Return to Video

எண்ணின் காரணிகளை கண்டுடறிய வேண்டும்

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    120 இன் அனைத்துக் காரணிகளையும் கண்டுபிடிக்கவும்.
  • 0:04 - 0:06
    அல்லது அதைப் பற்றி சிந்திக்கக்கூடிய மற்றொரு வழி
  • 0:06 - 0:10
    120 ஐ வகுக்கும் அனைத்து முழு எண்களையும் கண்டுபிடிக்கவும்.
  • 0:10 - 0:12
    முதலாவதாக இருப்பது, எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கலாம்.
  • 0:12 - 0:15
    அனைத்து முழு எண்களும் 1 ஆல் வகுபடும்.
  • 0:15 - 0:21
    எனவே 120 சமம் 1 பெருக்கல் 120 என நாம் எழுத முடியும்.
  • 0:21 - 0:23
    நாம் இங்கு காரணிகளின் பட்டியலை எழுதுவோம்.
  • 0:23 - 0:27
  • 0:27 - 0:28
    இங்கு எழுதப்பட்டுள்ள இது நம்முடைய காரணிகளின் பட்டியலாக இருக்கப்போகின்றது.
  • 0:28 - 0:30
    நாம் இரண்டு காரணிகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம்.
  • 0:30 - 0:32
    நாம் கூறியது, அது 1ஆல் வகுபடக்கூடியதா?
  • 0:32 - 0:34
    ஒவ்வொரு முழு எண்ணும் 1 ஆல் வகுபடக்கூடியதாகும்.
  • 0:34 - 0:38
    இது ஒரு முழு எண், எனவே 1 என்பது அதன் மிகச் சிறிய காரணி ஆகும்.
  • 0:38 - 0:38
    1 என்பது ஒரு காரணி ஆகும்.
  • 0:38 - 0:41
    உண்மையிலேயே அது அதனுடைய மிகச்சிறிய காரணி ஆகும், மேலும் அதன்
  • 0:41 - 0:42
    மிகப் பெரிய காரணி 120 ஆகும்.
  • 0:42 - 0:47
    120 ஐ விடப் பெரிய ஒரு எண்ணை
  • 0:47 - 0:50
    120 இல் சமமாக வகுபடுமாறு நீங்கள் உங்களைக் காண முடியாது.
  • 0:50 - 0:52
    120 ஐ 121ஆல் வகுக்க முடியாது.
  • 0:52 - 0:55
    எனவே நம்முடைய காரணிகள் பட்டியலில் இருக்கும் மிகப்பெரிய காரணி
  • 0:55 - 0:57
    120 ஆக இருக்கும் .
  • 0:57 - 0:58
    இப்பொழுது நாம் மற்றவைகளைப் பற்றிச் சிந்திப்போம்.
  • 0:58 - 1:02
    120 ஆனது 2ஆல் வகுபடுமா என நாம் சிந்திப்போம்.
  • 1:02 - 1:07
    120 என்பது ஏதாவது ஒரு எண்ணின் 2 மடங்காக இருக்கின்றதா?
  • 1:07 - 1:10
    நல்லது, நீங்கள் இங்கே பார்க்கும்போது,
  • 1:10 - 1:13
    120 ஒரு இரட்டை எண் என்பதை உடனே புரிந்துகொள்ள முடியும்.
  • 1:13 - 1:15
    அதன் ஒன்றுகள் இடத்தில் 0 உள்ளது.
  • 1:15 - 1:18
    ஒரு எண்ணின் ஒன்றுகள் இடத்தில் 0, 2, 4, 6 அல்லது 8 இருந்தால்,
  • 1:18 - 1:21
    அது ஒரு இரட்டை எண் ஆகும், அந்த முழு எண் இரட்டை எண் ஆகும்,
  • 1:21 - 1:24
    அந்த முழு எண் 2 ஆல் வகுபடும்.
