0:00:00.320,0:00:03.740 கணினிகள் உண்மையில் மிகச் சிறப்பாகச் செய்கின்ற ஒரு விஷயம் கட்டளைகளை மீண்டும் நிகழ்த்துவது. 0:00:03.740,0:00:08.170 ஒரு மனிதராக, ஒரே விஷயத்தை நீங்கள் தொடர்ந்து பல முறை செய்ய வேண்டியிருந்தால் உண்மையிலேயே நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள். 0:00:08.809,0:00:12.849 ஆனால் ஒரு கணினி ஒரே விஷயத்தை இலட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான முறைகள் கூட மீண்டும் செய்ய முடியும், 0:00:12.849,0:00:15.000 அதை உண்மையிலேயே சிறப்பாகச் செய்ய அவை ஒருபோதும் சலிப்படைவதில்லை. 0:00:15.500,0:00:17.430 உதாரணமாக, Facebook-இல் உள்ள ஒவ்வொருவருக்கும் 0:00:17.430,0:00:20.960 மின்னஞ்சல் அனுப்பி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என நான் விரும்பினால், 0:00:20.960,0:00:24.850 அந்த மின்னஞ்சல்கள் அனைத்தையும் உண்மையில் நான் எழுத நினைத்தால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிடும். 0:00:25.269,0:00:28.760 ஆனால் ஒரு சில வரிகள் கொண்ட குறியீட்டின் மூலம், Facebook-இல் உள்ள 0:00:28.760,0:00:32.229 ஒவ்வொருவருக்கும் கணினி வாயிலாக நான் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிவிட முடியும். 0:00:32.229,0:00:34.000 லூப்கள் இதற்கு உதவுகின்றன, இதனால் அவை மதிப்புமிக்கவையாக இருக்கின்றன, 0:00:34.500,0:00:37.180 இவை கணினிகள் மிகச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒன்றும் கூட. 0:00:37.180,0:00:40.550 இந்த உதாரணத்தில் உங்கள் இலக்கு பன்றியைப் பெற பறவையை 0:00:40.550,0:00:44.940 நகர்த்துவதாக இருக்கும். இப்போது இதை மிக எளிதாகச் செய்ய 0:00:44.940,0:00:49.210 ”மீண்டும் செய்க” தொகுதியை நாம் பயன்படுத்தப் போகிறோம். பறவையை ஒவ்வொரு முறை பன்றியை 0:00:49.210,0:00:52.219 நோக்கி ஓர் அடி எடுத்துவைக்கச் செய்வதற்கு கணினிக்கு “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை 0:00:52.219,0:00:57.079 ஐந்து முறை கொடுப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்ய முடியும். 0:00:57.079,0:01:00.590 அல்லது எளிய முறையில் கணினியிடம் “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை ஒரு முறை சொல்லிவிட்டு, 0:01:00.590,0:01:04.150 அதை 5 முறை “மீண்டும் செய்யுமாறு” சொன்னால், அதே விஷயத்தை அது செய்துவிடும். 0:01:04.150,0:01:08.280 இதைச் செய்வதற்கு, உங்களுடைய “முன்னோக்கி நகர்த்து” கட்டளையை இழுத்து வந்து, 0:01:08.280,0:01:11.729 “மீண்டும் செய்” தொகுதிக்கு உள்ளே அதை வைக்க வேண்டும். 0:01:11.729,0:01:16.200 எத்தனை அடிகள் அது முன்னோக்கி வைக்க வேண்டும் எனச் சொல்ல, அதன் மீது கிளிக் செய்து அந்தத் 0:01:16.200,0:01:19.970 தொகுதியை நீங்கள் எத்தனை முறை மீண்டும் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும். இப்போது மேலும் ஒரு விஷயம் என்னவென்றால், 0:01:19.970,0:01:23.540 “மீண்டும் செய்” தொகுதிக்குள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை கட்டளைகள் வேண்டுமானாலும் நீங்கள் கொடுக்கலாம். 0:01:23.540,0:01:26.909 எனவே இந்த உதாரணத்தில் முன்னோக்கி நகர்ந்து இடது புறம் திரும்புமாறு நீங்கள் சொல்கிறீர்கள், 0:01:26.909,0:01:30.970 இதையே அது ஐந்து முறை செய்யும். சரி, சிறப்பான வேலை, மகிழ்ச்சியாக இருங்கள் :-)