிச்சாவின் 1000 அற்புதமான விஷயங்கள் என்ற வலைப்பதிவு, உணவகங்களில் இலவசமாக நமக்கு பரிமாறப்படும் உணவிலிருந்து சுத்தமான படுக்கை வரை, வாழ்க்கையில் உள்ள சின்ன சின்ன சந்தோஷங்களை, நம்மை ரசிக்கும்படி செய்கிறது. TEDxToronto வில் அவர் தந்த மனம் நெகிழும் உரையில், ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கான மூன்று ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
17:12
Pavithra Solai Jawahar added a translation

Tamil subtitles

Revisions