Return to Video

Division 1வகுத்தல் அல்லது பிரித்தல்

  • 0:01 - 0:04
    இந்தக் காணொளியில் காணப்போவது வழக்கமான ஒன்றுதான்.
  • 0:04 - 0:07
    வகுத்தல் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. சொல்லப்போனால் நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது வகுத்தல்.
  • 0:07 - 0:10
    அதற்கொரு எடுத்துக் காட்டைக் காண்போம்.
  • 0:10 - 0:13
    அம்மா கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை உன் தம்பிக்குக் கொடுத்திருப்பாய்.
  • 0:13 - 0:15
    உணவருந்தும் போது உன் டப்பாவில் நான்கு சப்பாத்தி இருக்குமானால் அதில் இரண்டை நண்பனுக்குப் பகிர்ந்து தருகிறாய்.
  • 0:15 - 0:20
    "பிரித்தல்" “பகிர்தல்” வகுத்தல் இவையனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் பல வார்த்தைகள்.
  • 0:20 - 0:24
    இங்கே சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம். என்னிடம் நான்கு கால் டாலர்கள் உள்ளன.
  • 0:24 - 0:28
    அமெரிக்காவில் கால் டாலர் என்பது செல்லுபடியாகும் நாணயம்.
  • 0:28 - 0:32
    அவற்றை வரைந்து கொள்வோம். இங்கே நான்கு குவார்டர் நாணயங்கள் உள்ளன.
  • 0:32 - 0:36
    அதில் ஜார்ஜ் வாஷிங்டனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • 0:36 - 0:38
    இங்கே இரண்டு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • 0:38 - 0:41
    இந்த நாணயங்களை நாங்கள் இருவரும் பிரித்துக் கொள்கிறோம்.
  • 0:41 - 0:43
    இது நான்.
  • 0:43 - 0:46
    என்னை அழகாக வரைந்து கொள்கிறேன்.
  • 0:46 - 0:49
    அவ்வளவு அழகாக இல்லை. சரி நான் சுமாரான அழகு என்று வைத்துக் கொள்வோமே.
  • 0:49 - 0:51
    எனக்குத் தலைமுடி நிறைய இருக்கிறது.
  • 0:51 - 0:56
    அந்தப் பக்கம் நீ.
  • 0:56 - 0:57
    நீயும் அழகு தான்.
  • 0:57 - 0:59
    ஆனால் தலை மட்டும் வழுக்கை. தவறாக நினைக்க வேண்டாம். வேறுபாடு தெரிய வேண்டும் இல்லையா..? அதற்காகத் தான்.
  • 0:59 - 1:04
    சரி கவலை வேண்டாம் பக்கக் குறுமீசை போட்டுக் கொள்ளலாம்.
  • 1:04 - 1:09
    சரி போனால் போகிறது கொஞ்சம் தாடியும் வைத்து விடலாம்.
  • 1:09 - 1:10
    அது நீ. இது நான்.
  • 1:10 - 1:16
    இப்பொழுது இந்த நான்கு நாணயங்களையும் நாம் இருவரும் பிரித்துக் கொள்ளப் போகிறோம்.
  • 1:16 - 1:21
    இங்கு இருப்பது நான்கு நாணயங்கள்.
  • 1:21 - 1:24
    இவற்றை நம் இருவருக்கும் பிரிக்கிறோம்.
  • 1:24 - 1:27
    இங்கே இருப்பது நாம் இருவர் தானே....
  • 1:27 - 1:29
    நாம் இருவர் மட்டுமே என்பதால்
  • 1:29 - 1:32
    நான்கு நாணயங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.
  • 1:32 - 1:34
  • 1:34 - 1:37
    இதைப்போல்
  • 1:37 - 1:38
  • 1:38 - 1:40
    நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு நாணயங்களாகப்
  • 1:40 - 1:41
    பங்கிட்டுக் கொள்வோம்.
  • 1:41 - 1:43
    ஆளுக்கு இரண்டு நாணங்கள் கிடைத்து விட்டன.
  • 1:43 - 1:46
    நாம் எடுத்துக் கொண்டது நான்கு நாணயங்கள்.
  • 1:46 - 1:49
  • 1:49 - 1:52
    பிரித்தது இரண்டு சம பங்குகள்.
  • 1:52 - 1:54
    இதைத் தான் கணித வார்த்தையில் வகுத்தல் என்கிறோம்.