  • 1:24 - 1:26
    120ஐப் பெறுவதற்கு 2 ஆல் நீங்கள் எதைப் பெருக்க வேண்டும் எனக் கண்டுபிடிப்பதற்கு,
  • 1:26 - 1:34
    12 பெருக்கல் 10 சமம் 120 என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ளலாம், அல்லது
  • 1:34 - 1:36
    வேறொரு வழியில் அதை நினைத்தால், அது 2 பெருக்க 6 பெருக்கல்
  • 1:36 - 1:39
    10, அல்லது 2 பெருக்கல் 60 ஆகும்.
  • 1:39 - 1:40
    நீங்கள் விரும்பினால் அதை வகுத்துக் கொள்ளலாம்.
  • 1:40 - 1:44
    சரி, 120 ஆனது 2ஆல் வகுபடும் என நீங்கள் சொல்வீர்கள்.
  • 1:44 - 1:45
    1 இல் 2 பூச்சியம் முறை உள்ளது.
  • 1:45 - 1:47
    12 இல் 2 ஆறு முறை செல்கின்றது.
  • 1:47 - 1:49
    6 பெருக்கல் 2 சமம் 12 ஆகும்.
  • 1:49 - 1:50
    கழிக்கவும்.
  • 1:50 - 1:51
    உங்களுக்கு 0 கிடைக்கின்றது.
  • 1:51 - 1:52
    0-வை கீழே இறக்கவும்.
  • 1:52 - 1:54
    2ஆனது 0-வில் பூச்சியம் முறை செல்கின்றது.
  • 1:54 - 1:58
    0 பெருக்கல் 2 என்பது 0 ஆகும், எனவே இங்கு மீதி ஒன்றுமில்லை, எனவே அது
  • 1:58 - 1:59
    அறுபது முறை செல்கின்றது.
  • 1:59 - 2:02
    எனவே, இங்கு நாம் மேலும் இரண்டு காரணிகளைப் பெற்றுள்ளோம்,
  • 2:02 - 2:04
    நாம் காரணிகளைப் பெற்றுள்ளோம்.
  • 2:04 - 2:08
    மிகச் சிறிய அடுத்த காரணி 2 என்பதை நாம் நிரூபித்துள்ளோம், மேலும்
  • 2:08 - 2:10
    பெரிய எண்ணிலிருந்து நாம் தொடங்கினால் அடுத்த பெரிய காரணி,
  • 2:10 - 2:13
    60 ஆக இருக்கும்.
  • 2:13 - 2:15
    இப்பொழுது நாம் மூன்றை எடுத்துக்கொள்வோம்.
  • 2:15 - 2:20
    எந்த எண்ணுடைய மூன்றின் மடங்காவது 120 என வருகின்றதா?
  • 2:20 - 2:22
    நல்லது, இதைப் பரிசோதிப்பதற்கு நாம் முயற்சி செய்வோம், அதை வகுத்துப் பார்ப்போம்.
  • 2:22 - 2:24
    முயற்சிப்போம், ஆனால், நிச்சயமாக, வகுபடும் தன்மை விதி பற்றி
  • 2:24 - 2:26
    உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
  • 2:26 - 2:29
    ஒரு எண் 3ஆல் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு, நீங்கள் அதன் இலக்கங்களைக் கூட்டுகிறீர்கள்,
  • 2:29 - 2:31
    மேலும், அதன் கூடுதல் 3ஆல் வகுபட்டால்,
  • 2:31 - 2:33
    அந்த எண்ணும் 3ஆல் வகுபடும்.
  • 2:33 - 2:39
    எனவே, 120 ஐ நீங்கள் எடுத்துக்கொண்டால் -- நான் இங்கு அதைச் செய்து பார்க்கிறேன்.
  • 2:39 - 2:44
    1 கூட்டல் 2 கூட்டல் 0, நன்று, சமம் 1 கூட்டல் 2 சமம் 3 கூட்டல் 0
  • 2:44 - 2:49
    சமம் 3, மேலும் 3 என்பது நிச்சயமாக 3 ஆல் வகுபடக்கூடியது.
  • 2:49 - 2:53
    எனவே, 120 உம் 3 ஆல் வகுபடும்.
