Return to Video

சீனாவில் ஆரோக்கிய உணவின் வருங்காலம்

  • 0:01 - 0:05
    பொறுமை என்கின்ற சொல்லுக்கு முதல்முறையாக
    நான் 6 வயதில் பொருளறிந்தேன்.
  • 0:06 - 0:09
    எனது பாட்டி ஒரு பிறந்தநாள் பரிசாக
    ஒரு மாயாஜாலம் பெட்டியை வழங்கினார்.
  • 0:09 - 0:13
    நம்மில் யாருக்கும் இது ஒரு வாழ்க்கை பரிசாகும்
    என்று அப்போது தெரியவில்லை.
  • 0:14 - 0:16
    மாயாஜாலம் என்னை வசீகரிக்கப்பட்டது.
  • 0:16 - 0:20
    20 வயதில், ஒரு கற்றுக்குட்டி புறா
    மந்திரவாதியானேன்.
  • 0:21 - 0:25
    இத்தந்திரத்தில், நான் என் புறாக்களை
  • 0:25 - 0:27
    என் ஆடைக்குள் உட்கார்ந்து காத்திருக்க
    பயிற்றுவிக்கத் தேவைப்படும்.
  • 0:28 - 0:32
    ஒரு இளம் மந்திரவாதியாக, இப்புறாக்களைத்
    தோற்ற வைக்க எப்போதுமே அவசரத்தில் இருந்தேன்.
  • 0:32 - 0:34
    ஆனால் இத்தந்திரத்தில் வெற்றி பெறுவதற்கான
  • 0:34 - 0:37
    ரகசியம், இப்புறாக்கள் என் ஆடையில்
    பொறுமையாக காத்திருந்தப் பின்பு
  • 0:37 - 0:42
    தோற்ற வைப்பது தான் என்று எனது
  • 0:42 - 0:43
    ஆசிரியர் என்னிடம் ஆலோசனை கூறினார்.
  • 0:44 - 0:47
    ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை வகையாக
    இருக்க வேண்டும்.
  • 0:47 - 0:50
    அதை முழு நிறைவாக்க ஒருசில
    ஆண்டுகள் ஆகிவிட்டது.
  • 0:52 - 0:55
    7 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை
    என்னை ஷாங்க்ஹாய் ஊர் செல்ல வைத்த போது
  • 0:55 - 0:59
    நான் கற்றுக்கொண்ட தியானப் பொறுமையை
    பயன்படுத்துவது சாத்தியமாற்றதானது.
  • 1:00 - 1:04
    சீனாவில், எல்லோருமே, எல்லாமே அவசரத்தில்
    இருக்கும் போது
  • 1:04 - 1:08
    ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க
  • 1:08 - 1:09
    130 கோடி பேரை மிஞ்சத் தேவை.
  • 1:11 - 1:13
    சமுதாயத்தை மாற்றி, சட்டங்களை
    மாற்றி,
  • 1:13 - 1:15
    எல்லைகளைத் தாண்ட வேண்டும்.
  • 1:16 - 1:18
    உணவை பொருத்த வரையும் அதே தான்...
  • 1:18 - 1:22
    ஆனால், உணவை பொருத்தமட்டும்,
  • 1:22 - 1:25
    பொறுமையின்மைக்கு பயங்கரமான
    விளைவுகள் உள்ளன.
  • 1:26 - 1:28
    அதிகமாய் வளர்க்கவும் விற்கவும்
    ஒரு பரபரப்பில்
  • 1:28 - 1:33
    இயற்கையான வளங்கள் மிகுந்த நாட்டில்,
    4000 ஆண்டுகள் நீண்ட விவசாயம் அளவுக்கு அதிகமாக
  • 1:33 - 1:37
    இரசாயணங்களையும் பூச்சிக்கொல்லிகளையும்
    பயன்படுத்துவதால் கெடுக்கப்படுகிறது.
  • 1:38 - 1:41
    2016 ல், சீன அரசாங்கம் 5 லட்சம்
    உணவு பாதுகாப்பு
  • 1:41 - 1:45
    மீறல்களை வெறும் 9 மாதத்தில்
    கண்டறிந்தது.
  • 1:46 - 1:50
    கவலைக்கிடமாக, உலகின் 4 நீரிழிவு
    நோயாளர்களின், ஒருத்தர்
  • 1:50 - 1:51
    சீனாவில் இருந்து வருகின்றார்.
  • 1:53 - 1:54
    உணவைச் சார்ந்த கதைகள்
  • 1:54 - 1:58
