Return to Video

எதிர்ம எண்களை பெருக்குதல் மற்றும் வகுத்தல்

  • 0:01 - 0:04
    எதிர் எண்களை எப்படி பெருக்குவது
  • 0:04 - 0:05
    மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம்
  • 0:05 - 0:07
    தொடங்கலாம்.
  • 0:07 - 0:09
    குறை எண்களை வைத்து
  • 0:09 - 0:11
    பெருக்குவது மற்றும் வகுப்பது
  • 0:11 - 0:14
    எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்..
  • 0:14 - 0:16
    நான் எதிர்காலத்தில் உங்களுக்கு
  • 0:16 - 0:21
    இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன்.
  • 0:21 - 0:25
    முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..
  • 0:25 - 0:32
    - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன?
  • 0:32 - 0:34
    முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம்
  • 0:34 - 0:35
    இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம்.
  • 0:35 - 0:40
    2 பெருக்கல் 2 என்பது 4.
  • 0:40 - 0:43
    இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால்
  • 0:43 - 0:45
    விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் ..
  • 0:45 - 0:48
    இது தான் முதல் விதிமுறை ஆகும்..
  • 0:48 - 0:57
    குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
  • 0:57 - 1:02
    -2 பெருக்கல் 2 என்றால் என்ன?
  • 1:02 - 1:05
    இதில் இரண்டு எண்கள்,
  • 1:05 - 1:06
    வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது.
  • 1:06 - 1:10
    2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம்.
  • 1:10 - 1:14
    ஆனால், இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது.
  • 1:14 - 1:16
    குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால்
  • 1:16 - 1:19
    விடை குறை எண்ணில் வரும்.
  • 1:19 - 1:20
    ஆக இது தான் அடுத்த விதிமுறை.
  • 1:20 - 1:29
    குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண்
  • 1:29 - 1:35
    2 பெருக்கல் -2 என்றால் என்ன?
  • 1:35 - 1:37
    மேலே உள்ள கணக்கு போல தான்,
  • 1:37 - 1:41
    இதற்கும் விடை வரும்.
  • 1:41 - 1:45
    ஏனெனில் இரண்டும் சமம் ஆகும்.
  • 1:45 - 1:46
    இது பரிமாற்று விதி ஆகும்.
  • 1:46 - 1:48
    நான் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • 1:48 - 1:52
    2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும்.
  • 1:52 - 1:58
    நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால்
  • 1:58 - 1:59
    விடை குறை எண்ணில் தான் வரும்
  • 1:59 - 2:04
    இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும்
  • 2:04 - 2:05
    இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும்
  • 2:05 - 2:08
    குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் (அல்லது)
  • 2:08 - 2:09
    நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண்.
  • 2:09 - 2:14
    வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால்,
  • 2:14 - 2:16
    எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும்.
  • 2:16 - 2:19
    அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால்
  • 2:19 - 2:22
    விடை நிறை எண்ணில் வரும்.
  • 2:22 - 2:23
    இது நிறை அல்லது நேர்மம் தான்.
  • 2:23 - 2:24
    இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்
  • 2:24 - 2:28
    குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
  • 2:28 - 2:30
    குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண்
  • 2:30 - 2:33
    நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண்
  • 2:33 - 2:36
    நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண்
  • 2:36 - 2:40
    இது சற்று குழப்பமாக இருக்கலாம்.
  • 2:40 - 2:42
    இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன்.
  • 2:42 - 2:46
    ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால்.
  • 2:46 - 2:55
    விடை நிறை எண்ணில் வரும்..
  • 2:55 - 3:11
    வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும்..
  • 3:11 - 3:18
    1 பெருக்கல் 1 என்பது 1.
  • 3:18 - 3:22
    -1 பெருக்கல் - 1 என்பது + 1
  • 3:22 - 3:24
    இது +1 ஆகும்.
  • 3:24 - 3:29
    1 பெருக்கல் -1 என்பது -1
  • 3:29 - 3:33
    -1 பெருக்கல் 1 என்பது -1
  • 3:33 - 3:36
    கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால்,
  • 3:36 - 3:39
    +1 மற்றும் -1, இரு வெவ்வேறு குறிகள் உள்ளது.
  • 3:39 - 3:41
    மேலே உள்ள இரு கணக்குகளில்,
  • 3:41 - 3:43
    இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான்.
  • 3:43 - 3:46
    இங்கு உள்ளதில், இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள்.
  • 3:46 - 3:49
    இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம்
  • 3:49 - 3:52
    இதே போல் நீங்களும் செய்து பாருங்கள்,
  • 3:52 - 4:03
    நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன்.
  • 4:03 - 4:07
    -4 பெருக்கல் 3 என்பது என்ன?
  • 4:07 - 4:12
    4 * 3 = 12
  • 4:12 - 4:16
    வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்
  • 4:16 - 4:19
    -4 * 3 = -12
  • 4:19 - 4:21
    இது சரியே, ஏனெனில் நாம்