  • 2:53 - 2:56
    எந்த எண்ணை நீங்கள் 3 ஆல் பெருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு
  • 2:56 - 2:58
    நீங்கள் அதை மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும்.
  • 2:58 - 3:01
    நீங்கள் சொல்லலாம், 3 ஆனது 12 இல் நான்கு முறை செல்கின்றது, பின்பு
  • 3:01 - 3:04
    நீங்கள் -- நல்லது, தீர்வினைக் காண வேண்டும் என விரும்புபவர்களுக்கு
    68
    00:03:04,440 --> 00:03:06,030
    நான் அதைச் செய்து காண்பிக்கிறேன்.
  • 3:06 - 3:08
    3 ஆனது 12 இல் நான்கு முறை செல்கின்றது.
  • 3:08 - 3:11
    4 முறை 3 சமம் 12.
  • 3:11 - 3:11
    கழிக்கவும்.
  • 3:11 - 3:13
    இங்கே உங்களுக்கு மீதி கிடைக்கவில்லை.
  • 3:13 - 3:15
    இந்த 0-வை நீங்கள் கீழே இறக்குகிறீர்கள்.
  • 3:15 - 3:17
    3 ஆனது 0-வில் பூச்சியம் முறை செல்கின்றது.
  • 3:17 - 3:19
    0 முறை 3 சமம் 0 ஆகும்.
  • 3:19 - 3:21
    மீதி இல்லை.
  • 3:21 - 3:22
    எனவே அது நாற்பது முறைகள் செல்கின்றது.
  • 3:22 - 3:25
  • 3:25 - 3:28
    இது 12 முறை 10 என்பதைப் போன்றதே ஆகும் என்பதை
  • 3:28 - 3:30
    இதே போன்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • 3:30 - 3:34
    12 வகுத்தல் 3 சமம் 4, ஆனால் இது 4 பெருக்கல் 10 என ஆகின்றது,
  • 3:34 - 3:36
    ஏனெனில் உங்களுக்கு 10 மீதி கிடைக்கின்றது.
  • 3:36 - 3:37
    உங்களுக்குப் பொருத்தமாக இருப்பது,
  • 3:37 - 3:40
    அல்லது 0 வகுத்தல் 3 என்பதை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் ஒரு 4 ஐப் பெறுகிறீர்கள்,
  • 3:40 - 3:41
    அதன் பின்பு 0-வை மீண்டும் அங்கே எழுதவும்.
  • 3:41 - 3:42
    உங்களுக்குப் பொருத்தமாக இருப்பது.
  • 3:42 - 3:44
    நமக்கு மேலும் இரண்டு காரணிகள் கிடைத்திருக்கின்றன.
  • 3:44 - 3:51
    சிறிய எண்களில் நாம் 3ஐ பெற்றுள்ளோம், மேலும் பெரிய எண்ணில் நாம் 40ஐ பெற்றுள்ளோம்.
  • 3:51 - 3:54
    இப்பொழுது, 120 ஐ 4 ஆல் வகுக்க முடியுமா என நாம் பார்ப்போம்.
  • 3:54 - 3:57
    இப்பொழுது 4 ஆல் வகுபடுவதற்கான விதி,
  • 3:57 - 3:59
    பத்துகள் இடத்துக்கு மேல் உள்ள அனைத்தையும் நிராகரித்துவிட்டு,
  • 3:59 - 4:01
    கடைசி இரண்டு இலக்கங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பார்த்தோம்.
  • 4:01 - 4:06
    எனவே 4 ஆல் வகுபடுமா என நாம் சிந்திக்க வேண்டுமெனில்,
  • 4:06 - 4:07
    கடைசி இரண்டு இலக்கங்களை மட்டுமே பாருங்கள்.
  • 4:07 - 4:09
    இங்கு கடைசி இரண்டு இலக்கங்கள் 20 ஆகும்.
  • 4:09 - 4:13
    20 ஆனது 4 ஆல் வகுபடும், எனவே 120 ஆனது
  • 4:13 - 4:14
    4 ஆல் வகுபடும்.
