Return to Video

Recognizing Divisibility

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    380 என்ற எண் 2, 3,
  • 0:04 - 0:07
    4, 5, 6, 9 அல்லது 10 ஆகியவற்றால் வகுபடுமா எனக் காண்க.
  • 0:07 - 0:09
    7 மற்றும் 8 ஆகியவை கொடுக்கப்படவில்லை என்பதால்
  • 0:09 - 0:10
    அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
  • 0:10 - 0:13
    2 பற்றி நாம் சிந்திப்போம்.
  • 0:13 - 0:17
    இந்த எண் 2 ஆல் வகுபடுமா?
  • 0:17 - 0:20
    நான் இங்கே 2 எழுதுகிறேன்.
  • 0:20 - 0:23
    ஏதேனும் ஒரு எண் 2ஆல் வகுபடுவதற்கு, அது
  • 0:23 - 0:28
    ஒரு இரட்டை எண்ணாக இருக்க வேண்டும், மேலும் ஒரு இரட்டை எண்ணாக இருப்பதற்கு, ஒன்றுகள்
  • 0:28 - 0:32
    இலக்கம் -- நான் 380ஐ மீண்டும் எழுதுகிறேன்.
  • 0:32 - 0:35
    இரட்டை எண்ணாக இருப்பதற்கு ஒன்றுகள் இலக்கம் இரட்டை எண்ணாக இருக்க வேண்டும், எனவே
  • 0:35 - 0:39
    இது இரட்டை எண்ணாக இருக்க வேண்டும்.
  • 0:39 - 0:43
    மேலும் அது இரட்டை எண்ணாக இருப்பதற்கு, அது 0, 2, 4, 6 அல்லது 8 ஆக இருக்க வேண்டும், மேலும்
  • 0:43 - 0:52
    இது 0 ஆகும், எனவே 380 இரட்டை எண் ஆகும், எனவே இது
  • 0:52 - 0:54
    2ஆல் வகுபடுகின்றது, எனவே 2 இதற்குப் பொருந்துகின்றது.
  • 0:54 - 0:56
    எனவே 2 ஆல் வகுபடுகின்றது.
  • 0:56 - 0:59
    3ஆல் வகுபடுமா என நாம் பார்ப்போம்.
  • 0:59 - 1:01
    இப்பொழுது, 3 ஆல் வகுபடுவது குறித்துச் சிந்திப்பதற்கு ஒரு விரைவான வழி -- நான்
  • 1:01 - 1:06
    3 க்கு அருகில் கேள்விக்குறி எழுதுகிறேன் -- உங்களுடைய எண்ணின் இலக்கங்களைக் கூட்டுவது ஆகும்.
  • 1:06 - 1:10
    உங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் 3ஆல் வகுபட்டால், உங்களுடைய எண்
  • 1:10 - 1:11
    3ஆல் வகுபடும்.
  • 1:11 - 1:12
    நாம் அதை முயற்சித்துப் பார்ப்போம்.
  • 1:12 - 1:15
    எனவே 380, நாம் அதன் இலக்கங்களைக் கூட்டுவோம்.
  • 1:15 - 1:22
    3 கூட்டல் 8 கூட்டல் 0 சமம் --
    3 கூட்டல் 8 சமம் 11 கூட்டல் 0,
  • 1:22 - 1:24
    எனவே அது 11 ஆகும்.
  • 1:24 - 1:26
    அது 3 ஆல் வகுபடுமா எனக் கண்டுபிடிப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால்,
  • 1:26 - 1:28
    இந்த இரண்டு எண்களை நீங்கள் மீண்டும் கூட்டுங்கள்
  • 1:28 - 1:31
    எனவே நீங்கள் உண்மையில் 1 கூட்டல் 1 ஐ மீண்டும் கூட்டுகிறீர்கள்,
  • 1:31 - 1:32
    உங்களுக்கு 2 கிடைக்கின்றது.
  • 1:32 - 1:36
    நீங்கள் 1 அல்லது 2 எதைப் பார்த்தாலும்,
  • 1:36 - 1:38
    இவற்றில் எதுவும் 3ஆல் வகுபடாது.
  • 1:38 - 1:46
    எனவே இது 3ஆல் வகுபடாது, மேலும் எதிர்காலத்தின் வரும் வீடியோவில்
  • 1:46 - 1:49
    இது எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நான் விளக்குவேன்,
  • 1:49 - 1:51
    இது ஏன் செயல்படுகின்றது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க விரும்பலாம்.
  • 1:51 - 1:57
    இவை 3 ஆல் வகுபடாது, எனவே 380 வகுபடாது.
  • 1:57 - 2:06
    380, 3 ஆல் வகுபடாது, எனவே 3 சேராது.
  • 2:06 - 2:07
    இந்த எண் 3 ஆல் வகுபடாது.
  • 2:07 - 2:13
    இப்பொழுது, 4இன் நிலைமை பற்றி நான் சிந்திக்கிறேன், எனவே நாம்