    அச்சமாகவும் மிகப்பெரிதாகவும்
    இருக்கலாம்.
  • 1:58 - 2:03
    ஆகவே, பொறுமையின்மைக்குள் தியானப்
    பொறுமையை கொண்டு வர முடிவு செய்தேன் நான்.
  • 2:04 - 2:06
    நான் தியானப் பொறுமை என சொல்லும்பொழுது,
  • 2:06 - 2:08
    காத்திருக்கும் திறமையை சொல்லவில்லை.
  • 2:09 - 2:12
    காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது
    என்பதை தெரிந்துகொள்ள சொல்கிறேன்.
  • 2:14 - 2:16
    அதனால், ஒரு நிலையான உணவு அமைப்பு
  • 2:16 - 2:20
    சீனாவில் பூர்த்தியாகும் நிலை வரை
    நான் காத்திருக்கும் நேரத்தில்
  • 2:20 - 2:24
    உள்ளூர், இயற்கையான காய்கறியை
    குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த
  • 2:24 - 2:27
    சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை
    நான் நிறுவப்படுத்தினேன்.
  • 2:28 - 2:31
    18 மாதங்களுக்கு முன்பு நாம் இயக்கத்தை
    தொடங்கிய போது,
  • 2:31 - 2:33
    மோசமான உணவை தான் எங்களால்
    விற்க இயன்றது.
  • 2:34 - 2:37
    பழங்கள் இல்லை, இறைச்சியும் இல்லை.
  • 2:37 - 2:41
    ஏனென்றால், ஆய்வகத்திற்கு அனுப்பிய
    எதுவும் எங்களது பூச்சிக்கொல்லி, இரசாயனம்
  • 2:41 - 2:45
    நுண்ணுயிர் எதிரி, மற்றும் ஹார்மோன் சோதனைகளைத்
    தாண்டவில்லை.
  • 2:46 - 2:48
    எங்களது ஆவலான ஊழியர்களிடம்
    சீனாவின் ஒவ்வொரு உள்ளூர்
  • 2:48 - 2:52
    விவசாயியை உதவும் வரை நாம் விட்டுக்கொடுக்க
    மாட்டோம் என நான் உறுதிப்படுத்தினேன்.
  • 2:54 - 2:58
    இன்று, 57 உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து
  • 2:58 - 3:00
    240 விதமான உணவுகளை நாம் வழங்குகின்றோம்.
  • 3:01 - 3:03
    கிட்டத்தட்ட 1 ஆண்டு தேடலுக்கு பிறகு
  • 3:03 - 3:06
    ஹேனன் தீவின் கிராமவாசிகளின்
    தோட்டங்களில் வளரும்
  • 3:06 - 3:09
    இரசாயணமில்லா வாழைப்பழங்களை
    கண்டுப்பிடித்தோம்.
  • 3:11 - 3:13
    மேலும், ஷாங்க்ஹாய் ஊரில் இருந்து
    வெறும் 2 மணிநேர தொலைதூரத்தில்
  • 3:13 - 3:17
    கூகுல் மாப்ஸில் கூட தகவலில்லா
    ஒரு தீவில்
  • 3:17 - 3:20
    பசுமாடுகள் புல் தின்று, நீல வானத்திற்கடியில்
  • 3:20 - 3:22
    அடிமைப்படாத சுற்றும் ஓரிடத்தை கண்டுப்பிடித்தோம்.
  • 3:24 - 3:26
    தளவாடங்களை உறுதிப்படுத்தவும்
    நாம் உழைப்போம்.
  • 3:27 - 3:30
    வெறும் 3 மணிநேர வேகத்தில் எங்கள்
    நுகர்வோரின் உணவுகளை
  • 3:30 - 3:32
    மின்சார வாகனங்களில் கொண்டு வந்து
    தருவோம்.
  • 3:32 - 3:35
    எங்களது சுற்றுச்சூழல் தடத்தை குறைக்க
  • 3:35 - 3:37
    மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட இயலும்
    பெட்டிகளை உபயோகப்படுத்துவோம்.
  • 3:39 - 3:43
    நாம் வழங்குவது இன்னும் வளரப்படும்
    என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
  • 3:43 - 3:45