  • 1:54 - 1:58
    நாம் செய்தது என்ன..? நம்மிடமிருந்த நாணயங்களை 2 பிரிவுகளாக மாற்றினோம்.
  • 1:58 - 2:01
    நான்கு நாணயங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும்
  • 2:01 - 2:08
    ஒவ்வொருவருக்கும் இரண்டு நாணயங்கள் கிடைக்கின்றன.
  • 2:08 - 2:10
    நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது
  • 2:10 - 2:12
    இரண்டு பிரிவு ஆகிறது.
  • 2:12 - 2:17
    முதல் பிரிவு இது.
  • 2:17 - 2:19
    இங்கிருப்பது இரண்டாவது பிரிவு.
  • 2:19 - 2:22
    ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை உள்ளன?
  • 2:22 - 2:24
    அல்லது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை குவார்டர் நாணயங்கள் உள்ளன?
  • 2:24 - 2:27
    ஒவ்வொன்றிலும் இரண்டு நாணயங்கள்
  • 2:27 - 2:29
    பளிச்சென்ற நிறம் கொடுக்கிறேன்.
  • 2:29 - 2:31
    ஒவ்வொரு பிரிவிலும் 2 குவார்டர்கள் உள்ளன.
  • 2:31 - 2:34
    ஒரு பிரிவில் 2. இன்னொரு பிரிவில் 2
  • 2:34 - 2:36
    இதைக் கணித வடவில் எழுதிக் கொள்ளலாம்.
  • 2:36 - 2:38
    இது போன்ற வகுத்தல் கணக்குகள் நம் அன்றாட வாழ்வில் நிகழக் கூடியது தான்.
  • 2:38 - 2:41
  • 2:41 - 2:43
  • 2:43 - 2:44
  • 2:44 - 2:47
    வரைபடத்தை முழுமையாகப் பார்ப்போம்.
  • 2:47 - 2:50
    கணித முறைப்படி எப்படி எழுதுவது?
  • 2:50 - 2:55
    இது தான் நாம் வகுக்க வேண்டிய நான்கு.
  • 2:55 - 2:57
    சரியான நிறம் தருகிறேன்
  • 2:57 - 3:04
    இந்த நான்கானது இரண்டு பிரிவாக வகுக்கப்படுகிறது.
  • 3:04 - 3:08
    இது ஒரு பிரிவு. இது இன்னொரு பிரிவு.
  • 3:08 - 3:11
    ஆக இரண்டு பிரிவுகளாகிறது.
  • 3:11 - 3:15
    4 ÷2=2
  • 3:15 - 3:18
    நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது
  • 3:18 - 3:20
    ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு குவார்டர்கள் உள்ளன.
  • 3:20 - 3:23
    இரண்டு சம பாகங்களாக உள்ளன.
  • 3:23 - 3:24
  • 3:24 - 3:25
  • 3:25 - 3:29
    இந்த எடுத்துக் காட்டு நம் வாழ்நாள் முழுவதும் பயன்படக் கூடிய கணக்கு ஆகும்.
  • 3:29 - 3:33
    இதே போல நான் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கணித முறை
  • 3:33 - 3:36
    வகுத்தல் என்பதற்கு எதிர்மறையாக இருக்கிற பெருக்கல் ஆகும்.
  • 3:36 - 3:43
    இரண்டு குவார்டர்களைக் கொண்ட குழுக்கள் இரண்டு உள்ளன.
  • 3:43 - 3:49
    இந்த இரண்டு குழுக்களை அதாவது இரண்டை இரண்டால் பெருக்கினால்
  • 3:49 - 3:53
    கிடைப்பது நான்கு குவார்டர் நாணயங்கள்.
  • 3:53 - 3:56
    எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே ஒன்றுதான்.
  • 3:56 - 3:59
    இரண்டு முறையிலும் கணக்கைப் பார்த்து விட்டால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
  • 3:59 - 4:01
    மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம்.
  • 4:01 - 4:04
    அடுத்து நாம் பார்க்கப் போகிற கணக்கு
  • 4:04 - 4:09
    எண் ஆறினை வகுக்கும் ஒரு கணக்கு
  • 4:09 - 4:11
    தெளிவாகத் தெரியும்படி நிறம் கொடுக்கலாம்.
  • 4:11 - 4:15
    6ஐ மூன்றால் வகுக்கும் போது கிடைக்கும் விடை என்ன...?
  • 4:15 - 4:17
    இங்கு 6 பொருட்களை வரைந்து கொள்ளலாம்.
