Return to Video

ஆப்பிரிக்கா நான் எழுப்ப முயலும் ஒரு தூங்கும் அரக்கன்

 • 0:01 - 0:02
  எப்படி இருக்கிறீர்கள், மக்களே?
 • 0:02 - 0:05
  நான் ஒரு TED talk - இல் இருப்பதை
  என்னால் நம்ப இயலவில்லை.
 • 0:05 - 0:07
  இது மிகப் பெரிய விஷயம்
 • 0:07 - 0:08
  ஏனென்றால், இதை தற்போது
 • 0:08 - 0:10
  என் கிராமத்தில் அனைவரும்
  பார்க்கின்றனர்.
 • 0:10 - 0:13
  மற்றும் இதனால், ஒரு மணமகளாக
  எனது விலை உயர்ந்திருக்கிறது.
 • 0:13 - 0:15
  என் பெயர் அடியோலா ஃபயேஹுன்.
 • 0:15 - 0:16
  நைஜீரியாவை சார்ந்தவள்
 • 0:16 - 0:17
  அமெரிக்கவில் வாழ்கிறேன்.
 • 0:17 - 0:20
  நான் ஒரு இதழியலாளர்,
  அல்லது நகைச்சுவையாளர்,
 • 0:20 - 0:21
  அல்லது ஒரு வசைக்கவிஞர்,
 • 0:21 - 0:23
  உண்மையில், தங்கள் என்ணம் போல்
 • 0:23 - 0:25
  நான், ஒரு பெண்ணாக,
  அனைத்தும் அடங்கியவள்.
 • 0:25 - 0:29
  "கீப்பிங் இட் ரியல் வித் அடியோலா"
  வலையொளி நிகழ்ச்சி தொகுப்பாளர்
 • 0:30 - 0:35
  இது, ஊழல் மலிந்த
  ஆப்பிரிக்கத் தலைவர்களை சுட்டிக்காட்ட
 • 0:35 - 0:37
  ஒரு கனிவான, மதிப்புக்குரிய,
  மிகவும் நேரடி வழியாகும்.
 • 0:37 - 0:40
  (காணொலி) குடியரசுத்தலைவர் புகாரி:
  என் மனைவியின் கட்சிக்கு தெரியாது.
 • 0:40 - 0:42
  ஆனால் அவள் என் சமையலறை கட்சி.
 • 0:42 - 0:44
  அடியோலா ஃபயேஹுன்: கடவுளே!
 • 0:44 - 0:45
  எனக்குத் தண்ணீர் வேண்டும் --
 • 0:45 - 0:47
  சிறிது நீர் வேண்டுமென்றேன்!
 • 0:49 - 0:50
  பார்த்தீர்களா?
 • 0:50 - 0:52
  அடிப்படையில் அவர்களிடம்
  சுற்றி வளைப்பதில்லை!
 • 0:52 - 0:55
  குறிப்பாக, அவர்கள் தவறும்போது,
  அதுவும் அடிக்கடி.
 • 0:55 - 0:58
  ஏதேனும் ஆப்பிரிக்க அலுவலர்
  இதைப் பார்த்துக் கொண்டிருந்தால்
 • 0:58 - 1:00
  நான் உங்களைப் பற்றிப் பேசவில்லை, ஐயா.
 • 1:00 - 1:03
  உங்கள் சக ஊழியர்களைப்
  பற்றிப் பேசுகிறேன், ஆம்.
 • 1:03 - 1:07
  ஏனெனில் ஆப்பிரிக்கா உயர
  அனைத்து வளமும் கொண்டுள்ளது.
 • 1:07 - 1:09
  நான் வளரும்போது,
 • 1:09 - 1:12
  ஆப்பிரிக்காவை
  ஒரு பெரிய கண்டமாக உணர்ந்தேன்.
 • 1:12 - 1:14
  எங்களிடம் செயல்திறன்கள், அறிவாளிகள்
 • 1:14 - 1:18
  மற்ற எந்தவொரு கண்டத்தையும் விட
  இயற்கை வளங்கள் கூடுதலாக உள்ளன.