  • 4:14 - 4:16
    4 என்பது ஒரு காரணியாக இருக்கும்.
  • 4:16 - 4:19
    120 ஐப் பெறுவதற்கு 4 உடன் எதைப் பெருக்க வேண்டும் எனக் கண்டுபிடிப்பதற்கு,
  • 4:19 - 4:20
    நீங்கள் அதை மனக்கணக்காகச் செய்ய முடியும்.
  • 4:20 - 4:23
    12 வகுத்தல் 4 சமம் 3 என நீங்கள் கூற முடியும், எனவே 120
  • 4:23 - 4:27
    வகுத்தல் 4 சமம் 30 ஆகும்.
  • 4:27 - 4:30
    எனவே நமக்கு மேலும் இரண்டு காரணிகள் கிடைத்திருக்கின்றன: 4 மற்றும் 30.
  • 4:30 - 4:33
    மேலும், இது சரியாக இருக்குமா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள விரும்பினால், நீள்வகுத்தல் முறையில் நீங்கள் இதைச் செய்து பார்க்க முடியும்,
  • 4:33 - 4:36
    எனவே, தொடர்ந்து செல்லுங்கள்.
  • 4:36 - 4:41
    பின்பு, நாம் பெற்றிருப்பது 120 சமம் -- 5 என்பது ஒரு காரணியா?
  • 4:41 - 4:45
    ஏதேனும் ஒரு எண்ணின் 5 மடங்கு 120ஆக உள்ளதா?
  • 4:45 - 4:47
    நல்லது, நீங்கள் அதை எளிதாகச் செய்ய முடியாது --
    முதலில்,
  • 4:47 - 4:49
    அது வகுபடக்கூடியதா என நாம் பரிசோதிக்கலாமா?
  • 4:49 - 4:51
    120 ஆனது 0-வில் முடிகின்றது.
  • 4:51 - 4:53
    ஒரு 0 அல்லது 5 இல் முடிந்தால், அந்த எண் 5 ஆல் வகுபடும்.
  • 4:53 - 4:55
    எனவே இந்த எண் நிச்சயமாக 5 ஆல் வகுபடும்.
  • 4:55 - 4:57
    எத்தனை முறை என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
  • 4:57 - 5:00
    120 ஆனது 5 ஆல் வகுபடுகின்றது.
  • 5:00 - 5:01
    அது 1 ஐ வகுக்க முடியாது.
  • 5:01 - 5:03
    12இல் அது இரண்டு முறை செல்கின்றது.
  • 5:03 - 5:05
    2 பெருக்கல் 5 சமம் 10 ஆகும்.
  • 5:05 - 5:06
    கழிக்கவும்.
  • 5:06 - 5:07
    உங்களுக்கு 2 கிடைக்கின்றது.
  • 5:07 - 5:09
    0-வை கீழே இறக்கவும்.
  • 5:09 - 5:11
    5 ஆனது 20இல் நான்கு முறை செல்கின்றது.
  • 5:11 - 5:19
    4 முறை 5 சமம் 20 ஆகும், பின்பு அதைக் கழிக்கவும், நாம் எதிர்பார்த்ததுபோல்,
  • 5:19 - 5:21
    உங்களுக்கு மீதி கிடைக்கவில்லை, ஏனெனில் அது மீதியின்றி வகுபடுகின்றது.
  • 5:21 - 5:25
    இந்த எண் 0 அல்லது 5இல் முடிகின்றது.
  • 5:25 - 5:28
    நான் இவை அனைத்தையும் அழித்து விடுகிறேன், அவ்வாறு செய்வதால் பிறகு எழுதிப் பார்ப்பதற்கு
  • 5:28 - 5:30
    நமக்கு இடம் கிடைக்கும்.
  • 5:30 - 5:34
    5 முறை 24 சமம் 120 ஆகும், நமக்கு மேலும் இரண்டு
  • 5:34 - 5:38
    காரணிகள் கிடைத்திருக்கின்றன: 5 மற்றும் 24.