  • 4:17 - 4:19
    பொருட்கள் என்ன என்பது இங்கு முக்கியமல்ல.
  • 4:19 - 4:23
    சரி குட மிளகாய்கள் என்று வைத்துக் கொள்வோமே. நம்மிடம் இருப்பது ஆறு.
  • 4:23 - 4:25
    நாம் எப்படி வரைந்தாலும்
  • 4:25 - 4:27
    இதுதான் குடமிளகாய் என்று சொல்லிக் கொள்ளலாம்.
  • 4:27 - 4:28
    இப்படித் தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதன் வடிவம் நமக்குத் தெரிந்தது தான்.
  • 4:28 - 4:34
    1, 2, 3, 4, 5, 6.
  • 4:34 - 4:36
    இந்த ஆறை மூன்றால் வகுக்க வேண்டும்.
  • 4:36 - 4:38
    இந்தக் கணக்கைச் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது.
  • 4:38 - 4:41
    நம்மிடமுள்ள 6 மிளகாய்களையும்
  • 4:41 - 4:44
    3 சமபாகங்களாகப் பிரித்துக் கொள்வோம்.
  • 4:44 - 4:47
    இதனை மூன்று பேருக்குப் பிரித்துத் தருகிறோம்.
  • 4:47 - 4:49
    ஒவ்வொருவரும் எத்தனை மிளகாய்களைப் பெறுவார்கள்?
  • 4:49 - 4:51
    முதலில் இவற்றை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • 4:51 - 4:53
    நம்மிடம் இருப்பது 6 மிளகாய்கள்
  • 4:53 - 4:55
    அதனை மூன்று பிரிவாக ஆக்குகிறோம்.
  • 4:55 - 4:57
    இதை மூன்றாகப் பிரிப்பதற்கு சிறந்த வழி
  • 4:57 - 5:02
    இது ஒருபிரிவு, இது ஒரு பிரிவு,
  • 5:02 - 5:05
    இது மூன்றாவது பிரிவு.
  • 5:05 - 5:10
    இப்பொழுது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை மிளகாய்கள் உள்ளன....?
  • 5:10 - 5:12
  • 5:12 - 5:14
    ஒன்று, இரண்டு மிளகாய்கள் உள்ளன.
  • 5:14 - 5:15
  • 5:15 - 5:20
    6ஐ 3ஆல் வகுத்தால் கிடைப்பது இரண்டு.
  • 5:20 - 5:22
    எனவே இதற்குச் சிறந்த வழி
  • 5:22 - 5:27
    6ஐ 3 பிரிவுகளாக மாற்றுவது தான்.
  • 5:27 - 5:30
    இதனைச் சற்றே வேறு விதமாகவும் செய்யலாம்.
  • 5:30 - 5:31
  • 5:31 - 5:33
    அதுவும் எளிமையானது தான்.
  • 5:33 - 5:38
    ஆறினை மூன்றால் வகுப்பதும் சுலபமானது தானே...
  • 5:38 - 5:43
    இவை ராஸ்பெர்ரி பழங்கள். ராஸ்பெர்ரியை வரைவதும் சுலபம் தான்.
  • 5:43 - 5:47
    1,2,3,4,5,6
  • 5:47 - 5:52
    கடந்த முறை போலவே இதனை வகுப்பதற்கு முன் மூன்று குழுக்களாகப் பிரிந்துக் கொள்வோம்.
  • 5:52 - 5:54
    1,2,3 பிரிவுகளாக மாறி விட்டோம்.
  • 5:54 - 5:56
    3 பிரிவுகளாகப் பிரிப்பதற்கு பதில்
  • 5:56 - 5:58
    ஆறினை மூன்றால் வகுக்க வேண்டுமென்றால்
  • 5:58 - 6:03
    நாம் மூன்றின் குழுக்களை வகுக்க வேண்டும்
  • 6:03 - 6:04
    மூன்று குழுக்களுக்குள் அல்ல.
  • 6:04 - 6:06
    மூன்றின் குழுக்களை வகுப்போம்.
  • 6:06 - 6:09
    3 பொருட்களாக உள்ள குழுக்கள் எத்தனை...?
  • 6:09 - 6:13
    குடமிளகாய்க் குழுக்களை வரைந்து கொள்வோம்.
  • 6:13 - 6:16
    இங்கு ஒரு மூன்றின் குழு....
  • 6:16 - 6:22
    இது இரண்டாவது குழு. இதிலும் மூன்று மிளகாய்கள் உள்ளன.
