0:00:00.000,0:00:02.000 நமது மரபணுக்களை மாற்ற உள்ள ஒரே வழி புதிய மரபணுக்களை உருவாக்குவதுதான் 0:00:02.000,0:00:04.000 என்பதைக் க்ரைக் வென்ட்டேர் குறிப்பிட்டுள்ளார். 0:00:04.000,0:00:07.000 வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மற்றொரு வழி. 0:00:07.000,0:00:11.000 நாம் அறிந்துகொள்வது என்னவெனில், எவ்வளவு சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்த மாற்றங்களாக இவை இருக்கும், 0:00:11.000,0:00:14.000 அத்துடன் அதன் பலனைப் பெற அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை என்பதுமே. 0:00:14.000,0:00:19.000 ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, உடற்பயிற்சி, அன்பு நிறைந்த வாழ்க்கை என்ற முறையைப் பின்பற்றினால், 0:00:19.000,0:00:21.000 நமது மூளைக்கு அதிக இரத்தம் பாய்ந்து அதிக பிராண வாயுவும் கிடைக்கும். 0:00:21.000,0:00:24.000 அதற்கும் மேலாக, மூளையும் பெரிதாக வளர்ச்சி அடையும். 0:00:24.000,0:00:26.000 சிலகாலம் முன்பு இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று எண்ணியதை 0:00:26.000,0:00:28.000 இன்று நம்மால் அளக்கவும் முடிகிறது. 0:00:28.000,0:00:31.000 இதை ராபின் வில்லியம்ஸ் 0:00:31.000,0:00:33.000 நாம் அறிந்து கொள்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டார். 0:00:33.000,0:00:35.000 இப்பொழுது நம்மாலும் 0:00:35.000,0:00:38.000 நமது மூளையில் அதிக உயிரணுக்கள் உருவாக வழி செய்ய முடியும். 0:00:38.000,0:00:40.000 இதில் எனக்கு விருப்பமானவை, சாக்லேட் மிட்டாய் மற்றும் தேநீர், ப்ளுபெர்ரி உண்பது, 0:00:40.000,0:00:44.000 அளவுடன் கூடிய குடிப்பழக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு 0:00:44.000,0:00:46.000 மற்றும் மரிஜுவானா போதைப்பொருளில் உள்ள கன்னாபினாயிட் வேதிப்பொருள். 0:00:46.000,0:00:48.000 நான் இந்த தகவல்களைத் தரும் தூதுவன் மட்டுமே. 0:00:49.000,0:00:52.000 (அவையில் சிரிப்பு) 0:00:52.000,0:00:55.000 நாம் இப்பொழுது எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்? 0:00:55.000,0:00:57.000 (அவையில் சிரிப்பு) 0:00:57.000,0:00:59.000 மற்ற சில ஆரோக்கியத்தை சீரழிக்கும், 0:00:59.000,0:01:01.000 உங்கள் மூளையின் உயிரணுக்களை இழக்கச் செய்யும். 0:01:01.000,0:01:04.000 பொதுவாக சந்தேகத்திற்குரிய காரணங்கள், நிறை கொழுப்பு, சர்க்கரை, 0:01:04.000,0:01:08.000 புகைப்பதால் நிக்கோட்டின், ஒபியேட் மற்றும் கோகைன் போதைப் பொருட்கள், அளவுக்கு மீறிய குடிப் பழக்கம் மற்றும் நிரந்தரமான மனஉளைச்சல். 0:01:08.000,0:01:11.000 ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைபிடித்தால் தோல் அதிக இரத்த ஓட்டம் பெறும். 0:01:11.000,0:01:14.000 அதனால் முதுமை அடைவதைத் தாமதிக்கலாம், தோலும் அதிக சுருக்கம் அடையாது. 0:01:14.000,0:01:16.000 இதயத்திற்கு அதிக இரத்தவோட்டம் கிடைக்கும். 0:01:16.000,0:01:18.000 இதனால் இதயநோய் நிலையை நீக்க முடியும். 0:01:18.000,0:01:21.000 இந்தப் படத்தில், மேற்புற இடது பக்க இரத்த நாளங்களில் காணப்படும் அடைப்பு 0:01:21.000,0:01:23.000 ஒரு ஆண்டுக்கு பிறகு அளவிடக் கூடிய வகையில் சிறிய அடைப்பாக மாறியது. 0:01:23.000,0:01:25.000 இருதய 'பெட் ஸ்கேன்' ஊடுகதிர் பரிசோதனையின் படத்தில், இடது கீழ்ப்புறம் 0:01:25.000,0:01:27.000 உள்ள நீல வண்ணம் குறிப்பது அங்கு இரத்த ஓட்டம் இல்லை என்பதை. 0:01:27.000,0:01:30.000 ஒரு ஆண்டுக்குப் பின் --- உள்ள படத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் ஆரஞ்சு வண்ணம், அங்கு மீண்டும் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டதை காண்பிக்கிறது. 