  • 5:38 - 5:40
    இங்கே சிறிது இடத்தை நான் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்கிறேன், ஏனெனில்
  • 5:40 - 5:43
    நாம் நிறையக் காரணிகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என நினைக்கிறேன்.
  • 5:43 - 5:45
    நான் இதை இங்கே நகர்த்திக்கொள்கிறேன்.
  • 5:45 - 5:50
    நான் இதை கட் செய்து பேஸ்ட் செய்துகொள்கிறேன், மேலும் அதை இங்கே நகர்த்திக் கொள்கிறேன்
  • 5:50 - 5:54
    அதன் மூலம் காரணிகளை எழுதுவதற்கு நமக்கு அதிக இடம் கிடைக்கும்.
  • 5:54 - 5:56
    நமக்கு 5 மற்றும் 24 ஆகியவை கிடைத்திருக்கின்றது.
  • 5:56 - 5:59
    நாம் 6க்குச் செல்வோம்.
  • 5:59 - 6:02
    120 ஆனது எந்த எண்ணின் 6 மடங்காகும்?
  • 6:02 - 6:05
    இப்பொழுது, 6 ஆல் வகுபடுவதற்கு, அந்த எண்
  • 6:05 - 6:07
    2 மற்றும் 3 ஆல் வகுபட வேண்டும்.
  • 6:07 - 6:10
    இப்பொழுது, இது 2 மற்றும் 3 ஆல் வகுபடும் என நாம் ஏற்கனவே கண்டறிந்துள்ளோம்,
  • 6:10 - 6:13
    எனவே நிச்சயமாக இது 6 ஆல் வகுபடும், மேலும்
  • 6:13 - 6:14
    இதை நீங்கள் நிச்சயமாக சிந்தித்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
  • 6:14 - 6:17
    5 என்பது நீங்கள் சிந்தித்துக் கண்டுபிடிப்பதற்கு சற்று சிரமமானதாக இருக்கலாம், ஆனால் 120,
  • 6:17 - 6:22
    12 வகுத்தல் 6 சமம் 2 என நீங்கள் கூற முடியும், பின்பு உங்களிடம்
  • 6:22 - 6:26
    அங்கு 0 உள்ளது, எனவே 120 வகுத்தல் 6 சமம் 20 ஆகும்.
  • 6:26 - 6:29
    நீங்கள் விரும்பினால், அதை நீள் வகுத்தல் முறையிலும் நீங்கள் செய்து பார்க்க முடியும்.
  • 6:29 - 6:31
    எனவே, 6 பெருக்கல் 20 என்பது மேலும் இரண்டு காரணிகள் ஆகும்.
  • 6:31 - 6:34
  • 6:34 - 6:36
    7 ஐப் பற்றி சிந்திப்போம்.
  • 6:36 - 6:37
    இங்கு நாம் 7 ஐப் பற்றி சிந்திப்போம்.
  • 6:37 - 6:40
    7 ஆனது ஒரு விநோதமான எண் ஆகும், அதைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு,
  • 6:40 - 6:42
    வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என நீங்கள் சிந்திக்க வேண்டும்.
  • 6:42 - 6:45
    120 ஐ 7 ஆல் வகுப்பதற்கு நாம் முயற்சி செய்வோம்.
  • 6:45 - 6:46
    1 ஐ 7ஆல் வகுக்க முடியாது.
  • 6:46 - 6:48
    12 இல் அது ஒருமுறை செல்கின்றது.
  • 6:48 - 6:50
    1 முறை 7 என்பது 7 ஆகும்.
  • 6:50 - 6:51
    கழிக்கவும்.
  • 6:51 - 6:53
    12 கழித்தல் 7 சமம் 5 ஆகும்.
  • 6:53 - 6:56
    0-வை கீழே இறக்கவும்.
  • 6:56 - 7:00
    7 முறை 7 என்பது 49 ஆகும், எனவே அதில் 7 முறை செல்கின்றது.
