Return to Video

Practice finding patterns in numbers

  • 0:01 - 0:02
    இந்த காணொளில நாம என்ன பண்ண போறோம்னா..
  • 0:02 - 0:05
    வடிவமைப்புகள் மற்றும் எண்கள் பற்றி தான் பாக்க போறோம்
  • 0:05 - 0:08
    குறிப்பிட்டு சொல்லனும்னா வடிவமைப்புகள் அப்படிங்கறது
  • 0:08 - 0:11
    ஒரு எண்-ல இருந்து இன்னொரு எண்-க்கு போறதுக்கு இடைப்பட்ட ஒரு வரிசை அமைப்பு னு சொல்லாம்
  • 0:11 - 0:14
    இங்க இந்த மஜந்த நிற வரிசைய பாத்திங்கனா
  • 0:14 - 0:18
    மொதலா 4 அடுத்து 25. 25-ல இருந்து அடுத்து 46-க்கு போறோம், அப்புறம் 46-ல இருந்து 67-க்கு போறோம்
  • 0:18 - 0:20
    இங்க என்ன வடிவமைப்பு அமைந்து இருக்கு??
  • 0:20 - 0:23
    4-ல இருந்து 25-க்கு நாம எப்படி போனோம்??
  • 0:23 - 0:26
    அதே வழிமுறைய பயன்படுத்தி நம்மளால 25-ல இருந்து 46-க்கும் அப்பறம்
  • 0:26 - 0:30
    46-ல இருந்து 67-க்கும் போக முடியுமா??
  • 0:30 - 0:32
    இத செய்ய சில வழிமுறைகள் இருக்கு.
  • 0:32 - 0:34
    இப்போ 4 மற்றும் 25-அ எடுத்துகிடோம்னா
  • 0:34 - 0:38
    25 இருக்கில்ல இது 4-ஓட பெருக்கல் மதிப்பு கிடையாது.
  • 0:38 - 0:43
    அப்போ 4-ஓட 21-அ கூட்டுனா 25 வரும்ல??... ம்,, அத செஞ்சி பாப்போம்..
  • 0:43 - 0:48
    இப்போ 21-அ கூட்டுறேன், 4 கூட்டல் 21 சமம் 25.
  • 0:48 - 0:51
    இப்போ நாம 25-ல இருந்து 26-க்கு போக
  • 0:51 - 0:53
    நான் 21-அ திரும்ப கூட்டுறேன்.
  • 0:53 - 0:56
    அப்போ நாம ஒரு எண்-ல இருந்து மற்ற்றொரு எண்-க்கு போக 21-அ கூட்டுனாலே போதுமானது
  • 0:56 - 0:57
    .
  • 0:57 - 1:00
    அட நான் தவறுதலா 21-க்கு பதிலா 12-னு போட்டுட்டேன். ம்ம்ம். 21..
  • 1:00 - 1:03
    நாம 21-அ மீண்டும் மீண்டும் கூட்டிகிட்டே போகலாம்
  • 1:03 - 1:07
    அப்படினா இப்போ 46 கூட்டல் 21 சமம் 67-னு கிடைக்குது
  • 1:07 - 1:11
    நாம மேலும் ஒரு 21-அ கூட்டினா
  • 1:11 - 1:13
    நமக்கு 89 கிடைக்கும்
  • 1:13 - 1:18
    அடுத்து இன்னொரு 21-அ கூட்டினா கிடைக்க போறது 110..
  • 1:21 - 1:23
    இப்படியே நாம மீண்டும் மீண்டும் கூட்டிகிட்டே போகலாம்
  • 1:23 - 1:27
    .
  • 1:27 - 1:32
    இங்க நம்ம வடிவமைப்பு என்னனு பாத்திங்கனா, நாம 21-அ கூட்டறோம்.
  • 1:32 - 1:34
    இப்போ இங்க இருக்க பச்சை வண்ண வரிசைய பாருங்களேன்
  • 1:34 - 1:37
    இத பாத்த உடனே எனக்கு என்ன தோணுது தெரியுமா??
  • 1:37 - 1:40
    இங்க 3 கூட்டல் 3 சமம் 6
  • 1:40 - 1:43
    ஆனா அடுத்தது பாத்தம்னா, இங்க நம்மளால 3-அ கூட்ட முடியாது போலயே..
  • 1:43 - 1:46
    6-ல இருந்து 12-க்கு போக நாம 6 தான கூட்டனும்
  • 1:46 - 1:48
    அப்புறம் இதோ 12-ல இருந்து 24
  • 1:48 - 1:51
    நாம 12-ல இருந்து 24-க்கு போக, 12-அ கூட்டனும்
  • 1:51 - 1:54
    அப்போ ஒவ்வொரு முறையும் நாம இருமடங்கு அளவால கூட்டறோம். அப்படி தான??
  • 1:54 - 1:58
    இது சுத்து போல இருக்கே. இதுக்கு இன்னும் ஒரு எளிதான வழிமுறை எதாவது கண்டிப்பா இருக்கனுமே. சரி பாப்போம்..
  • 1:58 - 2:00
    ம்ம்ம்.. இனொரு முறைல 3-ல இருந்து 6-க்கு போக,
  • 2:00 - 2:04
