Return to Video

செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.

  • 0:00 - 0:03
    டெட்டுக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி
  • 0:03 - 0:05
    எனது உரையை ஒளிக்காட்சி மூலம் தொடங்கினால் என்ன?
  • 0:05 - 0:10
    (இசை)
  • 0:10 - 0:15
    (ஒளிக்காட்சி) ஆண்: கிளாஸ், ஒளிக்காட்சியைப் பதிவு செய்.
  • 0:15 - 0:19
    பெண்: இதுதான், இன்னும் இரண்டு நிமிடங்களில் தொடங்க போகிறோம்
  • 0:19 - 0:23
    ஆண் 2: கிளாஸ் , பறக்கும் குழுவுடன் கூடவே இரு
  • 0:23 - 0:28
    ஆண் 3: "புலித்தலை புகைபடங்களை கூகிள் செய் "
  • 0:28 - 0:30
    ஆண் 4: நீ தயாரா?நீ தயாரா?(குறைத்தல்)
  • 0:30 - 0:36
    பெண் 2: அதே இடத்தில நில். கிளாஸ், படம் பிடி
  • 0:36 - 0:39
    (குழந்தையின் சத்தம்)
  • 0:46 - 0:50
    ஆண் 5: போ
  • 0:51 - 0:54
    ஆண் 6: நண்பா ...சரியான பல்டி
  • 0:54 - 0:57
    சிறுவன்: வாவ், அந்த பாம்பை பார்!
  • 0:57 - 1:01
    பெண் 3: கிளாஸ் , ஒளிக்காட்சியை பதிவு செய்!
  • 1:06 - 1:10
    ஆண் 7: இந்தப் பாலத்திற்கு அடுத்து, முதல்ல வெளிய போ.
  • 1:33 - 1:37
    ஆண் 8: ஏ12, அங்கே தான் இருக்கிறது!
  • 1:37 - 1:40
    (கைத்தட்டல்)
  • 1:40 - 1:45
    (குழந்தைகள் பாடுகிறார்கள்)
  • 1:46 - 1:50
    கூகிள், தாய்லாந்து மொழியில் "சுவை" என்பதை மொழிபெயர்
  • 1:50 - 1:53
    கூகிள் கிளாஸ் : อร่อย ஆண் 9: ம்ம்ம், อร่อย.
  • 1:53 - 1:57
    பெண் 4: கூகிள் "ஜெல்லி மீன்".
  • 1:57 - 2:01
    (இசை)
  • 2:08 - 2:11
    ஆண் 10:இது அழகு.
  • 2:11 - 2:19
    (கைத்தட்டல்)
  • 2:19 - 2:25
    செர்கே ப்ரின்: மன்னிக்கவும், தற்போதுதான் நைஜீரிய இளவரசரிடமிருந்து தகவல் வந்தது.
  • 2:25 - 2:30
    அவருக்கு பத்து மில்லியன் டாலர்கள் பெற உதவி வேண்டும்.
  • 2:30 - 2:31
    நான் இதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
  • 2:31 - 2:33
    ஏனெனில் இப்படித்தான் இந்த நிறுவனத்திற்கும் (கூகிள்) நிதி பெற்றோம்.
  • 2:33 - 2:38
    அதுவும் நன்றாகவே நடந்தேறியது.
  • 2:38 - 2:39
    உண்மையில்,
  • 2:39 - 2:42
    நான் என் கைப்பேசியைக் குனிந்து நொக்கிக்கொண்டிருந்த
  • 2:42 - 2:45
    தோரணையை பார்த்தீர்களே,
  • 2:45 - 2:49
    அதுவும் இந்தத் திட்டத்திற்கான காரணங்களில் ஒன்று.
  • 2:49 - 2:52
    இறுதியில், எதிர்காலத்தில்
  • 2:52 - 2:54
    இவ்வாறு தான் மக்களுடனும்
  • 2:54 - 2:57
    தகவலுடனும் தொடர்பு கொள்ள போகிறோமா
  • 2:57 - 3:00
    என்ற கேள்வியை கேட்டோம்.
  • 3:00 - 3:03
    கீழே குனிந்து பார்த்து கொண்டுதான் நடக்க வேண்டுமா ?
  • 3:03 - 3:06
    அனால் அதுதான் கூகிள் கிளாஸ் திட்டம் உருவானதின் பின்னணி.
  • 3:06 - 3:13
    அதனால் தான் இக்கருவியை உருவாக்கினோம்.
  • 3:15 - 3:21
    அதன் அணைத்துச் செயல்பாடுகளைப்பற்றியும் இங்கு நான் கூறப்போவதில்லை,
  • 3:21 - 3:23
    அனால் இத்திட்டம் தொடங்கியமைக்கான உந்துதலை பற்றி
  • 3:23 - 3:27
    பகிர்ந்து கொள்ள போகிறேன்.
  • 3:27 - 3:31
    உங்கள் கைப்பேசியை பார்த்து கொண்டிருக்கும்போது
  • 3:31 - 3:33
    சமூகத்திடமிருந்து தனிமைபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி
  • 3:33 - 3:38
    உங்கள் உடலை இவ்வாறுதான் பயன்படுத்த விழைந்தீர்களா?
  • 3:38 - 3:40
    நீங்கள் அங்கே நின்று கொண்டு
  • 3:40 - 3:41
    இந்த சிறப்பற்ற கருவியை
  • 3:41 - 3:43
    தடவி கொண்டிருக்கிறீர்கள்.
  • 3:43 - 3:46
    நீங்கள் வெறுமனே நகர்ந்து கொன்டிருக்க்கிறீர்கள்.
  • 3:46 - 3:49
    ஆதலால் உங்கள் கைகளை விடுவிக்க முடியுமா
  • 3:49 - 3:52
    என்று இந்த கிளாஸ் திட்டத்தை உருவாக்கும் பொழுது எண்ணினோம்.
  • 3:52 - 3:54
    மக்கள் செய்வதையெல்லாம்
  • 3:54 - 3:55
    அந்த ஒளிக்காட்சியில் கண்டீர்கள்.
  • 3:55 - 3:57
    அவர்கள் எல்லாரும் கிளாசை அணிந்து இருந்தார்கள்.
  • 3:57 - 4:00
    அவ்வாறுதான் அந்த ஒளிக்காட்சியை பெற்றோம்.
  • 4:00 - 4:03
    உங்களுக்கு கண்களுக்கு தடங்கலற்ற ஒரு கருவியும் தேவை.
  • 4:03 - 4:05
    ஆதலால் தான் உங்கள் கண்கள் நோக்கும் தளத்திலிருந்து
  • 4:05 - 4:07
    உயரத்தில் கிளாசின் காட்சியை அமைத்துள்ளோம்.
  • 4:07 - 4:10
    அதனால, அக்காட்சி நீங்கள் பார்த்கும் கோணத்தில் இருக்காது.
  • 4:10 - 4:11
    பிறரை பார்க்கும் பொழுது அக்காட்சி
  • 4:11 - 4:13
    தடங்கலாக இருக்காது.
  • 4:13 - 4:16