 • 1:18 - 1:21
  ஆப்பிரிக்காவானது
  உலகின் 31 விழுக்காடு,
 • 1:21 - 1:24
  தங்கம், மாங்கனீசு
  மற்றும் யுரேனியத்தையும்
 • 1:24 - 1:27
  57 விழுக்காடு உலகின் வைரங்களையும்,
 • 1:27 - 1:29
  13 விழுக்காடு
  உலகின் எண்ணெயையும் அளிக்கிறது.
 • 1:29 - 1:32
  நாங்கள் உதவிகளையோ, சீனாவிடம்
  அல்லது உலக வங்கியிடம் இருந்து
 • 1:32 - 1:36
  பணம் கடன்பெறுவதை சார்ந்திருக்க
  காரணம் ஏதும் இல்லை.
 • 1:36 - 1:37
  ஆனால், நல்ல தலைவர்கள் இன்றி,
 • 1:37 - 1:42
  தன் பறக்கும் திறனை அறியாத
  ஒரு கழுகாய் இருக்கிறோம்.
 • 1:42 - 1:43
  அதற்கு பின் அல்லவா உயர்வது.
 • 1:43 - 1:46
  ஆப்பிரிக்கா ஒரு தூங்கும்
  அரக்கனைப் போன்றது.
 • 1:46 - 1:49
  உண்மையில் இப்போது, நான்
  அந்த அரக்கனை எழுப்ப முயல்கிறேன்‌.
 • 1:49 - 1:51
  அதனால்தான் அந்த அரக்கனைப்
  பொறுப்பில் வைத்திருப்பவரின்
 • 1:51 - 1:53
  தவறுகளை பொதுவெளியில்
  அம்பலப்படுத்துகிறேன்.
 • 1:53 - 1:56
  எங்கள் அரசியல்வாதிகள்,
  மதத் தலைவர்கள்,
 • 1:56 - 1:58
  மிகுந்த மதிப்புடன்,
  உறுதியாக,
 • 1:58 - 2:01
  ஏனென்றால்,
  ஆப்பிரிக்கத் தலைவர்கள்
 • 2:01 - 2:04
  அனைத்திற்கும் மேலாக
  மரியாதையை விரும்புவர்.
 • 2:04 - 2:06
  எனவே, அதையும்
  துளித்துளியாக வழங்குகிறேன்.
 • 2:06 - 2:08
  என் நிகழ்ச்சியில்.
 • 2:08 - 2:09
  நான் தலை வணங்குதிறேன்-- ஹா! --
 • 2:09 - 2:10
  மாமா, அத்தை,
 • 2:10 - 2:14
  தேவனே, என பல்வேறு
  உறவுமுறைகளை சொல்லி அழைக்கிறேன்
 • 2:14 - 2:15
  பிறகு --
 • 2:15 - 2:19
  எங்கள் அறிவுத்திறனை அவமதித்ததற்காக
  நான் அவர்களை அவமதிக்கிறேன்.
 • 2:19 - 2:21
  அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும்
 • 2:21 - 2:24
  போலி வாக்குகளால்
  நாங்கள் களைப்படைந்திருக்கிறோம்.
 • 2:24 - 2:26
  எடுத்துக்காட்டாக,
 • 2:26 - 2:29
  நைஜீரிய குடியரசு தலைவரின் உறுதி
  மருத்துவ சுற்றுலாவிற்கு முடிவு கட்டுவது,
 • 2:29 - 2:32
  சேதமுற்ற மருத்துவமனைகளை சரி செய்வதுடன்,
 • 2:32 - 2:34
  புதியவற்றைக் கட்டித்தருவதும்.
 • 2:34 - 2:36
  ஆனால் அவர் என்ன செய்தார்?
 • 2:36 - 2:41
  2017இல் இலண்டனில் மருத்துவம் பெற
  மூன்று மாதங்கள் செலவழித்தார்.
 • 2:41 - 2:44
  நாங்கள் மூன்று மாதங்கள்
  ஒரு குடியரசுத் தலைவர் இல்லாமல் இருந்தோம்.
 • 2:44 - 2:46
  3 மாதங்கள் குடியரசுத்
  தலைவரன்றி இருந்தோம்.
 • 2:46 - 2:49
  எனவே குடியரசுத் தலைவரை விமர்சிப்பது
  என் பணியாயிற்று.
 • 2:49 - 2:50
  மிக்க மதிப்புடன், கூறியது
 • 2:50 - 2:54
  "திரு குடியரசு தலைவரே,
  நான் உங்கள் பெண், அடியோலா.
