Return to Video

Testing solutions to inequalities

  • 0:01 - 0:03
    இந்தக் காணொளியில் கொடுக்கப்பட்ட சமமின்மைகளை எந்த எண்கள் நிறைவு செய்யும் என்பதைப் பார்ப்போம்.
  • 0:03 - 0:07
    முதல் சமன் எதிர், x + 2 <= 2x
  • 0:07 - 0:11
    அடுத்து இன்னொரு கணக்கைப் பார்த்தால்
  • 0:11 - 0:15
    அது 3x + 4 > 5x.
  • 0:15 - 0:18
  • 0:18 - 0:22
    இந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டு
  • 0:22 - 0:25
    இவற்றில் எவையேனும் சமமின்மையை
  • 0:25 - 0:27
    நிறைவு செய்ய முயற்சிப்போம்.
  • 0:27 - 0:30
    அந்த ஒன்று இதனை நிறைவு செய்யுமா...?
  • 0:30 - 0:32
    அல்லது இது அதனை நிறைவு செய்யுமா? என்று பார்க்கலாம்.
  • 0:32 - 0:34
    இது இதனை பூர்த்தி செய்கிறதா?
  • 0:34 - 0:36
    நீங்கள் இந்த நான்கு எண்களையும்
  • 0:36 - 0:39
    இந்த இரு சமமின்மையுடன் பொருத்திப் பார்க்கலாம்.
  • 0:39 - 0:41
  • 0:41 - 0:43
  • 0:43 - 0:48
    நாம் இந்த சமமின்மையுடன்
  • 0:48 - 0:51
    சுழியனை வைத்து முயற்சித்துப் பார்க்கலாம்.
  • 0:52 - 0:53
    x இன் இடத்தில் நாம் சுழியனை வைப்போம்.
  • 0:53 - 0:58
    நம்மிடம் இப்போது 0 + 2 உள்ளது,
  • 0:58 - 1:02
    இது 2-க்கு குறைவாகவோ அல்லது 2 x 0-க்கு சமமாகவோ இருக்க வேண்டும்.
  • 1:02 - 1:04
    இருக்கிறதா..?
  • 1:04 - 1:07
    இடது பக்கம் உள்ள, இந்த இரண்டு
  • 1:07 - 1:10
    சுழியனுக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கிறதா?
  • 1:10 - 1:12
    இது சரியா, இரண்டு என்பது 0-க்கு சமம் அல்லது குறைவா?
  • 1:12 - 1:15
    இல்லை. இரண்டு என்பது சுழியனை அதாவது ஜீரோவை விடப் பெரியது தானே.
  • 1:15 - 1:19
    எனவே இது பொருந்தாது.
  • 1:20 - 1:22
    இது இடது பக்க சமமின்மையை பூர்த்தி செய்ய வில்லை.
  • 1:22 - 1:26
    நமது ஜீரோ அடுத்த சமமின்மையை பூர்த்தி செய்கிறதா என்று பார்க்கலாம்.
  • 1:27 - 1:32
    இதனை நிறைவு செய்வதற்கு,
  • 1:32 - 1:36
    3 பெருக்கல் 0, கூட்டல் 4 என்பது 5 பெருக்கல் 0 வின் மதிப்பை விடப் பெரியதாக இருக்க வேண்டும்.
  • 1:36 - 1:39
    3 ஐ சுழியனுடன் பெருக்கினால் கிடைப்பது ஜீரோ. 5 பெருக்கல் 0 என்பதும் ஜீரோவே ஆகும்.
  • 1:39 - 1:44
    நமக்கு வேண்டியது, நான்கு ஆனது சமன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்க வேண்டும்.
  • 1:44 - 1:48
    ஆம், நான்கு சுழியனை விடப் பெரியது தானே.
  • 1:48 - 1:50
    எனவே, இங்கு ஜீரோவானது,
  • 1:50 - 1:54
    நாம் முயற்சித்த சமமின்மையைப் பூர்த்தி செய்கிறது.
  • 1:54 - 1:55
    சரி, அடுத்த கணக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
  • 1:57 - 2:01
    இதனை பூர்த்தி செய்ய, 1 + 2 என்பது
  • 2:01 - 2:03
    இரண்டை விட குறைவாக அல்ல சமமாக இருக்க வேண்டும்.
  • 2:04 - 2:06
    1 + 2 என்பது மூன்று, இது 2-ஐ விட குறைவாக அல்லது சமமாக இருக்கிறதா?
  • 2:06 - 2:09
    இல்லை. சமமாக இல்லை. இரண்டை விடப் பெரியது மூன்று.
  • 2:10 - 2:13
    அதனால் இது இடது பக்க சமமின்மையைப் பூர்த்தி செய்யவில்லை.
  • 2:13 - 2:17
    இன்னொன்றைப் பார்ப்போம். வலது பக்கம் உள்ள சமமின்மை என்ன சொல்கிறது..?
  • 2:17 - 2:22
    3 பெருக்கல் 1, கூட்டல் 4 என்பது
  • 2:22 - 2:24
    5 பெருக்கல் ஒன்றை விட பெரியதாக இருக்க வேண்டும்.
  • 2:24 - 2:27
    ஆக, 3 பெருக்கல் 1 என்பது மூன்று, கூட்டல் 4.
  • 2:27 - 2:32
    7 என்பது 5-ஐ விட பெரியதாக இருக்கிறது. எனவே இது சரி தான்.
  • 2:32 - 2:35
    ஆக, பூஜ்யம், ஒன்று ஆகிய இரண்டு எண்களும் 3x + 4 > 5x கணக்கைப் பூர்த்தி செய்கின்றன.
  • 2:35 - 2:39
    ஆனால் எந்த எண்களுமே x + 2 <= 2x கணக்கைப்
  • 2:39 - 2:42
    பூர்த்தி செய்யவில்லை.
  • 2:42 - 2:44
    இப்பொழுது இரண்டாவது கணக்கை எடுத்துக் கொள்வோம்.