  • 4:21 - 4:25
    -4 -ஐ மூன்று முறை பெருக்குகிறோம்,
  • 4:25 - 4:28
    இது -4 + (-4) +( -4) = -12 போன்றது.
  • 4:28 - 4:31
    குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை
  • 4:31 - 4:34
    பார்த்தால், உங்களுக்கு இது நன்கு புரியும்.
  • 4:34 - 4:35
    இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம்
  • 4:35 - 4:40
    -2 பெருக்கல் -7 என்றால் என்ன?
  • 4:40 - 4:42
    உங்களுக்கு இது புரிந்திருந்தால்
  • 4:42 - 4:44
    இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து,
  • 4:44 - 4:45
    விடையை செய்து பாருங்கள்.
  • 4:45 - 4:51
    2 * 7 = 14
  • 4:51 - 4:54
    ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும்
  • 4:54 - 4:57
    -2 * -7 = +14
  • 4:57 - 5:06
    அடுத்த கணக்கை பார்க்கலாம்..... 9 * -5 =?
  • 5:06 - 5:09
    9 * 5 = 45
  • 5:09 - 5:14
    வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்..எனவே 9 * -5 = -45 ஆகும்
  • 5:14 - 5:18
    அடுத்த கணக்கை பார்க்கலாம்
  • 5:18 - 5:25
    -6 பெருக்கல் -11 என்றால் என்ன?
  • 5:25 - 5:30
    6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும்.
  • 5:30 - 5:32
    ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும்.
  • 5:32 - 5:33
    நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன்.
  • 5:33 - 5:39
    0 பெருக்கல் -12 என்றால் என்ன?
  • 5:39 - 5:43
    இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது, ஆனால்
  • 5:43 - 5:46
    0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம்..
  • 5:46 - 5:48
    எந்த எண்ணுடனும் 0-ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும்..
  • 5:48 - 5:52
    ஆக விடை குறை எண்ணா அல்லது
  • 5:52 - 5:54
    நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்
  • 5:54 - 5:58
    0-உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும்..
  • 5:58 - 6:00
    இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம்.
  • 6:00 - 6:03
    பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும்
  • 6:03 - 6:09
    9/-3 என்றால் என்ன?
  • 6:09 - 6:12
    9 ÷ 3 = ?
  • 6:12 - 6:14
    9 ÷ 3 = 3
  • 6:14 - 6:18
    வேறு குறிகள் இருந்தால் (+9 வகுத்தல் -3)
  • 6:18 - 6:22
    விடை குறை எண்ணில் வரும்..
  • 6:22 - 6:28
    9 ÷ -3 = -3
  • 6:28 - 6:34
    -16 வகுத்தல் 8 என்றால் என்ன?
  • 6:34 - 6:38
    16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும்.
  • 6:38 - 6:39
    வேறு குறிகள் ( -16 , +8 )உள்ளது...வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்..
  • 6:39 - 6:45
    -16 ÷ 8 = -2
  • 6:45 - 6:49
    வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்..
  • 6:49 - 7:00
    -54 வகுத்தல் -6 என்றால் என்ன?
  • 7:00 - 7:04
    54 ÷ 6 = 9
  • 7:04 - 7:11
    ஒரே குறிகள் இருந்தால்,
  • 7:11 - 7:14
    விடை நிறை எண்ணில் வரும்.
  • 7:14 - 7:18
    நினைவில் கொள்ளுங்கள்,
  • 7:18 - 7:23
    ஒரே குறி என்றால், விடை நிறை எண் ஆகும்.
  • 7:23 - 7:25
    அடுத்த கணக்கை பார்க்கலாம்.
  • 7:25 - 7:30
    0-உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும்..
  • 7:30 - 7:32
    இது சற்று நேரான கணக்கு.
  • 7:32 - 7:33
    நீங்கள் 0-ஆல் எதையும் வகுக்க முடியாது.
  • 7:33 - 7:36
    இது வரையறுக்க முடியாதது.
  • 7:36 - 7:38
    அடுத்த கணக்கை பார்க்கலாம்.
  • 7:38 - 7:42
    நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம்.
  • 7:42 - 7:45
    4 வகுத்தல் -1 என்றால் என்ன?
  • 7:45 - 7:51
    4 வகுத்தல் 1 என்பது 4... வெவ்வேறு குறிகள் உள்ளது..
  • 7:51 - 7:53
    ஆக, 4 ÷ -1 = -4.
  • 7:53 - 7:54
    இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  • 7:54 - 7:57
    இப்பொழுது, நீங்கள் என்ன வேண்டும் என்றால்,
  • 7:57 - 8:01
    அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும்.
  • 8:01 - 8:03
    இந்த குறிப்புகளில்,
  • 8:03 - 8:04
    நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன்.
  • 8:04 - 8:09
    இப்பொழுது, நீங்களே இதில்
  • 8:09 - 8:11
    எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும்.
  • 8:11 - 8:15
    ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம்
  • 8:15 - 8:17
    எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை
  • 8:17 - 8:20
    இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ...
  • 8:20 - 8:23
    இந்த நிலையில் இருந்து,
  • 8:23 - 8:27
    நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன்.
  • 8:27 - 8:29
    வாழ்த்துக்கள்.
Title:
எதிர்ம எண்களை பெருக்குதல் மற்றும் வகுத்தல்
Description:

எதிர்ம எண்களை பெருக்குதல் மற்றும் வகுத்தல்

more » « less
Video Language:
English
Duration:
08:28
Karuppiah Senthil edited Tamil subtitles for Multiplying and dividing negative numbers
maha.vijiram146 edited Tamil subtitles for Multiplying and dividing negative numbers
maha.vijiram146 edited Tamil subtitles for Multiplying and dividing negative numbers
maha.vijiram146 added a translation

Tamil subtitles

Revisions