  • 6:22 - 6:27
    6 பொருள்களை எடுத்து, மூன்று உள்ள இரண்டு குழுக்களாக மாற்றியுள்ளோம்.
  • 6:27 - 6:30
    2 இப்போது நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன.
  • 6:30 - 6:33
    வகுத்தலுக்கு மற்றொரு முறை உள்ளது.
  • 6:33 - 6:35
    இது மிகவும் சுவாரஸ்யமானது.
  • 6:35 - 6:37
    இந்த இரண்டிற்குமான தொடர்புகளை
  • 6:37 - 6:42
    ஆறை மூன்றால் வகுப்பதாகவும் ஆறினை இரண்டால் வகுப்பதாகவும் பார்க்கலாம்.
  • 6:42 - 6:44
    இதனை இங்கே எழுதிக் கொள்வோம்.
  • 6:44 - 6:48
    ஆறினை இரண்டால் வகுத்தால் கிடைப்பது என்ன..?
  • 6:48 - 6:52
  • 6:52 - 6:55
    இவ்வாறு 2 ஆல் வகுப்பது என்றால்
  • 6:55 - 6:59
    முதலில் 6 பொருட்களையும் வரைந்து கொள்வோம்.
  • 6:59 - 7:03
    அதை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.
  • 7:03 - 7:07
    இது ஒரு குழு.
  • 7:07 - 7:09
    இது இன்னொரு குழு.
  • 7:09 - 7:12
    ஒவ்வொரு குழுவிலும் 3 பொருட்கள் உள்ளன.
  • 7:12 - 7:13
    இதில் மூன்று பொருட்கள்.
  • 7:13 - 7:15
    6ஐ 2ஆல் வகுக்கும் பொழுது கிடைப்பது 3.
  • 7:15 - 7:16
    அல்லது இதனை இன்னொரு முறையிலும் செய்யலாம்.
  • 7:16 - 7:22
    ஆறு இரண்டால் வகுபடுகிறது.
  • 7:22 - 7:26
    இங்கு 1,2,3,4,5,6 என 6 பொருட்கள் உள்ளன.
  • 7:26 - 7:29
    இவற்றை இரண்டின் குழுக்களாகப் பிரிக்கிறோம்.
  • 7:29 - 7:31
    இதில் ஒவ்வொரு குழுவிலும் 2 பொருட்கள் உள்ளன.
  • 7:31 - 7:33
    இது ஒரு வகையில் சுலபமானதும் கூட.
  • 7:33 - 7:37
    ஒவ்வொரு குழுவிலும் இருப்பது 2 பொருட்கள்.
  • 7:37 - 7:39
  • 7:39 - 7:41
    ஒரு குழு இங்கு உள்ளது.
  • 7:41 - 7:43
    மற்றொரு குழு அங்குள்ளது.
  • 7:43 - 7:45
    ஒன்றிற்கொன்று தொலைவில் இருந்தால் நல்லது.
  • 7:45 - 7:46
    இவை இரண்டு குழுக்கள்.
  • 7:46 - 7:47
    இப்பொழுது நம்மிடம் இருப்பது எத்தனை குழுக்கள்...?
  • 7:47 - 7:49
    1, 2, 3
  • 7:49 - 7:51
    நம்மிடம் 3 குழுக்கள் உள்ளன.
  • 7:51 - 7:58
    ஆறினை மூன்றால் வகுத்தால் இரண்டு கிடைக்கும் என்பது எதேச்சைச் செயல் அல்ல.
  • 7:58 - 8:01
    ஆறை இரண்டால் வகுத்தால் இரண்டு என்பது கணிதப்பூர்வமானது.
  • 8:01 - 8:03
    அதனை எழுதிக் கொள்வோம்.
  • 8:03 - 8:09
    6 வகுத்தல் 3 சமம் 2
  • 8:09 - 8:13
    6 வகுத்தல் 3 சமம் 2
  • 8:13 - 8:20
    ஏன் 3ஐயும் 2ஐயும் இடமாற்றுகிறோமென்றால்
  • 8:20 - 8:26
    மூன்றை இரண்டு முறைப் பெருக்கினால் கிடைப்பது ஆறு.
  • 8:26 - 8:28
    நம்மிடம் மூன்று மூன்றாக இரண்டு குழுக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • 8:28 - 8:30
    இதனைக் காட்சிப்படுத்த வரைந்து கொள்வோம்.
  • 8:30 - 8:37
    மூன்று பொருட்கள் கொண்ட குழு அங்கு ஒன்று. இங்கு ஒன்று.