 • 2:54 - 2:56
  என் நலம் அறீவீர்,
  நீர் எப்படி உள்ளீர்?
 • 2:56 - 2:57
  உங்களுக்கு வெட்கமே இல்லை."
 • 2:57 - 2:59
  "ஐயா" சேர்க்கவில்லையே
 • 2:59 - 3:01
  "ஐயா, உங்களுக்கு வெட்கமே இல்லை"
 • 3:01 - 3:03
  (யொருபாவில்:உங்களுக்கு இறையச்சமில்லை)
 • 3:03 - 3:04
  உங்களுக்கு இறையச்சமே இல்லை"
 • 3:04 - 3:07
  முப்பத்தைந்தாயிரம் நைஜீரிய மருத்துவர்கள்
  தற்பொழுது
 • 3:07 - 3:10
  அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்
  கனடாவில் பணிபுறிகின்றனர்.
 • 3:10 - 3:12
  அளப்பரிய செயல்களை
  செய்கின்றனர்
 • 3:12 - 3:15
  ஏனெனில் நைஜீரியாவில் அவர்களுக்கு
  நல்ல ஊதியமும் அளிக்கப்படுவதில்லை,
 • 3:15 - 3:17
  மருத்துவராக இருக்கும் பணியைப் புரிவதற்கு,
 • 3:17 - 3:20
  மற்றும் போதுமான கருவிகளும் இல்லை.
 • 3:20 - 3:24
  இது பல ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கிறது.
 • 3:24 - 3:26
  எங்களிடம் பறக்கும் திறன் இருக்கிறது.
 • 3:26 - 3:31
  அதனால் எங்களின் நிறைய திறமைகள்
  மற்ற கண்டங்களுக்கு
 • 3:31 - 3:33
  பறந்து செல்கின்றனர்.
 • 3:33 - 3:34
  எடுத்துக்காட்டாக,
 • 3:34 - 3:37
  இந்த நைஜீரிய மருத்துவர் கருவிலேயே
  குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தார்
 • 3:37 - 3:39
  ஆனால் டெக்சாஸில்.
 • 3:39 - 3:40
  மேலும், இந்த நைஜீரிய மருத்துவர்
 • 3:40 - 3:45
  தடகளர்களில் மூளைக் காயத்தினால் ஏற்படும்
  நரம்பியல் விளைவுகளை கண்டறிந்தார்.
 • 3:45 - 3:48
  மற்றும் பல நாடுகள் அவர்களுக்குத்
  தங்கப் பதக்கம் பெற
 • 3:48 - 3:51
  ஆப்பிரிக்கத் தடகளர்களைக் கொண்டுள்ளனர்.
 • 3:51 - 3:52
  சுவாரஸ்யம் என்னவென்றால்,
 • 3:52 - 3:55
  ஆப்பிரிக்காவைச் கடவுளே சீராக்க
  காத்திருக்கிறோம்.
 • 3:55 - 3:58
  நிஜம், நகைச்சுவை அல்ல.
  நாங்கள் கடவுளுக்காகக் காத்திருக்கிறோம்.
 • 3:58 - 4:00
  புருண்டி குடியரசுத் தலைவரைப் பாருங்கள்.
 • 4:00 - 4:02
  இதழியலாளர்கள், எதிர்கட்சியினரை
  சிறை வைக்கிறார்.
 • 4:02 - 4:05
  ஆனால் தேசிய
  வழிபாட்டு நாளை அறிவிக்கிறார்,
 • 4:05 - 4:08
  அதனால் மக்கள் இறைவனிடம்
  நாட்டை சரிசெய்ய வேண்டலாம்.
 • 4:08 - 4:11
  இவரல்லவா நாட்டைச் சரி செய்ய வேண்டும்?
 • 4:11 - 4:13
  ஓ, இல்லை, இல்லை, இல்லை.
 • 4:13 - 4:15
  கடவுள் தான் சரியாக்க வேண்டும்.
 • 4:15 - 4:17
  நான் எதை எதிர்கொள்கிறேன் என்று புரிகிறதா?
 • 4:17 - 4:19
  நான் உங்களிடம் கூறுகிறேன்.