  • 2:13 - 2:15
    4இன் வகுபடும் தன்மை பற்றி சிந்திப்போம்.
  • 2:15 - 2:17
    அதை நான் ஆரஞ்சு வண்ணத்தில் எழுதுகிறேன்.
  • 2:17 - 2:20
    4 ஐப் பற்றி நாம் ஆச்சரியப்படுகிறோம்.
  • 2:20 - 2:24
    இப்பொழுது, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அல்லது தெரியாத ஒன்று
  • 2:24 - 2:26
    100 ஆனது 4 ஆல் வகுபடும் என்பதாகும்.
  • 2:26 - 2:28
    அது மீதியின்றி வகுபடுகின்றது.
  • 2:28 - 2:30
    இது 380 ஆகும்.
  • 2:30 - 2:34
    300 ஆனது 4 ஆல் வகுபடும், எனவே மீதமுள்ள
  • 2:34 - 2:37
    80, 4ஆல் வகுபடுமா என்று மட்டுமே நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
  • 2:37 - 2:46
    இதைப் பற்றி சிந்திப்பதற்கான மற்றொரு வழி, அதன் கடைசி இரண்டு இலக்கங்கள்
  • 2:46 - 2:49
    4 ஆல் வகுபடுமா?
  • 2:49 - 2:52
    100 ஆனது 4 ஆல் வகுபடும் என்ற கருத்திலிருந்து இது வருகின்றது, எனவே
  • 2:52 - 2:55
    நூறுகள் இடம் அதற்கு மேல் உள்ள அனைத்தும்,
  • 2:55 - 2:55
    4ஆல் வகுபடும்.
  • 2:55 - 2:58
    கடைசி பகுதி பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும்.
  • 2:58 - 3:04
    இந்த சூழ்நிலையில், 80, 4 ஆல் வகுபடுமா?
  • 3:04 - 3:06
    இப்பொழுது, நீங்கள் அதை கண்ணால் பார்த்துச் சொல்ல முடியும்.
  • 3:06 - 3:08
    நீங்கள் சொல்லலாம், 8 ஆனது நிச்சயமாக 4 ஆல் வகுபடும்.
  • 3:08 - 3:10
  • 3:10 - 3:12
    8 வகுத்தல் 4 சமம் 2.
  • 3:12 - 3:15
    80 வகுத்தல் 4 சமம் 20,
    எனவே இது வகுபடுகின்றது.
  • 3:15 - 3:17
    ஆம்!
  • 3:17 - 3:18
    ஆம்!
  • 3:18 - 3:21
    80 ஆனது 4 ஆல் வகுபடுவதாஅல், 380 ம்
  • 3:21 - 3:24
    4ஆல் வகுபடும், எனவே 4 சேர்கின்றது.
  • 3:24 - 3:26
    நாம் 5 ஐக் கண்டுபிடிப்போம்.
  • 3:26 - 3:28
    உண்மையில் நான் சற்று கீழே நகர்த்திக் கொள்கிறேன்.
  • 3:28 - 3:29
    நாம் 5ஐ முயற்சி செய்வோம்.
  • 3:29 - 3:32
    ஏதேனும் ஒரு எண் 5ஆல் வகுபடுவதற்கான நிபந்தனை என்ன?
  • 3:32 - 3:34
    நாம் 5இன் மடங்குகளைக் காண்போம்.
  • 3:34 - 3:39
    5, 10, 15, 20, 25.
  • 3:39 - 3:45
    ஏதேனும் ஒரு எண் 5 ஆல் வகுபட்டால் – நான் தொடர்ந்து செல்கிறேன் --
  • 3:45 - 3:49
    அதாவது, அது 5 அல்லது 0 வில் முடிய வேண்டும், சரியா?
  • 3:49 - 3:52
    5இன் ஒவ்வொரு மடங்கும் தன்னுடைய ஒன்றுகள் இடத்தில் 5 அல்லது 0 ஐ பெற்றுள்ளது.
  • 3:52 - 3:59
  • 3:59 - 4:04
    இப்பொழுது 380 இன் ஒன்றுகள் இடத்தில் ஒரு 0 உள்ளது, எனவே அது
  • 4:04 - 4:06
    5ஆல் வகுபடும்.
  • 4:06 - 4:09
    இப்பொழுது, 6 ஆல் வகுபடுவது பற்றி நாம் சிந்திப்போம்.
  • 4:09 - 4:11
    6 உடன் என்ன நிகழ்கின்றது என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
  • 4:11 - 4:14
    6ஆல் வகுபடுமா என்பதை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
  • 4:14 - 4:18
    6ஆல் வகுபடுவதற்கு, 6 ஐ உருவாக்கும்
  • 4:18 - 4:19
    வகுத்திகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
  • 4:19 - 4:24
    நினைவில் கொள்ளுங்கள், 6 சமம் 2 பெருக்கல் 3.
  • 4:24 - 4:27
    6 ஆல் வகுபட வேண்டுமெனில்,
  • 4:27 - 4:30