  • 8:37 - 8:41
    இரண்டு மூன்றுகள் சேர்ந்தால் ஆறு.
  • 8:41 - 8:44
    மூன்றை இரண்டு முறை எடுத்தால் அது ஆறுக்குச் சமம்
  • 8:44 - 8:46
    இதை வேறு வழியிலும் யோசிக்கலாம்.
  • 8:46 - 8:48
    என்னிடம் 2 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள் உள்ளன.
  • 8:48 - 8:51
    இரண்டு பொருட்கள் கொண்ட ஒரு குழு இங்குள்ளது.
  • 8:51 - 8:54
    மற்ற ஒரு குழு இங்குள்ளது.
  • 8:54 - 8:56
    மூன்றாவது குழு இது.
  • 8:56 - 8:58
    இது எதற்குச் சமம்.
  • 8:58 - 9:01
    மூன்று முறை இரண்டு என்றால்
  • 9:01 - 9:03
    அதுவும் 6 க்குச் சமம்.
  • 9:03 - 9:05
    இரண்டு முறை 3ம் 6க்குச் சமம்.
  • 9:05 - 9:06
    3 x 2 = 6
  • 9:06 - 9:08
    இதைப் பெருக்கலின் காணொளியில் பார்த்தோம்.
  • 9:08 - 9:10
    வரிசை இங்கு முக்கியமில்லை.
  • 9:10 - 9:12
    எனவே தான் ஒரு எண்ணை வகுக்கும் பொழுது
  • 9:12 - 9:13
    வேறு வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம்.
  • 9:13 - 9:19
    6 பொருட்களை, இரண்டிரண்டாகப் பிரித்தால் மூன்று குழுக்கள் கிடைக்கும்.
  • 9:19 - 9:23
    அதே 6 பொருட்கள். அதை மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 குழுக்கள் கிடைக்கும்.
  • 9:23 - 9:24
    மேலும் சில கணக்குகளைப் பார்ப்போம்.
  • 9:24 - 9:34
    வகுத்தலை எந்தெந்த முறையில் செய்யலாம் என்பது இப்போது புரிந்து விட்டது இல்லையா...?
  • 9:34 - 9:36
    அடுத்து மற்றொரு சுவாரஸ்யமான கணக்கு
  • 9:36 - 9:41
    இங்கே ஒன்பதை நான்கால் வகுக்கிறோம்.
  • 9:41 - 9:43
    இந்தக் கணக்குப் போட எளிதாக 9 பொருட்களை வரைந்து கொள்வோம்.
  • 9:43 - 9:51
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.
  • 9:51 - 9:54
    9ஐ 4ஆல் வகுக்கும் பொழுது
  • 9:54 - 9:57
    ஒரு குழுவிற்கு 4 இருக்குமாறு பிரித்துக் கொள்ளலாம்.
  • 9:57 - 9:59
    ஒவ்வொரு குழுவிலும் 4 இருக்குமாறு பிரிப்பது எப்படி. ?
  • 9:59 - 10:00
    இதை இப்படிச் செய்து பார்க்கலாமா..?
  • 10:00 - 10:03
    நம்மிடம் இங்கே 4 பொருட்கள் உள்ள ஒரு பிரிவு உள்ளது.
  • 10:03 - 10:05
    நான்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
  • 10:05 - 10:07
    இது 4 கொண்ட ஒரு குழு.
  • 10:07 - 10:11
    இதுவும் 4 கொண்ட இன்னொரு குழு.
  • 10:11 - 10:13
    ஆனால் இதில் ஒன்று மீதியாக இருக்கிறது.
  • 10:13 - 10:15
    இதை" மீதி" என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 10:15 - 10:18
    எந்தக் குழுவிலும் சேர்க்க முடியாது.
  • 10:18 - 10:21
    ஒன்பதை நான்கால் வகுக்கும் பொழுது
  • 10:21 - 10:24
    இப்படித் தான் பிரிக்க முடியும்.
  • 10:24 - 10:28
    இதன் மூலம் கிடைக்கும் விடை நம்மிடம் ஒரு புதிய எண்ணத்தை உருவாக்குகிறது.
  • 10:28 - 10:32
    ஒன்பதை 4 ஆல் வகுக்கும் பொழுது வருவது 2 குழுக்கள்.
  • 10:32 - 10:35
    இது ஒரு குழு..... இது மற்றொரு குழு.....
  • 10:35 - 10:37
    மிச்சமிருப்பது ஒன்று.