 • 4:19 - 4:22
  என்றேனும் ஒரு நாள் இவர்கள்
  தலையில் இடி இறங்கவிருக்கிறது
 • 4:22 - 4:24
  நாம் இதைவிட சிறந்தவர்கள்
 • 4:24 - 4:28
  நம் தலைவர்கள், கடவுளை
  காரணம் காட்டுவதை நிறுத்திவிட்டு
 • 4:28 - 4:32
  தாங்களாக பொறுப்பேற்க
  தொடங்க வேண்டும்
 • 4:32 - 4:34
  கடவுள் நம்
  தேவை அனைத்தையும் கொடுத்துள்ளார்.
 • 4:34 - 4:37
  அது இங்கேயே உள்ளது;
  நாம் தான் பயன்படுத்த வேண்டும்.
 • 4:37 - 4:40
  ஆனால் இதுதான்,
  நான் செய்வதில் எனக்குப் பிடித்த பகுதி
 • 4:40 - 4:43
  பாமர மக்கள் மனதை தொடுவது.
  அற்புதமான வேலைகளைச் செய்யும்
 • 4:43 - 4:45
  ஆப்பிரிக்கர்களை வெளிக்கொணர்வது,
 • 4:45 - 4:48
  இந்த கென்யப் பெண், வாங்கரி மாத்தாய்,
 • 4:48 - 4:52
  நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்
 • 4:52 - 4:53
  மனித உரிமைகளுக்காக போராடியதுடன்
 • 4:53 - 4:56
  பத்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
 • 4:56 - 4:58
  மேலும் இந்த ஃசிம்பாப்வே பெண்,
 • 4:58 - 4:59
  முனைவர். டெரேராய் டிரென்ட்.
 • 4:59 - 5:02
  14 - ஆம் வயதில் திருமணம் முடிக்கப்பட்டார்
 • 5:02 - 5:04
  அதுவும் ஒரு பசுவுக்கு ஈடாக.
 • 5:04 - 5:07
  இருந்தும், இந்தப் பெண்
  தானே எழுதப்படிக்கக் கற்று
 • 5:07 - 5:09
  ஓப்ராவின் நிகழ்ச்சி வரை
  சென்றார்
 • 5:09 - 5:13
  கடவுளே, ஓப்ராவின் நிகழ்ச்சியை காண
  எனக்கும் ஆசை உள்ளது
 • 5:13 - 5:15
  ஆயிரக்கணக்கான
  ஃசிம்பாப்வே குழந்தைகளுக்காக.
 • 5:15 - 5:18
  இப்பெண் இன்று பள்ளிகளை கட்டியுள்ளார்.
 • 5:18 - 5:21
  மேலும், புகழ்பெற்ற
  பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் டேவிட் அட்ஜயே
 • 5:21 - 5:24
  உலகைச் சுற்றிலும்
  கண்கவர் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.
 • 5:24 - 5:27
  அவர் ஒரு கானாவியர் மற்றும் தான்சானியர்.
 • 5:27 - 5:30
  அதற்கு நிச்சய காரணம்
  அவர் உண்ட
 • 5:30 - 5:32
  கானா ஜொல்லோஃப் அரிசி தான்,
 • 5:32 - 5:35
  அது தான், அவருக்கு வடிவமைக்க
  ஊக்கமளித்தது.
 • 5:35 - 5:37
  அல்லது நைஜீரிய
  ஜொல்லோஃப் அரிசியோ,
 • 5:37 - 5:38
  நைஜீரிய அரிசி தானே சிறந்தது.
 • 5:38 - 5:40
  எப்படியோ, அவருக்கு அது தான்
 • 5:40 - 5:43
  அவரின் வெற்றிக்கு ஊக்கம் தந்தது.
 • 5:43 - 5:45
  உங்கள் கவனம் இருக்கையில்
 • 5:45 - 5:46
  மேலும் ஒன்று சொல்ல விருப்பம்.
 • 5:46 - 5:47
  சற்று அருகில் வாருங்கள்.
 • 5:47 - 5:50
  சரி, அதிக அருகில் வேண்டாம், அது நல்லது
 • 5:50 - 5:52
  உங்கள் சிலரின் ஆப்பிரிக்க வர்ணனை
 • 5:52 - 5:53
  எனக்கு பிடிக்கவில்லை,.
 • 5:53 - 5:55
  அனைவருமல்ல, உங்களில் சிலர்.