  • 7:00 - 7:02
    7 முறை 7 என்பது 49 ஆகும்.
  • 7:02 - 7:02
    கழிக்கவும்.
  • 7:02 - 7:06
    உங்களுக்கு மீதி கிடைக்கின்றது, எனவே, அது மீதியின்றி வகுபடுவதில்லை.
  • 7:06 - 7:08
    எனவே 7 என்பது வராது.
  • 7:08 - 7:11
  • 7:11 - 7:13
    இப்பொழுது நாம் 8ஐப் பற்றி சிந்திப்போம்.
  • 7:13 - 7:16
    8 வகுபடுமா என நாம் சிந்திப்போம்.
  • 7:16 - 7:17
    8ஐப் பற்றி நாம் சிந்திப்போம்.
  • 7:17 - 7:19
    நான் அதே செயல்முறையைச் செய்கிறேன்.
  • 7:19 - 7:27
    120 வகுத்தல் 8 என்பதை எடுத்துக்கொள்வோம்.
  • 7:27 - 7:28
    நாம் அதைச் செய்து பார்ப்போம்.
  • 7:28 - 7:30
    ஒரு சிறு குறிப்பைப் போல் – நன்று, நான்
  • 7:30 - 7:30
    அதைச் செய்து பார்க்கிறேன்.
  • 7:30 - 7:33
    12 ஐ 8 ஆல் வகுக்க முடியும் -- 1 ஐ 8ஆல் வகுக்க முடியாது, எனவே
  • 7:33 - 7:36
    12 இல் அது ஒருமுறை செல்கின்றது.
  • 7:36 - 7:38
    1 பெருக்கல் 8 சமம் 8 ஆகும்.
  • 7:38 - 7:39
    கழிக்கவும்.
  • 7:39 - 7:41
    12 கழித்தல் 8 சமம் 4 ஆகும்.
  • 7:41 - 7:43
    0-வை கீழே இறக்கவும்.
  • 7:43 - 7:45
    40 இல் 8 ஐந்து முறை செல்கின்றது.
  • 7:45 - 7:49
    5 முறை 8 சமம் 40, உங்களுக்கு மீதி கிடைப்பதில்லை, எனவே அது
  • 7:49 - 7:50
    மீதியின்றி வகுபடுகின்றது.
  • 7:50 - 7:53
    எனவே 120 – நான் அதை முடித்துக் கொள்கிறேன்.
  • 7:53 - 8:03
    120 சமம் 8 பெருக்கல் 15, எனவே நாம் அதை நம்முடைய காரணிகள் பட்டியலுடன் சேர்த்துக்கொள்வோம்.
  • 8:03 - 8:09
    இப்பொழுது நமக்கு ஒரு 8 மற்றும் ஒரு 15 கிடைத்திருக்கின்றது.
  • 8:09 - 8:12
    இப்பொழுது அது 9 ஆல் வகுபடுமா?
  • 8:12 - 8:14
    120 ஆனது 9 ஆல் வகுபடுமா?
  • 8:14 - 8:16
    அதைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு, நீங்கள் இலக்கங்களைக் கூட்ட வேண்டும்.
  • 8:16 - 8:20
    1 கூட்டல் 2 கூட்டல் 0 சமம் 3 ஆகும்.
  • 8:20 - 8:24
    நன்று, அது நம்முடைய 3 ஆல் வகுபடுந்தன்மை விதியைப் பூர்த்தி செய்யும், ஆனால் 3 ஆனது
  • 8:24 - 8:27
    9 ஆல் வகுபடாது, எனவே நம்முடைய எண்
  • 8:27 - 8:29
    9 ஆல் வகுபடாது.
  • 8:29 - 8:31
    எனவே 9 ஒரு காரணி அல்ல.
  • 8:31 - 8:33
    9 ஒரு காரணி அல்ல.
  • 8:33 - 8:35
    எனவே, நாம் 10க்குச் செல்வோம்.
  • 8:35 - 8:36
    நல்லது, இது மிகவும் எளிமையானது.