  • 10:37 - 10:39
    இதை என்ன செய்வது....?
  • 10:39 - 10:46
    மிச்சமாக இருப்பதை என்ன செய்ய முடியும். அப்படியே இருக்க விட வேண்டியது தான்.
  • 10:46 - 10:49
    9ஐ 4ஆல் வகுக்கும்பொழுது கிடைப்பது 2.மீதி 1.
  • 10:49 - 10:53
    12ஐ 4ஆல் வகுப்போம்.
  • 10:53 - 11:01
    1, 2,,3 , 4 ,5 , 6 ,7 ,8 , 9, 10 11 ,12.
  • 11:01 - 11:02
    இங்கு இதை எழதுகிறேன்.
  • 11:02 - 11:06
    12 ÷ 4
  • 11:06 - 11:08
    இங்கு இந்த 12 பொருள்களையும் பிரிக்கிறேன்.
  • 11:08 - 11:10
    அவை ப்ளம் அல்லது ஆப்பிள் எனக் கொள்வோம்.
  • 11:10 - 11:13
    ஒவ்வொரு குழுவிலும் 4ஐ வைத்துப் பிரிப்போம்.
  • 11:13 - 11:15
    இங்கு அவ்வாறு பிரிக்கிறேன்.
  • 11:15 - 11:19
    இது நான்கு கொண்ட ஒரு குழு.
  • 11:19 - 11:23
    இது இன்னொரு 4ஐ கொண்ட குழு.
  • 11:23 - 11:24
    இது மிகவும் சுலபமாக உள்ளது.
  • 11:24 - 11:27
    இது 4ஐக் கொண்ட 3வது குழு.
  • 11:27 - 11:28
    இது இவ்வளவுதான்.
  • 11:28 - 11:31
    இதில் மீதி இல்லை.
  • 11:31 - 11:35
    12 பொருள்களையும் 4பொருள்கள் கொண்ட 3 குழுக்களாகப் பிரித்தேன்.
  • 11:35 - 11:38
    4 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள்.12
  • 11:38 - 11:44
    12 ÷ 4 =3
  • 11:44 - 11:47
    நாம் கடந்த காணொளியில் செய்த பயிற்சியை செயயமுடியும்.
  • 11:47 - 11:50
    12 ÷ 3 என்ன?
  • 11:50 - 11:52
    புதிய நிறம் கொடுத்தல்.
  • 11:52 - 11:55
    12 ÷ 3
  • 11:55 - 11:57
    இதுவரை கற்றுக் கொண்டதிலிருந்து
  • 11:57 - 12:01
    மூன்றுமுறை நான்கு 12
  • 12:01 - 12:03
    இதை நிரூபிப்போம்.
  • 12:03 - 12:09
    1 , 2 , 3 , 4 , 5, 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12.
  • 12:09 - 12:12
    இதை 3 பிரிவுகளாக்குவோம்.
  • 12:12 - 12:14
    கொஞ்சம் வித்தியாசமாகச் செய்கிறேன்.
  • 12:14 - 12:18
    இதற்கு நல்ல வரிசை தேவையில்லை.
  • 12:18 - 12:20
    ஒரு குரூப்பில் 3 பொருட்கள் உள்ளன.1
  • 12:20 - 12:22
    12 ÷ 3
  • 12:22 - 12:28
    3 பொருட்கள் உள்ள ஒரு குழு.
  • 12:28 - 12:33
    இதுவும் 3 பொருட்கள் உள்ள ஒரு குழு.
  • 12:33 - 12:34
    மற்ற இரண்டும் இவ்வாறே.
  • 12:34 - 12:37
    இதை செய்ய ஒரு சுலபமான வழி உள்ளது
  • 12:37 - 12:39
    இப்படி செய்வதைவிட
  • 12:39 - 12:40
    ஆனால் இங்கு அது தேவை இல்லை.
  • 12:40 - 12:42
    3 அடங்கிய குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
  • 12:42 - 12:44
    எத்தனை குழுக்கள் உள்ளன?
  • 12:44 - 12:46
    ஒன்றாவது
  • 12:46 - 12:50
    இரண்டாவது
  • 12:50 - 12:53
    மூன்றாவது குழு.
  • 12:53 - 12:57
    வேறு நிறம் மாற்றுதல்.
  • 12:57 - 12:59
    இது நான்காவது குழு.
  • 12:59 - 13:02
    இப்பொழுது சரியாக நான்கு குழுக்கள் உள்ளன.