    அது 2 ஆலும் 3 ஆலும் வகுபட வேண்டும்.
  • 4:30 - 4:33
    2 மற்றும் 3 ஆகிய இரண்டாலும் வகுபட்டால், அது
  • 4:33 - 4:34
    6ஆல் வகுபடும்.
  • 4:34 - 4:39
    இப்பொழுது, 380 ஆனது 2ஆல் வகுபடும், ஆனால் நாம் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கின்றோம்
  • 4:39 - 4:41
    அது 3ஆல் வகுபடாது.
  • 4:41 - 4:46
    அது 3ஆல் வகுபடாது எனில், அது 6ஆலும் வகுபடாது, எனவே
  • 4:46 - 4:48
    இது வெளியேற்றப்பட வேண்டும்.
  • 4:48 - 4:51
    இது 6ஆல் வகுபடாது.
  • 4:51 - 4:52
    இப்பொழுது, நாம் 9க்குச் செல்வோம்.
  • 4:52 - 4:55
  • 4:55 - 4:57
    9 ஆல் வகுபடும் தன்மை.
  • 4:57 - 5:00
    இங்கு நீங்கள் அதே போன்று ஒரு விவாதத்தை மேற்கொள்ள முடியும்,
  • 5:00 - 5:03
    ஒரு எண் 3ஆல் வகுபடவில்லை எனில், அது நிச்சயமாக
  • 5:03 - 5:08
    9ஆலும் வகுபடாது, ஏனெனில் 9 சமம் 3 பெருக்கல் 3.
  • 5:08 - 5:12
    எனவே 9ஆல் வகுபடுவதற்கு, அது குறைந்தபட்சம்
  • 5:12 - 5:13
    இரண்டு முறை 3ஆல் வகுபட வேண்டும்.
  • 5:13 - 5:16
    அந்த எண்ணில் குறைந்தபட்சம் இரண்டு 3கள் இருக்க வேண்டும், மேலும்
  • 5:16 - 5:19
    இங்கு அது அவ்வாறு இல்லை, எனவே நீங்கள் ஏற்கனவே 9ஐ வெளியேற்றி விடலாம்.
  • 5:19 - 5:22
    இந்த எண் 3ஆல் வகுபடாது என நமக்கு ஏற்கனவே தெரியவில்லை எனில்,
  • 5:22 - 5:26
    இதைச் செய்வதற்கான மற்றொரு வழி, 3ஆல் வகுபடும் தன்மையை
  • 5:26 - 5:28
    கண்டுபிடிப்பதற்கான அதே முறை போன்றது ஆகும்.
    105
    00:05:28,050 --> 00:05:29,670
    இலக்கங்களை நாம் கூட்ட வேண்டும்.
  • 5:30 - 5:34
    கூட்டினால், 3 கூட்டல் 8 கூட்டல் 0, உங்களுக்குக் கிடைப்பது 11.
  • 5:34 - 5:37
    இது 9 ஆல் வகுபடும் என நீங்கள் கூறுகிறீர்களா?
  • 5:37 - 5:43
    இது 9 ஆல் வகுபடாது எனக் கூறுகிறீர்கள், எனவே 380
  • 5:43 - 5:46
    நிச்சயமாக 9ஆல் வகுபடாது.
  • 5:46 - 5:48
    3க்கு, நீங்கள் இதே வேலையை செய்தீர்கள், ஆனால்
  • 5:48 - 5:50
    கூடுதல் 3ஆல் வகுபடுமா என நீங்கள் பரிசோதித்தீர்கள்.
  • 5:50 - 5:52
    9க்கு, அது 9ஆல் வகுபடுமா என நீங்கள் பரிசோதிக்கிறீர்கள்.
  • 5:52 - 5:57
    இறுதியாக, நம்மிடம் உள்ள எண் 10.
  • 5:57 - 5:59
    நம்மிடம் உள்ள எண் 10 ஆகும், எனவே இதுவும் அதே போன்று
  • 5:59 - 6:00
    எளிமையானது ஆகும்.
  • 6:00 - 6:02
    10இன் அனைத்து மடங்குகளும் எவ்வாறு உள்ளன?
  • 6:02 - 6:07
    10, 20, 30, 40, இதைப் போன்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
  • 6:07 - 6:09
    அவை அனைத்தும் பூச்சியத்தில் முடிகின்றன.
  • 6:09 - 6:12
    அல்லது ஒரு எண் பூச்சியத்தில் முடிந்தால், அது 10ஆல் வகுபடும்.
  • 6:12 - 6:17
    380 பூச்சியத்தில் முடிகின்றது, அல்லது அதன் ஒன்றுகள் இடத்தில் பூச்சியம் உள்ளது,
  • 6:17 - 6:20
    எனவே அது 10ஆல் வகுபடும்.
  • 6:20 - 6:22
    எனவே நம்முடைய எண்
  • 6:22 - 6:25
    3, 6 மற்றும் 9 ஆகியவற்றைத் தவிர இந்த எண்கள் அனைத்திலும் வகுபடும்.
  • 6:25 - 6:25
Title:
Recognizing Divisibility
Description:

U02_L1_T3_we1 Recognizing Divisibility

more » « less
Video Language:
English
Duration:
06:26

Tamil subtitles

Revisions