0:01:30.000,0:01:33.000 எனவே, நோயினை தடுக்க, நோயின் தீவிரத்தை குறைக்க நம்மால் முடியும் என்பதை இதன் மூலம் உங்களுக்கு காண்பித்துள்ளோம். 0:01:33.000,0:01:35.000 ஆரம்ப நிலையில் உள்ள சுக்கிலச் சுரப்பி மற்றும் மார்பகப் புற்றுநோயினை 0:01:35.000,0:01:37.000 ஆரோக்கிய வாழ்க்கை முறையினைக் கடைபிடிப்பதன் மூலம் தவிர்க்கலாம். 0:01:37.000,0:01:40.000 ஆய்வக புறச்சோதனை பரிசோதனையில், புற்றுநோய் வளர்ச்சியினை முடக்க முடிந்தது. 0:01:40.000,0:01:42.000 ஆரோக்கிய வாழ்வினைக் கடைபிடித்த 70 சதவிகித நோயாளிகளிடம் ஏற்பட்ட மாற்றம், 0:01:42.000,0:01:45.000 9 சதவீத, ஒப்பீட்டு குழுவினர் அடைந்த மாற்றத்துடன் ஒப்பிட்ட பொழுது கண்டது, 0:01:45.000,0:01:47.000 குறிப்பிடத் தக்க கணிசமான மாற்றமாகும். 0:01:47.000,0:01:49.000 புணர்ச்சி உறுப்புகளும் அதிக இரத்த ஓட்டம் பெறுவதால் 0:01:49.000,0:01:51.000 புணர்ச்சி வீரியம் மேம்படுகிறது. 0:01:51.000,0:01:53.000 சிறந்த, புகைபிடிப்பதற்கு எதிரான விளம்பரங்களில் ஒன்றினை 0:01:53.000,0:01:55.000 சுகாதாரத்துறை வெளியிட்டது. 0:01:55.000,0:01:57.000 அதில், புகையிலையின் வேதிப்பொருளான நிக்கோட்டின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும், 0:01:57.000,0:01:59.000 இதயநோய் அல்லது பக்க வாதம் போன்ற நோய்கள் தாக்க வழி செய்வதுடன் மட்டும் 0:01:59.000,0:02:01.000 நில்லாமல் ஆண்மைக்குறைவை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டது. 0:02:01.000,0:02:03.000 புகைப்பவர்களில் பாதிப்பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. 0:02:03.000,0:02:04.000 என்ன ஒரு அற்புதமான தகவல் இது? 0:02:04.000,0:02:06.000 நாங்கள் இப்பொழுது ஒரு ஆராய்ச்சியின் முடிவை வெளியிடப் போகிறோம், 0:02:06.000,0:02:09.000 சுக்கிலச் சுரப்பி புற்று நோய் உள்ளவர்களின் மரபணு வெளிப்பாட்டை மாற்றமுடியும் என்பதற்கு ஆதாரமான முதல் ஆராய்ச்சியின் முடிவு இது. 0:02:09.000,0:02:11.000 இது 'ஹீட் மேப்' என்னும் வெப்ப வரைபடம், 0:02:11.000,0:02:14.000 பல வேறு வண்ணங்களில் காணப்படுவதில், வலப்பக்கம் உள்ளவை மாறுபட்ட மரபணுக்கள். 0:02:14.000,0:02:17.000 500 க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆரோக்கியமானவைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்தது. 0:02:17.000,0:02:20.000 இதன் விளைவாக, நோய் எதிர்க்கும் நல்ல மரபணுக்களை செயல்படுத்தவும், 0:02:20.000,0:02:24.000 நோய் ஏற்படுத்தும் மரபணுக்களை செயலிழக்க செய்யவும் முடியும். 0:02:24.000,0:02:27.000 அதனால், இந்த ஆராய்ச்சி முடிவுகள் சக்தி வாய்ந்தது. 0:02:27.000,0:02:29.000 பலருக்கு நம்பிக்கையையும், புதிய வாய்ப்புகள் உள்ளதையும் அறிவிக்கிறது. 0:02:29.000,0:02:34.000 நாவிஜெநிக்ஸ், டிஎன்ஏ டைரக்ட், மற்றும் 23 அண்ட் மீ நிறுவனங்கள் 0:02:34.000,0:02:37.000 உங்கள் 'ஜெனிடிக் ப்ரோஃபைல்' மரபியல் பண்போவியத்தை பெறுவதில் உதவி செய்கின்றன. 0:02:37.000,0:02:40.000 இந்த மரபியல் பண்போவியங்களினால் என்ன பலன்? என்பவர்களுக்காக, 0:02:40.000,0:02:43.000 நமது மரபணுக்கள் என்பது நம் விதியல்ல, நாம் மாற்றங்களை கடைப்பிடித்தால் 0:02:43.000,0:02:45.000 பிறப்பிலே தீர்மானிக்கப்பட்ட பண்புகளிலும் பெரிய மாற்றங்கள் மூலம் 0:02:45.000,0:02:47.000 முற்றிலும் மாற்பட்ட முறையினால், 0:02:47.000,0:02:50.000 மரபணுவின் வெளிப்பாடுகளை மாற்ற உண்மையில் நம்மால் சாத்தியமாகிறது. 0:02:50.000,0:02:51.000 நன்றி. 0:02:51.000,0:02:53.000 (கரவொலி)