Return to Video

முழு மதிப்புகளை ஒப்பிடுதல்

  • 0:00 - 0:04
    முழு மதிப்புக்களை ஒப்பிடுவது பற்றி
    சில உதாரணங்களை பார்க்கலாம்.
  • 0:04 - 0:06
    நாம் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்
  • 0:06 - 0:12
    எதிர்மறை 9-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பினை
  • 0:12 - 0:19
    எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்போடு
  • 0:19 - 0:24
    எவ்வாறு ஒப்பிட வேண்டும்?
  • 0:24 - 0:26
    இதை பற்றி சற்று சிந்திப்போம்
  • 0:26 - 0:28
    -9 என்றால் என்ன என்று யோசிக்கலாம் அல்லது
  • 0:28 - 0:29
    எண் வரிசையில் -9 எங்கே உள்ளது?
  • 0:29 - 0:31
    எதிர்மறை 7 எங்கே உள்ளது?
  • 0:31 - 0:34
    நாம் இந்த எண்களின் முழு மதிப்பை
    கண்டறியலாம்,
  • 0:34 - 0:36
    பிறகு இந்த எண்களை ஒப்பிட்டு பார்க்கலாம்
  • 0:36 - 0:38
    இதை ஒரு சில வழிகளில் சிந்திக்கலாம்,
  • 0:38 - 0:41
    எண் வரிசையில் இதை வரைவது ஒரு வழி,
  • 0:41 - 0:46
    இந்த எண் 0 மற்றும் எதிர்மறை
    7 என்றால்
  • 0:46 - 0:50
    பிறகு எதிர்மறை 9 இவ்விடத்தில் உள்ளது
  • 0:50 - 0:52
    நாம் ஒரு எண்ணின் முழு
    மதிப்பை எடுத்தால்
  • 0:52 - 0:56
    இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்று பார்க்கிறோம்.
  • 0:56 - 0:58
    இது 0-வின் வலது பக்கத்தில் உள்ளதா அல்லது வலது பக்கத்தில் உள்ளதா?
  • 0:58 - 1:03
    உதாரணமாக, -9.... 0-வில் இருந்து 9 இடம் தள்ளிஇடது பக்கத்தில் வருகிறது
  • 1:03 - 1:07
    எனவே எதிர்மறை 9-ன் சார்பில்லா
    மதிப்பு சரியாக 9..
  • 1:07 - 1:16
    -7, ...0-வில் இருந்து 7 இடம் தள்ளி இடது பக்கத்தில் வருகிறது..
  • 1:16 - 1:20
    எனவே எதிர்மறை 7-ன் சார்பில்லா அல்லது முழு மதிப்பு +7
  • 1:20 - 1:22
    நாம் 9 மற்றும் 7-ஐ ஒப்பிட்டால்
  • 1:22 - 1:24
    இது சற்று நேரான கணக்கு,
  • 1:24 - 1:29
    9, 7-ஐ விட அதிகம் என்று தெளிவாக தெரியும்..
  • 1:29 - 1:32
    உங்களுக்கு இந்த மிகு மற்றும் குறைவான
    குறி தெளிவாக இல்லையெனில்
  • 1:32 - 1:36
    மிகுதியை குறிக்கும் சின்னம் இடது
    புறத்தில் பெரியதாக இருக்கும்
  • 1:36 - 1:38
    அது மிகுதியான பக்கத்தைக் குறிப்பிடுகிறது
  • 1:38 - 1:42
    நாம் இதனை இவ்வாறு கூறலாம்.
  • 1:42 - 1:44
    இந்த எண்களை சார்புள்ள எண்களாக எடுத்தால்
  • 1:44 - 1:50
    -9, -7 விட குறைவான மதிப்பு உடைய எண்
  • 1:50 - 1:53
    கவனித்துப் பார்த்தால், மதிப்பு குறைவான எண்
    சிறிய பக்கம் உள்ளது
  • 1:53 - 1:57
    மேலும் சுவாரஸ்யமாக, -9.... -7-ஐ விட மதிப்பு
    குறைவு
  • 1:57 - 2:01
    -9..... 0-விற்கு இடது பக்கம் வருவதால்
  • 2:01 - 2:05
    -9-ன் சார்பில்லா மதிப்பு 9,
  • 2:05 - 2:08
    -7-ன் சார்பில்லா மதிப்பை விட பெரியது
  • 2:08 - 2:10
    இதை வேறு வழியில் யோசிக்கலாம்..
  • 2:10 - 2:12
    ஒரு எண்ணின் சார்பில்லா மதிப்பை எடுத்தால்