  • 2:44 - 2:47
    இது சற்று ஒழுங்கற்று இருக்கிறது,
  • 2:47 - 2:50
    தெளிவான வண்ணத்தில் எழுதிக்கொள்வோம்.
  • 2:50 - 2:54
    இங்கு எண் இரண்டை வைத்து முயற்சித்துப் பார்ப்போம்.
  • 2:54 - 2:56
    2 + 2 என்பது 2 பெருக்கல் 2 -ஐ விட பெரிதாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும்.
  • 2:56 - 3:00
    4 என்பது 4 ஐ விட குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும்.
  • 3:00 - 3:01
    நான்கு என்பது நான்குக்கு சமம் தானே,
  • 3:01 - 3:05
    ஆக இது பூர்த்தி செய்கிறது.
  • 3:05 - 3:07
    இது சமமின்மையை பூர்த்தி செய்கிறது.
  • 3:07 - 3:10
    ஊதாச் சமமின்மையின் நிலை என்ன?
  • 3:10 - 3:14
    மூன்று பெருக்கல் இரண்டு கூட்டல் நான்கு என்பது,
  • 3:14 - 3:17
    ஐந்து பெருக்கல் இரண்டை விட பெரியதாக இருக்க வேண்டும்.
  • 3:17 - 3:21
    3 பெருக்கல் 2 என்பது 6 கூட்டல் 4 என்பது 10,
  • 3:21 - 3:24
    இது 10-ஐ விட பெரியதாக இருக்க வேண்டும்.
  • 3:24 - 3:27
    10 = 10, இது பெரியது அல்ல.
  • 3:27 - 3:31
    ஆகவே சமமின்மையைப் பூர்த்தி செய்யவில்லை.
  • 3:31 - 3:35
    இது பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருந்திருந்தால்,
  • 3:35 - 3:37
    இது பூர்த்தி செய்திருக்கும்.
  • 3:37 - 3:40
    ஆனால், 10 என்பது 10-ஐ விட பெரியது இல்லை.
  • 3:41 - 3:42
    இது சமம் அல்லது பெரியதைத் தான் பூர்த்தி செய்யும்,
  • 3:42 - 3:44
    ஏனெனில், 10 என்பது 10 சமம் தான்.
  • 3:44 - 3:46
    ஆக, 2 என்பது இடது பக்கத்தை பூர்த்தி செய்கிறது,
  • 3:46 - 3:48
    ஆனால், வலது பக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை.
  • 3:48 - 3:50
    எனவே, ஐந்தை முயற்சித்துப் பார்ப்போம்.
  • 3:52 - 3:57
    5 கூட்டல் 2 என்பது 2 பெருக்கல் ஐந்திற்கு
  • 3:57 - 4:00
    சமமாக அல்லது குறைவாக இருக்க வேண்டும்,
  • 4:00 - 4:02
    x -க்கு பதிலாக 5 ஐ வைத்துக் கொள்வோம்.
  • 4:02 - 4:05
    7 ஆனது 10-ஐ விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும், இல்லையா..?.
  • 4:05 - 4:09
    ஏழு ஆனது 10-ஐ விடக் குறைவு என்பதால்
  • 4:09 - 4:12
    ஆக, இது சமமின்மையைப் பூர்த்தி செய்கிறது.
  • 4:12 - 4:14
    5 இந்த சமமின்மையை பூர்த்தி செய்கிறது.
  • 4:14 - 4:16
    இதில், நீங்கள் எதை புரிந்துகொள்கிறீர்கள் என்றால்,
  • 4:16 - 4:18
    ஒரு சமமின்மை எத்தனை எண்களை வேண்டுமானாலும் பூர்த்தி செய்யலாம்.
  • 4:18 - 4:21
    சில சமயங்களில், எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.
  • 4:21 - 4:24
    சில சமயங்களில் எண்ணற்ற எண்களையும்
  • 4:24 - 4:27
    பூர்த்தி செய்யலாம்.
  • 4:27 - 4:29
    நாம் சில எண்களை மட்டுமே முயற்சித்தோம்.
  • 4:29 - 4:32
    இடது பக்கத்தில் இருந்ததில், 0 மற்றும் 1 வேலை செய்ய வில்லை,
  • 4:32 - 4:33
    2 மற்றும் 5 வேலை செய்தது.
  • 4:33 - 4:36
    வலது பக்கம், 0 மற்றும் 1 வேலை செய்தது, 2 வேலை செய்ய வில்லை.
  • 4:36 - 4:38
    இப்பொழுது, ஐந்தை முயற்சிக்கலாம்.
  • 4:38 - 4:42
    3 பெருக்கல் x,
  • 4:42 - 4:46
    x என்பது இங்கு 5 ஆகும்.
  • 4:46 - 4:49
    3 பெருக்கல் 5 கூட்டல் 4 என்பது
  • 4:49 - 4:52
    5 பெருக்கல் 5-ஐ விட பெரியதாக இருக்க வேண்டும்.
  • 4:52 - 4:55
    3 பெருக்கல் 5 என்பது 15, கூட்டல் 4 என்பது 19.
  • 4:55 - 5:00
    19 என்பது 25 ஐ விட பெரியதாக இருக்க வேண்டும், ஆனால் இல்லை.
  • 5:00 - 5:03
    ஆக, 5 இந்த சமமின்மையை
  • 5:03 - 5:05
    பூர்த்தி செய்யவில்லை.
  • 5:05 - 5:08
    இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
Title:
Testing solutions to inequalities
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
05:10

Tamil subtitles

Revisions