  • 13:02 - 13:04
    வகுத்தலில் மிகவும் சுலபமான வழி
  • 13:04 - 13:08
    தெளிவான வழி
  • 13:08 - 13:11
    நான் இவைகளை மூன்றுமூன்றாகப் பிரிக்க வேண்டும்.
  • 13:11 - 13:17
    மூன்றுமூன்றாக அடங்கிய 1,2,3,4 குழுக்கள்.
  • 13:17 - 13:21
    இந்த வழிகளில் 12 பொருட்களை மூன்றுமூன்றாகப் பிரிக்கிறேன்.
  • 13:21 - 13:22
    இந்த வழியில் நீ யோசிக்கலாம்.
  • 13:22 - 13:26
    மீதியைத் தரும் இன்னொரு கணக்கை
  • 13:26 - 13:27
    இங்கு பார்ப்போம்.
  • 13:27 - 13:36
    14ஐ 5ஆல் வகுபடும்பொழுது வரும் விடை என்ன?
  • 13:36 - 13:40
    14 பொருட்களை வரைகிறேன்.
  • 13:40 - 13:47
    1, 2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14.
  • 13:47 - 13:48
    14 பொருட்கள்.
  • 13:48 - 13:52
    இதை 5 அடங்கிய குழுக்களாகப் பிரிக்கிறேன்.
  • 13:52 - 13:56
    இது ஒரு குழு,
  • 13:56 - 13:58
    இது இன்னொரு இரண்டாவது குழு.
  • 13:58 - 14:00
    இதில் மீதி நான்கு உள்ளது.
  • 14:00 - 14:02
    5 அடங்கிய இன்னொரு குழுவை உண்டாக்க முடியாது.
  • 14:02 - 14:05
    இதற்கு விடை 5பொருட்கள் அடங்கிய 2 குழுக்கள்
  • 14:05 - 14:10
    மீதி நான்கு.
  • 14:10 - 14:12
    இரண்டு மீதி நான்கு.
  • 14:12 - 14:15
    உனக்கு தேவையான பயிற்சி கிடைத்ததும்
  • 14:15 - 14:17
    இம்மாதிரி படங்கள் வரைந்து
  • 14:17 - 14:18
    வகுக்க வேண்டிய அவசியமில்லை.
  • 14:18 - 14:21
    ஆனால் அது தவறு இல்லை.
  • 14:21 - 14:23
    வேறு வழியிலும் இதை யோசிக்கலாம்.
  • 14:23 - 14:28
    14, நான்கால் வகுபடுகிறது.
  • 14:28 - 14:29
    இதை இன்னொரு வழியில் எழுதலாம்.
  • 14:29 - 14:31
    இப்படி எழுதுவதால் தவறெதுவும் இல்லை.
  • 14:31 - 14:36
    14ஐ 4ல் வகுப்பதை
  • 14:36 - 14:39
    14 ÷ 5 என்றும் எழுதலாம்.
  • 14:39 - 14:40
    இனி அடுத்து பார்ப்போம்.
  • 14:40 - 14:43
    14ல் எத்தனை ஐந்துகள் ?
  • 14:43 - 14:43
    பார்ப்போம்.
  • 14:43 - 14:46
    5 ஆம் வாய்ப்பாட்டை ஞாபகப்படுத்திக் கொள்.
  • 14:46 - 14:49
    ஐந்துமுறை ஒன்று 5
  • 14:49 - 14:52
    ஐந்துமுறை இரண்டு 10
  • 14:52 - 14:56
    ஆனால் 14ஐ விட 10 குறைவு.
  • 14:56 - 14:59
    5முறை 3 என்பது 15 ஆகிறது.
  • 14:59 - 15:02
    15,14ஐ விட அதிகம்.அதனால் பின் செல்கிறேன்.
  • 15:02 - 15:04
    இரண்டு ஐந்துகள்.
  • 15:04 - 15:06
    இரண்டு முறை 5
  • 15:06 - 15:09
    இரண்டு முறை ஐந்து என்பது 10
  • 15:09 - 15:10
    பின் இதை கழித்தல் வேண்டும்
  • 15:10 - 15:12
    பதினான்கிலிருந்து பத்தைக் கழித்தால் நான்கு.
  • 15:12 - 15:15
    அதே மீதிதான் இங்கும்.
  • 15:15 - 15:18
    பதினான்கில் இரண்டு ஐந்துகள் உள்ளன.
  • 15:18 - 15:20
    ஐந்து கொண்ட இரு குழுக்கள் உள்ளன.