  • 2:12 - 2:15
    அது அந்த எண்ணின் நேர்மறை மதிப்பாகும்..
  • 2:15 - 2:20
    எனவே 9-ன் சார்பில்லா மதிப்பு 9 க்கு
    சமம் ஆகும்
  • 2:20 - 2:23
    -9 -ன் சார்பில்லா மதிப்பும் 9 ஆகும்
  • 2:23 - 2:24
    நீங்கள் அதை சிந்தித்தால்..
  • 2:24 - 2:28
    இந்த இரண்டு எண்களும் 0-ல் இருந்து 9 அலகு
    தள்ளி உள்ளது
  • 2:28 - 2:32
    இந்த 9, 0-விற்கு வலது பக்கம் உள்ளது மற்றும்
    இந்த 9, 0-விற்கு இடது பக்கம் உள்ளது..
  • 2:32 - 2:34
    மேலும் சில உதாரணங்களை பார்போம்
  • 2:34 - 2:37
    நாம் இந்த இரண்டு எண்களை எடுத்துக்
    கொள்ளலாம்.
  • 2:37 - 2:44
    2-ன் சார்பில்லா மதிப்பும் 3-ன் சார்பில்லா
    மதிப்பும்,
  • 2:44 - 2:48
    ஒரு நேர்மறை எண்ணின் தனி மதிப்பு அதே
    மதிப்பாக தான் இருக்கும்
  • 2:48 - 2:52
    2,... 0-விற்கு வலது புறம் உள்ளது. அதனால் இதன்
    மதிப்பீடு 2 ஆகும்
  • 2:52 - 2:54
    மற்றும் 3-ன் சார்பில்லா மதிப்பு
  • 2:54 - 2:56
    3 ஆகும்
  • 2:56 - 2:57
    இது மிகவும் தெளிவாக உள்ளது
  • 2:57 - 3:01
    2 இங்கே சிறிய எண்..
  • 3:01 - 3:03
    அதனால் 2, 3-ஐ விட சிறிய எண்
  • 3:03 - 3:06
    அல்லது 2-ன் சார்பில்லா மதிப்பு
    3-ஐ விடக் குறைவு
  • 3:06 - 3:08
    அதனால் இங்கே குறைவைக் குறிப்பிடும்
    சின்னம் உள்ளது
  • 3:08 - 3:13
    மேலும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம்..
  • 3:13 - 3:16
    "பொருத்தமான வண்ணம் எடுக்கிறேன்"
  • 3:16 - 3:19
    -8-ன் சார்பில்லா மதிப்பையும் 8-ன் சார்பில்லா
    மதிப்பையும் ஒப்பிட்டால்
  • 3:19 - 3:23
    இரண்டும் 0-வில் இருந்து 8 அலகு தள்ளி இருக்கும்..
  • 3:23 - 3:26
    8, 0 -வின் இடது புறம் உள்ளது,
    இந்த 8, 0 -வின் வலது புறம் உள்ளது
  • 3:26 - 3:29
    அதனால் இரண்டின் மதிப்பும் 8 ஆகும்..
  • 3:29 - 3:34
    -8-ன் சார்பில்லா மதிப்பும் 8-ன் சார்பில்லா
    மதிப்பும் 8 ஆகும்..
  • 3:34 - 3:38
    ஆக, இவை இரண்டும் ஒன்று தான்..
  • 3:38 - 3:40
    மேலும் சில உதாரணங்களை பார்ப்போம்..
  • 3:40 - 3:47
    நாம் -1 -ன் சார்பில்லா மதிப்பை
  • 3:47 - 3:49
    +2 உடன் ஒப்பிட்டால்
  • 3:49 - 3:58
    -1-ன் சார்பில்லா மதிப்பு, -1 -ன்
    நேர்மறை ஆகும். அதாவது 1
  • 3:58 - 4:00
    தெளிவாக 1-ன் மதிப்பு 2-ஐ விட குறைவு
  • 4:00 - 4:01
    அல்லது, அதை பற்றி மற்றொரு
    வழியில் சிந்தித்தால்
  • 4:01 - 4:07
    -1-ன் சார்பில்லா மதிப்பு 2-ஐ விட குறைவு
Title:
முழு மதிப்புகளை ஒப்பிடுதல்
Description:

முழு மதிப்புகளை ஒப்பிடுதல்

more » « less
Video Language:
English
Duration:
04:07
Karuppiah Senthil edited Tamil subtitles for Comparing Absolute Values
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Srividhya Babu edited Tamil subtitles for Comparing Absolute Values
Show all

Tamil subtitles

Revisions