    அது மட்டுமின்றி உங்கள் காதுகளுக்கு இடைஞ்சல்
  • 4:16 - 4:20
    இல்லாமல் ஒலி மண்டையோட்டின் எலும்புக்கு
  • 4:20 - 4:23
    நேரடியாக கடத்தப்படுகிறது.
  • 4:23 - 4:27
    இது முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு பழகிவிடும்.
  • 4:27 - 4:29
    மாறாக ஒலியை நன்றாக கேட்பதற்கு
  • 4:29 - 4:32
    நீங்கள் காதை மூடி கொள்ள வேண்டும்.
  • 4:32 - 4:37
    இது வியப்பாக இருந்தாலும் அவ்வாறுதான் செயல்படும்.
  • 4:37 - 4:40
    பதினைந்து வருடங்களுக்கு முன் கூகுளை ஆரம்பித்த பொழுது என்னுடைய
  • 4:40 - 4:41
    நோக்கம் நீங்கள் எதிர் காலத்தில் இணையத் தேடல்
  • 4:41 - 4:45
    செய்யத் தேவை இருக்கக்கூடாது என்பதுதான்.
  • 4:45 - 4:48
    தகவல் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது அது உங்களிடம் வர வேண்டும்
  • 4:48 - 4:50
    பதினைத்து வருடங்களுக்குப்பின்
  • 4:50 - 4:53
    அந்த எதிர்பார்ப்பை
  • 4:53 - 4:55
    நீங்கள் வெளியே சாலையில் செல்லும்போதோ
  • 4:55 - 4:56
    மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ
  • 4:56 - 5:00
    இந்தக் கருவி நிறைவு செய்கிறது.
  • 5:00 - 5:04
    இத்திட்டம் செயல்பட்டு வரும் இரண்டு வருடங்களில்
  • 5:04 - 5:06
    நாங்கள் வியத்தகு அளவு கற்றுகொண்டோம் .
  • 5:06 - 5:09
    இதை சுலபமாக்குவது இன்றியமையாததாக இருந்தது.
  • 5:09 - 5:13
    நாங்கள் உருவாக்கிய கிளாசின் மூலமுன்மாதிரி மிகப்பெரியதாக இருந்தது.
  • 5:13 - 5:15
    அது தலையோடுப் பிணைந்த கைபேசி போல இருந்தது.
  • 5:15 - 5:18
    அது ரொம்ப கனமாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தது.
  • 5:18 - 5:22
    அதை எங்கள் தொழில் வடிவமைப்பாளர் இத்திட்டத்தில் சேரும்வரை அவரிடமிருந்து
  • 5:22 - 5:23
    நாங்கள் மறைத்து வைக்க வேண்டியிருந்தது
  • 5:23 - 5:27
    இதைக் அவர் முதலில் கண்டவுடன் அலறி ஓட்டமெடுத்தார்.
  • 5:27 - 5:29
    ஆனால் நாங்கள் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.
  • 5:29 - 5:32
    மேலும் மற்றொரு எதிர்பாரா வியப்பாக அமைந்தது இதன் நிழற்படக்கருவி.
  • 5:32 - 5:35
    எங்கள் மூலமுன்மாதிரியில் நிழற்படக்கருவி இல்லவே இல்லை,
  • 5:35 - 5:38
    ஆனால் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கொண்டாடும் தருணங்களைப்
  • 5:38 - 5:41
    பதிவு செய்வதுதான் இதன் உண்மையான விந்தை
  • 5:41 - 5:43
    அத்தருணங்களில் என் நிழற்படக்கருவியையோ
  • 5:43 - 5:46
    கைப்பெசியையோ அல்லது வேரு எதையும் தேடி கொண்டிருக்கமாட்டேன்.
  • 5:46 - 5:51
    அது மட்டுமன்றி இந்த கருவியை பரிசோதித்த பொழுது
  • 5:51 - 5:55
    எனக்கு ஒரு வகையான தன்னிச்சையான தசை இயங்கும் நிலை இருப்பதை உணர்ந்தேன்
  • 5:55 - 5:59
    கைப்பேசி இருந்தால் அதை குனிந்து பார்க்க வேண்டி இருக்கும்
  • 5:59 - 6:01
    ஆனால் அது ஒரு வகையான பதட்டமான பழக்கமாகும்.
  • 6:01 - 6:04
    நான் புகை பிடிக்கும் பொது அநேகமாக புகை மட்டுமே பிடித்துக்கொண்டிருப்பேன்
  • 6:04 - 6:07
    நான் புகைச்சுருளைப்பற்ற வைப்பேன். அது நன்றாக இருக்கும்.
  • 6:07 - 6:10
    உங்களுக்குத் தெரியும் அது எப்படியென்று
  • 6:10 - 6:12
    ஆனால் இந்த விடயத்தில் என் கைப்பேசியை திறந்து
  • 6:12 - 6:14
    அங்கு உட்கார்ந்துகொண்டு எதோ முக்கியமானதை செய்துகொண்டோ கவனித்துக்கொண்டோ
  • 6:14 - 6:17
    இருப்பதை போல் இருப்பேன்
  • 6:17 - 6:20
    ஆனால் இத்திட்டம் எவ்வாறு நான் என் வாழ்க்கையை
  • 6:20 - 6:25
    மின்னஞ்சலிலும் சமூக வலைப்பக்கங்களிலும்
  • 6:25 - 6:28
    எதுவும் முக்கியமாக இல்லாவிட்டாலும் கூட
  • 6:28 - 6:29
    தனிமைப்படுத்தி கொண்டேன் என்பதை
  • 6:29 - 6:32
    தெளிவுபடுத்தியது.
  • 6:32 - 6:35
    இதனால் எனக்குத் தெரியவேண்டிய விடயங்களை எனக்குத்
  • 6:35 - 6:37
    தேவைப்பட்டால் மட்டுமே தெரிந்துகொண்டேன்
  • 6:37 - 6:41
    ஆனால் அவ்விடயங்களை எப்பொழுதும் தேடிக்கொண்டிருக்கத் தேவைப்படவில்லை
  • 6:41 - 6:44
    ஆம், உலகை ஆராய்வதிலும் நீங்கள் சற்றுமுன் கண்டதைப்போன்ற
  • 6:44 - 6:48
    கிறுக்குத்தனமான விடயங்களைச் செய்வதிலும் மிகவும் களிப்புற்றேன்.
  • 6:48 - 6:50
    உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
  • 6:50 - 6:55
    (கைத்தட்டல்)
Title:
செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.
Speaker:
Sergey Brin
Description:

இது செயல்முறையல்ல, ஒரு தத்துவார்த்தமான வாதம் : ஏன் செர்கே ப்ரின்னும் அவரின் குழுவும் கண்ணருகே பொருத்தப்பட்ட புகைப்படக்கருவி/கணினியை கூகிளில் செய்ய விழைந்தார்கள் ?
டெட்2013 மேடையில் நமக்கும் நம்முடைய கணினிகளுக்குமிடையில் உள்ளத் தொடர்பைப் புதியகோணத்தில் காண அழைக்கிறாய்--ஒரு திரையின் மேல் சாய்ந்துகொண்டல்லாமல் தலை நிமிர்ந்து உலகை நோக்கிகொண்டு.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
07:15
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Why Google Glass?
Pradeep Balasubramanian accepted Tamil subtitles for Why Google Glass?
Pradeep Balasubramanian edited Tamil subtitles for Why Google Glass?
Pradeep Balasubramanian edited Tamil subtitles for Why Google Glass?
Pradeep Balasubramanian edited Tamil subtitles for Why Google Glass?
Pradeep Balasubramanian edited Tamil subtitles for Why Google Glass?
RAJENDRAN RATHINASABAPATHY edited Tamil subtitles for Why Google Glass?
RAJENDRAN RATHINASABAPATHY edited Tamil subtitles for Why Google Glass?
Show all

Tamil subtitles

Revisions

  • Revision 19 Edited (legacy editor)
    Pradeep Balasubramanian