    ஆனால் அது காலங்கள் எடுக்கும், மேலும், ஆரோக்கியமான
  • 3:45 - 3:49
    உணவின் வருங்காலத்தை உருவாக்க இன்னும்
    பலபேரின் உழைப்பு தேவை என தெரியும்.
  • 3:50 - 3:56
    அதனால், கடந்த ஆண்டு, சீனாவின் முதல்
    உணவு-தொழில்நுட்ப தூரித வீ. சீ. அமைப்பை
  • 3:56 - 3:59
    உண்டாக்கினேன். புரத சத்தின் நிலையான
    பயனாக பூச்சி உணவோ,
  • 3:59 - 4:00
    உணவின் புத்துணர்ச்சிக்கு ஆவியாகும்
    எண்ணெய்களை பயன்படுத்துவதோ,
  • 4:00 - 4:05
    ஆரோக்கியமான உணவின் வருங்காலத்தை
    உருவாக்க நிறுவனங்களை
  • 4:05 - 4:09
    இந்த அமைப்பு உதவுகின்றது.
  • 4:11 - 4:13
    இன்னும் நீங்கள் கேட்கலாம்:
  • 4:13 - 4:16
    சீனாவில் பயங்கர அவசியமான ஒரு நிலையான
  • 4:16 - 4:18
    உணவு அமைப்பை உருவாக்க
  • 4:18 - 4:21
    ஏன் பொறுமையாக செயல்படுகிறீர்கள்?
  • 4:22 - 4:24
    ஏனென்றால், என்னைப் பொருத்த வரை,
  • 4:24 - 4:27
    வெற்றியின் உண்மையான ரகசியம் பொறுமை —
  • 4:27 - 4:29
    ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை.
  • 4:29 - 4:33
    காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது
    என அறிய தேவைப்படும் பொறுமை.
  • 4:33 - 4:37
    எனது பாட்டியின் மாயாஜாலம் பெட்டியின்
    மூலம் நான் கற்றுக்கொண்ட பொறுமை.
  • 4:38 - 4:42
    ஏனென்றால், இந்த பூமியை நாம் நமது
    முன்னோர்களிடம் இருந்து
  • 4:43 - 4:45
    மரபுரிமையாக பெறுவதில்லை. நமது
    குழந்தைகளிடம் இருந்து தான் கடன் வாங்குகின்றோம்.
  • 4:45 - 4:46
    நன்றி.
  • 4:46 - 4:51
    (கைத்தட்டல்)
Title:
சீனாவில் ஆரோக்கிய உணவின் வருங்காலம்
Speaker:
மட்டில்டா ஹோ
Description:

இரசாயனமில்லா, பூச்சிக்கொல்லியில்லா உணவு சீனாவில் அரிதாகும்: 2016 ம் ஆண்டில், சீன அரசாங்கம் 5 லட்சம் உணவு பாதுகாப்பு மீறல்களை வெறும் 9 மாதங்களில் தெரியப்படுத்தியது. பாதுகாப்பான, நிலையான உணவில்லாததனால், TED ஃபெலோ மட்டில்டா ஹோ சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை நிறுவப்படுத்தி, பூச்சிக்கொல்லிகள், உயிர் எதிரிகள் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அமல்படுத்தினார். அவர்களது அமைப்பின் மூலம் எப்படி உள்ளூர், இயற்கையான உணவுகளை தேவைப்படும் குடும்பங்களுக்கு எப்படி வழங்குகின்றார் என பகிர்ந்துக்கொள்கிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
05:04
Tharique Azeez approved Tamil subtitles for The future of good food in China
Tharique Azeez edited Tamil subtitles for The future of good food in China
Vijaya Sankar N accepted Tamil subtitles for The future of good food in China
Vijaya Sankar N edited Tamil subtitles for The future of good food in China
Retired user edited Tamil subtitles for The future of good food in China

Tamil subtitles

Revisions