  • 8:36 - 8:40
    இது 0-வில் முடிந்திருக்கின்றது, எனவே அதை நாம் 10ஆல் வகுக்க முடியும்.
  • 8:40 - 8:42
    எனவே நான் அதை எழுதுகிறேன்.
  • 8:42 - 8:47
    120 சமம் 10 பெருக்கல் -- இது மிகவும்
  • 8:47 - 8:50
    எளிமையானது -- 10 பெருக்கல் 12.
  • 8:50 - 8:52
    இதில் மிகச் சரியாக 120 கிடைக்கின்றது.
  • 8:52 - 8:54
    அது 10 பெருக்கல் 12 ஆகும், எனவே நாம் இந்தக் காரணிகளை எழுதிக்கொள்வோம்.
  • 8:54 - 8:56
    10 மற்றும் 12.
  • 8:56 - 8:58
    நம்மிடம் மேலும் ஒரு எண் விடுபட்டிருக்கின்றது.
  • 8:58 - 8:59
    இன்னும் 11 இருக்கின்றது.
  • 8:59 - 9:00
    11ஐத் தாண்டி நாம் செல்ல வேண்டியதில்லை, ஏனெனில் நாம் ஏற்கனவே 12ஐப் பார்த்துவிட்டோம்,
  • 9:00 - 9:03
    மேலும் அதற்கு மேல் எந்தக் காரணியும் இருக்க முடியாது என்பது நமக்குத் தெரியும்,
  • 9:03 - 9:07
    ஏனெனில் நாம் இறங்கு வரிசையில் சென்றுகொண்டிருக்கிறோம், எனவே
  • 9:07 - 9:09
    நாம் அனைத்து இடைவெளிகளையும் நிரப்பிவிட்டோம்.
  • 9:09 - 9:10
    நீங்கள் 11ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
  • 9:10 - 9:12
    நீங்கள் விரும்பினால், நாம் அதை கையால் முயற்சி செய்து பார்க்கலாம்.
  • 9:12 - 9:15
    120 வகுத்தல் 11 -- இப்பொழுது உங்களுக்குத் தெரியும், 11இன்
  • 9:15 - 9:18
    பெருக்கல் வாய்பாடு உங்களுக்குத் தெரிந்திருந்தால், இது பயன்படாது, ஆனால்
  • 9:18 - 9:19
    நான் அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
  • 9:19 - 9:21
    11 ஆனது 12 இல் ஒரு முறை செல்கின்றது.
  • 9:21 - 9:23
    1 முறை 11 என்பது 11 ஆகும்.
  • 9:23 - 9:25
    கழிக்கவும்.
  • 9:25 - 9:26
    1, 0-வை கீழே இறக்கவும்.
  • 9:26 - 9:29
    11 ஆனது 10இல் பூச்சியம் முறை செல்கின்றது.
  • 9:29 - 9:31
    0 முறை 11 என்பது 0 ஆகும்.
  • 9:31 - 9:34
    உங்களுக்கு மீதி 10 கிடைக்கின்றது.
  • 9:34 - 9:36
    எனவே, 11 ஆனது 120 இல் 10 முறைகள் செல்கிறது, மீதி 10 கிடைக்கின்றது.
  • 9:36 - 9:38
    அது நிச்சயமாக மீதியின்றி வகுபடாது.
  • 9:38 - 9:45
    எனவே, நமக்குக் கிடைத்துள்ள அனைத்துக் காரணிகளாவன: 1, 2, 3, 4, 5, 6, 8, 10,
  • 9:45 - 9:51
    12, 15, 20, 24, 30,
    12, 15, 20, 24, 30,
    40, 60 மற்றும் 120.
  • 9:51 - 9:53
    நாம் முடித்துவிட்டோம்.
  • 9:53 - 9:53
Title:
எண்ணின் காரணிகளை கண்டுடறிய வேண்டும்
Description:

U02_L1_T3_we2 Finding Factors of a Number

more » « less
Video Language:
English
Duration:
09:53

Tamil subtitles

Revisions