    3-அ கூட்ட தேவை இல்ல 2-ஆல பெருக்குனாலே போதுமானது.
  • 2:04 - 2:07
    அப்போ 3-ல இருந்து 6-க்கு போக 2-ஆல பெருக்க போறோம்
  • 2:07 - 2:10
    மீண்டும் 2-ஆல பெருக்குனா நாம 6-ல இருந்து 12-க்கு போக முடியும்
  • 2:10 - 2:12
    6 முறை 2 தான 12..
  • 2:12 - 2:15
    மீண்டும் நாம 2-ஆல பெருக்குனா?? கிடைக்கறது 24.
  • 2:15 - 2:19
    2 முறை 12 விடை.... 24 தான??... நாம மீண்டு மீண்டும் பெருக்கிகிடே போகலாம்
  • 2:19 - 2:24
    2 பெருக்கல் 24 சமம் 48..., 96,... இப்படியே போய்கிட்டே இருக்கலாம்..
  • 2:24 - 2:26
    இங்க நாம பயன் படுத்தற வழிமுறை குறிப்பிட்ட எண்'ன கூட்டுறது கிடையாது
  • 2:26 - 2:31
    அது குறிப்பிட்ட எண்ணால பேருக்கும் முறை.
  • 2:31 - 2:34
    இங்க நாம அடுத்தடுத்த எண்-க்கு போக 2-ஆல பெருக்கறோம்
  • 2:34 - 2:38
    அதாவது 3 முறை 2 அப்படின்ன 6, 6 முறை 2 அப்படின்ன 12, 12 முறை 2 அப்படின்ன 24..
  • 2:38 - 2:40
    சரி நாம இந்த கடைசி வரியையும் பாத்துடுவோம்
  • 2:40 - 2:43
    இதுக்கு முன்னாடி பாத்த கணக்கு மாதிரியே இதோட முதல் ரெண்டு எண்னும் 3 மற்றும் 6..
  • 2:43 - 2:46
    அப்போ முதல் எண்-ல இருந்து ரெண்டாவது எண்ணுக்கு போக
  • 2:46 - 2:48
    2-ஆல பெருக்குனாலே போதுமானது.
  • 2:48 - 2:51
    ஆனா இங்க பாத்திங்கனா 6-ல இருந்து 9-க்கு போக இரண்டால பெருக்குன சரிவராது.
  • 2:51 - 2:53
    ஆனா 3-ஆல கூட்டலாம்ல??
  • 2:53 - 2:56
    அப்போ 3-ல இருந்து 6-க்கு போக 3-ஆல கூட்டறேன்.
  • 2:56 - 2:59
    அப்புறம் 6-ல இருந்து 9-க்கு போக 3-ஆல கூட்டறேன்.
  • 2:59 - 3:02
    அப்புறம் 9-ல இருந்து 12-க்கு போக மறுபடியும் 3-ஆல கூட்டறோம்
  • 3:02 - 3:04
    அப்போ இது எப்படி இருக்குனா
  • 3:04 - 3:06
    ஒவொரு முறையும் 3-அ கூட்டறோம்.
  • 3:06 - 3:10
    இது எல்லாத்தையும் வெச்சி பாக்கும்போது நமக்கு என்ன தெரியுதுன்னா..
  • 3:10 - 3:12
    ஒரே வினைய திரும்ப திரும்ப செய்யறதுனால
  • 3:12 - 3:14
    நம்மளால
  • 3:14 - 3:17
    ஒரு எண்-ல இருந்து மற்ற்றொரு எண்-க்கு போக ஒரு வரிசைமுறைய கையாள முடியுது
  • 3:17 - 3:19
    இங்க நாம தெரிஞ்சிக வேண்டிய ஒரே விஷயம் என்னனா..
  • 3:19 - 3:20
    முதல் எண்-ல இருந்து இரண்டாவது எண்-க்கு எப்படி செல்வதுன்னு தான்..
  • 3:20 - 3:22
    நாம கவனிக்க வேண்டிய விஷயம் இந்த வழிமுறை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் சரியாக வருதான்னு தான்
  • 3:22 - 3:25
    இரண்டாம் எண்-ல இருந்து மூன்றாம் எண்-க்கு செல்ல,
  • 3:25 - 3:27
    மற்றும் மூன்றாம் எண்-ல இருந்து நான்காம் எண்-க்கு செல்ல.. இது அனைத்திற்கும் ஒரே வழிமுறை வர வேண்டும்
  • 3:27 - 3:28
    இங்க பாத்திங்கனா
  • 3:28 - 3:31
    முதல் வரிசை எண்கள நாம 21-அ கூட்டுனோம்
  • 3:31 - 3:33
    இத பாத்தோம்னா எல்லா எண்களையும் 2-ஆல பெருக்கி இருக்கோம்
  • 3:33 - 3:37
    இந்த கடைசி வரிசைய ஒவொருமுறையும் 3-ஆல கூட்டி இருக்கோம்
Title:
Practice finding patterns in numbers
Description:

more » « less
Video Language:
English
Duration:
03:38

Tamil subtitles

Revisions