  • 15:20 - 15:21
    அவை பத்துக்குச் சமம்.
  • 15:21 - 15:28
    இன்னும் மீதி 4 உள்ளது.
  • 15:28 - 15:29
    மேலும் சிலவற்றைச் செய்வோம்.
  • 15:29 - 15:36
    வகுத்தல்பற்றி இங்குள்ளதை நீ நன்கு தெளிவாக்கிக் கொள்ளவேண்டும்
  • 15:36 - 15:38
    இந்த குறிமுறையை பயன்படுத்தி எழுதுகிறேன்.
  • 15:38 - 15:42
    இங்கு எட்டு இரண்டால் வகுபடுகிறது.
  • 15:42 - 15:44
    8ஐ இவ்வாறு எழுதுகிறேன்.8--
  • 15:44 - 15:46
    அது என்னவாக இருக்கும்.
  • 15:46 - 15:47
    அதுதான் கேள்வி.
  • 15:47 - 15:52
    எட்டு இரண்டால் வகுபடுகிறது என்றும் இதை எழுதலாம்.
  • 15:52 - 15:55
    இரண்டாவதில் அரைவட்டம் போட்டுள்ளேன்.
  • 15:55 - 15:58
    அதை போடாமலும் செய்யலாம்.
  • 15:58 - 16:01
    இரண்டு முறை ஒன்று இரண்டுக்குச் சமம்.
  • 16:01 - 16:03
    இப்படி எட்டுவரை போகலாம்.
  • 16:03 - 16:06
    இதைவிட பெரிய எண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம்.
  • 16:06 - 16:09
    இரண்டால் பெருக்கும்பொழுது எட்டு எண் வருகிறது.
  • 16:09 - 16:11
    இரண்டு முறை இரண்டு நான்கிற்குச் சமம்.
  • 16:11 - 16:13
    இது எட்டிற்கும் குறைவாக உள்ளது.
  • 16:13 - 16:16
    இரண்டு முறை மூன்று ,ஆறு.
  • 16:16 - 16:17
    இதுவும் எட்டிற்குக் குறைவாக உள்ளது.
  • 16:17 - 16:21
    இரண்டுமுறை
  • 16:21 - 16:25
    இரண்டு முறை நான்கு சரியாக எட்டு.
  • 16:25 - 16:28
    நான்குமுறை இரண்டு எட்டாகிறது.
  • 16:28 - 16:30
    எட்டில் நான்கு முறை இரண்டு உள்ளது.
  • 16:30 - 16:33
    எட்டை இரண்டால் வகுத்தால் வரும் விடை நான்கிற்குச் சமம்.
  • 16:33 - 16:35
    வட்டத்தைக்கூட போட்டுக் கொள்ளலாம்.
  • 16:35 - 16:38
    ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு.
  • 16:38 - 16:40
    கொஞ்சம் குளறுபடியாக வரைந்துள்ளேன்.
  • 16:40 - 16:43
    இதை இரண்டிரண்டாகப் பிரிப்போம்.
  • 16:43 - 16:47
    ஒன்று, இரண்டு
  • 16:47 - 16:51
    மூன்று,நான்கு 2பொருட்கள் கொண்ட குரூப் உள்ளது.
  • 16:51 - 16:54
    என்னிடமுள்ள எட்டு பொருட்களை இரண்டிரண்டாகப் பிரித்ததில்
  • 16:54 - 16:55
    கிடைத்தது நான்கு குரூப்புகள்.
  • 16:55 - 16:59
    எனவே எட்டை இரண்டால் வகுத்தால் கிடைப்பது நான்கு.
  • 16:59 - 17:01
    இந்த செயல்முறைகள் உனக்கு உதவும் என நம்புகிறேன்.
Title:
Division 1வகுத்தல் அல்லது பிரித்தல்
Description:

கணிதத்தில் வகுத்தலை ஆரம்பிக்குமுன் விளக்கக்கூடிய சில அடிப்படைப்பயிற்சிகள்

more » « less
Video Language:
English
Duration:
17:02
Poppu Purushothaman edited Tamil subtitles for Division 1
Poppu Purushothaman edited Tamil subtitles for Division 1
Poppu Purushothaman edited Tamil subtitles for Division 1
Poppu Purushothaman edited Tamil subtitles for Division 1
Poppu Purushothaman edited Tamil subtitles for Division 1
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Division 1
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Division 1
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Division 1
Show all

Tamil subtitles

Revisions