 • 5:55 - 5:56
  குறிப்பாக நீங்கள்.
 • 5:56 - 5:59
  முதலில், அது ஒரு நாடல்ல,
  அது ஒரு கண்டம்
 • 5:59 - 6:01
  எனக்கு உகாண்டா பவுலைத் தெரியாது.
 • 6:01 - 6:04
  ஃசிம்பாப்வே ரெபேக்காவைத் தெரியாது.
 • 6:04 - 6:06
  நியூ யார்க் - ஃபிரான்சு
  தொலைவை போன்றதே,
 • 6:06 - 6:08
  நைஜீரியாவில் ஃசிம்பாப்வேயின் தொலைவும்.
 • 6:08 - 6:11
  குறிப்பாக மேற்கத்தியக் கருணையை வேண்டும்
  நிர்வாண கூட்டம் அல்ல.
 • 6:11 - 6:13
  உங்கள் அனைவரின் புரிதலும் தவறு.
 • 6:13 - 6:15
  சிங்கங்கள் எங்கள்
  தெருக்களில் உலவவில்லை, சரியா?
 • 6:15 - 6:17
  இன்னும் சொல்லலாம்
 • 6:17 - 6:19
  ஆனால் உங்களுக்கு
  இந்நேரம் புரிந்திருக்கும்.
 • 6:19 - 6:20
  அதனால் நான் என் வழியில்
 • 6:20 - 6:22
  ஆப்பிரிக்க தூங்கும் அரக்கனை
  எழுப்பி
 • 6:22 - 6:25
  உலக அரங்கில் அதன் சரியான இடத்தில்
  வைக்க முயல்கையில்,
 • 6:26 - 6:27
  நீங்களும் உங்கள் பங்கைச் செய்யலாம்.
 • 6:27 - 6:30
  தயவுசெய்து அதிகமாக கவனியுங்கள்.
 • 6:30 - 6:32
  உங்கள் ஆப்பிரிக்க நண்பர்களைக் கேளுங்கள்.
 • 6:32 - 6:34
  கற்பனை யூகங்கள் இன்றி
 • 6:34 - 6:37
  அவர்கள் சொல்வதை கேளுங்கள்.
 • 6:37 - 6:39
  ஆப்பிரிக்கப் புத்தகங்களைப் படியுங்கள்.
 • 6:39 - 6:41
  ஓ, கடவுளே,
  ஆப்பிரிக்கப் படங்களைப் பாருங்கள்.
 • 6:41 - 6:42
  அல்லது குறைந்த பட்சம்,
 • 6:42 - 6:46
  எங்கள் 54 அழகிய நாடுகள்
  சிலவற்றின் பெயர்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 • 6:46 - 6:49
  ஆம் சரிதான். 54, குழந்தாய், ஐந்து-நான்கு.
 • 6:49 - 6:51
  சரி மக்களே! இது எல்லாமே உண்மை.
 • 6:51 - 6:52
  உண்மையாகவே இருக்கட்டும்.
 • 6:52 - 6:54
  மீண்டும் உங்களை
  சந்திக்கும் வரை
 • 6:54 - 6:55
  அமைதி நிலவட்டும்.
Title:
ஆப்பிரிக்கா நான் எழுப்ப முயலும் ஒரு தூங்கும் அரக்கன்
Speaker:
அடியோலா ஃபயேஹுன்
Description:

"ஆப்பிரிக்கா ஒரு தூங்கும் அரக்கனைப் போன்றது" என இந்த நகைச்சுவையான, கூர்மையான பேச்சின் தொடக்கத்தில் இதழியலாளர் மற்றும் வசையாளர் அடியோலா ஃபயேஹுன் சொல்கிறார். உண்மையில் நான் இந்த அரக்கனை எழுப்ப முயலும் வேளையில், அதன் பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்துகிறேன்". ஊழல்மலிந்த ஆப்பிரிக்க அரசியல்வாதிகளை சாடுவதுடன், அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளத் தொடங்கினால், இந்தக் கண்டம் உலகத்தளத்தில் தனக்குரிய சரியான இடத்தைப் பெறவல்லது எனபதையும் சுட்டிக்காட்டுகிறார்.

more » « less
Video Language:
English
Team:
TED
Project:
TEDTalks
Duration:
07:09

Tamil subtitles

Revisions